Shuru
Apke Nagar Ki App…
தக்கலையில் போலீசை தாக்கிய வழக்கு - பிரபல ரவுடி மீது குண்டர் சட்டம் தக்கலையில் போலீசை தாக்கிய வழக்கு – பிரபல ரவுடி பிரின்ஸ்குமார் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது தக்கலையில் போலீஸ்காரரை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல ரவுடி பிரின்ஸ்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. அவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும், ரவுடி பட்டியலில் இடம்பெற்றிருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில், மாவட்ட கலெக்டர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்படி பிரின்ஸ்குமார் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். #Thuckalay #Kanyakumari #Police #GoondasAct #ArukaniMembersTeam
Arukani Members South
தக்கலையில் போலீசை தாக்கிய வழக்கு - பிரபல ரவுடி மீது குண்டர் சட்டம் தக்கலையில் போலீசை தாக்கிய வழக்கு – பிரபல ரவுடி பிரின்ஸ்குமார் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது தக்கலையில் போலீஸ்காரரை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல ரவுடி பிரின்ஸ்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. அவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும், ரவுடி பட்டியலில் இடம்பெற்றிருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில், மாவட்ட கலெக்டர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்படி பிரின்ஸ்குமார் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். #Thuckalay #Kanyakumari #Police #GoondasAct #ArukaniMembersTeam
More news from தமிழ்நாடு and nearby areas
- தென்காசி மாவட்டம்கடையநல்லூரில் அரசு பேருந்தும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஜவுளிக்கடை தொழிலாளி உயிரிழந்தார். சிசிடிவி காட்சிகள் வெளியீடு கடையநல்லூர் மக்கா நகர் பகுதியைச் சேர்ந்த ரஹ்மத்துல்லாஹ்வின் மகன் முகம்மது யூசுப் (32). இவர் ஜவுளிக்கடை ஒன்றில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், சம்பவத்தன்று முகம்மது யூசுப் மோட்டார் சைக்கிளில் கடையநல்லூர் மணிக்கூண்டு அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது மதுரையில் இருந்து செங்கோட்டை நோக்கிச் சென்ற அரசு பேருந்தும், முகம்மது யூசுப் சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட முகம்மது யூசுப் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், முகம்மது யூசுப் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.1
- ஓட்டப்பிடாரம் அருகே நான்கு வழி சாலையில் தவறான திசையில் சென்ற இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழப்பு -புதியம்புத்தூர் போலீசார் விசாரணை ஓட்டப்பிடாரம் அருகே தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்த சுதாகர் (40)என்பவர் டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்துள்ளார்.இந்த நிலையில் தூத்துக்குடி டூ மதுரை தேசிய நெடுஞ்சாலையில் புதூர்பாண்டியபுரம் பாலத்தில் சுதாகர் தவறான திசையில் இருசக்கர வாகனத்தில் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிரே வந்த மாருதி ஆல்ட்டோ கார் அதிவேகமாக இருசக்கர வாகனம் மீது மோதியதில் சுதாகர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி சுதாகர் பரிதாபமாக உயர்ந்தார். சம்பவம் குறித்து புதியம்புத்தூர் காவல் நிலைய போலீசார் விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரான ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த மோகனசுந்தரம் (40 )என்பவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்1
- தூத்துக்குடி மிலாது நபி சிறப்பு துவா மற்றும் அன்னதானம் தூத்துக்குடியில் உள்ள பாரம்பரியமிக்க பழமை வாய்ந்த ஜாமியா பள்ளிவாசலில் மீலாது நபி விழாவை முன்னிட்டு உலக நன்மைக்காக அதிகாலையில் சிறப்பு பிரார்த்தனை; ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்பு- பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கப்பட்டது அண்ணல் நபி முஹம்மது ரசூலுல்லாஹ் அவர்களின் பிறந்தநாளை மீலாது நபி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த ஜாமியா பள்ளிவாசலில் மிலாது நபி விழாவை முன்னிட்டு தொடர்ந்து 12 நாட்கள் மவ்லிது ஓதப்பட்டது. இதை தொடர்ந்து இன்று அதிகாலையில் அரசு காஜி முஜிபுர் ரகுமான், தலைமையில் விவசாயம் செழிக்க மழை வேண்டியும் உலக நன்மைக்காகவும் மதரஷா முதல்வர் இம்தாதுல்லா, ஜாமியா பள்ளிவாசல் தலைமை இமாம் அப்துல் ஆலீம், சதக்கத்துல்லா, மதரசா துணை முதல்வர் முதல்வர் அகமது ஆகியோர் சிறப்பு துவா ஓதினார்கள் இதைத்தொடர்ந்து பத்தாயிரம் பேருக்கு ஒரு டன் அளவிற்கு உணவு சமைக்கப்பட்டு அனைத்து ஜமாத்தை சேர்ந்த மக்கள் மற்றும் பல்வேறு தரப்பு பொதுமக்கள் மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் என அனைவரும் உணவு வழங்கப்பட்டது.1
- குற்றால அருவிகளில் விடுமுறை தினத்தை முன்னிட்டு குடும்பம் குடும்பமாக ஆர்ப்பரித்த வரும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமைந்துள்ள குற்றால அருவிகளில் தற்போது சீசன் களை கட்டி வரும் நிலையில் இங்குள்ள குற்றாலம் மெயின் அருவி ஐந்தருவி புலியருவி சிற்றருவி பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் மிதமாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது இதன் காரணமாக பல பகுதிகளில் இருந்து வரும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தினந்தோறும் குளித்த மகிழ்ந்து செல்கின்றனர்.3
- சேர்மன் இல்ல திருமண விழா மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி சேர்மனாக உள்ள ரமேஷ் அவர்களின் இல்ல திருமண விழா கதிரேசன் கோவில் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது இந்த திருமண விழாவிற்கு முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் மற்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி சிறப்புரையாற்றினார் தொடர்ந்து பல்வேறு பகுதியில் இருந்து வருகை தந்த மதிமுக மாவட்ட செயலாளர்கள் மணமக்களை வாழ்த்தினார்.1
- சிறு தொண்டு நல்லூர் ஸ்ரீ முத்துமாலை அம்மன் கோவில் கொடை விழா ஏரல் அடுத்த சிறுத்தொண்டநல்லூர் அருள்மிகு முத்துமாலைஅம்மன் கோயில் கொடை விழா சப்பரபவனி விமரிசையாக நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அடுத்து உள்ள சிறுத்தொண்டநல்லூர் அருள்மிகு முத்துமாலை அம்மன் திருக்கோயில் ஆவணி கொடை விழா சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியின் சிகர நிகழ்ச்சியாக அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பொன் சப்பரத்தில் நகர் வீதி ஊர்வலம் நிகழ்ச்சி நடைபெற்றது. கொடை நிகழ்ச்சியின் தொடக்கமாக காலை தீர்த்தவாரி நடைபெற்றது முளைப்பாறியிட்ட பெண்கள் தங்கள் வீடுகளில் கும்மி அடித்து பூஜை செய்தனர். மதியக்கொடை கயிறு குத்தி ஆடுதல் வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றது .இரவு சப்பரபவனியை யொட்டி வான வேடிக்கை நடைபெற்றது செண்டை மேளங்கள், நாதஸ்வரங்கள் முழங்க அம்பாள் பொன் சப்பரத்தில் சிறுத் தொண்டநல்லூர் வீதிகளில் ஊர் வலமாக வந்து பக்தருக்கு அருள் பாலித்தார். பக்தர்கள் தங்கள் வீடுகளில் இருந்து அம்மனை சேவித்து தேங்காய் பழம் உடைத்தனர் காலை 7 மணி அளவில் சப்பரம் கோயிலைச் சென்றடையும். நிகழ்ச்சியில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். கொடை விழா நாட்கள் முழுவதும் அன்னதானம் நடைபெற்றது1
- பெற்றோர்களை மதிக்காமல் செல்லும் ஒரு சில பெண்களுக்கு இது ஒரு பாடம் பெற்றோர்களை மதிக்காமல் செல்லும் ஒரு சில பெண்களுக்கு இது ஒரு பாடம் பெண் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் சட்டம் பாதுகாப்பாக உள்ளது அந்த பாதுகாப்பே சில பெண்களுக்கு வாழ்க்கையின் கேள்வி புரியும் உள்ளாக்குகிறது நான் மேஜர் என்ன வேண்டுமானாலும் முடிவு செய்வேன் என்று முடிவு செய்யும் பெண்களுக்கு இது ஒரு பாடம் இன்று பெற்றவர்கள் உற்றார் உறவினர் கூறும் அறிவுரைகள் கசப்பாக இருக்கும் அது வாழ்விற்கு உறுதுணையாக தேனாக இனிக்கும் சரியான தேர்வு செய்யாத நபர்களின் பேச்சு அந்த நேரத்தில் தேனாக இருக்கும் ஆனால் வாழ்வு கசக்கும் பெண் குழந்தைகளையும் ஆண் குழந்தைகளையும் பெற்றோர் தங்களின் குழந்தைகள் வளரும் வரை அதற்கு எந்த ஒரு குறையும் இல்லாமல் வளர்த்து வரும் போது வாலிப வயதில் உணர்ச்சி தூண்டுதலால் தவறான தேர்வு செய்யும் போது பெற்றோரின் அறிவுறுத்தல் ஆண் குழந்தைகளுக்கும் பெண் குழந்தைகளுக்கும் தேவையில்லாததாக தெரிகிறது வாழ்வில் முட்டி மோதி நிற்கும் போது தனது பெற்றோரின் அறிவுரைகள் அப்பொழுதுதான் புரியும் ஆனால் அந்த நேரத்தில் எல்லாம் முடிந்திருக்கும் யோசியுங்கள் பெண்களே யோசியுங்கள் அனைவருக்கும் அன்பான காலை வணக்கத்துடன் அன்னூர் அருணாச்சலம் ஆச்சாரி1
- கோவில்பட்டி முத்தானந்தபுரம் மடா அதிபதிக்கு சதய விழா கொண்டாட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி முத்தானந்தபுரம் தெரு பகுதியில் அமைந்துள்ள முத்தானந்தபுரம் மடத்தில் உள்ள மடாதிபதி சொரூபானந்த சுவாமிகளுக்கு சதய விழாவை முன்னிட்டு கணபதி பூஜை மற்றும் ஆயுள் விருத்தி பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டது தொடர்ந்து மடத்திற்கு வரும் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது பின்னர் சுவாமிகள் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். இதில் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்1
- குஜராத் அம்ரேலி கிடங்கில் தானிய மூட்டைகள் சரிந்து விழுந்த விபத்தில் சிக்கியவர்களில் ஒரு தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் நான்கு தொழிலாளர்கள் படுகாயமடைந்து அம்ரேலி சிவில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். குஜராத் அம்ரேலி கிடங்கில் தானிய மூட்டைகள் சரிந்து விழுந்த விபத்தில் சிக்கியவர்களில் ஒரு தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் நான்கு தொழிலாளர்கள் படுகாயமடைந்து அம்ரேலி சிவில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.1