காலையிலேயே சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த பொதுமக்கள் கூட்டம்! தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், புதிய அரசு நேற்று முதல் பொறுப்பேற்றுக் கொண்டது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நிறுத்தி வைக்கப்பட்ட பொதுமக்கள் குறைந்திருக்கும் முகாம், தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு படி தேர்தல் நடத்தை விதிமுறைகள் வாபஸ் பெறப்பட்டதால், சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை முதலே, பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாமிற்கு வருகை தரும் பொது மக்களுக்கு இலவசமாக அரசு சார்பில் மனு எழுதித் தரும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் இன்று காலை முதலே ஏராளமான பொதுமக்கள் கடந்த இரண்டு மாதத்திற்கு பின்பு தங்களது குறைகளை அரசுக்கு தெரிவிக்க வேண்டி, அரசு ஊழியர்களிடம் தங்களது புகார் மனுக்களை எழுதினர். இதனால் இன்று காலை முதலே சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

- தர்மபுரி பாரதிபுரம் போக்குவரத்து அலுவலகம் முன்பு தமிழக வெற்றி கழக போக்குவரத்து தொழிலாளர்கள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக அவர்கள் இவ்வாறு செய்தனர்.1
- தமிழக முதல்வராக விஜய் இன்று பதவியேற்கும் நிலையில், திருவெறும்பூர் கட்சி நிர்வாகிகள் எம்எல்ஏ நவல்பட்டு விஜி அமைச்சராக வேண்டி திருநெடுங்களநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர். இந்த அபிஷேக ஆராதனைகளில் விஜய் படத்துடன் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.1
- மாவட்ட ஆட்சித்தலைவர் மக்கள் குறைதீர்க்கும் நாளில் அலுவலர்களின் அலட்சியம். நீண்ட நாட்களுக்கு பின்பாக நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் நிகழ்ச்சியில் அலுவலர்கள் அனைவரும் செல்போனை பயன்படுத்தியவாறு மக்கள் குறைதீர்க்கும் நாளும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அலுவலர்கள் அதிர்ச்சியில் மக்கள்1
- ஸ்பானிய டிவியில் இருந்து ஹாலிவுட் நட்சத்திரமாக உயர்ந்த ஆனா டி அர்மாஸ், தனது பன்முகத் திறமையால் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். 'ஜான் விக்' போன்ற அதிரடிப் படங்களிலும், ஆஸ்கர் பரிந்துரை பெற்ற நாடகங்களிலும் ஜொலித்துள்ளார். இவர் தற்போது கலாச்சார ஐகானாகவும், முன்னணி பிராண்டுகளின் உலகளாவிய தூதுவராகவும் திகழ்கிறார்.1
- புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் நடைபெற்ற பஞ்சபூத உலக சாதனைகள் சிலம்பம் நிகழ்ச்சியில் மாணவர்கள் அசத்தினர். அவர்கள் 5 கிலோமீட்டர் தூரம் நடந்து கொண்டே சிலம்பம் சுற்றியதுடன், தொடர்ந்து 2 மணி நேரம் நின்று சுழற்றி புதிய உலக சாதனை படைத்தனர்.1
- சான்றிதழை மறந்து வந்த அமைச்சர் கீர்த்தனா! சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்க பேரவை செயலாளர் அனுமதி மறுப்பு! உறுதிமொழி எடுப்பதற்காக அமைச்சர் கீர்த்தனாவின் பெயர் பேரவையில் அழைக்கப்பட்ட நிலையில், அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏ'வாக வெற்றி பெற்றதற்கான தேர்தல் ஆணையத்தின் சான்றிதழ் இல்லாமல் வந்ததால் பின்னர் பதவி பிரமாணம் செய்து வைக்க பேரவை செயலாளர் சீனிவாசன் அனுமதி மறுப்பு. தேர்தல் ஆணையத்தின் சான்றிதழ் சட்டப்பேரவை செயலாளர் இடம் ஒப்படைத்ததும் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்க உள்ளதாக தகவல்.1
- தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற ஜோசப் விஜய் அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை சேலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது மிகக் கடினம் என்றும், இதற்கான நிதி எங்கிருந்து வரும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விமர்சனங்கள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.1
- தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2000-2001 ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பு முடித்த முன்னாள் மாணவர்கள் சங்கமிப்பு விழா நடைபெற்றது. பல ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த மாணவர்கள் தங்கள் பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டனர்.1
- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் திராவிட முன்னேற்ற கழக சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் தமிழக அமைச்சருமான ஐ. பெரியசாமி அவர்கள் இன்று சட்டசபையில் தற்காலிக சபாநாயகர் முன்பாக சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்று கொண்டார்.1