logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

ஆறுகாணி அருகே காட்டு தீ ஆறுகாணி அருகே காட்டு தீ! ஆறுகாணி அருகே சூரவகாணி, கமியூனிட்முக் பகுதியில் கடும் வெயில் காரணமாக காட்டு தீ பிடித்துள்ளது. தீ மளமளவென எரிந்து கீழ் குடியிருப்பை நோக்கி வந்து கொண்டிருப்பதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் தீயணைப்பு துறையினர் மற்றும் கேரளா காவல்துறையினர் சம்பவ இடத்தில் வந்துள்ளனர். பாறையில் ஏற்ப்பட்டுள்ள கடும் வெப்பம் காரணமாக தீ ஏற்பட்டிருக்கலாம்!

2 hrs ago
user_Arukani Members South
Arukani Members South
Photographer Vilavancode, Kanniyakumari•
2 hrs ago

ஆறுகாணி அருகே காட்டு தீ ஆறுகாணி அருகே காட்டு தீ! ஆறுகாணி அருகே சூரவகாணி, கமியூனிட்முக் பகுதியில் கடும் வெயில் காரணமாக காட்டு தீ பிடித்துள்ளது. தீ மளமளவென எரிந்து கீழ் குடியிருப்பை நோக்கி வந்து கொண்டிருப்பதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் தீயணைப்பு துறையினர் மற்றும் கேரளா காவல்துறையினர் சம்பவ இடத்தில் வந்துள்ளனர். பாறையில் ஏற்ப்பட்டுள்ள கடும் வெப்பம் காரணமாக தீ ஏற்பட்டிருக்கலாம்!

More news from Kanniyakumari and nearby areas
  • ஆறுகாணி அருகே காட்டு தீ! ஆறுகாணி அருகே சூரவகாணி, கமியூனிட்முக் பகுதியில் கடும் வெயில் காரணமாக காட்டு தீ பிடித்துள்ளது. தீ மளமளவென எரிந்து கீழ் குடியிருப்பை நோக்கி வந்து கொண்டிருப்பதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் தீயணைப்பு துறையினர் மற்றும் கேரளா காவல்துறையினர் சம்பவ இடத்தில் வந்துள்ளனர். பாறையில் ஏற்ப்பட்டுள்ள கடும் வெப்பம் காரணமாக தீ ஏற்பட்டிருக்கலாம்!
    1
    ஆறுகாணி அருகே காட்டு தீ!
ஆறுகாணி அருகே சூரவகாணி, கமியூனிட்முக்  பகுதியில் கடும் வெயில் காரணமாக காட்டு தீ பிடித்துள்ளது. தீ மளமளவென எரிந்து கீழ் குடியிருப்பை நோக்கி வந்து கொண்டிருப்பதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
மேலும் தீயணைப்பு துறையினர் மற்றும் கேரளா காவல்துறையினர் சம்பவ இடத்தில் வந்துள்ளனர்.
பாறையில் ஏற்ப்பட்டுள்ள கடும் வெப்பம் காரணமாக தீ ஏற்பட்டிருக்கலாம்!
    user_Arukani Members South
    Arukani Members South
    Photographer Vilavancode, Kanniyakumari•
    2 hrs ago
  • தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அனல்மின் நிலைய விரிவாக்கத்திற்காக நில எடுப்பு வகையில் -பாதிக்கப்பட்ட நில உடமைதாரர்களுக்கு தற்போதைய நில மதிப்பு படி உரிய நிவாரணத்தொகை வழங்கிட கோரி (19-2-2026) வியாழக்கிழமை அன்று உடன்குடி, காலங்குடியிருப்பு, மானாடுதண்டுபத்து ஆகிய உடன்குடி அனல்மின் நிலைய வருவாய் கிராமங்களில் உள்ள சுமார் 1500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. மேற்கண்ட நிலங்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையினை 2012 - ஆம் ஆண்டின் நில மதிப்பு படி வழங்கப்பட உள்ளது. இதன்படி 1 ஹெக்டேர் (2.5 ஏக்கர்) நிலத்திற்கு ரூ.4 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை தான் வழங்கப்பட உள்ளது. ஆனால் தற்போது உடன்குடி வருவாய் கிராமத்தில் 1 செண்ட் நிலமே ரூ.8 லட்சம் அளவிற்கு வெகுவாக உயர்ந்திருப்பதால் இது நில உடமைதாரர்களை வஞ்சிக்கும் செயலாகும் எனவே அனல்மின் நிலைய விரிவாக்கத்திற்கு கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு குறைந்த பட்சம் ஒரு ஏக்கருக்கு ரூ.50 லட்சம் அல்லது நிலத்திற்கு நிகரான நில மாகவோ வழங்கிட ஆவன செய்யுமாறு வேண்டுகிறோம் என்று உடன்குடி, காலங்குடியிருப்பு, மானாடுதண்டுபத்து, பகுதிகளை சேர்ந்த பாதிக்கப்படும் நில உடமைதாரர்கள் மனுவில் தெரிவித்துள்ளனர்.
    1
    தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அனல்மின் நிலைய விரிவாக்கத்திற்காக நில எடுப்பு வகையில் -பாதிக்கப்பட்ட  நில உடமைதாரர்களுக்கு தற்போதைய நில மதிப்பு படி உரிய நிவாரணத்தொகை வழங்கிட கோரி (19-2-2026) வியாழக்கிழமை அன்று உடன்குடி, காலங்குடியிருப்பு, மானாடுதண்டுபத்து ஆகிய உடன்குடி அனல்மின் நிலைய வருவாய் கிராமங்களில் உள்ள சுமார் 1500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. மேற்கண்ட நிலங்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையினை 2012 - ஆம் ஆண்டின் நில மதிப்பு படி வழங்கப்பட உள்ளது. இதன்படி 1 ஹெக்டேர் (2.5 ஏக்கர்) நிலத்திற்கு ரூ.4 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை தான் வழங்கப்பட உள்ளது. ஆனால் தற்போது உடன்குடி வருவாய் கிராமத்தில் 1 செண்ட் நிலமே ரூ.8 லட்சம் அளவிற்கு வெகுவாக உயர்ந்திருப்பதால் இது நில உடமைதாரர்களை வஞ்சிக்கும் செயலாகும் எனவே
அனல்மின் நிலைய விரிவாக்கத்திற்கு கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு குறைந்த பட்சம் ஒரு ஏக்கருக்கு ரூ.50 லட்சம் அல்லது நிலத்திற்கு நிகரான நில மாகவோ வழங்கிட ஆவன செய்யுமாறு வேண்டுகிறோம் என்று  உடன்குடி, காலங்குடியிருப்பு, மானாடுதண்டுபத்து, பகுதிகளை சேர்ந்த பாதிக்கப்படும் நில உடமைதாரர்கள் மனுவில் தெரிவித்துள்ளனர்.
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Local News Reporter தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    12 min ago
  • தூத்துக்குடி:*இஸ்லாமியர்களின் புனித கடமைகளில் ஒன்றான, ரமலான் நோன்பு துவக்கம் தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசலில் புதுப்பிக்கப்பட்ட பள்ளிவாசலில் சிறப்பு தொகுதியில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்* இஸ்லாமியர்களின் முக்கிய ஐம்பெரும் கடமைகளில் ஒன்று ரமலான் மாதத்தில் நோன்பிருப்பது. 19ம்தேதி துவங்கி அடுத்த மாதம் 20ம்தேதி வரை அதாவது 30நாட்கள் நோன்பு கடைப்பிடிப்பார்கள். இந்த ஆண்டு ரமலான் பிறை நேற்று மாலை (18-02-26) தென்பட்டதை தொடர்ந்து 19ஆம் தேதி இன்று அதிகாலை இஸ்லாமியர்கள் நோன்பு துவங்க உள்ளனர். இதற்காக தூத்துக்குடியில் உள்ள பழமைவாய்ந்த ஜாமியா பள்ளிவாசலில் புதுப்பிக்கப்பட்ட புதிய பள்ளிவாசலை தலைமை இமாம்கள் அப்துல் அழிம், சதக்கத்துல்லா அரபிக் கல்லூரி முதல்வர் இம்தாதுல்லாஹ், முன்னாள் ஜாமியா பள்ளிவாசல் தலைவர் மீராசா ஆகியோர் திறந்து வைத்தனர்‌ இதைத் தொடர்ந்து இந்த புதிய பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இந்த தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு தொழுகையில் ஈடுபட்டனர் இஸ்லாமியர்கள் நோன்பு காலத்தில் காலையில், சூரிய உதயத்துக்கு முன்பிருந்து, சூரியன் மறையும் நேரம் வரை, உணவு, தண்ணீர் எதுவும் உட்கொள்ளாமல், நோன்பு கடைப்பிடிப்பர். இந்த நாட்களில், ஒவ்வொரு நாளும், ஐந்து வேளை தொழுகை மட்டுமின்றி, இரவிலும் தராவீஹ் என்னும் சிறப்பு தொழுகை நடத்தி, பிரார்த்தனை செய்வது வழக்கம்.
    1
    தூத்துக்குடி:*இஸ்லாமியர்களின் புனித கடமைகளில் ஒன்றான, ரமலான் நோன்பு துவக்கம் தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசலில் புதுப்பிக்கப்பட்ட பள்ளிவாசலில் சிறப்பு தொகுதியில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்* 
இஸ்லாமியர்களின் முக்கிய ஐம்பெரும் கடமைகளில் ஒன்று ரமலான் மாதத்தில் நோன்பிருப்பது. 19ம்தேதி துவங்கி அடுத்த மாதம் 20ம்தேதி வரை அதாவது 30நாட்கள் நோன்பு கடைப்பிடிப்பார்கள். இந்த ஆண்டு ரமலான் பிறை நேற்று மாலை (18-02-26) தென்பட்டதை தொடர்ந்து 19ஆம் தேதி  இன்று அதிகாலை இஸ்லாமியர்கள் நோன்பு துவங்க உள்ளனர்.
இதற்காக  தூத்துக்குடியில் உள்ள பழமைவாய்ந்த ஜாமியா பள்ளிவாசலில் புதுப்பிக்கப்பட்ட புதிய பள்ளிவாசலை  தலைமை இமாம்கள் அப்துல் அழிம், சதக்கத்துல்லா
அரபிக் கல்லூரி முதல்வர் இம்தாதுல்லாஹ், 
முன்னாள் ஜாமியா பள்ளிவாசல் தலைவர் மீராசா ஆகியோர் திறந்து வைத்தனர்‌  இதைத் தொடர்ந்து இந்த புதிய பள்ளிவாசலில்
சிறப்பு தொழுகை நடைபெற்றது.  இந்த தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு தொழுகையில் ஈடுபட்டனர்  
இஸ்லாமியர்கள் நோன்பு காலத்தில்
காலையில், சூரிய உதயத்துக்கு முன்பிருந்து, சூரியன் மறையும் நேரம் வரை, உணவு, தண்ணீர் எதுவும் உட்கொள்ளாமல், நோன்பு கடைப்பிடிப்பர். இந்த நாட்களில், ஒவ்வொரு நாளும், ஐந்து வேளை தொழுகை மட்டுமின்றி, இரவிலும் தராவீஹ் என்னும் சிறப்பு தொழுகை நடத்தி, பிரார்த்தனை செய்வது வழக்கம்.
    user_Jaya Studio
    Jaya Studio
    தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    5 hrs ago
  • தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட கிழக்கு மண்டல மக்கள் குறை தீர்க்கும் முகாம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி மாநகராட்சிகளில் மண்டல வாரியாக மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் (18-2-2026) புதன்கிழமை மக்கள் குறை தீர்க்கும் முகாம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. தெருவிளக்கு மற்றும் தார்சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இந்த கூட்டத்தில் ஆணையாளர் பிரியங்கா மற்றும் துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    1
    தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட கிழக்கு மண்டல மக்கள் குறை தீர்க்கும் முகாம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி மாநகராட்சிகளில் மண்டல வாரியாக மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் (18-2-2026) புதன்கிழமை மக்கள் குறை தீர்க்கும் முகாம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.  தெருவிளக்கு மற்றும் தார்சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த கூட்டத்தில் ஆணையாளர் பிரியங்கா மற்றும் துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    user_N balu Nbalu
    N balu Nbalu
    Journalist Thoothukkudi, Tuticorin•
    10 hrs ago
  • தேனி நகரத்தின் நீண்டகால பிரச்சினையை தீர்த்து தர இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்ட செயலாளர் பெத்தாச்சி ஆசாத் தமிழக அரசுக்கும் முதல்வருக்கும் ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளார். தேனி நகரத்தில் நீண்ட கால பிரச்சனையும் 3000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள பிரச்சனையுமான நத்தமா வால் கரடா என்பதை தீர்த்து வைக்குமாறு பேட்டி மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
    1
    தேனி நகரத்தின் நீண்டகால பிரச்சினையை தீர்த்து தர இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை 
இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்ட செயலாளர் பெத்தாச்சி ஆசாத் தமிழக அரசுக்கும் முதல்வருக்கும் ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளார். தேனி நகரத்தில் நீண்ட கால பிரச்சனையும் 3000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள பிரச்சனையுமான நத்தமா வால் கரடா என்பதை தீர்த்து வைக்குமாறு பேட்டி மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
    user_Theni Godwin
    Theni Godwin
    பத்திரிகையாளர் தேனி, தேனி, தமிழ்நாடு•
    18 hrs ago
  • மதுரை மீனாட்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஆதரவாக மாணவிகள் போராட்டம் தீவிரம் கால் நூற்றாண்டுக்கும் மேலாக வஞ்சிக்கப்படும் விரிவுரையாளர்கள். மதுரை, பிப்.19– மதுரை மீனாட்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் கௌரவ (தொகுப்பூதிய) விரிவுரையாளர்கள் கடந்த 11 நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பெண் கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். UGC நிர்ணயித்த Rs.57,800 கௌரவ விரிவுரையாளர்களுக்கு வழங்க வேண்டும். அனைத்து அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களுக்கும் 12 மாத சம்பளம் வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற கௌரவ விரிவுரையாளர்களுக்கு ரூ. 25 லட்சம் பணிக்கொடை வழங்க வேண்டும். அனைத்து அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களுக்கும் பிஎ ப் மற்றும் இபிஎப் வழங்க வேண்டும் உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் கோரி அவர்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில், விரிவுரையாளர்களுக்கு ஆதரவாக இந்திய மாணவர் சங்கம் சார்பில் கல்லூரி மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவிகளின் ஆதரவு போராட்டத்தில் பங்கேற்ற மாணவி அகிலா கூறியதாவது: “எங்களின் கல்வியே பாதிக்கப்படுகிறது. ஆனால் இது ஆசிரியர்களுக்கான போராட்டம் மட்டுமல்ல; எங்கள் எதிர்காலத்திற்கான போராட்டம். இரண்டாம் பருவ மாணவிகளுக்கு முறையான வகுப்பறைகள் கூட இல்லை. மரத்தடியில் அமர்ந்து பாடம் கேட்கும் நிலை உள்ளது. ஆசிரியர்கள் போராடும் வரை நாங்களும் அவர்களுடன் இருப்போம்,” என்றார். மற்றொரு மாணவி விக்னேஷ்வரி கூறுகையில், “எங்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்கள் உயர்கல்வி பெற்றவர்கள். போட்டித் தேர்வுகளுக்கும், தனிப்பட்ட பிரச்சினைகளுக்கும் துணை நிற்கும் அவர்கள் உரிய ஊதியம் பெற வேண்டியது அவசியம். அடிப்படை வசதிகள் கூட இல்லாத சூழலில் கல்வி நடைபெறுகிறது. ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை எங்கள் ஆதரவு தொடரும்,” என்றார். போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் அரசு விரைந்து தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் வலியுறுத்துகின்றனர். கல்லூரியில் நடைபெற்று வரும் இப் போராட்டத்தில் இந்திய மாணவர் சங்கம் மதுரை மாநகர் மாவட்ட தலைவர் ஜெ.டீலன் ஜெஸ்டின், மாவட்ட செயலாளர் சி.டேவிட் ராஜதுரை புறநகர் மாவட்ட துணை செயலாளர் அகிலா மாநில குழு உறுப்பினர் விக்னேஷ்வரி மாநகர் மாவட்ட குழு உறுப்பினர்கள் நாகமணிகண்டன், திருப்பரலாதன், கண்ணன், அமல், ஆகியோர் கலந்து கொண்டனர்.
    3
    மதுரை மீனாட்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஆதரவாக மாணவிகள் போராட்டம் தீவிரம்
கால் நூற்றாண்டுக்கும் மேலாக வஞ்சிக்கப்படும் விரிவுரையாளர்கள்.
மதுரை, பிப்.19–
மதுரை மீனாட்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் கௌரவ (தொகுப்பூதிய) விரிவுரையாளர்கள் கடந்த 11 நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பெண் கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும்.
UGC நிர்ணயித்த Rs.57,800 கௌரவ விரிவுரையாளர்களுக்கு வழங்க வேண்டும். அனைத்து அரசு கல்லூரி
கௌரவ விரிவுரையாளர்களுக்கும் 12 மாத சம்பளம் வழங்க வேண்டும். 
ஓய்வுபெற்ற கௌரவ விரிவுரையாளர்களுக்கு ரூ. 25 லட்சம்
பணிக்கொடை வழங்க வேண்டும்.
அனைத்து அரசு கல்லூரி
கௌரவ விரிவுரையாளர்களுக்கும் பிஎ ப் மற்றும் இபிஎப் வழங்க வேண்டும் உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் கோரி அவர்கள் போராடி வருகின்றனர்.
இந்நிலையில், விரிவுரையாளர்களுக்கு ஆதரவாக இந்திய மாணவர் சங்கம் சார்பில் கல்லூரி மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 
மாணவிகளின் ஆதரவு
போராட்டத்தில் பங்கேற்ற மாணவி அகிலா கூறியதாவது:
“எங்களின் கல்வியே பாதிக்கப்படுகிறது. ஆனால் இது ஆசிரியர்களுக்கான போராட்டம் மட்டுமல்ல; எங்கள் எதிர்காலத்திற்கான போராட்டம். இரண்டாம் பருவ மாணவிகளுக்கு முறையான வகுப்பறைகள் கூட இல்லை. மரத்தடியில் அமர்ந்து பாடம் கேட்கும் நிலை உள்ளது. ஆசிரியர்கள் போராடும் வரை நாங்களும் அவர்களுடன் இருப்போம்,” என்றார்.
மற்றொரு மாணவி விக்னேஷ்வரி கூறுகையில்,
“எங்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்கள் உயர்கல்வி பெற்றவர்கள். போட்டித் தேர்வுகளுக்கும், தனிப்பட்ட பிரச்சினைகளுக்கும் துணை நிற்கும் அவர்கள் உரிய ஊதியம் பெற வேண்டியது அவசியம். அடிப்படை வசதிகள் கூட இல்லாத சூழலில் கல்வி நடைபெறுகிறது. ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை எங்கள் ஆதரவு தொடரும்,” என்றார்.
போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் அரசு விரைந்து தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் வலியுறுத்துகின்றனர். 
கல்லூரியில் நடைபெற்று வரும் இப் போராட்டத்தில்
இந்திய மாணவர் சங்கம் மதுரை மாநகர் மாவட்ட தலைவர் ஜெ.டீலன் ஜெஸ்டின், மாவட்ட செயலாளர் சி.டேவிட் ராஜதுரை புறநகர் மாவட்ட துணை செயலாளர் அகிலா மாநில குழு உறுப்பினர் விக்னேஷ்வரி மாநகர் மாவட்ட குழு உறுப்பினர்கள் நாகமணிகண்டன், திருப்பரலாதன், கண்ணன், அமல், ஆகியோர் கலந்து கொண்டனர்.
    user_Ponmaran Thekkathir Reporter
    Ponmaran Thekkathir Reporter
    மதுரை வடக்கு, மதுரை, தமிழ்நாடு•
    23 min ago
  • தேனி மாவட்டம் உத்தமபாளையம் நகரில் அமைந்துள்ளது அருள்மிகு திருகாளாத்தீஸ்வரர் ஞானாம்பிகை திருக்கோவில் இத்திரு கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. திருவிழாவை ஒட்டி தேரோட்டம் உத்தமபாளையம் நகரில் ரத வீதிகளில் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருக்கோவில் மாசி மகா திருவிழா தேரோட்டம் வருகின்ற மார்ச் 02ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக இன்று கோவில் வளாகத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் மாசி மகா தேரோட்ட திருவிழாவிற்கான கொடி ஏற்றப்பட்டது. கொடியேற்றத்தின் போது வேத மந்திரங்கள் முழங்க சிவவாத்தியத்துடன் இக்கோடியானது கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. முன்னதாக பல்வேறு வாசனை பொருட்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.
    1
    தேனி மாவட்டம் உத்தமபாளையம் நகரில் அமைந்துள்ளது அருள்மிகு திருகாளாத்தீஸ்வரர் ஞானாம்பிகை திருக்கோவில் இத்திரு கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. 
திருவிழாவை ஒட்டி தேரோட்டம் உத்தமபாளையம் நகரில் ரத வீதிகளில் நடைபெறுவது வழக்கம். 
அதன்படி இந்த ஆண்டு திருக்கோவில் மாசி மகா திருவிழா தேரோட்டம் வருகின்ற மார்ச் 02ஆம் தேதி நடைபெற உள்ளது. 
இதற்காக இன்று கோவில் வளாகத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் மாசி மகா தேரோட்ட திருவிழாவிற்கான கொடி ஏற்றப்பட்டது. 
கொடியேற்றத்தின் போது வேத மந்திரங்கள் முழங்க சிவவாத்தியத்துடன் இக்கோடியானது கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. முன்னதாக பல்வேறு வாசனை பொருட்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    1 hr ago
  • கன்னியாகுமரி மாவட்ட அரசு பேருந்துகளில் பெண் நடத்துனர்கள் இவர்கள் பயணிகளின் மனதில் தனி இடத்தைப் பிடித்துள்ளனர். புன்முறுவலுடன் டிக்கெட் வழங்கி, கனிவான சொற்களால் பேசும் அவர்கள் சேவை பாராட்டுதலுக்குரியது. ஒவ்வொரு பஸ் நிறுத்தத்திலும் இடத்தின் பெயரை தெளிவாகச் சொல்லி பயணிகளை இறக்கிவிடும் பொறுப்புணர்வு குறிப்பிடத்தக்கது. முதியவர்கள், பெண்கள், மாணவர்கள் என அனைவரிடமும் நட்பாக பழகும் விதம் பயணிகளுக்கு புதிய அனுபவமாக அமைந்துள்ளது. பாதுகாப்பும், மரியாதையும் கலந்த சேவை மூலம் பொதுப் போக்குவரத்தில் மனிதநேயத்தின் அழகை அவர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.
    1
    கன்னியாகுமரி மாவட்ட அரசு பேருந்துகளில் பெண் நடத்துனர்கள்
இவர்கள் பயணிகளின் மனதில் தனி இடத்தைப் பிடித்துள்ளனர். புன்முறுவலுடன் டிக்கெட் வழங்கி, கனிவான சொற்களால் பேசும் அவர்கள் சேவை பாராட்டுதலுக்குரியது. 
ஒவ்வொரு பஸ் நிறுத்தத்திலும் இடத்தின் பெயரை தெளிவாகச் சொல்லி பயணிகளை இறக்கிவிடும் பொறுப்புணர்வு குறிப்பிடத்தக்கது. முதியவர்கள், பெண்கள், மாணவர்கள் என அனைவரிடமும் நட்பாக பழகும் விதம் பயணிகளுக்கு புதிய அனுபவமாக அமைந்துள்ளது. 
பாதுகாப்பும், மரியாதையும் கலந்த சேவை மூலம் பொதுப் போக்குவரத்தில் மனிதநேயத்தின் அழகை அவர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.
    user_Arukani Members South
    Arukani Members South
    Photographer Vilavancode, Kanniyakumari•
    22 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.