மணப்பாறையில் 238 மாணவா்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கிய அமைச்சா் மணப்பாறையை அடுத்த பண்ணப்பட்டி ஊராட்சி, கறம்பக்காடு பகுதியில் இயங்கி வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் 238 மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாநிலங்களவை திமுக உறுப்பினா் ராஜாத்தி (எ) கவிஞா் சல்மா, மணப்பாறை எம்எல்ஏ ப. அப்துல்சமது ஆகியோா் வழங்கினா். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் பாலாஜி, திமுக மாவட்ட அவைத் தலைவா் கோவிந்தராஜன், ஒன்றியச் செயலாளா்கள் ராமசாமி, செல்வராஜ், பழனியாண்டி, முன்னாள் ஒன்றியக்குழு தலைவா் அமிா்தவள்ளி ராமசாமி, திமுக மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் கிருஷ்ணகோபால், மமக மாவட்டத் தலைவா் பைஸ் அகமது உள்ளிட்ட நிா்வாகிகள், இருபால் பேராசிரியா்கள், மாணவ மாணவிகள் என பலா் பங்கேற்றனா். இதற்கு முன்னதாக, கல்லூரி முதல்வா் க. மலா்மதி வரவேற்றாா். இந்நிகழ்வின் நிறைவில், இயற்பியல் துறைத் தலைவா் அ. ஆஸ்டின் நன்றி கூறினாா்.
மணப்பாறையில் 238 மாணவா்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கிய அமைச்சா் மணப்பாறையை அடுத்த பண்ணப்பட்டி ஊராட்சி, கறம்பக்காடு பகுதியில் இயங்கி வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் 238 மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாநிலங்களவை திமுக உறுப்பினா் ராஜாத்தி (எ) கவிஞா் சல்மா, மணப்பாறை எம்எல்ஏ ப. அப்துல்சமது ஆகியோா் வழங்கினா். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் பாலாஜி, திமுக மாவட்ட அவைத் தலைவா் கோவிந்தராஜன், ஒன்றியச் செயலாளா்கள் ராமசாமி, செல்வராஜ், பழனியாண்டி, முன்னாள் ஒன்றியக்குழு தலைவா் அமிா்தவள்ளி ராமசாமி, திமுக மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் கிருஷ்ணகோபால், மமக மாவட்டத் தலைவா் பைஸ் அகமது உள்ளிட்ட நிா்வாகிகள், இருபால் பேராசிரியா்கள், மாணவ மாணவிகள் என பலா் பங்கேற்றனா். இதற்கு முன்னதாக, கல்லூரி முதல்வா் க. மலா்மதி வரவேற்றாா். இந்நிகழ்வின் நிறைவில், இயற்பியல் துறைத் தலைவா் அ. ஆஸ்டின் நன்றி கூறினாா்.
- புதுக்கோட்டை மாவட்டம் பேராவூரணியில் இருந்து தேங்காய் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி நள்ளிரவில் திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மணப்பாறையை அடுத்த நொச்சிமேடு என்ற இடத்தில் வந்தபோது, லாரியை அதன் டிரைவர் திருப்ப முயன்றார். அப்போது, பின்னால் மன்னார் குடியில் இருந்து கம்பம் நோக்கி சென்ற அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்சின் முன்பகுதி சேதமடைத்துடன் இடிபாடுகளுக்குள் பஸ் டிரைவர் சிக்கி கொண்டார். இது பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்நிலையில் லாரி சாலையில் கவிழ்ந்து அதிலிருந்த தேங்காயும் சாலையில் சிதறிக் கிடந்தது. இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.1
- மலையூர் சாக்கடையால் பொதுமக்களுக்கு தொல்லை! மலையூர் பகுதியில் தோரண வாய்க்காலை பராமரிப்பு பணி செய்யாத காரணத்தினால் பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியேறும் கழிவு நீர் தோரண வாய்க்காலில் ஆங்காங்கே நிற்கிறது. இதனால் கொசுத்தொல்லை மிக அதிகமாக உள்ளது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதால் தோரண வாய்க்காலை பராமரித்து பணி செய்ய பொதுமக்கள் ஊராட்சிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.1
- நிலக்கோட்டை: பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ விலை வரலாறு காணாத உயர்வு - மல்லிகை கிலோ ரூ.10000க்கு விற்பனை திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் தைப்பொங்கல் பண்டிகை, தை அமாவாசை, சுபமுகூர்த்த நாட்கள் வருவதையொட்டி மற்றும் பனிப்பொழிவு காரணமாக வரத்து குறைவால் மல்லிகை கிலோ ரூ.10,000, முல்லை ரூ.3000, ஜாதிப்பூ ரூ.2500க்கு, கனகாம்பரம் ரூ.2000 என அனைத்து பூக்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்து விற்பனையாகி வருகிறது விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்1
- கரூர் மாவட்ட திமுக செயலாளர் வி. செந்தில் பாலாஜி ஆணைக்கிணங்க, நாளை மறுநாள்(11/01/29) நடைபெறும் திமுக திராவிட பொங்கல் சமத்துவ விளையாட்டு போட்டி நடைபெறும் இடமான தமிழ் நகரில் விளையாட்டு மைதானத்தை இன்று தாந்தோணி மேற்கு ஒன்றிய செயலாளர் கோயம்பள்ளி பாஸ்கர் தலைமையில் பணியாட்கள் மற்றும் பொக்லைன் இயந்திரம் மூலம் சுத்தம் செய்யும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.1
- புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகா நம்புரான் பட்டியல் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் பயன்பாட்டில் உள்ள சாலையை தனிநபர் தடுத்து நிறுத்தி சாலை அமைக்க விடாமல் தடுத்துள்ளதாகவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு சாலையை அமைந்து தரக்கோரி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.1
- பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை-திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றிய பகுதிகளில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.1
- தேனி வாசவி மஹாலில் வாசவி கிளப், வாசவீ கிளப் வனிதா பதவியேற்பு விழா நடந்தது தேனி பெரியகுளம் சாலையில் உள்ள வாசவி மஹாலில் தேனியில் செயல்பட்டு வரும் வாசவி கிளப் மற்றும் வாசவி கிளப் வனிதா புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு தலைவர்கள் சரவணன், ஷர்மிளா தலைமை வகிக்க, செயலாளர் பால நடராஜன், பொருளாளர்கள் ஹிந்ரஜீத் மற்றும் வைஷ்ணவி உள்ளிட்டோர் முன்னிலை வகிக்க, சிறப்பு அழைப்பாளராக இன்டர்நேஷனல் மல்டிபிள் துணை தலைவர் லால்பகதூர் சாஸ்திரி, கேபினட் செயலாளர் லட்சுமி பாலகிருஷ்ணன், கேபினட் பொருளாளர் ஸ்ரீபிரியா சத்யநாராயணன், மாவட்டத் துணை ஆளுநர் சதீஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பிக்க மாவட்ட ஆளுநர் ஸ்ரீமதிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதன் அடிப்படையில் வாசவி கிளப் புதிய தலைவராக சீனிவாசன் செயலாளராக மணிகண்டன் பொருளாளராக வாசகன் உள்ளிட்டோரும் வாசவி கிளப் வனிதா தலைவராக தன்யா பார்வதி செயலாளராக சௌமியா பொருளாளராக சப்னா உள்ளிட்டோர் புதிய நிர்வாகிகளாக பதவியேற்று கொண்டனர் இதனை தொடர்ந்து தேவாரம் இமேஜ் ஹோமிற்க்கு போர்வைகள், ஏழை எளிய மற்றும் ஊனமுற்றவர்களுக்கு 5 கிலோ அரிசி பைகள் வழங்கப்பட்டது முன்னதாக வடபுதுபட்டியில் செயல்பட்டு வரும் அன்பு இல்லத்தில் உள்ளவர்களுக்கு காலை உணவும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் தேனி அல்லிநகரம் ஆரிய வைசிய மகாசபை தலைவர் ராமச்சந்திரன் மற்றும் அபெக்ஸ் நண்பர்கள் என ஏராளமான வாழ்த்துரை வழங்கினர். புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவிற்கு வருகை புரிந்த அனைவரையும் முன்னாள் தலைவர் சரவணன் வரவேற்புரை ஆற்றினார் இந்த நிகழ்வில் IPC அலுவலர்களாக சேகர் ராம்குமார் ராஜா மாவட்ட உதவி செய்தி தொடர்பாளர் சுவாதி ஸ்ரீ சரவணகுமார் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீவித்யா பாலாஜி மண்டல தலைவர் நாகராஜன் வட்டாரத் தலைவர்கள் சரவணன், நாகலாவன்யா மண்டல செயலாளர் வெங்கட்ராமன் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் அவர்களது குடும்பத்தினர் பயனாளிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவாக வாசவி கிளப் வனிதா முன்னாள் தலைவர் சர்மிளா அனைவருக்கும் நன்றி கூறினார்1
- நவீன சுகாதார வளாகம் திறப்பு விழா புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கோரமண்டல் உர தொழிற்சாலை சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன சுகாதார வளாகத்தை திறந்து வைக்க இன்று (ஜன.9) சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் வருகை தந்தார். தொடர்ந்து, அரசு பள்ளி மாணவியை கொண்டு ரிப்பன் வெட்டி கட்டிடத்தின் கல்வெட்டை திறந்து வைத்தார்.1