சிவகங்கையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் சிவகங்கை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கருணாஸ், காளையார் கோவில் தெற்கு ஒன்றியத்தில் , பெரியகண்ணணூர் கிராம பொதுமக்களிடம் வாக்குசேகரித்தார், பெரியகண்ணனூரில் திமுக முக்கிய பிரமுகரான வழக்கறிஞர் ஆசைத்தம்பி தலைமையில், கிராம மக்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர், வேட்பாளருக்கு பிரம்மாண்ட மாலை வெங்கல வாள் , சால்வைகள் அணிவித்து உற்சாக வரவேற்பளித்தனர். கிராம மக்களின் எழுச்சியான வரவேற்பை ஏற்றுக் கொண்ட கருணாஸ் மாட்டு வண்டியில் ஏறி பெரியகண்ணனூர் கிராமத்தில் சுற்றி வந்து வாக்கு சேகரித்தார், பின்னர் அவர்களிடம் பேசும் பொழுது இந்தத் தொகுதியில் போட்டியிட முதலமைச்சர் வாய்ப்பளித்ததை வாழ்நாள் பாக்கியமாக கருதுகிறேன், பாசிச சித்தாந்ததின் மூலம் மதத்தின்பால் பிளவு படுத்தி தமிழகத்தில் நுழைய வரும் பாரதிய ஜனதா கட்சி, அதிமுகவை வீழ்த்த இந்த தேர்தலில் தனக்கு வாக்களித்து என்னை தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் சட்டமன்ற முதல் கூட்டத்திலே முதல்வரிடம் சிவகங்கை தொகுதியில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெருக்கிட 4 தொழிற்சாலைகள் அமைக்க பாடுபடுவேன் என்று உறுதி அளித்தார் . தமிழக முதல்வரின் எண்ணற்ற திட்டங்களை எடுத்து கூறி வாக்கு சேகரித்த கருணாஸ், இந்த தொகுதியின் மேம்பாட்டுக்கு திட்டங்களுக்கு சட்டமன்றத்தில் உங்கள் குரலாக ஒழித்து உங்களுக்காக பாடுபடுவேன் என்று கிராம மக்களிடம் உறுதியளித்தார்.

- காரைக்குடி சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற* *முற்போக்கு கூட்டணி இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளர்* எஸ்.மாங்குடி அவர்களை ஆதரித்து தேவகோட்டை அண்ணா அரங்கில் தேர்தல் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் எம்பி ,சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம்,திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுசெயலாளர் சுப.வீரபாண்டியன்,முன்னாள் அமைச்சர் தென்னவன்,திமுக மாவட்ட துணைச்செயலாளர் ஜோன்ஸ் ரூசோ ,நகர செயலாளர் பெரி.பாலமுருகன்,காங்கிரஸ் கட்சி நகர தலைவர் சஞ்சய் ,திமுக மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் நாகனி செந்தில்குமார் மற்றும் ஒன்றிய,நகர செயலாளர்கள்,திமுக ,காங்கிரஸ்,தேமுதிக , எஸ் டி பி ஐ,விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் நிர்வாகிகள் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.1
- சிவகங்கை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, சிவகங்கை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் நேற்று நடைபெற்ற சோதனையில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.37 லட்சத்து 32 ஆயிரத்து 257 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. நிர்வாக மாஜிஸ்திரேட் மற்றும் பறக்கும் படைத் தலைவர் கோ.சந்தன பெருமாள் தலைமையிலான குழுவினர் நடத்திய சோதனையில், A.சரவணக்குமார் என்பவரிடமிருந்து இந்தப் பணம் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கப் பணம் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஆவணங்கள் முத்திரையிடப்பட்ட பையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, சிவகங்கை சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. மேலும், பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கான உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, 7 நாட்களுக்குள் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மேல்முறையீடு செய்யலாம் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்த சம்பவம் சிவகங்கை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.1
- அதன் ஒரு பகுதியாக, இன்று திருச்சுழி ஒன்றியத்திற்கு உட்பட்ட ம.லட்சுமிபுரம், ம.ரெட்டியாபட்டி, புதூர், சிலுக்கப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமப்பகுதிகளில் நேரில் சென்று மக்களுடன் சந்தித்து வாக்கு சேகரித்தார். ஒவ்வொரு கிராமத்திலும் மக்களை நேரடியாக சந்தித்து, அரசு மேற்கொண்ட நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து விளக்கினார். மேலும், எதிர்காலத்தில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள புதிய திட்டங்களையும் பொதுமக்களிடம் பகிர்ந்து, ஆதரவை கோரினார். பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் பிரச்சனைகளையும் கவனமாக கேட்டு, அவற்றை தீர்க்க உறுதி அளித்தார். அவரது வருகையையொட்டி பல இடங்களில் உற்சாகமான வரவேற்பு காணப்பட்டது. பெண்கள் ஆரத்தி எடுத்தும், இளைஞர்கள் மலர்மாலை அணிவித்தும் அவரை வரவேற்றனர். சில இடங்களில் உள்ளூர் மக்கள் கூட்டம் திரண்டு, உற்சாக கோஷங்களை எழுப்பி தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர். இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்வில் கட்சி நிர்வாகிகள், உள்ளூர் நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் பலரும் கலந்து கொண்டு, வீடு தோறும் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதனால் திருச்சுழி தொகுதியில் தேர்தல் சூழல் மேலும் சூடுபிடித்துள்ளது.1
- தமிழக சட்டமன்ற தேர்தலில் முன்னிட்டு தேர்தல் அமைதியான முறையில் நடைபெறவும் 100 சதவீதம் வாக்கு பதிவை வலியுறுத்தியும் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் மதுரை மாநகர் காவல் துறையின் சார்பில் மதுரை காவல்துறை காவலர்கள் மற்றும் குஜராத் மாநில ஆயுதப்படை போலீசார், மத்திய துணை ராணுவ படையினர் இணைந்து இன்று (ஏப்.19) மாலை தெற்கு வாசல் உதவி காவல் ஆணையர் சந்திரலேகா தலைமையில் தெற்கு வாசல் பகுதியில் உள்ள முக்கிய தெருக்களில் கொடி அணிவகுப்பு ஊர்வலத்தை நடத்தினார்கள்.1
- புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக லட்சுமி சீனிவாசன் போட்டியிடுகிறார். இதனைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் பிரச்சாரப் பணியை மேற்கொண்டு வரும் அவர் இன்று (19.4.2026) திருமயம் பேருந்து நிலையம் அருகே தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். உடன் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் உள்ளனர்.1
- Post by P.G.m Paintings1
- வரும் நாள் 23/ 04/2026/அன்று தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தடையின்றி மின்சாரம் வழங்குவதற்காகவும், இடையூறின்றி தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெறவும், திண்டுக்கல் மாவட்டம் சித்தையன் கோட்டை பகுதியில் மின்பாதையில் மின் வயர்களுக்கு இடையூறாகவும் உராய்வு ஏற்படும் வகையிலும் உள்ள மரக்கிளைகளை வெட்டி அகற்றும் பணியில் மின்வாரிய பணியாளர்கள் ஈடுபட்டனர்.1
- சிவகங்கையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் சிவகங்கை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கருணாஸ், காளையார் கோவில் தெற்கு ஒன்றியத்தில் , பெரியகண்ணணூர் கிராம பொதுமக்களிடம் வாக்குசேகரித்தார், பெரியகண்ணனூரில் திமுக முக்கிய பிரமுகரான வழக்கறிஞர் ஆசைத்தம்பி தலைமையில், கிராம மக்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர், வேட்பாளருக்கு பிரம்மாண்ட மாலை வெங்கல வாள் , சால்வைகள் அணிவித்து உற்சாக வரவேற்பளித்தனர். கிராம மக்களின் எழுச்சியான வரவேற்பை ஏற்றுக் கொண்ட கருணாஸ் மாட்டு வண்டியில் ஏறி பெரியகண்ணனூர் கிராமத்தில் சுற்றி வந்து வாக்கு சேகரித்தார், பின்னர் அவர்களிடம் பேசும் பொழுது இந்தத் தொகுதியில் போட்டியிட முதலமைச்சர் வாய்ப்பளித்ததை வாழ்நாள் பாக்கியமாக கருதுகிறேன், பாசிச சித்தாந்ததின் மூலம் மதத்தின்பால் பிளவு படுத்தி தமிழகத்தில் நுழைய வரும் பாரதிய ஜனதா கட்சி, அதிமுகவை வீழ்த்த இந்த தேர்தலில் தனக்கு வாக்களித்து என்னை தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் சட்டமன்ற முதல் கூட்டத்திலே முதல்வரிடம் சிவகங்கை தொகுதியில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெருக்கிட 4 தொழிற்சாலைகள் அமைக்க பாடுபடுவேன் என்று உறுதி அளித்தார் . தமிழக முதல்வரின் எண்ணற்ற திட்டங்களை எடுத்து கூறி வாக்கு சேகரித்த கருணாஸ், இந்த தொகுதியின் மேம்பாட்டுக்கு திட்டங்களுக்கு சட்டமன்றத்தில் உங்கள் குரலாக ஒழித்து உங்களுக்காக பாடுபடுவேன் என்று கிராம மக்களிடம் உறுதியளித்தார்.1