Shuru
Apke Nagar Ki App…
கறம்பக்குடியில் சமூக நல விடுதி கல்லூரி மாணவிகள் சாலை மறியல் போராட்டம் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மருதன்கோன்விடுதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மாணவர் விடுதியில் சமூக நல விடுதியில் கால அட்டவணையில் கொடுக்க வேண்டிய உணவினை வழங்காமல் மாறி மாறி உணவு வழங்குவதாகவும் உணவு தரம் குறைந்து பழு பூச்சியாகா உள்ளதாக கூறி கல்லூரி மாணவிகள் கறம்பக்குடி தஞ்சை சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Prabaharan Reporter
கறம்பக்குடியில் சமூக நல விடுதி கல்லூரி மாணவிகள் சாலை மறியல் போராட்டம் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மருதன்கோன்விடுதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மாணவர் விடுதியில் சமூக நல விடுதியில் கால அட்டவணையில் கொடுக்க வேண்டிய உணவினை வழங்காமல் மாறி மாறி உணவு வழங்குவதாகவும் உணவு தரம் குறைந்து பழு பூச்சியாகா உள்ளதாக கூறி கல்லூரி மாணவிகள் கறம்பக்குடி தஞ்சை சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக அமைச்சர் எஸ். ரகுபதி போட்டியிடுகின்றார். இதனை அடுத்து திருமயம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பிரச்சார பணி மேற்கொண்டு வரும் அவர், இன்று பொன்னமராவதி அருகே திருமயம் அருகே உள்ள குறிச்சிபட்டி பகுதியில் தமிழக அரசின் நலத்திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தார்.1
- நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை வட்டம் உத்திரங்குடியில் ஸ்ரீ கம்ப காமாட்சியம்மன் ஆலயத்தில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் விரதமிருந்து பால்காவடி, செடில்| காவடி,மயில் காவடி, அலகு காவடி எடுத்து வந்து வேண்டுதலை நிறைவேற்றினர்.இரவு சுவாமி வீதி உலா கட்சி வெகு விமர்சையாக நடைப்பெற்றது.1
- தவெக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் மற்றும் மணப்பாறை சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளர் R.கதிரவன் அறிவுறுத்திலின் படி மாவட்ட செயற்குழு உறுப்பினர் VP.துரை அவர்களின் முன்னிலையிலும் பொன்னம்பட்டி பேரூர் கழகச் செயலாளர் P.சங்கர பாண்டியன் தலைமையில் மற்றும் வார்டு செயலாளர் தவ்ஃபீக் பேரூர் கழக நிர்வாகிகள் முகமது ஆசிக் அசரப் அலி பாஸ்கரன் ஹரி பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலையில் நேற்று மாலை முதல் இரவு வரை அனைத்து வீடுகளிலும் பிரச்சாரம் செய்யப்பட்டது. இதில் உடன் கிளை கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் பலர் கலந்து கொண்டனர்.1
- மணப்பாறை அருகே திடீரென சில கோரிக்கைகளை செய்து கொடுக்க கூறி திமுக வேட்பாளர் காலில் விழுந்த நபரால் பரபரப்பு திருச்சி மாவட்டம், மணப்பாறை தொகுதி, வையம்பட்டி ஒன்றியபகுதிகளில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் அப்துல் சமது வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். ஆனாங்கரைப்பட்டியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது அங்கிருந்த மக்கள் சிலர் தங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்று கூறி முறையிட்டனர். அப்போது அங்கிருந்த ஒருவர் திடீரென சாலை வசதி இல்லை, குடிநீர் வசதி இல்லை, ஜெயிச்சுட்டு போய் 5 வருடமா செஞ்சு தரவில்லை என்று கூறி எம்எல்ஏ காலில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.1
- நாகை மாவட்டம் திருக்குவளை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி சார்பில், நாட்டு நலப் பணித்திட்ட சிறப்பு முகாமின் ஒரு பகுதியாக வாக்காளர் விழிப்புணர்வு பேரணி இன்று சிறப்பாக நடைபெற்றது.கல்லூரி புலமுதல்வர் அ.கலைச்செல்வன் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். கல்லூரி அனைத்து துறைத் தலைவர்களும் முன்னிலை வகித்தனர்.கல்லூரி வளாகத்தில் தொடங்கிய பேரணி, நகரின் முக்கிய பகுதிகளான கடைவீதி மற்றும் காவல் நிலையம் வழியாக சென்று வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது.பேரணியில் கலந்து கொண்ட மாணவர்கள்,வாக்குரிமை ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை என்பதை வலியுறுத்தி பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நல்ல தலைவரை தேர்வு செய்வது நாட்டின் முன்னேற்றத்திற்கு முக்கியம் என்பதையும் எடுத்துரைத்தனர்.மேலும், வாக்குகளை விற்காதீர் ஜனநாயகத்தை பாதுகாப்போம் என்ற கோஷங்களுடன் பொதுமக்களிடம் உற்சாகமாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் க.ஸ்ரீதர் செய்திருந்தார்.இந்த பேரணியில் ஊராட்சி செயலர் சரவணபெருமாள், கிராம நிர்வாக அலுவலர் குமார், முதல் நிலைக் காவலர் பாபு ஜெகஜீவன், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.1
- Post by ஆ.கார்த்திக் (P F H R.)1
- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகர் அருணகிரி பட்டணம் பகுதியில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் மருத்துவர் பிரபு பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார், முன்னதாக ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு பின்னர் அங்கு கூடியிருந்த போது மக்களிடம் சிறப்புரையாற்றி வாக்கு சேகரித்தார் பெண்கள் உட்பட ஏராளமானூர் கலந்து கொண்டனர்.1
- புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ். ரகுபதி போட்டியிடுகின்றார். இதனை அடுத்து திருமயம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பிரச்சார பணி மேற்கொண்டு வரும் அவர், இன்று திருமயம் அருகே உள்ள வடக்கிப்பட்டி பகுதியில் திமுக அரசின் நலத்திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்து கூறி வாக்கு சேகரித்தார்.1