logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

மதுரையில் கொலை வழக்கில் மூவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு. மதுரை மாவட்ட காவல்துறை ஆலாத்தூர் கிராமத்தில் 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில் மூவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம்மதுரை மாவட்டம், ஊமச்சிகுளம் உட்கோட்டம், ஊமச்சிகுளம் காவல் நிலையத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கில், இன்று மதுரை 4வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.இவ்வழக்கில், ஊமச்சிகுளம் காவல் நிலைய சரகம் ஆலாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பிச்சை (வயது 55), த/பெ. கம்பலத்தான் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, ஆலாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த போக்கிரி சரித்திர பதிவேடு குற்றவாளிகளான:அதியபிரபு, த/பெ. ஆண்டிச்சாமிஅருண்குமார், த/பெ. சக்திவேல்ஆண்டிச்சாமி, த/பெ. விஸ்வநாதன்ஆகிய மூவர் மீது ஊமச்சிகுளம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, காவல் துறையினரால் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மூன்று குற்றவாளிகளுக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.5,000/- அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

19 hrs ago
user_சு.இரத்தினவேல்
சு.இரத்தினவேல்
Madurai South, Tamil Nadu•
19 hrs ago
1f7a6e50-5bce-4de0-93f0-218d2484c8fb

மதுரையில் கொலை வழக்கில் மூவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு. மதுரை மாவட்ட காவல்துறை ஆலாத்தூர் கிராமத்தில் 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில் மூவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம்மதுரை மாவட்டம், ஊமச்சிகுளம் உட்கோட்டம், ஊமச்சிகுளம் காவல் நிலையத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கில், இன்று

c4be1c00-08ce-47a5-8a95-862d8320315d

மதுரை 4வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.இவ்வழக்கில், ஊமச்சிகுளம் காவல் நிலைய சரகம் ஆலாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பிச்சை (வயது 55), த/பெ. கம்பலத்தான் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, ஆலாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த போக்கிரி சரித்திர பதிவேடு குற்றவாளிகளான:அதியபிரபு, த/பெ. ஆண்டிச்சாமிஅருண்குமார், த/பெ. சக்திவேல்ஆண்டிச்சாமி, த/பெ.

d0b2086f-6fd0-4351-8097-56cd82b2ebb3

விஸ்வநாதன்ஆகிய மூவர் மீது ஊமச்சிகுளம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, காவல் துறையினரால் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மூன்று குற்றவாளிகளுக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.5,000/- அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

More news from தமிழ்நாடு and nearby areas
  • பாண்டியன் நகர் காந்திநகரில் சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர் *விருதுநகரில் சுமார் 55 .40 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி பூமி பூஜையை தொடங்கி வைத்த விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. செல்வம்...* விருதுநகர் ரோசல்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட காந்தி நகர் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இந்த நிலையில் தங்கள் பகுதியில் பல மாதங்களாகசாலை மிகவும் மோசமடைந்துள்ளதாகவும் மழைக்காலத்தில் சென்று வர சிரமம் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் பஞ்சாயத்து மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் மனு அளித்திருந்தனர். இந்த நிலையில் இன்று விருதுநகர் காந்திநகர் தெருவில் சுமார் 900 மீட்டர் தொலைவில் சுமார் 55.40 லட்சம் மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜையினை விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி செல்வம் அவர்கள் தொடங்கி வைத்தார்
    1
    பாண்டியன் நகர் காந்திநகரில் சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர்
*விருதுநகரில் சுமார் 55 .40 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி பூமி பூஜையை தொடங்கி வைத்த  விருதுநகர்  சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. செல்வம்...*
விருதுநகர் ரோசல்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட காந்தி நகர் பகுதியில் சுமார்  500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இந்த நிலையில் தங்கள் பகுதியில் பல மாதங்களாகசாலை மிகவும் மோசமடைந்துள்ளதாகவும் மழைக்காலத்தில் சென்று வர சிரமம் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் பஞ்சாயத்து மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் மனு அளித்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று விருதுநகர் காந்திநகர் தெருவில் சுமார் 900 மீட்டர் தொலைவில் சுமார் 55.40 லட்சம் மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜையினை விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி செல்வம் அவர்கள் தொடங்கி வைத்தார்
    user_Jeyaram
    Jeyaram
    சாத்தூர், விருதுநகர், தமிழ்நாடு•
    13 hrs ago
  • கணிதம் கடினம் என்ற மாணவன்... உலக சாதனை படைத்து மாவட்ட ஆட்சியரிடம் பாராட்டு!” சிவகங்கை அருகே 9 வயது மாணவன் ஒருவர் கணிதப் பாடத்தில் இருந்த சவாலை வென்று உலக சாதனை படைத்து மாவட்ட ஆட்சியரின் பாராட்டைப் பெற்றுள்ளார். சிவகங்கை அடுத்த மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் திருப்பதி – வனிதா தம்பதியினரின் மகன் ஸ்ரீ வர்ஷன், சிவகங்கையில் உள்ள டி.எஸ். கார்த்திகேய ராஜா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளியில் ஆசிரியர்கள் கற்றுக் கொடுத்த ஏபிசிடி, எண்கள் மற்றும் கணித வாய்ப்பாடுகளை ஆர்வத்துடன் கற்ற மாணவன், கணிதம் தனக்கு கடினமாக இருப்பதாக தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து தாயின் ஊக்கத்தால் கணித வாய்ப்பாடுகளை பிழையின்றி கற்று, பின்னர் அவற்றை தலைகீழாக கூறும் பயிற்சியிலும் ஈடுபட்டார். மாணவனின் திறமையை கண்டறிந்த பள்ளி நிர்வாகமும் ஆசிரியர்களும் தொடர்ந்து பயிற்சி அளித்தனர். அதன் விளைவாக ஒன்று முதல் பத்து வரை உள்ள வாய்ப்பாடுகளை தலைகீழாக மனப்பாடம் செய்து அசத்தினார். இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நடத்திய போட்டியில் பங்கேற்ற ஸ்ரீ வர்ஷன், ஒன்று முதல் பத்து வரை உள்ள வாய்ப்பாடுகளை வெறும் 1 நிமிடம் 46 வினாடிகளில் தலைகீழாக கூறி உலக சாதனை படைத்துள்ளார். அவரது சாதனையை அங்கீகரித்து இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் சான்றிதழ் வழங்கியுள்ளது. தமிழகத்திற்கும், சிவகங்கை மாவட்டத்திற்கும், தனது பள்ளிக்கும் பெருமை சேர்த்த மாணவன் ஸ்ரீ வர்ஷனை பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். மேலும், மாவட்ட ஆட்சியர் ஆகாஷை நேரில் சந்தித்து வாழ்த்துகளையும் பெற்றார். உலக சாதனைக்கு தனது தாயின் ஊக்கமே காரணம் என தெரிவித்த மாணவன் ஸ்ரீ வர்ஷன், தனக்கு பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
    1
    கணிதம் கடினம் என்ற மாணவன்... உலக சாதனை படைத்து மாவட்ட ஆட்சியரிடம் பாராட்டு!”

சிவகங்கை அருகே 9 வயது மாணவன் ஒருவர் கணிதப் பாடத்தில் இருந்த சவாலை வென்று உலக சாதனை படைத்து மாவட்ட ஆட்சியரின் பாராட்டைப் பெற்றுள்ளார்.
சிவகங்கை அடுத்த மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் திருப்பதி – வனிதா தம்பதியினரின் மகன் ஸ்ரீ வர்ஷன், சிவகங்கையில் உள்ள டி.எஸ். கார்த்திகேய ராஜா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
பள்ளியில் ஆசிரியர்கள் கற்றுக் கொடுத்த ஏபிசிடி, எண்கள் மற்றும் கணித வாய்ப்பாடுகளை ஆர்வத்துடன் கற்ற மாணவன், கணிதம் தனக்கு கடினமாக இருப்பதாக தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து தாயின் ஊக்கத்தால் கணித வாய்ப்பாடுகளை பிழையின்றி கற்று, பின்னர் அவற்றை தலைகீழாக கூறும் பயிற்சியிலும் ஈடுபட்டார்.
மாணவனின் திறமையை கண்டறிந்த பள்ளி நிர்வாகமும் ஆசிரியர்களும் தொடர்ந்து பயிற்சி அளித்தனர். அதன் விளைவாக ஒன்று முதல் பத்து வரை உள்ள வாய்ப்பாடுகளை தலைகீழாக மனப்பாடம் செய்து அசத்தினார்.
இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நடத்திய போட்டியில் பங்கேற்ற ஸ்ரீ வர்ஷன், ஒன்று முதல் பத்து வரை உள்ள வாய்ப்பாடுகளை வெறும் 1 நிமிடம் 46 வினாடிகளில் தலைகீழாக கூறி உலக சாதனை படைத்துள்ளார். அவரது சாதனையை அங்கீகரித்து இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் சான்றிதழ் வழங்கியுள்ளது.
தமிழகத்திற்கும், சிவகங்கை மாவட்டத்திற்கும், தனது பள்ளிக்கும் பெருமை சேர்த்த மாணவன் ஸ்ரீ வர்ஷனை பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். மேலும், மாவட்ட ஆட்சியர் ஆகாஷை நேரில் சந்தித்து வாழ்த்துகளையும் பெற்றார்.
உலக சாதனைக்கு தனது தாயின் ஊக்கமே காரணம் என தெரிவித்த மாணவன் ஸ்ரீ வர்ஷன், தனக்கு பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    9 hrs ago
  • கொடைக்கானல்-பூம்பாறை தூய்மை காவலர் ராமர் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரி காத்திருப்பு போராட்டம். திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறை அருகில் திண்டுக்கல் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காத்திருப்பு போராட்டம்.கொடைக்கானல் பூம்பாறை தூய்மை காவலர் ராமர் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரியும் கொலையான ராமரின் பெற்றோர்களை மிரட்டும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பூம்பாறை பகுதியில் விவசாயம் செய்து வரும் ராமர் இவரது தாய்,தந்தை பூம்பாறை ஊராட்சியில் தூய்மை காவலராக பணி செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு கூர்மையான ஆயுதங்களால் கொடூரமாக ராமரை உடலில் பல இடங்களில் வெட்டிக்கொலை செய்துள்ளனர். கொடைக்கானல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    1
    கொடைக்கானல்-பூம்பாறை தூய்மை காவலர் ராமர் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரி காத்திருப்பு போராட்டம்.
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை  பிணவறை  அருகில் திண்டுக்கல் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காத்திருப்பு போராட்டம்.கொடைக்கானல் பூம்பாறை தூய்மை காவலர் ராமர் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரியும் கொலையான  ராமரின் பெற்றோர்களை மிரட்டும்  சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பூம்பாறை பகுதியில் விவசாயம் செய்து வரும் ராமர் இவரது தாய்,தந்தை பூம்பாறை ஊராட்சியில் தூய்மை காவலராக பணி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு
கூர்மையான ஆயுதங்களால் கொடூரமாக ராமரை உடலில் பல இடங்களில் வெட்டிக்கொலை செய்துள்ளனர்.
கொடைக்கானல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    user_RAJA
    RAJA
    பத்திரிகையாளர் ஆத்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    3 hrs ago
  • ஸ்ரீகாளியம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளிக்கிழமை 108 திருவிளக்கு பூஜை சிங்கம்புணரி ஸ்ரீகாளியம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளிக்கிழமை 108 திருவிளக்கு பூஜை விமர்சையாக நடைபெற்றது. சுற்றுவட்டாரப் பெண் பக்தர்கள் கலந்துகொண்டனர். சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க, பெண்கள் குத்துவிளக்கு ஏற்றி, மஞ்சள் விநாயகர் செய்து பூஜை செய்தனர். பங்கேற்றோருக்கு தாலி கயிறு உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் வழங்கப்பட்டன. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்
    1
    ஸ்ரீகாளியம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளிக்கிழமை 108 திருவிளக்கு பூஜை
சிங்கம்புணரி ஸ்ரீகாளியம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளிக்கிழமை 108 திருவிளக்கு பூஜை விமர்சையாக நடைபெற்றது. சுற்றுவட்டாரப் பெண் பக்தர்கள் கலந்துகொண்டனர். சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க, பெண்கள் குத்துவிளக்கு ஏற்றி, மஞ்சள் விநாயகர் செய்து பூஜை செய்தனர். பங்கேற்றோருக்கு தாலி கயிறு உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் வழங்கப்பட்டன. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்
    user_ABDUL SALAM
    ABDUL SALAM
    Photographer சிங்கம்புணரி, சிவகங்கை, தமிழ்நாடு•
    7 hrs ago
  • அனைத்துக் கட்சி மக்கள் போராட்டக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் *விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் 'அனைத்துக் கட்சி மக்கள் போராட்டக்குழு' கண்டன ஆர்ப்பாட்டம்!* விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தி, 'அனைத்துக் கட்சி மக்கள் போராட்டக்குழு' சார்பில் அரசு மருத்துவமனை முன்பாகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து கட்சியினர் மற்றும் பொதுமக்கள் முன்வைத்த முக்கிய கோரிக்கைகள் மருத்துவமனையின் தூய்மை மற்றும் சுகாதாரத்தைப் பராமரிக்கத் தேவைக்கேற்ப தூய்மைப் பணியாளர்களின் எண்ணிக்கையை உடனடியாக உயர்த்த வேண்டும். விபத்துகளில் காயமடைபவர்களுக்கு விரைவாகத் தீவிர சிகிச்சை அளிக்கும் வகையில் 'தலைக்காய சிகிச்சை பிரிவை' உடனே தொடங்க வேண்டும். மருத்துவமனை உணவகத்தில் நோயாளிகள் மற்றும் பார்வையாளர்களுக்கு விற்பனை செய்யப்படும் உணவுகளின் அதிகப்படியான விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 'அனைத்துக் கட்சி மக்கள் போராட்டக்குழு' அமைப்பின் பிரதிநிதிகள் திரளாகக் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர். அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்
    1
    அனைத்துக் கட்சி மக்கள் போராட்டக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம்
*விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் 'அனைத்துக் கட்சி மக்கள் போராட்டக்குழு' கண்டன ஆர்ப்பாட்டம்!*
விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தி, 'அனைத்துக் கட்சி மக்கள் போராட்டக்குழு' சார்பில் அரசு மருத்துவமனை முன்பாகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து கட்சியினர் மற்றும் பொதுமக்கள் முன்வைத்த முக்கிய கோரிக்கைகள் மருத்துவமனையின் தூய்மை மற்றும் சுகாதாரத்தைப் பராமரிக்கத் தேவைக்கேற்ப தூய்மைப் பணியாளர்களின் எண்ணிக்கையை உடனடியாக உயர்த்த வேண்டும். விபத்துகளில் காயமடைபவர்களுக்கு விரைவாகத் தீவிர சிகிச்சை அளிக்கும் வகையில் 'தலைக்காய சிகிச்சை பிரிவை' உடனே தொடங்க வேண்டும்.
மருத்துவமனை உணவகத்தில் நோயாளிகள் மற்றும் பார்வையாளர்களுக்கு விற்பனை செய்யப்படும் உணவுகளின் அதிகப்படியான விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
'அனைத்துக் கட்சி மக்கள் போராட்டக்குழு' அமைப்பின் பிரதிநிதிகள் திரளாகக் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர். அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்
    user_Jeyaram
    Jeyaram
    சாத்தூர், விருதுநகர், தமிழ்நாடு•
    13 hrs ago
  • *மதுரை வாடிப்பட்டியருகே விசிக கொடிக்கம்பம் அகற்றம்* - *போலீசார் விசிகவினரிடையே* *தள்ளுமுள்ளு* - *விசிக நிர்வாகியை சட்டை கிழிந்த நிலையில் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு* *மதுரை வாடிப்பட்டியருகே விசிக கொடிக்கம்பம் அகற்றம்* - *போலீசார் விசிகவினரிடையே* *தள்ளுமுள்ளு* - *விசிக நிர்வாகியை சட்டை கிழிந்த நிலையில் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு* மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள அய்யங்கோட்டை பகுதியில் 20 ஆண்டுகளுக்கு மேலாக விசிகவினர் அப்பகுதியில் கொடி மரம் அமைத்து பராமரித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விசிக கொடி கம்பம் அருகே புதிய தமிழகம் கட்சி சார்பில் கொடி கம்பம் நடப்பட்டதாகவும், இதற்கு விசிக மற்றும் பொது மக்கள் சார்பில் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரும் எனக் கூறி அப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் இணைந்து இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் இரு கொடி மரங்களையும் அகற்றுவது என வருவாய்த்துறையினர் முடிவு செய்து இன்று நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் முன்னிலையில் ஆக்கிரமிப்பு இடத்தில் இருந்த கொடி மரம் அகற்ற வந்த நிலையில் கொடி மரத்தை அகற்ற அப்பகுதி விசிகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் விசிகவினர் போலீசாரிடமிடையே வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது விசிக நிர்வாகியை போலீசார் வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றி செல்ல முயன்ற போது அவரின் சட்டை கிழிந்ததாக கூறப்படுகிறது, இதில் போராட்டத்தின் போது பெண் ஒருவர் மயக்கமடைந்தார், பின்னர் கொடிமரம் அகற்ற எதிர்ப்பு தெரிவித்த விசிகவினர் பொது மக்கள் என 94 பேரை வாடிப்பட்டி போலீசார் கைது செய்து ஆண்டிபட்டி பங்களா பகுதியிலுள்ள தனியார் மண்டபத்தில் அனைவரையும் தங்க வைத்துள்ளனர். தவெக கூட்டணி கட்சியான விசிக கொடி கம்பம் அகற்றுவது தொடர்பாக விசிக போலீசாரிடமிடையே தள்ளுமுள்ளு வாக்குவாதம் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    1
    *மதுரை வாடிப்பட்டியருகே விசிக கொடிக்கம்பம் அகற்றம்* - *போலீசார் விசிகவினரிடையே* 
*தள்ளுமுள்ளு* - *விசிக நிர்வாகியை சட்டை கிழிந்த நிலையில் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு*

*மதுரை வாடிப்பட்டியருகே விசிக கொடிக்கம்பம் அகற்றம்* - *போலீசார் விசிகவினரிடையே* 
*தள்ளுமுள்ளு* - *விசிக நிர்வாகியை சட்டை கிழிந்த நிலையில் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு*
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள அய்யங்கோட்டை பகுதியில் 20 ஆண்டுகளுக்கு மேலாக விசிகவினர் அப்பகுதியில் கொடி மரம் அமைத்து பராமரித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் விசிக கொடி கம்பம் அருகே புதிய தமிழகம் கட்சி சார்பில் கொடி கம்பம் நடப்பட்டதாகவும், இதற்கு விசிக மற்றும் பொது மக்கள் சார்பில் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது 
இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரும் எனக் கூறி அப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் இணைந்து இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதில் இரு கொடி மரங்களையும் அகற்றுவது என வருவாய்த்துறையினர் முடிவு செய்து
இன்று நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் முன்னிலையில் ஆக்கிரமிப்பு இடத்தில் இருந்த கொடி மரம் அகற்ற வந்த நிலையில் கொடி மரத்தை அகற்ற அப்பகுதி விசிகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் விசிகவினர் போலீசாரிடமிடையே வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அப்போது விசிக நிர்வாகியை போலீசார் வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றி செல்ல முயன்ற போது அவரின் சட்டை கிழிந்ததாக கூறப்படுகிறது, இதில் போராட்டத்தின் போது   பெண் ஒருவர் மயக்கமடைந்தார்,
பின்னர் கொடிமரம் அகற்ற எதிர்ப்பு தெரிவித்த விசிகவினர் பொது மக்கள் என 94 பேரை வாடிப்பட்டி போலீசார் கைது செய்து ஆண்டிபட்டி பங்களா பகுதியிலுள்ள தனியார் மண்டபத்தில் அனைவரையும் தங்க வைத்துள்ளனர்.
தவெக கூட்டணி கட்சியான விசிக கொடி கம்பம் அகற்றுவது தொடர்பாக விசிக போலீசாரிடமிடையே தள்ளுமுள்ளு வாக்குவாதம் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    user_R.VIJAYA KUMAR
    R.VIJAYA KUMAR
    Salesperson மதுரை வடக்கு, மதுரை, தமிழ்நாடு•
    9 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.