logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காமலாபுரம் காட்டூர் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி செல்வம் என்பவர் நள்ளிரவில் சின்ன ஏரிக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் தண்ணீரில் மூழ்கியதால், பயத்தில் "காப்பாற்றுங்கள்" என சத்தமிட்டுள்ளார். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அவரது மகன் மற்றும் உறவினர்கள் அவரை காப்பாற்ற தீவிர முயற்சி மேற்கொண்டனர். எனினும், அவர்களின் முயற்சி தோல்வியில் முடிந்தது. இதையடுத்து ஓமலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் ஏரியில் பல மணி நேரம் தீவிரமாகத் தேடி செல்வத்தின் உடலை மீட்டனர். இச்சம்பவம் தொடர்பாக ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், உயிரிழந்த செல்வத்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

1 hr ago
user_Murali
Murali
Salem, Tamil Nadu•
1 hr ago

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காமலாபுரம் காட்டூர் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி செல்வம் என்பவர் நள்ளிரவில் சின்ன ஏரிக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் தண்ணீரில் மூழ்கியதால், பயத்தில் "காப்பாற்றுங்கள்" என சத்தமிட்டுள்ளார். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அவரது மகன் மற்றும் உறவினர்கள் அவரை காப்பாற்ற தீவிர முயற்சி மேற்கொண்டனர். எனினும், அவர்களின் முயற்சி தோல்வியில் முடிந்தது. இதையடுத்து ஓமலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் ஏரியில் பல மணி நேரம் தீவிரமாகத் தேடி செல்வத்தின் உடலை மீட்டனர். இச்சம்பவம் தொடர்பாக ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், உயிரிழந்த செல்வத்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

More news from தமிழ்நாடு and nearby areas
  • பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் மாநில இணை பொது செயலாளரும், சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான அருள் வெளியிட்டுள்ள திடீர் வீடியோ செய்தி, சேலம் மாவட்ட பாமகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணிக்கு இடையே இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வந்து இருவரும் தற்போது ஒற்றுமையாகிவிட்டனர். ஆனால், மருத்துவர் ராமதாசை நம்பிச் சென்ற தங்களைப் போன்றவர்கள் தற்போது நிற்கதி இல்லாமல் தவித்து வருவதாக அருள் தனது வீடியோவில் ஆதங்கம் தெரிவித்துள்ளார். தங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காக, வருகின்ற 16ஆம் தேதி வியாழக்கிழமை சேலம் இரும்பாலை சாலையில் உள்ள பிசிசி திருமண மண்டபத்தில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அருளின் ஆதரவாளர்கள் மற்றும் ராமதாஸின் அதிருப்தியாளர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவர்கள் தெரிவிக்கும் முடிவின்படியே தனது அடுத்தகட்ட செயல்பாடுகள் அமையும் என்று முன்னாள் எம்எல்ஏ அருள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
    1
    பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் மாநில இணை பொது செயலாளரும், சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான அருள் வெளியிட்டுள்ள திடீர் வீடியோ செய்தி, சேலம் மாவட்ட பாமகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணிக்கு இடையே இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வந்து இருவரும் தற்போது ஒற்றுமையாகிவிட்டனர். ஆனால், மருத்துவர் ராமதாசை நம்பிச் சென்ற தங்களைப் போன்றவர்கள் தற்போது நிற்கதி இல்லாமல் தவித்து வருவதாக அருள் தனது வீடியோவில் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

தங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காக, வருகின்ற 16ஆம் தேதி வியாழக்கிழமை சேலம் இரும்பாலை சாலையில் உள்ள பிசிசி திருமண மண்டபத்தில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அருளின் ஆதரவாளர்கள் மற்றும் ராமதாஸின் அதிருப்தியாளர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவர்கள் தெரிவிக்கும் முடிவின்படியே தனது அடுத்தகட்ட செயல்பாடுகள் அமையும் என்று முன்னாள் எம்எல்ஏ அருள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
    user_Rajendran
    Rajendran
    salem mail & City mail Reporter சேலம், சேலம், தமிழ்நாடு•
    1 hr ago
  • தாரமங்கலம் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவிலில் பிரதோஷ தினத்தை முன்னிட்டு சிவபெருமானுக்கு சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் சிறப்பாக நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட காளை வாகனத்தில் சிவபெருமானும் பார்வதி தேவியாரும் ஒருங்கே அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். சிவமேளம் முழங்க, பக்தர்களின் 'சிவாய நம' கோஷம் விண்ணை எட்ட, அம்மையப்பன் திருக்கோவிலைச் சுற்றி திரு வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மையப்பனை தரிசித்து வழிபட்டனர். வழிபாட்டின் நிறைவாக பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. பிரதோஷத்தையொட்டி அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவிலில் ஏராளமான பக்தர்கள் திரண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
    1
    தாரமங்கலம் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவிலில் பிரதோஷ தினத்தை முன்னிட்டு சிவபெருமானுக்கு சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் சிறப்பாக நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட காளை வாகனத்தில் சிவபெருமானும் பார்வதி தேவியாரும் ஒருங்கே அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். சிவமேளம் முழங்க, பக்தர்களின் 'சிவாய நம' கோஷம் விண்ணை எட்ட, அம்மையப்பன் திருக்கோவிலைச் சுற்றி திரு வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இந்த பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மையப்பனை தரிசித்து வழிபட்டனர். வழிபாட்டின் நிறைவாக பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. பிரதோஷத்தையொட்டி அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவிலில் ஏராளமான பக்தர்கள் திரண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
    user_Murali
    Murali
    Salem, Tamil Nadu•
    1 hr ago
  • சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா முத்துநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த பிரேம்ராஜ் பிரகாஷ், உஸ்பெகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பெற்று சேலம் மாவட்டத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் பெரும் பெருமை சேர்த்துள்ளார். ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் நகரில் இன்று நடைபெற்ற ஆப்கானிஸ்தான் XI மற்றும் உஸ்பெகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் போட்டியில், உஸ்பெகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவனில் 6-வது வீரராகப் பிரேம்ராஜ் பிரகாஷ் களம் இறங்கி விளையாடினார். இதுபோன்ற ஒரு குக்கிராமத்தில் இருந்து வெளிநாட்டு தேசிய அணிக்காக ஒரு வீரர் விளையாடுவது ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் பெருமைக்குரிய விஷயமாகக் கருதப்படுகிறது. நமது ஊரின் இந்த மாபெரும் பெருமையை மற்றவர்களுக்கும் பகிர்ந்து தெரியப்படுத்துமாறு பெருமிதத்துடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
    1
    சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா முத்துநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த பிரேம்ராஜ் பிரகாஷ், உஸ்பெகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பெற்று சேலம் மாவட்டத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் பெரும் பெருமை சேர்த்துள்ளார். ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் நகரில் இன்று நடைபெற்ற ஆப்கானிஸ்தான் XI மற்றும் உஸ்பெகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் போட்டியில், உஸ்பெகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவனில் 6-வது வீரராகப் பிரேம்ராஜ் பிரகாஷ் களம் இறங்கி விளையாடினார்.

இதுபோன்ற ஒரு குக்கிராமத்தில் இருந்து வெளிநாட்டு தேசிய அணிக்காக ஒரு வீரர் விளையாடுவது ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் பெருமைக்குரிய விஷயமாகக் கருதப்படுகிறது. நமது ஊரின் இந்த மாபெரும் பெருமையை மற்றவர்களுக்கும் பகிர்ந்து தெரியப்படுத்துமாறு பெருமிதத்துடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
    user_Salem_Updates
    Salem_Updates
    News Anchor கடயம்பட்டி, சேலம், தமிழ்நாடு•
    21 hrs ago
  • ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள சூரியம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில், டாஸ்மாக் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் திடீரென குடியேறும் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோட்டில் டாஸ்மாக் ஊழியர்களின் இந்தப் போராட்டம் மூன்றாவது நாளாக நீடித்து வருகிறது. போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஊழியர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் சித்தோடு போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து, காவல்துறை வாகனம் மூலமாக அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர்.
    1
    ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள சூரியம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில், டாஸ்மாக் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் திடீரென குடியேறும் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோட்டில் டாஸ்மாக் ஊழியர்களின் இந்தப் போராட்டம் மூன்றாவது நாளாக நீடித்து வருகிறது.

போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஊழியர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் சித்தோடு போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து, காவல்துறை வாகனம் மூலமாக அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர்.
    user_Reporter Meganathan
    Reporter Meganathan
    Local News Reporter பவானி, ஈரோடு, தமிழ்நாடு•
    7 hrs ago
  • தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீகோடாளம்மன் திருக்கோவில் சிதலமடைந்து, விளக்கு ஏற்றக்கூட பணம் இல்லாமல் மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறியுள்ளதாகக் கூறப்படுகிறது. மொரப்பூர் நெடுஞ்சாலையில் இக்கோயிலுக்குச் சொந்தமாக சுமார் 20-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் உள்ளது. இக்கோயிலை நேரில் பார்வையிட்ட திருத்தொண்டர்கள் அறக்கட்டளை அறங்காவலர் ராதாகிருஷ்ணன், கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் உள்ள கட்டுமானங்களை ஆய்வு செய்தார். தொடர்ந்து, இந்து அறநிலைத்துறை ஆய்வாளர் மற்றும் செயல் அலுவலரிடம் எந்தவொரு கட்டிடத்திலும் 'இந்து அறநிலைத்துறை கட்டிடம்' என்ற பெயர் பலகை இல்லாதது, கட்டிடங்களுக்கு வாடகை முறையாக வசூலிக்கப்படுகிறதா என்பது மற்றும் புதிய கட்டுமான பணிகளுக்கு எவ்வாறு அனுமதி கொடுக்கப்பட்டது என்பது குறித்து சரமாரியாகக் கேள்வி எழுப்பினார். இது தொடர்பாக முன்னதாக காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார், நிலப் பிரச்சனை எனக் கூறி நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில், கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் சுமார் ₹2 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, காரிமங்கலம் காவல் நிலையத்தில் இந்து அறநிலைத்துறை ஆய்வாளர், செயல் அலுவலர் மற்றும் காரிமங்கலம் காவல் ஆய்வாளர் ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக் கோரி அறங்காவலர் ராதாகிருஷ்ணன் புகார் மனு அளித்துள்ளார்.
    1
    தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீகோடாளம்மன் திருக்கோவில் சிதலமடைந்து, விளக்கு ஏற்றக்கூட பணம் இல்லாமல் மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறியுள்ளதாகக் கூறப்படுகிறது. மொரப்பூர் நெடுஞ்சாலையில் இக்கோயிலுக்குச் சொந்தமாக சுமார் 20-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் உள்ளது.

இக்கோயிலை நேரில் பார்வையிட்ட திருத்தொண்டர்கள் அறக்கட்டளை அறங்காவலர் ராதாகிருஷ்ணன், கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் உள்ள கட்டுமானங்களை ஆய்வு செய்தார். தொடர்ந்து, இந்து அறநிலைத்துறை ஆய்வாளர் மற்றும் செயல் அலுவலரிடம் எந்தவொரு கட்டிடத்திலும் 'இந்து அறநிலைத்துறை கட்டிடம்' என்ற பெயர் பலகை இல்லாதது, கட்டிடங்களுக்கு வாடகை முறையாக வசூலிக்கப்படுகிறதா என்பது மற்றும் புதிய கட்டுமான பணிகளுக்கு எவ்வாறு அனுமதி கொடுக்கப்பட்டது என்பது குறித்து சரமாரியாகக் கேள்வி எழுப்பினார்.

இது தொடர்பாக முன்னதாக காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார், நிலப் பிரச்சனை எனக் கூறி நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில், கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் சுமார் ₹2 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, காரிமங்கலம் காவல் நிலையத்தில் இந்து அறநிலைத்துறை ஆய்வாளர், செயல் அலுவலர் மற்றும் காரிமங்கலம் காவல் ஆய்வாளர் ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக் கோரி அறங்காவலர் ராதாகிருஷ்ணன் புகார் மனு அளித்துள்ளார்.
    user_SURENDIRAVARMA. C
    SURENDIRAVARMA. C
    Local News Reporter பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    21 hrs ago
  • சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காமலாபுரம் காட்டூர் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி செல்வம் என்பவர் நள்ளிரவில் சின்ன ஏரிக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் தண்ணீரில் மூழ்கியதால், பயத்தில் "காப்பாற்றுங்கள்" என சத்தமிட்டுள்ளார். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அவரது மகன் மற்றும் உறவினர்கள் அவரை காப்பாற்ற தீவிர முயற்சி மேற்கொண்டனர். எனினும், அவர்களின் முயற்சி தோல்வியில் முடிந்தது. இதையடுத்து ஓமலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் ஏரியில் பல மணி நேரம் தீவிரமாகத் தேடி செல்வத்தின் உடலை மீட்டனர். இச்சம்பவம் தொடர்பாக ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், உயிரிழந்த செல்வத்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
    1
    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காமலாபுரம் காட்டூர் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி செல்வம் என்பவர் நள்ளிரவில் சின்ன ஏரிக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் தண்ணீரில் மூழ்கியதால், பயத்தில் "காப்பாற்றுங்கள்" என சத்தமிட்டுள்ளார். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அவரது மகன் மற்றும் உறவினர்கள் அவரை காப்பாற்ற தீவிர முயற்சி மேற்கொண்டனர். எனினும், அவர்களின் முயற்சி தோல்வியில் முடிந்தது.

இதையடுத்து ஓமலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் ஏரியில் பல மணி நேரம் தீவிரமாகத் தேடி செல்வத்தின் உடலை மீட்டனர். இச்சம்பவம் தொடர்பாக ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், உயிரிழந்த செல்வத்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
    user_Murali
    Murali
    Salem, Tamil Nadu•
    1 hr ago
  • சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள ஒதியத்தூர் ஊராட்சியில், இரண்டாவது நாளாக ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த போலீசார் குவிக்கப்பட்டு தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுப்பதற்காக, பகல் மற்றும் இரவு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்புப் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையில், சிலைகள் மூடப்பட்டிருந்த இடத்தை ஆத்தூர் கோட்டாட்சியர் தமிழ்மணி தலைமையில் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏதும் ஏற்படாமல் தடுக்கவே இந்த பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    1
    சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள ஒதியத்தூர் ஊராட்சியில், இரண்டாவது நாளாக ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த போலீசார் குவிக்கப்பட்டு தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுப்பதற்காக, பகல் மற்றும் இரவு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்புப் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், சிலைகள் மூடப்பட்டிருந்த இடத்தை ஆத்தூர் கோட்டாட்சியர் தமிழ்மணி தலைமையில் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏதும் ஏற்படாமல் தடுக்கவே இந்த பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    user_Selva
    Selva
    ஆத்தூர், சேலம், தமிழ்நாடு•
    3 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.