Shuru
Apke Nagar Ki App…
குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பதவி ஏற்பு வீடியோ 17-வது சட்டப்பேரவை முதல் கூட்டம் கூடியது. முதல்நாளான இன்று தற்காலிக சபாநாயகர் கருப்பையா MLA-க்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். CM விஜய் முதல் முறையாக சட்டப்பேரவைக்குள் தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் சென்றார். மேலும் தவெக குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினர் விஜயலட்சுமி பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு பொதுமக்களும் கட்சி நிர்வாகிகளும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
DHINESH KUMAR
குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பதவி ஏற்பு வீடியோ 17-வது சட்டப்பேரவை முதல் கூட்டம் கூடியது. முதல்நாளான இன்று தற்காலிக சபாநாயகர் கருப்பையா MLA-க்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். CM விஜய் முதல் முறையாக சட்டப்பேரவைக்குள் தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் சென்றார். மேலும் தவெக குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினர் விஜயலட்சுமி பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு பொதுமக்களும் கட்சி நிர்வாகிகளும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- நாமக்கல் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திலீப் பதவி ஏற்பு வீடியோ 17-வது சட்டப்பேரவை முதல் கூட்டம் கூடியது. முதல்நாளான இன்று தற்காலிக சபாநாயகர் கருப்பையா MLA-க்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். CM விஜய் முதல் முறையாக சட்டப்பேரவைக்குள் தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் சென்றார். மேலும் தவெக நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் திலீப் பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.1
- நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள குஞ்சாம்பாளையம் வயல் ஒன்றில் பைப் போடுவதற்காகத் தோண்டியபோது 10 அடி ஆழ மர்மக் குழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆதிகால மக்கள் தங்கள் தானியங்களைப் பாதுகாக்க இந்தக் குழியைப் பயன்படுத்தியதாக நம்பப்படுகிறது. இந்தக் கண்டுபிடிப்பு அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.1
- தமிழக சட்டமன்றத்தில் பதவி ஏற்பு விழாவின்போது, முதல்வர் ஜோசப் விஜய் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வணக்கத்தை ஏற்காதது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த நிகழ்வின் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி, அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நாள் முதல்வர், முன்னாள் முதல்வருக்கு மரியாதை செலுத்தாதது பதவியை அவமதிப்பதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.1
- கரூர் காந்திகிராமம் பகுதியில் உள்ள தனியார் பஞ்சு குடோனில் இன்று மதியம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், இரண்டு வாகனங்களுடன் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.1
- கூத்தைப்பார் கிராமத்தில் உள்ள கன்னுடைய அய்யனார், சாத்த பிள்ளை அய்யனார் கோவிலில் சித்திரை மாத தேர் திருவிழா கண்ணைக் கவரும் வானவேடிக்கையுடன் மிக விமர்சையாக நடந்தது திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைபார் கிராமத்தில் கண்ணுடைய ஐயனார், சாத்தப்பிள்ளை அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவில் அந்த கிராம மக்களின் வழிபாட்டு தெய்வமாக உள்ளது. இந்த நிலையில் அந்த கோவிலில் சித்திரை மாததேர் திருவிழா நடந்தது. தேர் திருவிழாவை முன்னிட்டு பாரம்பர முறைப்படி பழமை மாறாமல் தேரோடும் வீதிகளில் பொதுமக்கள் அவர்கள் வீட்டு வாசலில் பசு மாட்டின் சாணத்தில் இருந்து எடுக்கப்பட்ட வராட்டியில் பாத்திரம் வைத்து பச்ச அரிசி மற்றும் பசும்பால் இட்டு பொங்கல் வைத்து சாமிக்கு படைத்து வழிபாடு செய்தனர். முன்னதாக மே மாதம் 2 ஆம் தேதி காப்பு கட்டி அதன் பிறகு 5 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு கண்ணுடைய அய்யனார் ஆலயத்தில் இருந்து சுவாமி வீதி உலா நடைபெற்றது. அதன் பிறகு ஒவ்வொரு நாளும் கிராம சாவடியிலிருந்து சுவாமிகள் வீதி உலா நடைபெற்றது 6ஆம் தேதி இரவு யானை வாகனத்திலும் 7 ஆம் தேதி அன்னபட்சி மற்றும் கொள்ளு திண்ணி குதிரை வாகனத்திலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தது. 8ஆம் தேதி இரவு காவு பிடித்து காவு எரிதல் 9 ஆம் தேதி இரவு சப்பாரத்தில் சுவாமிகள் வீதி உலா 10ஆம் பச்ச பட்டினியும் 11ம் தேதியான அதிகாலை ஆறு மணிக்கு சுவாமிகள் தேரில் ஏற்றப்பட்டு தேர் வடம் பிடித்தலும் அதன் பிறகு முனியாண்டவர் வீதி உலா மாலை 5 மணிக்கு தேர் வடம் பிடித்து தெற்கு தெரு, மேல தெரு, வடக்கு தெரு ஆகிய தெருகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிகண்ணுடைய அய்யனார் மற்றும் சாத்த பிள்ளை அய்யனார் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். தேர் வலம் வந்த பிறகு கண்ணை கவரும் மாணவேடிக்கை விமர்சையாக நடைபெற்றது1
- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெயிலின் தாக்கத்தினால் நுங்கு விற்பனை தீவிரம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது,இந்த நிலையில் உடல் சூட்டை குறைக்கும் விதமாக சாலையோரங்களில் நுங்கு விற்பனை தீவிரமடைந்துள்ளது.இதற்காக பனைமரத் தொழிலாளிகள் இயற்கையாக விளைந்த நுங்குகளை அறுவடை செய்து கிருஷ்ணகிரி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு சாலை ஓரங்களில் நுங்கு விற்பனையை துவங்கி உள்ளனர்.1
- அன்னவாசல் பகுதியில் முதல்வர் ஜோசப் விஜய் பதாகைகளை தவெக-வினரே அகற்றினர். அன்னவாசல் பகுதியில் முதல்வர் ஜோசப் விஜய் பதாகைகளை தவெக-வினரே அகற்றினர். தமிழக முதலமைச்சராக தவெக தலைவர் ஜோசப் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார். இதனை கொண்டாடும் விதமாக தமிழ்நாடு முழுவதும் தவெகவினர் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். மேலும் வாழ்த்து பதாகைகளும் வைத்திருந்தனர் இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல், இலுப்பூர், முக்கண்ணாமலைபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முதல்வர் ஜோசப் விஜய் பதவி ஏற்பிற்காக கட்சி நிர்வாகிகள் வைத்திருந்த வாழ்த்துப் பேனர்கள் உள்பட அரசியல் கட்சி பதாகைகளையும் அகற்ற வேண்டும் என்று போலீசார் அந்தந்த கட்சி நிர்வாகிகளிடம் கூறினர். இதனையடுத்து தவெக நிர்வாகிகள் தாங்கள் வைத்த பதாகைகளை தாங்களே அகற்றினர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவையடுத்து இந்த நடவடிக்கை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது3
- குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பதவி ஏற்பு வீடியோ 17-வது சட்டப்பேரவை முதல் கூட்டம் கூடியது. முதல்நாளான இன்று தற்காலிக சபாநாயகர் கருப்பையா MLA-க்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். CM விஜய் முதல் முறையாக சட்டப்பேரவைக்குள் தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் சென்றார். மேலும் தவெக குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினர் விஜயலட்சுமி பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு பொதுமக்களும் கட்சி நிர்வாகிகளும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.1