Shuru
Apke Nagar Ki App…
திருமயத்தில் அதிமுகவினர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் பணி திருமயம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக பி.கே. வைரமுத்து போட்டியிடுகின்றார். இதைத்தொடர்ந்து திருமயம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பிரச்சாரப் பணியில் அவர் ஈடுபட்டு வருகின்றார். இந்நிலையில் இன்று (13.4.2026) திருமயம் அருகே மணவாளி கரையில் அதிமுகவினர் திருமயம் வேட்பாளர் பி.கே.வைரமுத்திற்கு வாக்குகள் கேட்டு வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர்.
Mayilvaganan
திருமயத்தில் அதிமுகவினர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் பணி திருமயம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக பி.கே. வைரமுத்து போட்டியிடுகின்றார். இதைத்தொடர்ந்து திருமயம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பிரச்சாரப் பணியில் அவர் ஈடுபட்டு வருகின்றார். இந்நிலையில் இன்று (13.4.2026) திருமயம் அருகே மணவாளி கரையில் அதிமுகவினர் திருமயம் வேட்பாளர் பி.கே.வைரமுத்திற்கு வாக்குகள் கேட்டு வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடியில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயில் அப்பகுதியில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இந்நிலையில் இந்த கோயிலின் திருவிழா சென்ற வாரம் பூ சொரிதலுடன் தொடங்கியது. இன்று சித்திரை பவுர்ணமியை முன்னிட்டு கல்லாலங்குடி, ஆலங்காடு, பள்ளத்திவிடுதி, சூரன்விடுதி,சிக்கப்பட்டி, சம்புரான்பட்டி, கல்லம்பட்டி, ஊத்தப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பெண்கள் கரகம் மற்றும் முளைப்பாரி எடுப்பு திருவிழாவில் கலந்துகொண்டு முத்துமாரி அம்மனை வழிபட்டுச் சென்றனர்.1
- *புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி உள் கடை வீதியில் திடீரென தீப்பற்றி எரியும் இருசக்கர வாகனத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது* புதுக்கோட்டை மாவட்டம் காந்திநகர் ஐந்தாம் வீதியை சேர்ந்த காசி மகன் தன்ராஜ் (58) என்பவர் அவரது மனைவி மலர் என்பவருடன் தஞ்சாவூர் மாவட்டம் நெய்வேலி பள்ளத்தான் மனையில் நடைபெற உள்ள கிடா வெட்டு பூஜைக்கு செல்வதற்காக இன்று காலை கறம்பக்குடி உள் கடை வீதியில் உள்ள பூம்புகார் ஜவுளிக்கடை முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அருகே உள்ள சரவணபவன் தனியார் உணவகத்தில் உணவு அருந்திவிட்டு மீண்டும் இருசக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்து செல்லும் பொழுது என்ஜினில் இருந்து புகை வந்துள்ளது. இதைக் கண்ட அவரது மனைவி தன்ராஜிடம் என்ஜினில் இருந்து புகை வருவதாக கூறினார். உடனடியாக தன்ராஜும் அவரது மனைவி மலரும் இரு சக்கர வாகனத்தை அங்கேயே நிறுத்தி விட்டு ஓட்டம் பிடித்தனர். அருகில் இருந்தவர்கள் நீரினை ஊற்றி அணைக்க முயன்ற போது தீ கொழுந்துவிட்டு எரிந்தது இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக கறம்பக்குடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர் தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் போராடி அதீயினை அனைத்தனர். ஆனால் இருசக்கர வாகனம் முழுவதும் பற்றி எரிந்து நாசமாயின தற்போது இந்த இருசக்கர வாகனம் தீ பிடித்து எரியும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.1
- மணப்பாறை அருகே வீட்டிற்கு மின்சாரம் வரவில்லை என்று, மின்சார வாரிய அனுமதி பெறாமல் தானாக மின் மாற்றியில் பீஸ் போட ஏறியவர் மின்மாற்றியில் மின்சாரம் தாக்கி பலி. திருச்சி மாவட்டம். மணப்பாறையை அடுத்த பூலாம்பட்டியை சேர்ந்தவர் இன்னாசி (50) இவரது மனைவி சகாயமேரி என்பவருடன் திருமணம் ஆகி சுமார் 25 ஆம் ஆண்டு நிலையில் இவருக்கு ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். பிள்ளைகள் இருவருக்கும் திருமணம் ஆகி அவர் தனித்தனியே குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில், இறந்து போன இன்னாசி N பூலாம்பட்டி மனைவியுடன் தனியாக வசித்துக் வசித்து வருகிறார். இவர் கொத்தனார் வேலை செய்து கொண்டிருந்தார். இன்று தனது வீட்டில் மின்சாரம் வரவில்லை என்று, தனது வீட்டிலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் உள்ள N.பூலாம்பட்டி SS no:1 -மின்மாற்றியில் பீஸ் போடுவதற்காக ஏறியவர் மின்சாரம் தாக்கி மின்மாற்றியின் மேலேயே உயிரிழந்துள்ளார். இதைப் பற்றி தகவல் அறிந்த வையம்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர் . இறந்தவரின் உடல் உடல் கூராய்வு ஆய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பப்பட்டன.1
- திருச்சி மாவட்டம் மருங்காபுரியை அடுத்த தொட்டியப்பட்டியில் பாம்பாளம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு நேற்று மாலை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த வழிபாட்டில் விளக்கு பூஜை நடைபெற்றன. இதில் இப்பகுதியை சுற்றியுள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பாம்பாளம்மன் அருளை பெற்று சென்றனர்.1
- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டார வள மையம், திருப்பத்தூர் வட்டார வள மையம், அனுமந்தகுடி அரசு மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம் மாவட்டம் பாண்டுகுடி அரசு மேல்நிலைப்பள்ளி, சிவகங்கை மாவட்டம் விசாலயன்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளிகளில் நீண்ட காலம் கல்விப் பணியாற்றி ஓய்வுபெறும் முதுகலை வேதியியல் ஆசிரியர் எட்வின் அவர்களுக்கு, தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கம், தேவகோட்டை ஆசிரியர் நல சங்கம், பாரதி தமிழ் சங்கம், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், தேவகோட்டை தமிழ் இலக்கிய பேரவை, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ,சிவகங்கை மாவட்ட சதுரங்க கழகம் ,தேவகோட்டை தாலுகா சதுரங்க கழகம், தேவகோட்டை தனி பயிற்சி மையம், தேவகோட்டை கே எம் எஸ் சிந்தனைச் சோலை மற்றும் தேவகோட்டை நண்பர்கள் நடையாளர் சங்கம் சார்பில் சிறப்பான பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. நெகிழ்ச்சியான பாராட்டுரை ராம் நகர் கே எம் எஸ் நூலகம் பகத்சிங் மணி மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவிற்கு பேராசிரியர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். விழாவில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்ட சக ஆசிரியர்கள், திரு. எட்வின் அவர்களின் அர்ப்பணிப்புள்ள சேவையை வெகுவாகப் பாராட்டினர். அவர்கள் பேசுகையில், "வேதியியல் பாடத்தை வெறும் மனப்பாடம் செய்யும் பாடமாக மாற்றாமல், மாணவர்களின் வாழ்வியலோடு இணைத்துச் சொல்லிக் கொடுத்தவர் எட்வின். குறிப்பாக, கடினமான வேதி வினைகளை (Chemical Reactions) மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் அவர் கையாண்ட விதம் தனித்துவமானது" என்று புகழாரம் சூட்டினர். பல ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியர் எட்வின் அவர்களிடம் பயின்ற முன்னாள் மாணவர்கள் தங்களை இன்று உயர்ந்த நிலையில் இருத்துவதற்கு அடித்தளமிட்ட ஆசிரியருக்கு, அவர்கள் பொன்னாடை போர்த்தி, நினைவுப் பரிசுகளை வழங்கித் தங்கள் நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர்.விழாவின் இறுதியில் பேசிய ஆசிரியர் எட்வின், தனது பணிக் காலத்தில் தனக்கு ஒத்துழைப்பு நல்கிய சக ஆசிரியர்களுக்கும், நிர்வாகத்திற்கும், அன்பு காட்டிய மாணவர்களுக்கும் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார். இந்த விழாவில் பயின்ற மாணவ-மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டு ஆசிரியருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.1
- திருவெறும்பூர் காவல் நிலையம் எதிரே மேம்பாலத்தில் திருச்சியில் இருந்து துவாக்குடிக்கு இரும்பு பைப்புகளை ஏத்திச்சென்ற லாரி டீசல் இல்லாமல் நின்றுள்ளது அப்பொழுது மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து முத்துப்பேட்டைக்கு பைப் லைன் சரக்கு ஏற்றி வந்த டாரஸ் லாரி பின்னால் மோதி உள்ளது. இதில் முத்துப்பேட்டைக்கு செல்லும் சரக்கு லாரியை ஒட்டி வந்த முசிறி நாச்சம்பட்டியை சேர்ந்த பழனிசாமி (42) சிக்கி கொண்டார். இந்நிலையில் திருவெறும்பூர் காவல் நிலையம் எதிரே இந்த விபத்து நடந்ததால் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவெறும்பூர் போலீசார் திருவெறும்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவெறும்பூர் தீயணைப்புத் துறையினர் சரக்கு லாரியின் முன்பாகத்தை உடைத்து ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக பழனிச்சாமியை மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பழனிச்சாமிக்கு காலில் மட்டும் லேசாக அடிபட்டுள்ளது. மற்றபடி எந்தவித பாதிப்பும் இல்லை இந்த நிலையில் சரக்கு லாரியை திருச்சியில் தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் டீசல் இல்லாமல் நிறுத்தி இருந்த அரியலூர் திருமானூர் தாலுக்காவை சேர்ந்த மொட்டையன் மகன் மணிகண்டன் (36) மீது திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.3
- திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்திற்குட்பட்ட தென்னம்பட்டி மற்றும் பிலாத்து ஊராட்சி ஆண்டிபட்டி பகுதியில் நடைபெற்று வரும் சித்திரை திருவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் இன்று காலை நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக, ஊர் பொதுமக்கள் கையில் தீச்சட்டி ஏந்தி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு பக்தி உணர்வுடன் இந்த வழிபாட்டில் ஈடுபட்டனர். பாரம்பரிய முறையில் நடைபெற்ற இந்த நிகழ்வு கிராம மக்களின் உற்சாகத்துடன் சிறப்பாக அமைந்தது.1
- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரைத் திருவிழா விமர்சையாக நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கிய இந்த திருவிழாவில் திருக்கல்யாண உற்சவம் மற்றும் தேரோட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதன் தொடர்ச்சியாக, மே 1 ஆம் தேதி இரவு சுமார் 8 மணியளவில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. முன்னதாக, அலங்கார மண்டபத்தில் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பின்னர், ஸ்ரீ மீனாட்சி, சுந்தரேஸ்வரர் மற்றும் அம்பாள் மூவரும் வீதி உலா வந்து தெப்பக்குளத்தை அடைந்தனர். அங்கு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மங்கல வாத்தியங்களின் ஒலியுடன் தெப்பம், தெப்பக்குளத்தின் ஆறு படித்துறைகளையும் மூன்று முறை சுற்றி வலம் வந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, தெப்பக் கரையில் விளக்கேற்றி தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற பிரார்த்தனை செய்தனர். விழாவின்போது தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், நகர காவல்துறையினர் ஆகியோர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.1