Shuru
Apke Nagar Ki App…
திண்டுக்கல் கிழக்கு: அமித்ஷாவா..? அவதூறுஷாவா..? திண்டுக்கல்லில் கொந்தளித்த முதல்வர்! திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து பொதுமக்களிடையே பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டிற்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "அமித்ஷாவா அல்லது அவதூறு ஷாவா என சந்தேகம் வருகிறது" என்று பேசினார். உண்மைக்கு புறம்பான விஷயங்களை பேசியதாலும், இந்துக்களின் வழிபாட்டு முறைகளுக்கு எதிராக தமிழ்நாடு செயல்படுகிறது என கூறியதாலும் கண்டனத்தை பதிவு செய்வதாக கூறினார்.
CHANDRA SEKAR AYYANAR
திண்டுக்கல் கிழக்கு: அமித்ஷாவா..? அவதூறுஷாவா..? திண்டுக்கல்லில் கொந்தளித்த முதல்வர்! திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து பொதுமக்களிடையே பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டிற்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "அமித்ஷாவா அல்லது அவதூறு ஷாவா என சந்தேகம் வருகிறது" என்று பேசினார். உண்மைக்கு புறம்பான விஷயங்களை பேசியதாலும், இந்துக்களின் வழிபாட்டு முறைகளுக்கு எதிராக தமிழ்நாடு செயல்படுகிறது என கூறியதாலும் கண்டனத்தை பதிவு செய்வதாக கூறினார்.
More news from தமிழ்நாடு and nearby areas
- பெரியகுளம் பகுதியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு பரிசு வழங்கப்பட்டது தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை மற்றும் தென்கரைப் பகுதியில் உள்ள நியாய விலை கடையில் இன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு 3000 ரூபாய் கொடுக்கப்படும் அரிசி சர்க்கரை கரும்பு வேஷ்டி சேலை உள்ளிட்ட பொங்கல் தொகுப்பு பரிசை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது இதனைத் தொடர்ந்து குடும்ப அட்டை தாருங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நியாயவிலைக் கடைக்கு சென்று டோக்கன்களை வழங்கி பொங்கல் தொகுப்பு பரிசுகளை பெற்றுக் கொண்டனர்1
- தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் சேர்த்து முழு கரும்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு தேவதானப்பட்டி பகுதியில் உள்ள கரும்பு விவசாயிகளிடமிருந்து இன்று முதல் நேரடியாக கரும்பு கொள்முதல் செய்யும் பணியை கூட்டுறவுத் துறையினர் துவங்கி உள்ளனர். இந்நிலையில் இந்த ஆண்டு அரசு ஒரு கரும்பிற்கு ரூ.40 வழங்க வேண்டும் என கரும்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- தேனி மாவட்டத்திற்கு பொங்கல் பரிசு தொகை தொகுப்பு தொடக்கம் தேனி மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகை தொகுப்பானது இன்று தொடங்கப்பட்டது .தேனிபாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் முன்னிலையில் தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் பங்கேற்று தொடங்கி வைத்தார் மேலும் இந்த நிகழ்வில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பயனாளிகள் பங்கேற்றனர்.1
- சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள பூவந்தி பகுதியில் சாலையோரமாக செல்லும் குடிநீர் குழாய் உடைந்து, சுத்தமான குடிநீர் தொடர்ந்து வீணாகி வருகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக பழுதை சரிசெய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி பேட்டி! புதுகை மன்னர் கல்லூரியில் இன்று தமிழக அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அதில், "நான் நீதிமன்ற அவமதிப்பு செய்யவில்லை, திருப்பரங்குன்றத்தில் பிரச்சனைக்குரிய இடத்தில் ஏற்கெனவே தீபம் ஏற்றப்பட்டுள்ளதா என்பதை தான் நீதிமன்றத்தில் கேட்டோம். நீதிபதிகள் பேய் கதை சொல்லும்போது அமைச்சர் சொல்லக் கூடாதா?, அமித்ஷா அடிக்கடி தமிழகம் வருவது அவருக்குத்தான் ஏமாற்றம்? என்றார்.1
- 08/01/2026: வியாழக்கிழமை, நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள ஓடப்பள்ளி அக்ரஹாரம் பகுதியில் இன்று பொங்கல் பரிசு தொகுப்பு தமிழ்நாடு அரசால் நியாயவிலை கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது. பரிசுத்தொகுப்பை வாங்க காலை முதலே நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்தனர். மாலையில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த பொதுமக்கள் ஒடப்பள்ளி-1 நியாய விலை கடையில் மெஷின் பழுதடைந்துள்ளதால், சுமார் 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பினை வாங்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.1
- கேள்வி கேட்டவரை அடித்த காங். நிர்வாகிகள் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே மக்களை சந்திக்க சென்ற கரூர் எம்.பி. ஜோதிமணியின் காரை மறித்து கேள்வி கேட்ட நபரை காங்கிரஸ் நிர்வாகிகள் அடித்து விரட்டி அட்டகாசம். இனையத்தில் வீடியோ வைரல் காட்சிகள்1
- சிவகங்கை ஜஸ்டின் பள்ளியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிமிடெட் சார்பில், காரைக்குடி மண்டல பயிற்சி மையத்தில் சாலைப் பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 2026 ஜனவரி 1 முதல் ஜனவரி 31 வரை நடைபெறும் இந்த சாலைப் பாதுகாப்பு மாத விழாவின் ஒரு பகுதியாக, பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடத்தப்பட்டது.1
- புதுகை ரயில்வே ரவுண்டானா அருகே கூட்டுறவு நியாய விலை கடையில் பொங்கல் பரிசு தொகுப்பினை தமிழக அமைச்சர்கள் வழங்கினர். எஸ். ரகுபதி, சிவ.வீ. மெய்ய நாதன், மாவட்ட ஆட்சியர் அருணா, சேர்மன் திலகவதி செந்தில், து.செ. லியாகத், எம்.எல்.ஏ முத்துராஜா உள்ளிட்டோர் குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, வெள்ளம், கரும்பு, ₹3000 ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை வழங்கினார்கள். அதனைப் பெற்றுக் கொண்ட பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.1