கோயம்புத்தூர் வடக்கு தொகுதியில் நிலவும் சுகாதாரக் குறைபாடுகளுக்குத் தீர்வு காணக் கோரி, நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வெங்கடாபுரம் கோவில் மேடு பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய்கள் நெகிழி கழிவுகள் மற்றும் குப்பைகளால் முழுவதுமாக அடைக்கப்பட்டு இருப்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மழைக்காலங்களில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன், கொசுத்தொல்லையும் அதிகரித்து சுகாதாரப் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் நிலவுகிறது. இதனை உடனடியாக அகற்றி, கால்வாய்களை சுத்தம் செய்ய மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், கண்ணப்பன் நகர் பகுதியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கட்டப்பட்டுள்ள சுகாதார வளாகம் மற்றும் கழிப்பிடம் இதுவரை திறக்கப்படாமல் இருப்பதால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக, பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் இதன் காரணமாக பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்களின் அடிப்படை தேவையை கருத்தில் கொண்டு கண்ணப்பன் நகர் சுகாதார வளாகத்தை உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என்றும், தேவையான பராமரிப்பு மற்றும் குடிநீர் வசதிகளுடன் அதை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கோவை வடக்கு பகுதிகளில் நிலவும் இத்தகைய சுகாதாரப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். இந்த மனு அளிக்கும் நிகழ்வில், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன், சாய்பாபா காலனி மாவட்ட தலைவர் கையிரப்பன், தகவல் தொழில்நுட்ப பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் பிரவீன் குமார், இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஹரி பிரசாத் மற்றும் திருக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கோயம்புத்தூர் வடக்கு தொகுதியில் நிலவும் சுகாதாரக் குறைபாடுகளுக்குத் தீர்வு காணக் கோரி, நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வெங்கடாபுரம் கோவில் மேடு பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய்கள் நெகிழி கழிவுகள் மற்றும் குப்பைகளால் முழுவதுமாக அடைக்கப்பட்டு இருப்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மழைக்காலங்களில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன், கொசுத்தொல்லையும் அதிகரித்து சுகாதாரப் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் நிலவுகிறது. இதனை உடனடியாக அகற்றி, கால்வாய்களை சுத்தம் செய்ய மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், கண்ணப்பன் நகர் பகுதியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கட்டப்பட்டுள்ள சுகாதார வளாகம் மற்றும் கழிப்பிடம் இதுவரை திறக்கப்படாமல் இருப்பதால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக, பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள்
இதன் காரணமாக பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்களின் அடிப்படை தேவையை கருத்தில் கொண்டு கண்ணப்பன் நகர் சுகாதார வளாகத்தை உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என்றும், தேவையான பராமரிப்பு மற்றும் குடிநீர் வசதிகளுடன் அதை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கோவை வடக்கு பகுதிகளில் நிலவும் இத்தகைய சுகாதாரப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். இந்த மனு அளிக்கும் நிகழ்வில், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன், சாய்பாபா காலனி மாவட்ட தலைவர் கையிரப்பன், தகவல் தொழில்நுட்ப பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் பிரவீன் குமார், இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஹரி பிரசாத் மற்றும் திருக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- கோயம்புத்தூர் வடக்கு தொகுதியில் நிலவும் சுகாதாரக் குறைபாடுகளுக்குத் தீர்வு காணக் கோரி, நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வெங்கடாபுரம் கோவில் மேடு பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய்கள் நெகிழி கழிவுகள் மற்றும் குப்பைகளால் முழுவதுமாக அடைக்கப்பட்டு இருப்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மழைக்காலங்களில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன், கொசுத்தொல்லையும் அதிகரித்து சுகாதாரப் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் நிலவுகிறது. இதனை உடனடியாக அகற்றி, கால்வாய்களை சுத்தம் செய்ய மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், கண்ணப்பன் நகர் பகுதியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கட்டப்பட்டுள்ள சுகாதார வளாகம் மற்றும் கழிப்பிடம் இதுவரை திறக்கப்படாமல் இருப்பதால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக, பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் இதன் காரணமாக பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்களின் அடிப்படை தேவையை கருத்தில் கொண்டு கண்ணப்பன் நகர் சுகாதார வளாகத்தை உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என்றும், தேவையான பராமரிப்பு மற்றும் குடிநீர் வசதிகளுடன் அதை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கோவை வடக்கு பகுதிகளில் நிலவும் இத்தகைய சுகாதாரப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். இந்த மனு அளிக்கும் நிகழ்வில், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன், சாய்பாபா காலனி மாவட்ட தலைவர் கையிரப்பன், தகவல் தொழில்நுட்ப பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் பிரவீன் குமார், இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஹரி பிரசாத் மற்றும் திருக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.2
- காங்கயம் நகராட்சிக்குட்பட்ட ஆறாவது வார்டில் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதால், அப்பகுதி மக்கள் கடுமையான சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இந்த மோசமான சாலைகள் காரணமாக அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன. பொதுமக்கள் தங்களின் அன்றாடப் பயணங்களுக்கு பெரும் இன்னல்களை எதிர்கொண்டு வருவதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- ராஜராஜ சோழனின் பொற்காலம் எப்படி இருந்திருக்கும் என்பது குறித்து ஆர்வமுள்ளவர்களுக்கு ஒரு காணொலிப் பதிவு பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோ பதிவை தவறாமல் பார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.1
- தேனி மாவட்டம், பெரியகுளம் தென்கரை தெற்கு அக்ரஹாரப் பகுதியில், இரவு நேரத்தில் கடைக்குச் சென்ற மதுரா என்ற பெண்மணியிடம் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு இளைஞர்கள் செயின் பறிக்க முயன்றனர். மதுரா சத்தமிட்டதால் மர்ம நபர்கள் தப்பியோடினர். இந்தச் சம்பவத்தில் கழுத்தில் காயமடைந்த மதுரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ராஜா என்பவரது மனைவி மதுரா, வீட்டின் அருகே உள்ள கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக சாலையோரமாக நடந்து சென்றுகொண்டிருந்தபோது, இந்தச் சம்பவம் நடந்தது. அப்போது திடீரென அவரது கழுத்தில் இருந்த தங்கச் செயினைப் பறிக்க முயன்றதால் அதிர்ச்சியடைந்த மதுரா, உடனடியாகச் சுதாரித்துக்கொண்டு தனது செயினைப் பலமாகப் பிடித்துக்கொண்டு சத்தமிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி பொதுமக்கள் ஓடி வந்ததைக் கண்ட மர்ம நபர்கள், தங்கள் இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பியோடினர். இச்சம்பவம் குறித்து பெரியகுளம் தென்கரை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாகச் சாலையில் நடந்து செல்லும் பெண்களிடம் செயின் பறிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. காவல்துறையினர் மாலை மற்றும் இரவு நேரங்களில் போதிய ரோந்துப் பணியில் ஈடுபடாததே இதற்குக் முக்கியக் காரணம் எனச் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அசம்பாவிதங்களைத் தடுக்க இனிமேலாவது ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது.1
- தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சியில் ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பேரூராட்சியின் 18 வார்டுகளில் இருந்து தினசரி குவியும் குப்பைகள் ஆண்டிபட்டி சுடுகாடு அருகே சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் கொட்டப்பட்டு வருகின்றன. தற்போது இந்தக் குப்பை கிடங்கில் சுமார் 15 அடி உயரத்திற்குக் குப்பைகள் குவிந்து மலைபோல் காட்சியளிக்கின்றன. ஆரம்பத்தில் குப்பை கிடங்குகள் அமைந்துள்ள இடத்தைச் சுற்றிலும் குடியிருப்புகள் எதுவும் இல்லாத நிலையில், தற்போது அந்தப் பகுதி முழுவதும் குடியிருப்புப் பகுதியாக மாறி உள்ளது. அரசு அறிவித்தபடி குப்பைகள் தரம் பிரிக்கப்படாமல் அனைத்து வகைக் குப்பைகளையும் ஒரே இடத்தில் குவித்து தீவைப்பதால், அப்பகுதியில் எந்த நேரமும் புகைமூட்டமாகவும் துர்நாற்றமாகவும் உள்ளது. இதனால் இந்தக் குப்பை கிடங்கை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் எனப் பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இதுவரை குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அதே பகுதியில் தொடர்ந்து குப்பைகள் குவிக்கப்பட்டு வருகின்றன. பல ஆண்டுகளாக குப்பைகள் குவிந்துள்ளதால் நிலத்தடி நீரும் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. குப்பை கிடங்கைச் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணறுகளில் வரும் தண்ணீர் மஞ்சள் நிறமாக மாறி உள்ளது. குடிப்பதற்கும் சுத்திகரிப்பு செய்வதற்கும் வழி இல்லாததால் இந்தத் தண்ணீரைப் பயன்படுத்த முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். ஆண்டிப்பட்டி குப்பை கிடங்கால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு, நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டுள்ளதால், தமிழக அரசு அலட்சியம் காட்டாமல் உடனடியாகக் குவிந்திருக்கும் குப்பைகளை வேறு பகுதிக்கு எடுத்துச் செல்லவும், ஆண்டிப்பட்டி நகரின் ஒதுக்குப்புறத்தில் ஒரு புதிய குப்பை கிடங்கை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.3
- 👬👩❤️💋👨 ஆவதும் பெண்ணாலே🌹அழிவதும் பெண்ணாலே 👍💞👩❤️💋👨1
- திண்டுக்கல் மாவட்டத்தில் தற்காலிக விளம்பர பதாகைகள் (பிளக்ஸ் போர்டுகள்) வைப்பதற்கு மீண்டும் அனுமதி வழங்கக் கோரி, திண்டுக்கல் மாவட்ட டிஜிட்டல் பிளக்ஸ் பிரிண்டிங் நலச்சங்கம் மற்றும் அமைப்பாளர்கள் நலச்சங்கத்தினர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்துகொண்ட சங்கத்தைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்த மனுவை சமர்ப்பித்தனர். பிளக்ஸ் தொழிலை நம்பி வாழும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர்.1
- கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே இன்று காலை ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக வந்த தகவலை அடுத்து, பொதுமக்கள் சுமார் 50 மூட்டை ரேஷன் அரிசியுடன் வந்த மினி லாரி ஒன்றை பிடித்து நிறுத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. காலை 7 மணியளவில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை எதிரே நின்று கொண்டிருந்த இந்த லாரியை அப்பகுதியை சேர்ந்தவர்களும், தி.மு.க. நிர்வாகிகளும் விரைந்து சென்று பிடித்தனர். லாரியில் இருந்து மூன்று பேர் தப்பி ஓடியதாகவும், அவர்களை பிடிக்க முயற்சித்தும் அவர்கள் தப்பிச் சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த 54-வது வார்டு கொங்கு மக்கள் தேசிய கட்சியை சேர்ந்த மாமன்ற உறுப்பினர் பாக்கியம் தனபால் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டார். பிடிபட்ட லாரி மற்றும் ரேஷன் அரிசி தொடர்பாக அதிகாரிகள் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடிய நபர்கள் யார், ரேஷன் அரிசி எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்பது குறித்து அங்கிருந்த சி.சி.டி.வி. காட்சிகளைக் கொண்டு அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.1