திருப்பத்தூர்: “என் ஓட்டு விற்பனைக்கு அல்ல” பிரச்சாரம் – ஏப்ரல் 4ல் நடைபெறுகிறது திருப்பத்தூர், ஏப்.2: வாக்குரிமை விழிப்புணர்வை முன்னிறுத்தும் வகையில் அறப்போர் இயக்கம் சார்பில் “என் ஓட்டு விற்பனைக்கு அல்ல” என்ற பிரச்சார நிகழ்ச்சி திருப்பத்தூரில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சி ஏப்ரல் 4-ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் 11 மணி வரை பால்னாங்குப்பம் பஸ் ஸ்டாப் பகுதியில் உள்ள வீடுகளில் நடைபெறும். இதில் அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் வாக்குரிமையின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளார். திருப்பத்தூர் வட்டார பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆதரவு வழங்குமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். நிகழ்ச்சி விவரம்: தேதி: ஏப்ரல் 4, 2026 (சனி) நேரம்: காலை 10 மணி இடம்: பால்னாங்குப்பம் பஸ் ஸ்டாப், திருப்பத்தூர் தொடர்புக்கு: மண்டல ஒருங்கிணைப்பாளர் திரு. ஜாய் திரு. Suresh KGS திரு. முனிராஜ் திரு. அன்பு திரு. ஜெய்சங்கர்

- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சட்டமன்றத் தொகுதியில் (இன்று ஏப்ரல் 01 காலை) ஆம்பூர் தொகுதி அஇஅதிமுக வேட்பாளர் வெங்கடேசன் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் திருப்பத்தூர் மாவட்ட அஇஅதிமுக நிர்வாகி பலர் கலந்து கொண்டனர்1
- கிருஷ்ணகிரி சட்ட மன்றத் தொகுதியில் சுயேட்ச்சை வேட்பாளராக சந்திரமோகன் வேட்புமனு. கிருஷ்ணகிரி சட்ட மன்றத் தொகுதியில் சுயேட்ச்சை வேட்பளாராக போட்டியிட டாக்டர் சந்திரமோகன் கிருஷ்ணகிரி வருவாய்கோட்டச்சியர் அலுவாகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஷாஜகான் அவர்களிடம் தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்தார். தமிழகத்தில் நடைப்பெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்னும் சிலநாள்களில் முடிய உள்ளதால் அரசியல் கட்சி வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவினை தாக்கல் செய்து வருகின்றனர், அதனடிப்படையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்ட மன்ற தொகுதிகளிலும் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களும் தனி கவனம் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கிருஷ்ணகிரி சட்டமன்றத் தொகுதியில் சுயோட்சையாக போட்டியிட்டுள்ள சமுக ஆர்வாளரும், சமுக நுகர்வோர் பாதுகாப்பு நலச் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளருமான டாக்டர் சந்திரமோகன் இன்று தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்தார், முன்னதாக கேயிலில் பூஜைகள் செய்து கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாச்சியர் அலுவலத்தில் தேர்தல் நடத்தும் அலுவரும் வருவாய் கோட்டாச்சியருமான ஷாஜகான் அவர்களிடம் டாக்டர் சந்திரமோகன் தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்தார், இதனை அடுத்து டாக்டர் சந்திர மோகன் நகர மக்களிடம் தனக்கு வாக்கு சேகரிக்கும் பணியினை மேற்கொண்டார்.1
- கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சட்ட மன்றத் தொகுதியில் திமுக காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி சார்பில் திமுக சட்ட மன்ற உறுப்பினராக PSசீனிவாசன் போட்டியிட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாய்ப்பு வழங்கி உள்ளார்,இந்த நிலையில் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிட்டுள்ள வேப்பனப்பள்ளி தொகுதியில் திமுக, காங்கிரஸ் தேமுதிக, விடுதலை சிறுத்தை உள்ளிட்ட கூட்டணி கட்சியினர்கலந்துகொண்டு பட்டாசு வெடித்துவரவேற்பு1
- பாப்பிரெட்டிபட்டி திமுக வேட்பாளர் P.பழநியப்பன் தேர்தல் அலுவலர் கோவிந்தன் அவர்களிடம் இன்று வேட்பு மனுதாக்கல்செய்தார் பாப்பிரெட்டிபட்டி திமுக வேட்பாளரும் முன்னால் அமைச்சர் திரு.P.பழநியப் பன் பாப்பிரெட்டிபட்டி வட்டாச்சியர் அலுவலகத்தில் தேர்தல் அவவலர் திரு, கோவிந்தன் அவர்களிடம் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார் இந்நிகழ்வில் காங்கிரல் மாவட்ட தலைவர் கோ.சிற்றரசு, தேமுதிக மாவட்ட செயலாளர் குமார் VCK சென்னகிருஷ்ணன் மதிமுக மாவட்ட செயலாளர் ராம்தாஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்1
- சேலம் மாவட்டம் ஆத்தூர் அதிமுக வேட்பாளர் ஜெய சங்கரன் இன்று காலை முதலே வாக்கு சேகரிக்க தொடங்கினார் ஆத்தூர் நகரை எட்டாவது வார்டு பகுதியில் பொதுமக்களிடம் 500க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை அழைத்துக்கொண்டு ஒவ்வொரு வீடாக சென்று வாக்கு கேட்டார் மேலும் ஒவ்வொரு வீட்டிற்கும் பிரிட்ஜ் வழங்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார்.1
- தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் மாநில தலைவர் கார்வேந்தன் தலைமையில், இன்று சேலத்தில் உள்ள அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்தித்து, வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு தமிழகம் முழுவதும் தங்களது ஆதரவை தெரிவித்து, அதிமுகவின் வெற்றிக்காக பாடுபட போவதாக அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து கடிதம் அளித்துள்ளதாகவும், மேலும் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை என்ற பெயரை தனியரசு என்பவர் தவறாக பயன்படுத்தி வருவதால் அவர் மீது எட்டு கோடி ரூபாய் மான நஷ்ட வழக்கு தொடர்ந்து உள்ளதாகவும், சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கார்வேந்தன் தெரிவித்தார்.1
- கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பெரும்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சக்திவேல் முருகனுக்கு பங்குனி உத்திரம் காவடி திருவிழா வெகு விமர்சனமாக நடைபெட்றுள்ளது இத் திருவிழாவில் எறாளமான பக்தர்கள் அலகு பொட்டும் காவடி எடுத்தும் தேர் இழுத்தும் தங்களுடைய நேர்த்தி கடனை சேலித்தினர் இத் திருவிழாவில் ஏரளமான பக்தர்கள் ஊர்பெதுமக்கள் கலந்து கெண்டனர்.1
- நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஆதித்தமிழர் பேரவையின் சார்பில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு, இவ்வித நிபந்தனையும் எங்கேயும் தங்களது முழு ஆதரவையும் தெரிவிப்பதாகவும், இந்நிலையில் கடந்த திமுக ஆட்சியில் ஆதித்தமிழர்களுக்கு எவ்வித நன்மையும் செய்யாமல் ஓட்டுகளை மட்டும் பெற்றுவிட்டு தங்களை ஏமாற்றியதாகவும், எனவே அவர்களுக்கு வரும் தேர்தலில் தக்க பாடம் ஓட்டுவதற்காக, அதிமுகவிற்கு முழு ஆதரவையும் தெரிவிப்பதாக ஆதித்தமிழர் பேரவையின் நிர்வாகிகள் என்று சேலத்தில் உள்ள இபிஎஸ்ன் இல்லத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.1