Shuru
Apke Nagar Ki App…
இசை மழை..................................... ..
NAMADHU ARASU(Krishna M Com)
இசை மழை..................................... ..
More news from தமிழ்நாடு and nearby areas
- சின்னங்கள் பொருத்தும் பணியை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டார். தமிழ்நாடு முழுவதும் சட்டமன்ற தேர்தல் வருகிற 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு தேர்தல் ஆணையம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி வருகின்றனர் .அதன் ஒரு பகுதியாக ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணி இன்று துவங்கி நடைபெற்று வருகிறது. புவனகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சின்னம் பொருத்தம் பணியை கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது புவனகிரி சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் தங்கமணி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.மேலும் புவனகிரி சட்டமன்றத் தொகுதிக்கு 13 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில் 304 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது1
- கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை பகுதியில் உள்ள கரியாலூர் கிராமத்தில் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் இரா.ராகேஷ் அவர்கள் வாக்கு சேகரிப்பிற்காக கிராமத்துக்கு வந்தபோது, அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.பெண்கள் மஞ்சள் நீர் எடுத்தும், பொதுமக்கள் மாலை அணிவித்தும் பாரம்பரிய முறையில் அவரை வரவேற்றனர்.மேலும்,மேலதாளம் ஒலிக்கையில் நடைபெற்ற இந்த வரவேற்பு நிகழ்ச்சி அங்கு திருவிழா போன்ற சூழலை ஏற்படுத்தியது. இதனையடுத்து,இரா. ராகேஷ் அவர்கள் பொதுமக்களிடம் நேரடியாக சந்தித்து ஆதரவு கோரி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.1
- ஊத்தங்கரை திமுகவினர் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம். ஊத்தங்கரை திமுக வடக்கு ஒன்றிய அலுவலகம் முன்பு தொகுதி மறுசீரமைப்பு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். மத்திய அரசு கொண்டுவரவுள்ள தொகுதி மறுசீரமைப்பு சட்டத்தைக் கண்டித்து, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக முதல்வர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, தொகுதி மறுசீரமைப்பு சட்டத்தைக் கைவிடக் கோரியும், அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் வீடுகள் தோறும் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன் ஒரு பகுதியாக, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ஊத்தங்கரை வடக்கு ஒன்றிய அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. வடக்கு ஒன்றிய செயலாளர் குமரேசன் போராட்டத்திற்குத் தலைமை தாங்கினார். அப்போது வடக்கு ஒன்றிய அலுவலகத்தில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டு, மத்திய அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்கள் எழுப்பினர். இப்போராட்டத்தின் உச்சகட்டமாக, தொகுதி மறுசீரமைப்பு சட்டத்தின் நகலை தீயிட்டு எரித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்வில் திமுக நிர்வாகிகள், பலர் கலந்துகொண்டு, தமிழகத்தின் உரிமைகளைப் பறிக்கும் இந்த சட்டத்தை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினர்.1
- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளர் புகைப்படம் மற்றும் சின்னங்கள் கூடிய வாக்கு சீட்டுகளை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தும் பணி பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.. இப்பணியினை தஞ்சை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான பிரியங்கா பங்கஜம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.. ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், பாபநாசம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரன், பாபநாசம் வட்டாட்சியர் சந்தனவேல், ஒருங்கிணைப்பு அலுவலர் குமார் உட்பட அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.1
- இராசிபுரம் வட்டம் அத்தனூர் பேரூரில் உள்ள பொதுமக்களிடத்தில் திமுக, தேதிமுக, விடுதலை சிறுத்தை கட்சிகள் சார்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள், செயலாளர்கள் டூவீலர் பேரணியாகச் சென்று ராசிபுரம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் டாக்டர் மதிவேந்தன் அவர்களை ஆதரித்து உதயசூரிய சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வாய்ப்பு கேட்டு ஊர்வலம் பேரணி நடைபெற்று வருகின்றன1
- எங்கள் பழைய காலனி தெருவில் மின் விளக்கு இல்லலதா காரணத்தால் விஷம் உள்ள பாம்பு பூச்சி அழைக்கின்றனா மக்கள் இரவில் பெரும் அவதிக்கு உள்ளகிறார்1
- Post by பெரியசாமி1
- திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக சார்பில் போட்டியிடும் மமக வேட்பாளர் ப.அப்துல் சமதுவை ஆதரித்து அமைச்சர் கே.என்.நேரு பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதற்கு முன்னதாக மணப்பாறை பொத்தமேட்டுபட்டியில் திமுக நிர்வாகி ஜேம்ஸ் ஏற்பாட்டில் இசை நிகழ்ச்சி மூலம் பிரச்சாரம் நடைபெற்றது.1
- புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள கோனாபட்டில் திருமயம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளரும் இயற்கை வளங்கள் துறை அமைச்சருமான ரகுபதியை ஆதரித்து இன்று இரவு அவருக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்குகளை கேட்டு முன்னாள் மத்திய நிதி அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரம் பேசினார்.உடன் திமுக கழகநிர்வாகிகளும் கூட்டணி கட்சியினரும் உள்ளனர்.1