1 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி: பெரியகருப்பன் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதியில், தி.மு.க., சார்பில் போட்டியிட்ட பெரியகருப்பன் 83 ஆயிரத்து 364 வாக்குகளையும், த.வெ.க., வேட்பாளர் சீனிவாச சேதுபதி 83 ஆயிரத்து 365 வாக்குகளையும் பெற்றிருந்தனர். த.வெ.க., வேட்பாளர் சீனிவாச சேதுபதி, ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் பெரியகருப்பன் அவசர வழக்கு தொடர்ந்தார். அதில், "சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதிக்கு பதிவான தபால் வாக்கு, திருப்பத்தூர் மாவட்ட தொகுதிக்கு அனுப்பப்பட்டுவிட்டது. அந்த வாக்கை மீட்டு, என்னுடைய தொகுதியின் கணக்கில் சேர்க்க வேண்டும். அதுவரை சீனிவாச சேதுபதி, சட்டமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க தடை விதிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார். இந்த வழக்கு, நீதிபதிகள் எல்.விக்டோரியா கவுரி, என்.செந் தில்குமார் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சில் விடுமுறை நாளான நேற்று அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது. அப்போது, பெரியகருப்பன் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் முகுல் ரோத்தஹி, சிவகங்கை மாவட்ட திருப்பத்தூர் தொகுதி தபால் வாக்கு, திருப்பத்தூர் மாவட்ட திருப்பத்தூர் தொகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. அங்கு அந்த வாக்கை, அந்த தொகுதி தேர்தல் அதிகாரி நிராகரித்துள்ளார். அந்த வாக்கை சிவகங்கை மாவட்ட திருப்பத்தூர் தொகுதிக்கு அனுப்பியிருக்க வேண்டும். செல்லத்தக்க அந்த வாக்கு திருப்பி அனுப்பப்பட்டி ருந்தால் இரு வேட்பாளர்களும் சமமான வாக்குகளை பெற்றிருப்பர். குலுக்கல் மூலம் வெற்றி வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார்" என்று வாதிட்டார். உடனே நீதிபதிகள், இதுபோன்ற சூழ்நிலைகளில் என்ன நடைமுறை பின்பற்ற வேண்டும் என தேர்தல் ஆணையம் ஏதேனும் விதிகள் வகுத்துள்ளதா? எனக் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த மூத்த வக்கீல், இதுசம்பந்தமாக எந்த நடைமுறையும் இல்லை. இதுகுறித்து தேர்தல் ஆணையத்துக்கு பல புகார்கள் அளித்தும் எந்த பதிலும் இல்லை. தவறான முகவரிக்கு செல்லும் கடிதம் கண்டு பிடிக்கும்போது, சரியான முகவரிக்குதானே அனுப்பி வைக்க வேண்டும். அது போல இந்த வாக்கை சரியான தொகுதிக்கு அனுப்ப உத்தர விடவேண்டும் என்றார். த.வெ.க., வேட்பாளர் சீனிவாச சேதுபதி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் அபிஷேக் மனு சிங்வி, "இந்த விவகாரம் தொடர்பாக பெரியகருப்பன் தேர்தல் வழக்குதான் தாக்கல் செய்ய முடியும். சட்டமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க தடை கோரி இந்த வழக்கை தாக்கல் செய்ய முடியாது என்பதால், எந்த இடைக் கால உத்தரவும் பிறப்பிக்ககூடாது. வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுவிட்டால், அவரை கடமையாற்ற அனு மதிக்க வேண்டும். சட்டமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க அவருக்கு தடை விதிக்க முடியாது. தடை விதித்தால், மக்கள் உரிமை பாதிக்கப்படும்" என்றார். தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வக்கீல் கே.தருண், "இந்த விவகாரத்தில் தேர்தல் வழக்குதான் தாக்கல் செய்ய முடியும். தபால் வாக்குகள் இந்திய தபால் துறை மூலம் அனுப்பப்படுவதில்லை. தபால் வாக்குகளை பெற தேர்தல் ஆணையம், துணை தாசில்தாரர் அந்தஸ்து அதிகாரியை நியமிக்கும். அந்த அதிகாரி தபால் வாக்குகளை பெற்று, சம்பந்தப்பட்ட தொகுதி தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பி வைப் பார். அரசியல் கட்சி பிரதிநிதிகளும் இதில் அமர்த்தப்படுவதால் எந்த தவறும் நடக்காது. தபால் வாக்கு வேறு தொகுதிக்கு மாற்றி அனுப்பி விட்டால். என்ன செய்ய வேண்டும்? என சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. தேர்தல் வழக்கு தாக்கல் செய் யும் வரை தேர்தல் தொடர்பான ஆவணங்கள் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும்" என்றார். அதற்கு நீதிபதிகள், தபால் வாக்குகள் வேறு தொகுதிக்கு அனுப்பியது குறித்து திமுக வேட்பாளரின் புகாருக்கு பதிலளிக்காதது ஏன்? ஒரு வாக்காக இருந்தாலும் பதிலளிக்க வேண்டிய கடமை தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது. இதற் கான காரணங்களை விரிவாக விளக்கி இன்று (திங்கட்கிழமை) தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கை இன்று மீண்டும் விசாரிப்போம்" என்று உத்தரவிட்டனர். அதன்படி, இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது திருப்பத்தூர் பெயர் கொண்ட வேறு தொகுதிக்கு அனுப்பப்பட்ட ஒரு தபால் வாக்குச்சீட்டால், தேர்தல் முடிவுகள் மாறியுள்ளதாகவும், தபால் வாக்குச்சீட்டு தொகுதி மாறி அனுப்பினால் என்ன நடைமுறை பின்பற்றப்படும் என்பது தெரியாத நிலை உள்ளதாகவும் பெரியகருப்பன் தரப்பில் வாதிட்டப்பட்டது. இறுதியில் இருதரப்பு வாதங்களை பதிவு செய்து கொண்ட விடுமுறைக்கால அமர்வு நீதிபதிகள் திமுக வேட்பாளர் பெரியகருப்பன் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

- எடப்பாடி பழனிசாமிக்கு வணக்கம் வைக்காத சம்பவம்! நெட்டிசன்கள் அதிரடி தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவு பெற்று வெற்றி பெற்ற சட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று சட்டமன்ற வளாகத்தில் சபாநாயகர் முன்பு பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்க வரும் முன்பு முதல்வர் ஜோசப் விஜய்யை பார்த்து மரியாதை நிமித்தமாக வணக்கம் வைத்தார், ஆனால் முதல்வர் ஜோசப் விஜையோ எடப்பாடி பழனிசாமியை கண்டு கொள்ளாமல் பதில் வணக்கம் வைக்காதது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த காணொளி தற்போது சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அதிமுகவினரும் நெட்டிசன்களும் கூறும்போது, இந்நாள் முதல்வர், முன்னாள் முதல்வருக்கு பதில் வணக்கம் வைக்காதது அவர்கள் வகிக்கின்ற பதவியை அவமதிக்கும் செயலாகும், மரியாதை நிமித்தமாக கூட வணக்கம் வைக்காத ஒரு முதல்வர் இவர் தான் தமிழகத்தை 5 வருடத்திற்கு ஆளப்போகிறாரா, ஓபிஎஸ்-க்கு வணக்கம் வைக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வணக்கம் வைக்காதது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.1
- தமிழக வெற்றி கழகத் தலைவர் ஜோசப் விஜய் தமிழக முதல்வராகப் பதவியேற்றதையடுத்து, கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலில் கொண்டாட்டங்கள் களைகட்டின. தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.1
- திருச்செங்கோடு அருகே விவசாய நிலத்தில் அதிசய குழி நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் பெரிய மணலி கிராமம் குஞ்சாம்பாளையம் தட்டங்காட்டில் கண்ணன், துரைசாமி அவர்களின் விவசாயம் வயலில் பைப் போடுவதற்காக வானி தோண்டப்பட்டது. வானியில் திடீரென பத்தடி ஆழம் உள்ள குழி இருப்பது தெரிய வந்தது. ஆதிகால மக்கள் தங்களின் தானியங்களை பாதுகாக்க இந்த குழியை பயன்படுத்தி உள்ளதாக குறிப்புகள் உள்ளன. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.1
- வாக்காளர்களிடமிருந்து அனுதாப வாக்குகளைப் பெற விஜய் தரப்பில் தங்களது கட்சியினருக்கு வழங்கப்பட்ட அசைன்மென்ட். இணையத்தை ஆக்கிரமித்திருக்கும் லீக்ட் ஆடியோ.1
- திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் ஆலயம் அருகே திருநாவுக்கரசர் குருபூஜை முன்னிட்டு பந்தல் திருவெறும்பூர் அருகே உள்ள எறும்பீஸ்வரர் ஆலயத்தில் திருநாவுக்கரசு குருபூஜை முன்னிட்டு இன்று நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு வரும் பக்தர்களுக்கு அனைவருக்கும் ஒரு வழங்கப்பட்டு வருகிறது இந்த நீர் மோர் பந்தலை சிவனடியார்கள் ஏற்பாடு செய்துள்ளனர்1
- தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் தமிழ்நாட்டின் முதல்வராகப் பொறுப்பேற்றார். இதையடுத்து, நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியத்தில் கட்சித் தொண்டர்கள் இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். இந்த கொண்டாட்டத்தில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.1
- தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2000-2001 ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பு முடித்த முன்னாள் மாணவர்கள் சங்கமிப்பு விழா நடைபெற்றது. பல ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த மாணவர்கள் தங்கள் பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டனர்.1
- காலையிலேயே சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த பொதுமக்கள் கூட்டம்! தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், புதிய அரசு நேற்று முதல் பொறுப்பேற்றுக் கொண்டது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நிறுத்தி வைக்கப்பட்ட பொதுமக்கள் குறைந்திருக்கும் முகாம், தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு படி தேர்தல் நடத்தை விதிமுறைகள் வாபஸ் பெறப்பட்டதால், சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை முதலே, பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாமிற்கு வருகை தரும் பொது மக்களுக்கு இலவசமாக அரசு சார்பில் மனு எழுதித் தரும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் இன்று காலை முதலே ஏராளமான பொதுமக்கள் கடந்த இரண்டு மாதத்திற்கு பின்பு தங்களது குறைகளை அரசுக்கு தெரிவிக்க வேண்டி, அரசு ஊழியர்களிடம் தங்களது புகார் மனுக்களை எழுதினர். இதனால் இன்று காலை முதலே சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.1
- நாகப்பட்டினம் மாவட்டத்தில் காலை 11 மணியளவில் சில நிமிடங்கள் லேசான மழை பெய்தது. மழைக்குப் பிறகு வெயில் வழக்கம்போல் அடித்தாலும், மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் சற்று சிரமம் ஏற்பட்டது.1