AIADMK Election Promises: இளைஞர்களுக்கு பைக் வாங்க ரூ.10,000 மானியம்.! கேபிள் டிவி கட்டணம் 50% குறைப்பு- அதிமுக புதிய தேர்தல் வாக்குறுதி தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை மறுதினம் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் இன்று மாலையோடு பிரச்சாரம் முடிவடையவுள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இந்த பரபரப்பான நிலையில் அதிமுக சார்பாக மேலும் 10 தேர்தல் வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் நாட்டில் 17-ஆவது சட்டமன்றப் பேரவைக்கான பொதுத் தேர்தல் 23.4.2026 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஏற்கெனவே 297 நேர்தல் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், எனது தேர்தல் பிரச்சாரத்தின்போது பல்வேறு நரப்பட்ட மக்கள் வைத்த கோரிக்கைகளை ஏற்று, பின்வரும் தேர்தல் வாக்குறுதிகள் அளிக்கப்படுகின்றன.298 கழக ஆட்சி அமைந்தவுடன், மா விவசாயிகளின் நயனை கருத்தில்கொண்டு, மாம்பழத்திற்கு ஆதார விலை நிர்ணயிக்க நடவடிக்கை எடுக்கப்படும். 299 கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி, ஒசூர், தேன்கனிக்கோட்டை தளி ஆகிய பகுதிகளில் பாரம்பரிய முறைப்படி நடந்து வரும் 'அத்துக்கட்டு' பண்டிகையை, பாரம்பரிய முறையில் தொடர்ந்து நடத்துவதற்கு அரசாணை பிறப்பிக்கப்படும். 300, கட்டடத் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டடத் தொழிலாளர்கள் பணி செய்யும்போது தவறி விழுந்து உயிரிழக்க நேரிட்டால், அவர்களது குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் .304. பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க கண்காணிக்க 24/7 War Room மாவட்டத் தலைநகரங்களில் அமைக்கப்படும். 305 மாணவர்கள் கல்லூரிப் படிப்பை முடித்தவுடன், வேலை வாய்ப்பு மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராவதற்காக, தாலுகா அளவில் சிறப்பு கவுன்சிலிங் அமைப்பு ஏற்படுத்தப்படும். 306 இளைஞர்கள். இளம் பெண்கள் சிறு, குறு தொழில்கள் தொடங்குவதற்கு விண்ணப்பித்தால், ஒற்றைச் சாளர முறையில் (Single Window System) 30 நாட்களில் உரிமம் வழங்கப்படுவதுடன், அதற்காக வழங்கப்படும் மானியம் 25 சதவீதத்தில் இருந்து 35 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும். 307 பணிக்குச் செல்லும் 10 லட்சம் இளைஞர்களுக்கு. அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தின் கீழ் இருசக்கர வாகனம் வாங்க ரூ. 10,000/- மானியம் வழங்கப்படும்.

- திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை பகுதியில் தேர்தலை முன்னிட்டு நாளை (21.04.2026) முதல் மூன்று நாட்கள் டாஸ்மாக் மதுபானக் கடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், டாஸ்மாக் மதுபானக் கடைகளில் பொதுமக்கள் பெருமளவில் திரண்டனர். விடுமுறை நாட்களை முன்னிட்டு மதுபானங்களை முன்கூட்டியே வாங்குவதற்காக மக்கள் அதிக அளவில் கடைகளுக்கு வருகை தந்ததால், பல இடங்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்டன. இதனால் சில பகுதிகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. சட்டம் மற்றும் ஒழுங்கை பேணுவதற்காக காவல்துறை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் விதிமுறைகளின்படி அடுத்த சில நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளதால், இந்த கூட்டம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. பொதுமக்கள் ஒழுங்காக நடந்து கொள்ளவும், தேவையற்ற நெரிசலை தவிர்க்கவும் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.1
- பாலக்கோடு திமுக வேட்பாளர் டாக்டர் செந்தில்குமார் பேட்டி. பாலக்கோடு தொகுதியில் 25 ஆண்டு காலமாக சட்டமன்ற உறுப்பினராக இருந்த கே.பி.அன்பழகன், விவசாயம், வளர்ச்சி சார்ந்த திட்டங்களையும், நீர்ப்பாசன திட்டங்களையும், இதுவரை செய்யவில்லை என்பது மக்கள் குற்றச்சாட்டு, ஒவ்வொரு இடத்திலும் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட செய்து தரவில்லை. பழங்குடியினர், இஸ்லாமியர், ஆதிதிராவிடர் வாழக்கூடிய பகுதிகளில் கூட அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரவில்லை. இதுவரை 6 கிராமங்களில் அடிப்படை வசதிகள் கூட இல்லை என்பது தெரிய வந்திருக்கிறது. 25 ஆண்டு காலமாக அமைச்சராகவும் நிறைவேற்றவில்லை. இரண்டு தொழிற்சாலைகளை கொண்டு வந்திருந்தால், கூட மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருக்கும். ஓசூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இருக்கும் போது கேபி அன்பழகன் ஆளுங்கட்சியாக இருக்கும் பொழுது நினைத்திருந்தால் படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு கிடைத்திருக்கும். விவசாயத்தை நம்பி இருக்கின்ற பாலக்கோடு பகுதிகளுக்கு நீர் பாசன திட்டங்கள் இல்லை. இங்கு இருக்கின்ற சர்க்கரை ஆலை சிறந்த சர்க்கரை ஆலை ஆக விருது பெற்றது. ஆனால் கரும்பு உற்பத்தி இல்லை என்பதால், மூடும் நிலைமையில் இருந்து வருகிறது. ஒரு அமைச்சராக இருப்பவர் நினைத்திருந்தால், இதை செய்வதற்கு ஐந்தாண்டுகள் தேவைப்பட்டிருக்கும். ஆனால் எதையும் செய்யாமல் 25 ஆண்டுகள் இருந்திருக்கிறார். இதனால் சர்க்கரை ஆலை மூடும் நிலையில் இருந்து வருகிறது. இவரைப் பார்த்தால் மக்களுக்கு ஒரு பயமான நிலை தான் இருந்து வருகிறது. இவரை கேள்வி கேட்ட ஒருவரை தாக்கியுள்ளனர். தற்போது அவரை எதிர்த்து நாம் போட்டியிடும் போது மக்கள் ஓரணியில் திரண்டு நம் பின்னாடி இருக்கிறார்கள். மிகப்பெரிய வெற்றியை தர தயாராகி இருக்கிறார்கள். அப்பப்ப தேர்தல் வரும் நேரத்தில் மட்டும் எல்லோருக்கும் வீடுகளுக்கு சேலை கொடுக்கிறார்கள். எங்களுக்கு வேலை தான் முக்கியம் என சொல்கிறார்கள். வேலை இருந்தால் சேலையை நாங்களே வாங்கிக் கொள்வோம். இப்படித்தான் எங்களை ஏமாற்றி வருகிறார். இப்பொழுது நான் கொடுத்திருக்கின்ற வாக்குறுதி உங்கள் பேரக் குழந்தைகள், அடுத்த தலைமுறை வரும்போது நம்பிக்கை கூறிய வகையில் ஒரு வேலையை கொடுப்பேன் என்று உறுதி அளித்திருக்கிறேன். இந்த பகுதியில் இருந்து தக்காளி, மாம்பழம், தென்னை உள்ளிட்ட விவசாய பொருட்கள் மதிப்பு கூட்டு பொருள்கள் தயாரித்து அவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கின்ற வகையில் மதிப்பு கூட்டு தொழிற்சாலையை கொண்டு வருவேன். பன்னாட்டு நிறுவனங்களுடன் சேர்ந்து தக்காளி கூழ் பேக்டரி கொண்டு வருவேன். காய்கறிகள் இந்த பகுதியில் அதிகமாக உற்பத்தி ஆகிறது. ஆனால் ராயக்கோட்டை சென்று அங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதற்கு குளிர்சாதன வசதிகளுடன் கூடிய பெரிய சந்தை உருவாக்கி, ஒரு வளர்ச்சிக்கான பாலக்கோடு மக்களிடம் ஒப்படைப்பேன் அது மே நான்காம் தேதிக்கு பிறகு நடைபெறும். எனக்கு எண்ணேகோல் புதூர் திட்டத்தை நிறைவேற்ற 8 மாதங்கள் போதும். தண்ணீர் கொண்டு வரப்பட்டதற்கு ஒரு வருடத்திற்கு செய்து கொடுப்பேன். இந்த மாவட்டமே மாறப் போகிறது. பாலக்கோடு மிக செழிப்பான விவசாயம் சார்ந்த பகுதியாக இருக்கும். தமிழ்நாட்டிலேயே இது மாதிரியான வளர்ச்சி எங்கும் இல்லாத அளவிற்கு செய்யப் போகிறோம். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பொழுது சாலையில்லாத மலை கிராமங்களுக்கு சாலை உள்ளிட்ட 12000 கோடிக்கு நலத்திட்ட உதவிகளை தருமபுரி மாவட்டத்திற்கு கொண்டு வந்திருக்கின்றேன். இதைப் பற்றி எங்கும் நான் பேசவில்லை. வளர்ச்சிக்கான திட்டத்தை மட்டும் பேசி இருக்கேன். அதேபோல் கே.பி.அன்பழகனை தனிப்பட்ட முறையில் எங்கு விமர்சனம் அடையவில்லை. வளர்ச்சி வேண்டும் அடுத்த தலைமுறைக்கு வளர்ச்சிகரமான பாலகோடு ஒப்படைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். எல்லா திட்டங்களையும் செய்து தருமபுரி மாவட்டம் விவசாய மற்றும் தண்ணீர் பற்றாக்குறை இல்லாத மாவட்டமாக உருவாக்க போகிறேன் என தெரிவித்தார்.1
- வீரசைவ - லிங்காயத் மகாசபையின் தலைவரும், கர்நாடக அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான திரு. ஈஸ்வர் காண்ட்ரே கிருஷ்ணகிரி நகருக்கு வந்ததையடுத்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் பி. சி.சேகர் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது அப்போது மாநில பேச்சாளர் நாஞ்சில் ஜேசு உள்ளிட்ட பலர் பங்கேற்பு1
- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நேதாஜி நகர் பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் வாணியம்பாடி வேட்பாளர் சையத் புர்ஹானுதீன் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் வேட்பாளருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து நடனமாடி பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர் இதில் நகர நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.1
- ஊத்தங்கரையில் காங்கிரஸ் வேட்பாளர் குப்புசாமிக்கு, கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமார் வாக்கு சேகரித்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தனி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.குப்புசாமி அவர்களை ஆதரித்து ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பில் கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமார் கை சின்னத்திற்கு வாக்கு அளிக்குமாறு தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது வாக்காளர்களுக்கு மத்தியில் முதலமைச்சர் திமுக ஸ்டாலின் தமிழகத்தில் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார் ஏராளமான திட்டங்களை நிறைவேற்றி உள்ளார் அவரைப் போல கர்நாடகாவிலும் நாங்கள் செயல்படுத்தி வருகிறோம் காங்கிரஸ் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர் குப்புசாமிக்கு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால்தான் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி மீண்டும் அமையும் அதனால் அனைவரும் கை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். அப்போது திமுக மாவட்ட செயலாளர்கள் தே.மதியழகன் ஒய் பிரகாஷ், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ரகு, திமுக ஒன்றிய கழக செயலாளர்கள் மூன்றம்பட்டி குமரேசன், எக்கூர் செல்வம், ரஜினி செல்வம், நகர செயலாளர் தீபக் என்கிற பார்த்திபன் உள்ளிட்ட கூட்டணி கட்சி சார்ந்த ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தனர்.1
- br alone and be happy 😊1
- சேலம் மாநகராட்சி திமுக கவுன்சிலர் சர்க்கரை சரவணன் வெளியிட்டுள்ள சமூக வலைதள வீடியோ அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.அதில் சேலம் மத்திய மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான ராஜேந்திரன்,கட்சியில் உள்ள முக்கியத் தலைவர்களை ஓரங்கட்டிவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். இதனால் நிர்வாகிகள் தேர்தல் பணியில் சுணக்கம் காட்டி வருவதாகவும், இதனால் அமைச்சரின் வெற்றி கேள்விக்குறியாகி? என தெரிவித்துள்ளார்1
- கிருஷ்ணகிரி தனியார் மஹால் இன்றுவீரசைவ - லிங்காயத் மகாசபையின் தலைவரும், கர்நாடக அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான திரு. ஈஸ்வர் காண்ட்ரே கிருஷ்ணகிரி நகருக்கு வருகை தந்து கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் செல்லகுமார்க்குஆதரவு கைசின்னத்திற்கு வாக்குகேட்டு பேட்டி அளித்தார் மேலும்கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் பி. சி.சேகர் உள்ளிட்ட பலர் உடன் இருந்தன.1