logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

கறம்பக்குடியில் தீ பிடித்து எரியும் இருசக்கர வாகனத்தின் சிசிடிவி காட்சிகள் *புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி உள் கடை வீதியில் திடீரென தீப்பற்றி எரியும் இருசக்கர வாகனத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது* புதுக்கோட்டை மாவட்டம் காந்திநகர் ஐந்தாம் வீதியை சேர்ந்த காசி மகன் தன்ராஜ் (58) என்பவர் அவரது மனைவி மலர் என்பவருடன் தஞ்சாவூர் மாவட்டம் நெய்வேலி பள்ளத்தான் மனையில் நடைபெற உள்ள கிடா வெட்டு பூஜைக்கு செல்வதற்காக இன்று காலை கறம்பக்குடி உள் கடை வீதியில் உள்ள பூம்புகார் ஜவுளிக்கடை முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அருகே உள்ள சரவணபவன் தனியார் உணவகத்தில் உணவு அருந்திவிட்டு மீண்டும் இருசக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்து செல்லும் பொழுது என்ஜினில் இருந்து புகை வந்துள்ளது. இதைக் கண்ட அவரது மனைவி தன்ராஜிடம் என்ஜினில் இருந்து புகை வருவதாக கூறினார். உடனடியாக தன்ராஜும் அவரது மனைவி மலரும் இரு சக்கர வாகனத்தை அங்கேயே நிறுத்தி விட்டு ஓட்டம் பிடித்தனர். அருகில் இருந்தவர்கள் நீரினை ஊற்றி அணைக்க முயன்ற போது தீ கொழுந்துவிட்டு எரிந்தது இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக கறம்பக்குடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர் தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் போராடி அதீயினை அனைத்தனர். ஆனால் இருசக்கர வாகனம் முழுவதும் பற்றி எரிந்து நாசமாயின தற்போது இந்த இருசக்கர வாகனம் தீ பிடித்து எரியும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

3 hrs ago
user_Prabaharan Reporter
Prabaharan Reporter
Psychologist கரம்பக்குடி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
3 hrs ago

கறம்பக்குடியில் தீ பிடித்து எரியும் இருசக்கர வாகனத்தின் சிசிடிவி காட்சிகள் *புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி உள் கடை வீதியில் திடீரென தீப்பற்றி எரியும் இருசக்கர வாகனத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது* புதுக்கோட்டை மாவட்டம் காந்திநகர் ஐந்தாம் வீதியை சேர்ந்த காசி மகன் தன்ராஜ் (58) என்பவர் அவரது மனைவி மலர் என்பவருடன் தஞ்சாவூர் மாவட்டம் நெய்வேலி பள்ளத்தான் மனையில் நடைபெற உள்ள கிடா வெட்டு பூஜைக்கு செல்வதற்காக இன்று காலை கறம்பக்குடி உள் கடை வீதியில் உள்ள பூம்புகார் ஜவுளிக்கடை முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அருகே உள்ள சரவணபவன் தனியார் உணவகத்தில் உணவு அருந்திவிட்டு மீண்டும் இருசக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்து செல்லும் பொழுது என்ஜினில் இருந்து புகை வந்துள்ளது. இதைக் கண்ட அவரது மனைவி தன்ராஜிடம் என்ஜினில் இருந்து புகை வருவதாக கூறினார். உடனடியாக தன்ராஜும் அவரது மனைவி மலரும் இரு சக்கர வாகனத்தை அங்கேயே நிறுத்தி விட்டு ஓட்டம் பிடித்தனர். அருகில் இருந்தவர்கள் நீரினை ஊற்றி அணைக்க முயன்ற போது தீ கொழுந்துவிட்டு எரிந்தது இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக கறம்பக்குடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர் தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் போராடி அதீயினை அனைத்தனர். ஆனால் இருசக்கர வாகனம் முழுவதும் பற்றி எரிந்து நாசமாயின தற்போது இந்த இருசக்கர வாகனம் தீ பிடித்து எரியும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More news from தமிழ்நாடு and nearby areas
  • *புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி உள் கடை வீதியில் திடீரென தீப்பற்றி எரியும் இருசக்கர வாகனத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது* புதுக்கோட்டை மாவட்டம் காந்திநகர் ஐந்தாம் வீதியை சேர்ந்த காசி மகன் தன்ராஜ் (58) என்பவர் அவரது மனைவி மலர் என்பவருடன் தஞ்சாவூர் மாவட்டம் நெய்வேலி பள்ளத்தான் மனையில் நடைபெற உள்ள கிடா வெட்டு பூஜைக்கு செல்வதற்காக இன்று காலை கறம்பக்குடி உள் கடை வீதியில் உள்ள பூம்புகார் ஜவுளிக்கடை முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அருகே உள்ள சரவணபவன் தனியார் உணவகத்தில் உணவு அருந்திவிட்டு மீண்டும் இருசக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்து செல்லும் பொழுது என்ஜினில் இருந்து புகை வந்துள்ளது. இதைக் கண்ட அவரது மனைவி தன்ராஜிடம் என்ஜினில் இருந்து புகை வருவதாக கூறினார். உடனடியாக தன்ராஜும் அவரது மனைவி மலரும் இரு சக்கர வாகனத்தை அங்கேயே நிறுத்தி விட்டு ஓட்டம் பிடித்தனர். அருகில் இருந்தவர்கள் நீரினை ஊற்றி அணைக்க முயன்ற போது தீ கொழுந்துவிட்டு எரிந்தது இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக கறம்பக்குடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர் தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் போராடி அதீயினை அனைத்தனர். ஆனால் இருசக்கர வாகனம் முழுவதும் பற்றி எரிந்து நாசமாயின தற்போது இந்த இருசக்கர வாகனம் தீ பிடித்து எரியும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    1
    *புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி உள் கடை வீதியில் திடீரென தீப்பற்றி எரியும் இருசக்கர வாகனத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது*
புதுக்கோட்டை மாவட்டம் காந்திநகர் ஐந்தாம் வீதியை சேர்ந்த காசி மகன் தன்ராஜ் (58) என்பவர் அவரது மனைவி மலர் என்பவருடன் தஞ்சாவூர் மாவட்டம் நெய்வேலி பள்ளத்தான் மனையில் நடைபெற உள்ள கிடா வெட்டு பூஜைக்கு செல்வதற்காக இன்று காலை கறம்பக்குடி உள் கடை வீதியில் உள்ள பூம்புகார் ஜவுளிக்கடை முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அருகே உள்ள சரவணபவன் தனியார் உணவகத்தில் உணவு அருந்திவிட்டு மீண்டும் இருசக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்து செல்லும் பொழுது என்ஜினில் இருந்து புகை வந்துள்ளது. இதைக் கண்ட அவரது மனைவி தன்ராஜிடம் என்ஜினில் இருந்து புகை வருவதாக கூறினார். உடனடியாக தன்ராஜும் அவரது மனைவி மலரும் இரு சக்கர வாகனத்தை அங்கேயே நிறுத்தி விட்டு ஓட்டம் பிடித்தனர். அருகில் இருந்தவர்கள் நீரினை ஊற்றி அணைக்க முயன்ற போது தீ கொழுந்துவிட்டு எரிந்தது இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக கறம்பக்குடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர் தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் போராடி அதீயினை அனைத்தனர். ஆனால் இருசக்கர வாகனம் முழுவதும் பற்றி எரிந்து நாசமாயின தற்போது இந்த இருசக்கர வாகனம் தீ பிடித்து எரியும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    user_Prabaharan Reporter
    Prabaharan Reporter
    Psychologist கரம்பக்குடி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    3 hrs ago
  • புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடியில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயில் அப்பகுதியில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இந்நிலையில் இந்த கோயிலின் திருவிழா சென்ற வாரம் பூ சொரிதலுடன் தொடங்கியது.  இன்று சித்திரை பவுர்ணமியை முன்னிட்டு கல்லாலங்குடி, ஆலங்காடு, பள்ளத்திவிடுதி, சூரன்விடுதி,சிக்கப்பட்டி, சம்புரான்பட்டி, கல்லம்பட்டி, ஊத்தப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பெண்கள் கரகம்  மற்றும் முளைப்பாரி எடுப்பு திருவிழாவில் கலந்துகொண்டு முத்துமாரி அம்மனை வழிபட்டுச் சென்றனர்.
    1
    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடியில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயில் அப்பகுதியில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இந்நிலையில் இந்த கோயிலின் திருவிழா சென்ற வாரம் பூ சொரிதலுடன் தொடங்கியது. 
இன்று சித்திரை பவுர்ணமியை முன்னிட்டு கல்லாலங்குடி, ஆலங்காடு, பள்ளத்திவிடுதி, சூரன்விடுதி,சிக்கப்பட்டி, சம்புரான்பட்டி, கல்லம்பட்டி, ஊத்தப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பெண்கள் கரகம்  மற்றும் முளைப்பாரி எடுப்பு திருவிழாவில் கலந்துகொண்டு முத்துமாரி அம்மனை வழிபட்டுச் சென்றனர்.
    user_நம் செய்தி Nam News
    நம் செய்தி Nam News
    Local News Reporter ஆலங்குடி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    23 hrs ago
  • திருவெறும்பூர் காவல் நிலையம் எதிரே மேம்பாலத்தில் திருச்சியில் இருந்து துவாக்குடிக்கு இரும்பு பைப்புகளை ஏத்திச்சென்ற லாரி டீசல் இல்லாமல் நின்றுள்ளது அப்பொழுது மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து முத்துப்பேட்டைக்கு பைப் லைன் சரக்கு ஏற்றி வந்த டாரஸ் லாரி பின்னால் மோதி உள்ளது. இதில் முத்துப்பேட்டைக்கு செல்லும் சரக்கு லாரியை ஒட்டி வந்த முசிறி நாச்சம்பட்டியை சேர்ந்த பழனிசாமி (42) சிக்கி கொண்டார். இந்நிலையில் திருவெறும்பூர் காவல் நிலையம் எதிரே இந்த விபத்து நடந்ததால் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவெறும்பூர் போலீசார் திருவெறும்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவெறும்பூர் தீயணைப்புத் துறையினர் சரக்கு லாரியின் முன்பாகத்தை உடைத்து ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக பழனிச்சாமியை மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பழனிச்சாமிக்கு காலில் மட்டும் லேசாக அடிபட்டுள்ளது. மற்றபடி எந்தவித பாதிப்பும் இல்லை இந்த நிலையில் சரக்கு லாரியை திருச்சியில் தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் டீசல் இல்லாமல் நிறுத்தி இருந்த அரியலூர் திருமானூர் தாலுக்காவை சேர்ந்த மொட்டையன் மகன் மணிகண்டன் (36) மீது திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    3
    திருவெறும்பூர் காவல் நிலையம் எதிரே மேம்பாலத்தில் திருச்சியில் இருந்து துவாக்குடிக்கு இரும்பு பைப்புகளை ஏத்திச்சென்ற லாரி டீசல் இல்லாமல் நின்றுள்ளது அப்பொழுது மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து முத்துப்பேட்டைக்கு பைப் லைன் சரக்கு ஏற்றி வந்த டாரஸ் லாரி பின்னால் மோதி உள்ளது. 
இதில் முத்துப்பேட்டைக்கு செல்லும் சரக்கு லாரியை ஒட்டி வந்த முசிறி நாச்சம்பட்டியை சேர்ந்த பழனிசாமி (42) சிக்கி கொண்டார்.
இந்நிலையில் திருவெறும்பூர் காவல் நிலையம் எதிரே இந்த விபத்து நடந்ததால் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவெறும்பூர் போலீசார் திருவெறும்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவெறும்பூர் தீயணைப்புத் துறையினர் சரக்கு லாரியின் முன்பாகத்தை உடைத்து ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக பழனிச்சாமியை மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பழனிச்சாமிக்கு காலில் மட்டும் லேசாக அடிபட்டுள்ளது.
மற்றபடி எந்தவித பாதிப்பும் இல்லை இந்த நிலையில் சரக்கு லாரியை திருச்சியில் தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் டீசல் இல்லாமல் நிறுத்தி இருந்த அரியலூர் திருமானூர் தாலுக்காவை சேர்ந்த மொட்டையன் மகன் மணிகண்டன் (36) மீது திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இச்சம்பவத்தால்  அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    user_பெரியசாமி
    பெரியசாமி
    திருவெறும்பூர், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • தஞ்சாவூர் மாவட்டம்  பாபநாசம் அருகே வங்காரம்பேட்டை அரையபுரம் தட்டுமால் படுகையில் அமைந்துள்ள கரைகாத்த முனியாண்டவர் கோயில் 54-ஆம் ஆண்டு சித்திரைபௌா்ணமி  பால்குடம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவையொட்டி, குடமுருட்டி ஆற்றங்கரையில் இருந்து  சக்தி கரகம், பால்குடம், அலகு காவடி எடுத்து ஊா்வலமாக புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக வந்து கோயிலை வந்தடைந்தனர். அதனை  தொடா்ந்து, முணியாண்டவருக்கு அபிஷேக, ஆராதனையும், கஞ்சி வாா்த்தலும் நடைபெற்றது.  விழாவில்  வங்காரம்பேட்டை அரையபுரம் கிராமவாசிகள் மற்றும்,திரளான பக்தா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டு வழிபட்டனா்.
    1
    தஞ்சாவூர் மாவட்டம் 
பாபநாசம் அருகே வங்காரம்பேட்டை அரையபுரம் தட்டுமால் படுகையில் அமைந்துள்ள கரைகாத்த முனியாண்டவர் கோயில் 54-ஆம் ஆண்டு சித்திரைபௌா்ணமி  பால்குடம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
விழாவையொட்டி, குடமுருட்டி ஆற்றங்கரையில் இருந்து  சக்தி கரகம், பால்குடம், அலகு காவடி எடுத்து ஊா்வலமாக புறப்பட்டு முக்கிய வீதிகள்
வழியாக வந்து கோயிலை வந்தடைந்தனர்.
அதனை  தொடா்ந்து, முணியாண்டவருக்கு அபிஷேக, ஆராதனையும், கஞ்சி வாா்த்தலும் நடைபெற்றது. 
விழாவில்  வங்காரம்பேட்டை அரையபுரம் கிராமவாசிகள் மற்றும்,திரளான பக்தா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டு வழிபட்டனா்.
    user_சிவகுமார்.மு
    சிவகுமார்.மு
    பத்திரிகையாளர் பாபநாசம், தஞ்சாவூர், தமிழ்நாடு•
    10 hrs ago
  • வலிவலம் இருதய கமலநாத சுவாமி ஆலய சித்திரை திருவிழாவை முன்னிட்டு இரவு நடைபெற்ற தெப்ப உற்சவ விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்பு நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த வலிவலம் இருதய நோய் தீர்க்கும் பரிகார ஸ்தலமான இருதய கமலநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.இக்கோயில் சித்திரை திருவிழா கடந்த ஏப்.22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வித வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான திருத்தேரோட்டம் மற்றும் தெப்ப உற்சவ விழா விமர்சையாக நடைபெற்றது.பின்பு அலங்கரிக்கப்பட்ட சப்ரத்தில் சோமஸ்கந்தர் உடனுறை அம்பாள் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகள மகாதீபாரதனை காண்பிக்கபட்டது.இரவு நடைபெற்ற தெப்ப உற்சவம் விழாவில் கோவில் செயல் அலுவலர் கார்த்திகேயன் மற்றும் தீயணைப்பு துறை, காவல்த்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
    1
    வலிவலம் இருதய கமலநாத சுவாமி ஆலய சித்திரை திருவிழாவை முன்னிட்டு இரவு நடைபெற்ற தெப்ப உற்சவ விழாவில்  திரளான பக்தர்கள் பங்கேற்பு
நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த வலிவலம் இருதய நோய் தீர்க்கும் பரிகார ஸ்தலமான இருதய கமலநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.இக்கோயில் சித்திரை திருவிழா கடந்த ஏப்.22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வித வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான திருத்தேரோட்டம் மற்றும் தெப்ப உற்சவ விழா விமர்சையாக நடைபெற்றது.பின்பு அலங்கரிக்கப்பட்ட சப்ரத்தில்
சோமஸ்கந்தர் உடனுறை அம்பாள் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகள மகாதீபாரதனை காண்பிக்கபட்டது.இரவு நடைபெற்ற தெப்ப உற்சவம் விழாவில் கோவில் செயல் அலுவலர் கார்த்திகேயன் மற்றும் தீயணைப்பு துறை, காவல்த்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
    user_MAHENDRAN
    MAHENDRAN
    Local News Reporter திருக்குவளை, நாகப்பட்டினம், தமிழ்நாடு•
    1 hr ago
  • மணப்பாறை அருகே வீட்டிற்கு மின்சாரம் வரவில்லை என்று, மின்சார வாரிய அனுமதி பெறாமல் தானாக மின் மாற்றியில் பீஸ் போட ஏறியவர் மின்மாற்றியில் மின்சாரம் தாக்கி பலி. திருச்சி மாவட்டம். மணப்பாறையை அடுத்த பூலாம்பட்டியை சேர்ந்தவர் இன்னாசி (50) இவரது மனைவி சகாயமேரி என்பவருடன் திருமணம் ஆகி சுமார் 25 ஆம் ஆண்டு நிலையில் இவருக்கு ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். பிள்ளைகள் இருவருக்கும் திருமணம் ஆகி அவர் தனித்தனியே குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில், இறந்து போன இன்னாசி N பூலாம்பட்டி மனைவியுடன் தனியாக வசித்துக் வசித்து வருகிறார். இவர் கொத்தனார் வேலை செய்து கொண்டிருந்தார். இன்று தனது வீட்டில் மின்சாரம் வரவில்லை என்று, தனது வீட்டிலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் உள்ள N.பூலாம்பட்டி SS no:1 -மின்மாற்றியில் பீஸ் போடுவதற்காக ஏறியவர் மின்சாரம் தாக்கி மின்மாற்றியின் மேலேயே உயிரிழந்துள்ளார். இதைப் பற்றி தகவல் அறிந்த வையம்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர் . இறந்தவரின் உடல் உடல் கூராய்வு ஆய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பப்பட்டன.
    1
    மணப்பாறை அருகே
வீட்டிற்கு மின்சாரம் வரவில்லை என்று, மின்சார வாரிய அனுமதி பெறாமல் தானாக மின் மாற்றியில் பீஸ் போட ஏறியவர் மின்மாற்றியில் மின்சாரம் தாக்கி பலி.
திருச்சி மாவட்டம். மணப்பாறையை அடுத்த பூலாம்பட்டியை சேர்ந்தவர் இன்னாசி (50) இவரது மனைவி சகாயமேரி  என்பவருடன் திருமணம் ஆகி சுமார்  25  ஆம் ஆண்டு நிலையில் இவருக்கு ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.
பிள்ளைகள் இருவருக்கும்  திருமணம் ஆகி அவர் தனித்தனியே குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில், இறந்து போன இன்னாசி N பூலாம்பட்டி மனைவியுடன் தனியாக வசித்துக் வசித்து வருகிறார்.  இவர் கொத்தனார் வேலை செய்து கொண்டிருந்தார்.
இன்று தனது வீட்டில்  மின்சாரம் வரவில்லை என்று,  தனது வீட்டிலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் உள்ள  N.பூலாம்பட்டி  SS no:1 -மின்மாற்றியில் பீஸ் போடுவதற்காக ஏறியவர் மின்சாரம் தாக்கி மின்மாற்றியின்  மேலேயே உயிரிழந்துள்ளார்.
இதைப் பற்றி  தகவல் அறிந்த   வையம்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர் . இறந்தவரின் உடல் உடல் கூராய்வு ஆய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பப்பட்டன.
    user_Lakshmanan
    Lakshmanan
    Local News Reporter மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • திருச்சி மாவட்டம் மருங்காபுரியை அடுத்த தொட்டியப்பட்டியில் பாம்பாளம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு நேற்று மாலை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த வழிபாட்டில் விளக்கு பூஜை நடைபெற்றன. இதில் இப்பகுதியை சுற்றியுள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பாம்பாளம்மன் அருளை பெற்று சென்றனர்.
    1
    திருச்சி மாவட்டம் மருங்காபுரியை அடுத்த தொட்டியப்பட்டியில் பாம்பாளம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு நேற்று மாலை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த வழிபாட்டில் விளக்கு பூஜை நடைபெற்றன. இதில் இப்பகுதியை சுற்றியுள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பாம்பாளம்மன் அருளை பெற்று சென்றனர்.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    5 hrs ago
  • தஞ்சாவூர் மாவட்டம் பசுபதிகோவில் ஊராட்சியில் அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முத்து ஏற்பாட்டில்  அதிமுக சார்பில் நீர்மோர் பந்தலை முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தஞ்சை மேற்கு மாவட்ட செயலாளருமான ரெத்தினசாமி ரிப்பன் வெட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார் அதனைத் தொடர்ந்து  தர்பூசணி நீர்மோர் பானக்கம் மற்றும் பல வகைகளை  பொதுமக்களுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மேற்கு ஒன்றிய செயலாளர் கோபிநாதன் பொதுக்குழு உறுப்பினர் மோகன் திருவையாறு ஒன்றிய செயலாளர் இளங்கோவன் தொழில்நுட்ப பிரிவு மண்டல துணைச் செயலாளர் சதீஷ் உட்பட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
    1
    தஞ்சாவூர் மாவட்டம் பசுபதிகோவில் ஊராட்சியில் அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முத்து ஏற்பாட்டில்  அதிமுக சார்பில் நீர்மோர் பந்தலை முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தஞ்சை மேற்கு மாவட்ட செயலாளருமான ரெத்தினசாமி ரிப்பன் வெட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார் அதனைத் தொடர்ந்து  தர்பூசணி நீர்மோர் பானக்கம் மற்றும் பல வகைகளை  பொதுமக்களுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மேற்கு ஒன்றிய செயலாளர் கோபிநாதன் பொதுக்குழு உறுப்பினர் மோகன் திருவையாறு ஒன்றிய செயலாளர் இளங்கோவன் தொழில்நுட்ப பிரிவு மண்டல துணைச் செயலாளர் சதீஷ் உட்பட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
    user_சிவகுமார்.மு
    சிவகுமார்.மு
    பத்திரிகையாளர் பாபநாசம், தஞ்சாவூர், தமிழ்நாடு•
    10 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.