தூத்துக்குடியில் ஆசிரியர் தினம் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டம் தூத்துக்குடியில் தேசிய ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாநகராட்சி சார்பில், குரு வனம் என்ற பெயரில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் பசுமை விழா செப்.5 முதல் 11-ஆம் தேதி வரை ஒரு வாரம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு பசுமை இயக்கம்–நகர பசுமையாக்கல் திட்டத்தின் கீழ் நடைபெறும் இவ்விழாவில், மாநகராட்சியின் 4 மண்டலங்களுக்கு உள்பட்ட பள்ளிகள், கல்லூரிகள், பூங்காக்கள், அரசு அலுவலகங்கள், சாலையோரங்கள், வழிபாட்டுத் தலங்கள், தனியார் நிறுவனங்கள், நீர்நிலைகள், காலியிடங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. நடப்படும் மரக்கன்றுகளை தொடர்ந்து பராமரித்து, தண்ணீர் ஊற்றுவதற்கான நடவடிக்கைகளையும் மாநகராட்சி மேற்கொண்டுள்ளது. மாணவர்கள், கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலர்கள், தனியார் நிறுவனங்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், குடியிருப்போர் நலச் சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இப்பசுமை இயக்கத்தில் பங்கேற்று ஆசிரியர் தினத்தை சிறப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதில் சிறப்பாக செயல்படும் கல்வி நிறுவனங்கள், பசுமைப் படைகள், நாட்டு நலப்பணித் திட்டம், சாரணர் இயக்க அணிகள், அரசு அலுவலகங்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள், குடியிருப்போர் நலச் சங்கங்கள் தேர்வு செய்யப்பட்டு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். மேலும், முதல் பரிசாக ரூ.10,000, இரண்டாம் பரிசாக ரூ.5,000, மூன்றாம் பரிசாக ரூ.2,000 மற்றும் பசுமை ஆர்வலர் கேடயம் வழங்கப்பட உள்ளது. மரக்கன்றுகள் தேவை, நடவு செய்வதற்கான இடவசதி உள்ளிட்ட தகவல்களுக்கு மண்டல வாரியாக கிழக்கு மண்டலம் வி.அரி கணேசன் (98425 30292), வடக்கு– சி.ராஜசேகரன் (80563 47075), தெற்கு–ஜி. ஸ்டாலின் பாக்கியநாதன் (94435 28621), மேற்கு–சு. ராஜபாண்டியன் (94436 10511) ஆகியோரை தொடர்பு கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் ஆசிரியர் தினம் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டம் தூத்துக்குடியில் தேசிய ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாநகராட்சி சார்பில், குரு வனம் என்ற பெயரில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் பசுமை விழா செப்.5 முதல் 11-ஆம் தேதி வரை ஒரு வாரம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு பசுமை இயக்கம்–நகர பசுமையாக்கல் திட்டத்தின் கீழ் நடைபெறும் இவ்விழாவில், மாநகராட்சியின் 4 மண்டலங்களுக்கு உள்பட்ட பள்ளிகள், கல்லூரிகள், பூங்காக்கள், அரசு அலுவலகங்கள், சாலையோரங்கள், வழிபாட்டுத் தலங்கள், தனியார் நிறுவனங்கள், நீர்நிலைகள், காலியிடங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. நடப்படும் மரக்கன்றுகளை தொடர்ந்து பராமரித்து, தண்ணீர் ஊற்றுவதற்கான நடவடிக்கைகளையும் மாநகராட்சி மேற்கொண்டுள்ளது. மாணவர்கள், கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலர்கள், தனியார் நிறுவனங்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், குடியிருப்போர் நலச் சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இப்பசுமை இயக்கத்தில் பங்கேற்று ஆசிரியர் தினத்தை சிறப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதில் சிறப்பாக செயல்படும் கல்வி நிறுவனங்கள், பசுமைப் படைகள், நாட்டு நலப்பணித் திட்டம், சாரணர் இயக்க அணிகள், அரசு அலுவலகங்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள், குடியிருப்போர் நலச் சங்கங்கள் தேர்வு செய்யப்பட்டு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். மேலும், முதல் பரிசாக ரூ.10,000, இரண்டாம் பரிசாக ரூ.5,000, மூன்றாம் பரிசாக ரூ.2,000 மற்றும் பசுமை ஆர்வலர் கேடயம் வழங்கப்பட உள்ளது. மரக்கன்றுகள் தேவை, நடவு செய்வதற்கான இடவசதி உள்ளிட்ட தகவல்களுக்கு மண்டல வாரியாக கிழக்கு மண்டலம் வி.அரி கணேசன் (98425 30292), வடக்கு– சி.ராஜசேகரன் (80563 47075), தெற்கு–ஜி. ஸ்டாலின் பாக்கியநாதன் (94435 28621), மேற்கு–சு. ராஜபாண்டியன் (94436 10511) ஆகியோரை தொடர்பு கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தூத்துக்குடி- உதவித்தொகையை உயர்த்தக் கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல சேவைகள் சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக வெற்றிக்கழக அரசு தேர்தல் நேரத்தில் அறிவித்தபடி மாற்றுத்திறனாளிகளின் உதவித் தொகையை அதிகப்படுத்தி வழங்க வேண்டும் எனவும் அரசின் கஜானா காலியாக உள்ளதாக தெரிவித்த தமிழக வெற்றிக்கழக அரசு தற்போது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொண்டுள்ளது எனவே போதுமான நிதி இருப்பதால் தங்களுடைய உதவி தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பாக மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் மேலும் தமிழக வெற்றிக் கழக அரசு மாற்றுத்திறனாளிகளை ஏமாற்றி வருவதாக தெரிவித்தும் கோஷங்களை எழுப்பினார்கள் 1500 ரூபாய் உதவித்தொகை என்பது தங்களுக்கு போதுமானதாக இல்லை எனவும் வீட்டு வாடகை மளிகை பொருட்களின் விலை உயர்வு மின் கட்டண உயர்வு என பல்வேறு வகையில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருவதால் தங்களுடைய உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் இல்லை என்றால் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் தெரிவித்தனர்.1
- ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூரில் தேமுதிக தலைவர் கேப்டனின் பிறந்த நாளையொட்டி கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்பு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம் மறைந்த தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்தின் 74 வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுதும் தேமுதிகவினரால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் பேருந்து நிலைய வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்தின் உருவப் படத்திற்கு, தூத்துக்குடி மாநகர மாவட்ட செயலாளர் தயாளலிங்கம் தலைமையில் தேமுதிக கட்சியினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர் . மறைந்த தேமுதிக நிர்வாகிகளான ஒன்றிய துணை செயலாளர் பிச்சைமணி, துப்பாஸ்பட்டி கிளை செயலாளர் மாரி ராஜா, மணியாச்சி கிளை செயலாளர் பெருமாள்சாமி ஆகியோரின் குடும்பத்தினருக்கு தல பத்தாயிரம் ரூபாய் நிதி உதவியும் ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி பருப்பு எண்ணெய் உள்ளிட்ட மளிகை சாமான்களும் வழங்கப்பட்டது மேலும் மேலமடம் தேமுதிக நிர்வாகி மாடசாமி என்பவருக்கு ரூபாய் பதினோராயிரம் மதிப்பிலான இஸ்திரி பெட்டியும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், , மாவட்ட துணைச் செயலாளர் ராமகிருஷ்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட தொழிற்சங்க தலைவர் வல்லரசு துரை, முருகன், ஒன்றிய அவை தலைவர் முத்துக்குமார், ஒன்றிய பொருளாளர் திருமணி முருகன், ஒன்றிய துணைச் செயலாளர் செல்வம் ,ஜெகன், முத்துவேல், கிழக்கு ஒன்றிய பொருளாளர் ஜெயகிருஷ்ணன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் பாலமுருகன், ஒன்றிய துணைச் செயலாளர் பழனி முருகன், மாவட்ட பிரதிநிதி சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்1
- நெல்லையில் போக்குவரத்து கழக ஊழியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம் ஜிசிசி என்ற பெயரில் மின்சார பேருந்துகளை இயக்கும் நடவடிக்கையை கைவிட்டு விட்டு அரசு போக்குவரத்துக் கழகமே இயக்க நடவடிக்கை வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை மண்டல போக்குவரத்து கழக மேலாளர் அலுவலகம் முன்பு போக்குவரத்து கழக ஊழியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம் நெல்லை வண்ணாரப்பேட்டை தாமிரபரணி பணிமனை அருகே அமைந்துள்ள நெல்லை மண்டல போக்குவரத்துக் கழக மேலாளர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சம்மேளனம் சிஐடியூ சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மற்றும் ஓய்வுபெற்றோர் கலந்து கொண்டு, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காலை 10 மணி முதல் மறுநாள் காலை 10 மணி வரை 24 மணி நேரம் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் வரவு-செலவு கணக்குகளை ஆய்வு செய்து, வரவுக்கும் செலவுக்கும் இடையிலான வித்தியாசத் தொகையை அரசு வழங்க வேண்டும், GCC என்ற பெயரில் மின்சார பேருந்துகளை தனியார் மூலம் இயக்கும் நடவடிக்கையை கைவிட்டு, அரசு போக்குவரத்துக் கழகமே மின்சார பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கல்வித் தகுதியின் அடிப்படையில் வாரிசுதாரர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.1
- கயத்தாறில் மதுரை மெயின் ரோட்டில் மாற்று திறனாளிகள் கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் கயத்தாறில் மதுரை மெயின் ரோட்டில் மாற்றுத்திறனாளிகளின் கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கயத்தாறு ஒன்றிய மாற்றுத்திறனாளிகள் சங்கத் தலைவர் காந்திராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஜெபஸ்டின்ராஜ், மாவட்ட துணைச் செயலாளர் எம். சாலமுன்ராஜ், மாவட்ட குழு உறுப்பினர் சரோஜா, கோவில்பட்டி நகர செயலாளர் குருநாதன், நகர குழு உறுப்பினர்கள் திருப்பதி, செல்வராஜ், ஆகியோர் கலந்து கொண்டனர்.மேலும் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையாவது மாதந்தோறும் வழங்கப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகையை ரூபாய் 6000 ஆக உயர்த்தக் கோரியும், மாற்றுத்திறனாளிகள் உதவி த்தொகைக்காக வழங்கப்பட்ட அனைத்து மனுக்களையும் உடனடியாக பரிசீலனை செய்து உடனடியாக உதவித்தொகை வழங்கும்படியும், தமிழக அரசு அறிவித்துள்ள வெற்றி வீடு திட்டத்தில் மாற்று திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாற்றுத்திறனாளிகள் கண்டன கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.4
- கயத்தாறில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு சங்கம் சார்பில் தமிழக அரசை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது* தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கம் சார்பில் தமிழக அரசை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தினை மாற்றுத்திறனாளிகள் சங்க ஒன்றிய செயலாளர் காந்திராஜ் தலைமையில் கயத்தாறு பஜாரில் வைத்து நடைபெற்றது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் சாலமன் ராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் தமிழகத்தில் ஏற்கனவே வழங்கப்படும் 1500 ரூபாய்க்கு பதிலாக ஆந்திரா தெலுங்கானா மாநிலங்களைப் போலவே மாதந்தோறும் 6 ஆயிரம் வழங்க வலியுறுத்தியும். இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உதவித்தொகை விண்ணப்பித்து காத்திருக்கும் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவித்தொகை உடனடியாக வழங்கவும். மாநிலம் முழுவதும் அரசு பேருந்துகளில் மகளிர் மட்டும் திருநங்கை இலவசமாக பயணிக்கும் வெற்றி பயணத் திட்டத்தில் அனைத்து மாற்றுத்திறனாளிகளும் திட்டத்தில் பயன்பெறும் வகையில் இத்திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் எனவும் தமிழக அரசே கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 20க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் கலந்து கொண்டனர்2
- RR AARI WORK, Aari Work, Aari Embroidery, Aari Blouse, RR AARI WORK1
- தூத்துக்குடியில் ஆகஸ்டு 27 இல் புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது *சென்னை சில்க்ஸ் மற்றும் தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம் இணைந்து நடத்தக்கூடிய மாபெரும் புத்தக கண்காட்சி வரும் 27ம் தேதி தூத்துக்குடியில் நடைபெறுகிறது தூத்துக்குடியில் வரும் 27ஆம் தேதி புத்தக் கண்காட்சி தொடங்கி அடுத்த மாதம் 6ம் தேதி வரை தொடர்ந்து 11 நாட்கள் நடைபெற உள்ளது. 25 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 10 லட்சம் புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளது. தமிழ், ஆங்கிலம், இலக்கியம், அறிவியல், பொது அறிவு, போட்டி தேர்வு உள்ளிட்ட அனைத்து புத்தகங்களும் இந்த கண்காட்சியில் இடம்பெற உள்ளது. கண்காட்சியின் நோக்கம் மாணவர்களுக்கு வாசிப்பு திறன் புத்தகம் படிப்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளோம். வரும் 27 ஆம் தேதி காலை புத்தக கண்காட்சி துவக்க விழா நடைபெறுகிறது. மாநகராட்சி ஆணையர் பிரியங்கா தலைமையில், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி இந்த புத்தக கண்காட்சியை திறந்து வைக்க உள்ளார். மாணவ மாணவிகளுக்காக தினசரி கட்டுரை போட்டி திருக்குறள் போட்டி ஓவியப்பட்டி கதை எழுத போட்டி என பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளது. தமிழ்நாடு புத்தக விற்பனையாளர் சங்கம் இதுவரை 200க்கும் மேற்பட்ட கண்காட்சிகளை நடத்தி உள்ளது என தமிழ்நாடு புத்தக விற்பனையாளர் சங்கத்தின் சார்பில் ராஜபாண்டி மற்றும் ரவிவர்மன் ஆகியோர் தெரிவித்தார்.1
- விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீடு புகுந்து தந்தை மகனை வெட்டி கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.... ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்ட பிரிவை சேர்ந்தோர் வீடு புகுந்து வெட்டிய கும்பல் வசிக்கும் பகுதிக்குச் சென்று 15 இருசக்கர வாகனங்கள் 3 ஆட்டோக்களை அடித்து நொறுக்கியதால் பதட்டம்... போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கான்சாபுரம் கிராமம், மங்கம்மாள் கோயில் தெருவை சேர்ந்த கணேச பாண்டி (49), மற்றும் அவரது மகன் கௌதம் (20) இருவரும் நேற்று நள்ளிரவு வழக்கம் போல் வீட்டில் தூக்கிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அருகில் வசிக்கும் மற்றொரு பிரிவை சேர்ந்த ஒரு கும்பல் வீடு புகுந்து தந்தை கணேச பாண்டி மற்றும் மகன் கௌதமை வெட்டி விட்டு தப்பி ஓடி உள்ளனர். இதில் இருவரும் பலத்த காயமடைந்த நிலையில் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தை கண்டு ஆத்திரமடைந்த கணேசபாண்டி மற்றும் அவரது உறவினர் தரப்பைச் சேர்ந்த ஒரு பிரிவினர் வீடு புகுந்து அறிவாளால் வெட்டிய கும்பல் வசித்த பகுதிக்கு சென்று அங்கிருந்த 15 ற்கும் இருசக்கர வாகனங்கள் மற்றும் 3 ஆட்டோக்களை அடித்து நொறுக்கினர். இதனால் இப்பகுதியில் இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்படும் பதட்டமான சூழல் நிலவுவதால் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் திருமண ஊர்வலம் நடந்த போது இரு பிரிவினரிடையே தகராறு ஏற்பட்டு சமாதான கூட்டம் மூலம் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்ட நிலையில், அதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இச்சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.1