logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

அதிமுக நிர்வாகிகளின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய டி.ஜெயக்குமார் சென்னை இராயபுரம் தொகுதியில் பழைய வண்ணாரப்பேட்டை மற்றும் காசிமேடு பகுதியில் அதிமுக நிர்வாகிகள் உடல் நலக்குறைவு மற்றும் வயது முதிர்வு காரணத்தால் இருவர் உயிரிழந்தனர். இதனை அறிந்த அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் இன்று நேரில் அஞ்சலி செலுத்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். அருகில் மாவட்ட பகுதி வட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் இருந்தனர்.

11 hrs ago
user_Reporter M.Krishna Kumar
Reporter M.Krishna Kumar
Local News Reporter திருவொற்றியூர், சென்னை, தமிழ்நாடு•
11 hrs ago

அதிமுக நிர்வாகிகளின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய டி.ஜெயக்குமார் சென்னை இராயபுரம் தொகுதியில் பழைய வண்ணாரப்பேட்டை மற்றும் காசிமேடு பகுதியில் அதிமுக நிர்வாகிகள் உடல் நலக்குறைவு மற்றும் வயது முதிர்வு காரணத்தால் இருவர் உயிரிழந்தனர். இதனை அறிந்த அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் இன்று நேரில் அஞ்சலி செலுத்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். அருகில் மாவட்ட பகுதி வட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் இருந்தனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே திருப்பாலைத்துறையில் அமைந்துள்ள அருள்மிகு  தவளவெண்ணகையாள் உடனுறை பாலைவனநாதர் திருக்கோயிலில் சித்திரை பவுர்ணமி பிரமோற்சவவிழா கடந்த 22-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினந்தோறும் பல்வேறு வாகனங்களில் சாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது.   முன்னதாக வண்ண மலர் அலங்காரத்தில் சுவாமி அம்பாளும் திருத்தேருக்கு எழுந்தருள திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு திருத்தேரின் வடம்பிடித்து முக்கிய வீதிகள் வழியாக இழுத்துச் சென்றனர். விழாவில் செயல் அலுவலர் சிவகுமார், அறங்காவலர் குழு தலைவர் கணேசன், ஆய்வாளர் லெட்சுமி , அறங்காவலர் குழு உறுப்பினர்கள் வசந்திசரவணன், ராஜேந்திரன், திருக்கோவில் கணக்கர் சங்கரமூர்த்தி, திருப்பாலைத்துறை சிவப்பேரவை நண்பர்கள் மற்றும் கிராமவாசிகள் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
    1
    தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே திருப்பாலைத்துறையில் அமைந்துள்ள அருள்மிகு 
தவளவெண்ணகையாள் உடனுறை பாலைவனநாதர் திருக்கோயிலில் சித்திரை பவுர்ணமி பிரமோற்சவவிழா கடந்த 22-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் தினந்தோறும் பல்வேறு வாகனங்களில் சாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது.  
முன்னதாக வண்ண மலர் அலங்காரத்தில் சுவாமி அம்பாளும் திருத்தேருக்கு எழுந்தருள திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு திருத்தேரின் வடம்பிடித்து முக்கிய வீதிகள் வழியாக இழுத்துச் சென்றனர்.
விழாவில் செயல் அலுவலர் சிவகுமார், அறங்காவலர் குழு தலைவர் கணேசன், ஆய்வாளர் லெட்சுமி , அறங்காவலர் குழு உறுப்பினர்கள் வசந்திசரவணன், ராஜேந்திரன், திருக்கோவில் கணக்கர் சங்கரமூர்த்தி, திருப்பாலைத்துறை சிவப்பேரவை நண்பர்கள் மற்றும் கிராமவாசிகள் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
    user_சிவகுமார்.மு
    சிவகுமார்.மு
    பத்திரிகையாளர் பாபநாசம், தஞ்சாவூர், தமிழ்நாடு•
    18 hrs ago
  • நாகப்பட்டினம் மாவட்டம் எட்டுக்குடியில் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் சித்திரை பௌர்ணமியை முன்னிட்டு இன்று மே 1 சுப்பிரமணிய சுவாமிக்கு 56 மணிநேரம் தொடர்ந்து பாலபிஷேகம் நடைபெறுகிறது. இதனை ஒட்டி பக்தர்கள் பால்காவடி வேப்பிலை காவடி மற்றும் பால்குடம் கொண்டு வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்கின்றனர். இதனால் எட்டுக்குடி பக்தர்கள் கூட்டத்தில் நிரம்பி வழிகிறது.
    1
    நாகப்பட்டினம் மாவட்டம் எட்டுக்குடியில் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் சித்திரை பௌர்ணமியை முன்னிட்டு இன்று மே 1 சுப்பிரமணிய சுவாமிக்கு 56 மணிநேரம் தொடர்ந்து பாலபிஷேகம் நடைபெறுகிறது. இதனை ஒட்டி பக்தர்கள் பால்காவடி வேப்பிலை காவடி மற்றும் பால்குடம் கொண்டு வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்கின்றனர். இதனால் எட்டுக்குடி பக்தர்கள் கூட்டத்தில் நிரம்பி வழிகிறது.
    user_Manikandan
    Manikandan
    Plumber கீழ்வேளூர், நாகப்பட்டினம், தமிழ்நாடு•
    13 hrs ago
  • நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள அத்தனூர் பகுதிகளில் குடிநீர் விநியோகம் சார்பாக பேரூராட்சி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அத்தனூர் பேரூராட்சிக்கு குடிநீர் வழங்கும் காவேரி குடிநீர் ஆதாரமான குதிரை கால் மேடு பகுதியில் பராமரிப்பு பணிகள் மே 4 தேதி முதல் 25 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதுவரை குறைவான அளவிலே குடிநீர் திறந்து விடப்படும் எனவே தற்போது உள்ள குடிநீரை பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ளுமாறு அத்தனூர் குடிநீர் வாரியம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    1
    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள அத்தனூர் பகுதிகளில் குடிநீர் விநியோகம் சார்பாக பேரூராட்சி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அத்தனூர் பேரூராட்சிக்கு குடிநீர் வழங்கும் காவேரி குடிநீர் ஆதாரமான குதிரை கால் மேடு பகுதியில் பராமரிப்பு பணிகள் மே 4 தேதி முதல் 25 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதுவரை குறைவான அளவிலே குடிநீர் திறந்து விடப்படும் எனவே தற்போது உள்ள குடிநீரை பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ளுமாறு அத்தனூர் குடிநீர் வாரியம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    user_கணேஷ் G
    கணேஷ் G
    Local News Reporter ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    18 hrs ago
  • Post by MOULESH
    1
    Post by MOULESH
    user_MOULESH
    MOULESH
    திருத்துறைப்பூண்டி, திருவாரூர், தமிழ்நாடு•
    19 hrs ago
  • நாமக்கல் மாவட்டம் , செல்லப்பம்பட்டி அருகே சுயம்பு மகா மாரியம்மன் கோவில் உள்ளது . இக்கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 30/4/2026 இன்று மாலை கோவிலில் அம்மனுக்கு பொங்கல் வைக்கப்பட்டு மாவிளக்கு பூஜை நடைபெற்றது. பின் பக்தர்கள் அலகு குத்தி நேத்திக்கடன் செலுத்தினர். இந்த நிகழ்வில் பொதுமக்கள் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    1
    நாமக்கல் மாவட்டம் , செல்லப்பம்பட்டி அருகே சுயம்பு மகா மாரியம்மன் கோவில் உள்ளது . இக்கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 30/4/2026 இன்று மாலை கோவிலில் அம்மனுக்கு பொங்கல் வைக்கப்பட்டு மாவிளக்கு பூஜை நடைபெற்றது. பின் பக்தர்கள் அலகு குத்தி நேத்திக்கடன் செலுத்தினர். இந்த நிகழ்வில் பொதுமக்கள் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    user_DHINESH KUMAR
    DHINESH KUMAR
    Local News Reporter ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    19 hrs ago
  • திருவெறும்பூர் அருகே உள்ள தெற்கு காட்டூர் அழகு முத்து மாரியம்மன் கோவில் 42ம் ஆண்டு திருவிழா நேற்று விமர்சையாக நடந்தது முன்னைக சித்திரை மாதம் 11 ஆம் தேதி (24-04-2026) காப்பு கட்டுதல் நடந்தது அதன் தொடர்ச்சியாக பாப்பாக்குறிச்சி கிராமத்தில் உள்ள மதுரை வீரன் சுவாமி கோவிலிலில் இருந்து 'சக்தி வெள்ளிகரகம்' சங்கிலிகருப்பு புறப்பட்டு காவேரிநகர் அழகு சக்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து பூச்சொரிதல், அலகு காவடி, பால்குடம், தீர்த்த குடம் அம்பாள் அலங்காரத்துடன் அழகு முத்து மாரியம்மன் கோயில் வந்தடைந்தது அங்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வழிபாடு செய்தனர். 2 ம் தேதியான மாலை அன்னதானமும் இரவு 6.00 உற்சவ அம்பாள் குதிரை வாகனத்தில், 'சக்தி வெள்ளிகரகம் 'சங்கிலி கருப்பு வீதி உலா மற்றும் குட்டிக்குடித்தல் நிகழ்ச்சி நடைபெறும். இதில் பக்தர்கள் தங்களது இல்லத்திலும் கோயிலிலும் ஆடு, கோழி பழியிட்டு நேர்த்திக் கடன் செலுத்தலாம். 3ம் தேதி காலை மேல் மஞ்சள் நீராட்டு விழாவும் 8.00 மணிக்கு சங்கிலி கருப்புக்கு படையலிட்டு மாபெரும் அன்னதானம் நடைபெறும். இதில் காட்டூர் சுற்றுவட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்..
    1
    திருவெறும்பூர் அருகே உள்ள தெற்கு காட்டூர் அழகு முத்து மாரியம்மன் கோவில் 42ம் ஆண்டு திருவிழா நேற்று விமர்சையாக நடந்தது
முன்னைக சித்திரை மாதம் 11 ஆம் தேதி (24-04-2026)  காப்பு கட்டுதல் நடந்தது
அதன் தொடர்ச்சியாக பாப்பாக்குறிச்சி கிராமத்தில் உள்ள மதுரை வீரன் சுவாமி கோவிலிலில் இருந்து 'சக்தி வெள்ளிகரகம்' சங்கிலிகருப்பு புறப்பட்டு  காவேரிநகர்  அழகு சக்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து பூச்சொரிதல், அலகு காவடி, பால்குடம், தீர்த்த குடம் அம்பாள் அலங்காரத்துடன் அழகு முத்து மாரியம்மன் கோயில் வந்தடைந்தது
அங்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வழிபாடு செய்தனர்.
2 ம் தேதியான  மாலை அன்னதானமும் இரவு 6.00  உற்சவ அம்பாள் குதிரை வாகனத்தில், 'சக்தி வெள்ளிகரகம் 'சங்கிலி கருப்பு வீதி உலா மற்றும் குட்டிக்குடித்தல் நிகழ்ச்சி நடைபெறும்.
இதில் பக்தர்கள் தங்களது இல்லத்திலும்  கோயிலிலும் ஆடு, கோழி பழியிட்டு நேர்த்திக் கடன் செலுத்தலாம்.
3ம் தேதி  காலை மேல் மஞ்சள் நீராட்டு
விழாவும்  8.00 மணிக்கு சங்கிலி கருப்புக்கு படையலிட்டு மாபெரும் அன்னதானம் நடைபெறும்.
இதில் காட்டூர் சுற்றுவட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்..
    user_பெரியசாமி
    பெரியசாமி
    திருவெறும்பூர், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • கிருஷ்ணகிரி மாவட்டம் பூவத்திகிராமம் அருகேஅமைந்துள்ள  ஸ்ரீ கனகதுர்காதேவி ஆலயத்தில், சித்ராபௌர்ணமி முன்னிட்டு உலக நன்மை வேண்டி, மகா சண்டி ஹோமம் நடைபெற்றது கர்நாடக மாநிலம்  பெங்களூரில் இருந்து இங்கு வந்துஇவர்களின் முன்னோர்கள் வழிபட்டு வந்த பூவத்தி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கனகதுர்கா தேவி ஆலயத்தில், சிறப்பு பூஜை வழிபாடுகள்நடத்தி வருகின்றனர்,
    1
    கிருஷ்ணகிரி மாவட்டம் பூவத்திகிராமம் அருகேஅமைந்துள்ள  ஸ்ரீ கனகதுர்காதேவி ஆலயத்தில், சித்ராபௌர்ணமி முன்னிட்டு உலக நன்மை வேண்டி, மகா சண்டி ஹோமம் நடைபெற்றது
கர்நாடக மாநிலம்  பெங்களூரில் இருந்து இங்கு வந்துஇவர்களின் முன்னோர்கள் வழிபட்டு வந்த பூவத்தி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கனகதுர்கா தேவி
ஆலயத்தில்,  சிறப்பு பூஜை வழிபாடுகள்நடத்தி வருகின்றனர்,
    user_FAYAZ
    FAYAZ
    பத்திரிகையாளர் கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    6 hrs ago
  • தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா மெலட்டூரில் நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு பாகவதமேளா தெய்வீக நாட்டிய கலைவிழா நடைப்பெற்றது. பாரம்பரிய முறைப்படி எண்ணெய் தீப ஒளியில் பிரகலாத சரித்திர நாடகம் மற்றும் ஆண்களே பெண்கள் வேடமணிந்து நாட்டிய நாடக கலைவிழாவில்  காண்போர் வியக்கும் வகையில் நடனமாடினார். நிகழ்ச்சியில் திரளான நாட்டியக்கலை ரசிகர்களும், இசை கலைஞர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு நாட்டிய விழாவினை கண்டுகளித்தனர்.
    1
    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா மெலட்டூரில் நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு பாகவதமேளா தெய்வீக நாட்டிய கலைவிழா நடைப்பெற்றது.
பாரம்பரிய முறைப்படி எண்ணெய் தீப ஒளியில் பிரகலாத சரித்திர நாடகம் மற்றும் ஆண்களே பெண்கள் வேடமணிந்து நாட்டிய நாடக கலைவிழாவில்  காண்போர் வியக்கும் வகையில் நடனமாடினார்.
நிகழ்ச்சியில் திரளான நாட்டியக்கலை ரசிகர்களும், இசை கலைஞர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு நாட்டிய விழாவினை கண்டுகளித்தனர்.
    user_சிவகுமார்.மு
    சிவகுமார்.மு
    பத்திரிகையாளர் பாபநாசம், தஞ்சாவூர், தமிழ்நாடு•
    18 hrs ago
  • எடப்பாடி பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு இரண்டாவது நாளாக சித்திரை தேரோட்டம் வெகு விமர்சியாக நடைபெற்றது... எடப்பாடி பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் சித்திரை தேர் திருவிழாவானது ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடைபெறுவது வழக்கம். அதனைத் தொடர்ந்து நேற்று முதல் தேரோட்டம் விழா விமர்சையாக நடைபெற்ற வருகிறது. இதனைத் தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக தேரோட்டமானது மேட்டு தெருவிலிருந்து கடைவீதி வரை இழுத்துவரப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளது... முன்னதாக அலங்கரிக்கப்பட்டுள்ள மூன்று தேர்களில் முதலாவதாக விநாயகரும் , இரண்டாவதாக பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரரும் மற்றும் மூன்றாவதாக முருக பெருமான் ஆகிய மூன்று தேர்களையும் சுமார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிவசிவா மற்றும் அரோகரா கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்... இதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் சத்தாபரணம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது...
    1
    எடப்பாடி பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு இரண்டாவது நாளாக சித்திரை தேரோட்டம் வெகு விமர்சியாக நடைபெற்றது...
எடப்பாடி பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் சித்திரை தேர் திருவிழாவானது ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடைபெறுவது வழக்கம். அதனைத் தொடர்ந்து நேற்று முதல் தேரோட்டம் விழா விமர்சையாக நடைபெற்ற வருகிறது. இதனைத் தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக தேரோட்டமானது மேட்டு தெருவிலிருந்து கடைவீதி வரை இழுத்துவரப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளது...
முன்னதாக அலங்கரிக்கப்பட்டுள்ள மூன்று தேர்களில் முதலாவதாக விநாயகரும் , இரண்டாவதாக பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரரும் மற்றும் மூன்றாவதாக முருக பெருமான் ஆகிய மூன்று தேர்களையும் சுமார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிவசிவா மற்றும் அரோகரா கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்...
இதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் சத்தாபரணம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது...
    user_Srianand
    Srianand
    பத்திரிகையாளர் Edappadi, Salem•
    6 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.