மேகதாது விவகாரத்தில் கர்நாடகா அரசுக்கு கண்டனம் தெரிவித்த சௌமியா அன்புமணி! பாட்டாளி மக்கள் கட்சியின் பசுமைத் தாயக தலைவரும், தர்மபுரி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான திருமதி சௌமியா அன்புமணி, நீங்கள் சேலத்தில் நடைபெற்ற தனியார் கல்லூரி நிகழ்ச்சி வந்து செய்தியாளர்களை சந்தித்தபோது, காவேரி ஆற்றுக்கு நடுவே மேகதாதியில் கர்நாடகா அரசு அணை கட்டுவதை தடுக்கும் நோக்கில் தமிழக சட்டமன்றத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு மனதாக கனடா அரசுக்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றி, அந்தத் தீர்மானங்களை தன்னடக அரசுக்கு அனுப்பி வைத்தும் கர்நாடக அரசு எந்த ஒரு மதிப்பும் தராமல் தற்போது தமிழக அரசு மற்றும் தமிழக விவசாயிகளின் நலனுக்கு எதிராக அணையை கட்டியே தீருவோம் என கூறியிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. மேலும் மழைக்காலங்களில் கர்நாடக அணைகளில் உள்ள உபரி நீரை தான் தமிழகத்திற்கு திறந்து விடுகிறார்கள், நாங்கள் கேட்பது உபரி நீரை அல்ல அணைகளில் தேக்கி வைத்துள்ள எங்களுக்கு தர வேண்டிய பங்கு நீரை தான் நாங்கள் கேட்கிறோம் அதையும் கர்நாடக அரசு தர மறுப்பது மிகவும் கண்டனத்திற்குரியது, எனவே மத்திய மாநில அரசுகள் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருமதி சௌமியா அன்புமணி அவர்கள் தெரிவித்தார்.
மேகதாது விவகாரத்தில் கர்நாடகா அரசுக்கு கண்டனம் தெரிவித்த சௌமியா அன்புமணி! பாட்டாளி மக்கள் கட்சியின் பசுமைத் தாயக தலைவரும், தர்மபுரி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான திருமதி சௌமியா அன்புமணி, நீங்கள் சேலத்தில் நடைபெற்ற தனியார் கல்லூரி நிகழ்ச்சி வந்து செய்தியாளர்களை சந்தித்தபோது, காவேரி ஆற்றுக்கு நடுவே மேகதாதியில் கர்நாடகா அரசு அணை கட்டுவதை தடுக்கும் நோக்கில் தமிழக சட்டமன்றத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு மனதாக கனடா அரசுக்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றி, அந்தத் தீர்மானங்களை தன்னடக அரசுக்கு அனுப்பி வைத்தும் கர்நாடக அரசு எந்த ஒரு மதிப்பும் தராமல் தற்போது தமிழக அரசு மற்றும் தமிழக விவசாயிகளின் நலனுக்கு எதிராக அணையை கட்டியே தீருவோம் என கூறியிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. மேலும் மழைக்காலங்களில் கர்நாடக அணைகளில் உள்ள உபரி நீரை தான் தமிழகத்திற்கு திறந்து விடுகிறார்கள், நாங்கள் கேட்பது உபரி நீரை அல்ல அணைகளில் தேக்கி வைத்துள்ள எங்களுக்கு தர வேண்டிய பங்கு நீரை தான் நாங்கள் கேட்கிறோம் அதையும் கர்நாடக அரசு தர மறுப்பது மிகவும் கண்டனத்திற்குரியது, எனவே மத்திய மாநில அரசுகள் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருமதி சௌமியா அன்புமணி அவர்கள் தெரிவித்தார்.
- தவெக அரசுக்கு எதிராக விவசாயிகளை திரட்டி போராட்டம்! இபிஎஸ் அறிவிப்பு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சேலத்தில் இருந்து விமான மூலம் சென்னை செல்வதற்கு முன் சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறும் போது, தமிழக வெற்றிக்கழக அரசு தேர்தல் வாக்குறுதியின் அளித்தபடி விவசாயிகளின் முழு கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், மேலும் கடன் தள்ளுபடி காண அறிவிப்பு நடைபெற உள்ள பட்ஜெட் கூட்டத்தொடரின் போது அறிவிக்க வேண்டும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தோடு விளையாடுவதை விட்டுவிட்டு முதல்வர் மௌனத்தை கலைத்து விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், ஒருவேளை விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய அறிவிப்பு தவறும் பட்சத்தில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து விவசாயிகளையும் ஒன்றிணைத்து அதிமுக சார்பில் விரைவில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்தார்.1
- மின் சார வாரியத்தில் பணிபுரிந்து 40வது ஆண்டில் பணி நிறைவு பாராட்டு விழா..! மின் சார வாரியத்தில் பணிபுரிந்து 40வது ஆண்டில் பணி நிறைவு பாராட்டு விழா..! தருமபுரி அடுத்து சோகத்தூர் பகுதியில் உள்ள ஆட்டுக்காரன்பட்டி தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு மின் சார வாரியத்தில் (22.4.1987) முதல் 39 ஆண்டுகளாக பணி கடந்து 40 வது ஆண்டில் பணியை சிறப்புடன் தொடர்ந்து (31.07.2026) இன்றுடன் அதியமான்கோட்டையில் பணிபுரிந்த சின்னசாமி அவருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மின் சார வாரியத்தில் பணி புரியும் பணியாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பணி நிறைவு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.1
- பாப்பிரெட்டிப்பட்டி அருகே பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள ஆலாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் ராஜசேகரன்,தலைமையில் செயலாளர் மாதையன், முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது , இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள், தேர்தல் வாக்குறுதிப்படி தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க் கடன்களை உடனடியாக முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், இதுவரை அந்த வாக்குறுதியை நிறைவேற்றாத அரசைக் கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர். அத்துடன், நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500 ஆதரவு விலையும், கரும்பு டன்னுக்கு ரூ.4,500 ஆதரவு விலையும் வழங்க வேண்டும், வேளாண் இடுபொருட்களை இலவசமாக வழங்க வேண்டும், பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும், வரும் வேளாண் பட்ஜெட் கூட்டத் தொடரில் போர்க்கால அடிப்படையில் விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து பயிர்க் கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்ய அறிவிப்பு வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.1
- மூன்று கிலோ மீட்டர் தொலைவிற்கு கிராம மக்கள் தொட்டில் கட்டி சுமந்து சென்றனர். கோத்தகிரி அருகே உள்ள இடுகொரை கிராமத்திற்கு உரிய சாலை வசதி இல்லாததால் இறந்தவரின் சடலத்தை சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவிற்கு கிராம மக்கள் தொட்டில் கட்டி சுமந்து சென்றனர்.1
- மாம்பாறை முனியப்பன் கோவிலில் இன்று பக்தர்கள் அடைசல் பூஜை வழிபாடு செய்தனர்1
- பாலக்கோட்டில் அனைத்து துறை ஓய்வூதியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றியத் தலைவர் முருகேசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சங்கத்தின் பொருளாளர் சுப்ரமணி, துணைத் தலைவர் முருகன் மற்றும் மூத்த நிர்வாகிகள் ராமசாமி, காவேரியப்பன், ரகீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து சங்க நிர்வாகிகள் மற்றும் ஏராளமான ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை முழக்கங்களாக எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில், அரசாணை எண் 123-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும், ஓய்வூதியர்களிடம் மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படும் ரூ.644 தொகையை ரத்து செய்ய வேண்டும், 10 சதவீத ஓய்வூதிய உயர்வை வழங்க வேண்டும், ஓய்வூதியர்களின் மருத்துவச் செலவுகள் அனைத்தையும் தமிழக அரசே ஏற்க வேண்டும், முதியோர் ஓய்வூதியர்களை தங்களது உரிமைகளுக்காக போராட வேண்டிய நிலைக்கு தள்ளக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மேலும், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள ஓய்வூதியர் நலக் கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும், ஓய்வூதியர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் முருகேசன், அன்பழகன், சாந்தா, சின்னபாப்பா, ஜெயந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டதுடன், ஏராளமான ஓய்வூதியர்களும் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்1
- குங்கும காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த எல்லைப்பிடாரியம்மன்! சேலம் அருள்மிகு ஸ்ரீ எல்லை பிடாரியம்மன் திருக்கோவிலில், இன்று ஆடி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, அம்மனுக்கு சிகப்பு நிறப்பட்டாடை அணிவித்து வண்ணமலர் மாலைகளுடன், குங்குமக் காப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அருள்மிகு ஸ்ரீ எல்லைப்பிடாரி அம்மனை மனமுருகி வழிபட்டனர்.1
- சேலம் செந்தாரப்பட்டி பேரூராட்சியில் உள்ள மதுபான கடை அகற்ற வேண்டி போராட்டம் சேலம் மாவட்டம் கெங்கவல்லி தாலுகாவிற்கு உட்பட்ட செந்தாரப்பட்டி பேரூராட்சியில் ஒன்னாவது வார்டு பகுதியில் அரசு மதுபானம் கடை இயங்கி வருகிறது இந்த மதுபான கடையை பொதுமக்களுக்கு இடைஞ்சலாக உள்ளதால் உடனடியாக மதுபான கடை அகற்ற வேண்டும் என போராட்டம் நடைபெற்றது இதனை அடுத்து அதிகாரிகள் ஒரு மாதம் அவகாசம் கேட்டதனால் போராட்டம் கைவிடப்பட்டது.1