தேவகோட்டையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மாபெரும் தேர்தல் பரப்பரை கூட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற* *முற்போக்கு கூட்டணி இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளர்* எஸ்.மாங்குடி அவர்களை ஆதரித்து தேவகோட்டை அண்ணா அரங்கில் தேர்தல் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் எம்பி ,சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம்,திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுசெயலாளர் சுப.வீரபாண்டியன்,முன்னாள் அமைச்சர் தென்னவன்,திமுக மாவட்ட துணைச்செயலாளர் ஜோன்ஸ் ரூசோ ,நகர செயலாளர் பெரி.பாலமுருகன்,காங்கிரஸ் கட்சி நகர தலைவர் சஞ்சய் ,திமுக மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் நாகனி செந்தில்குமார் மற்றும் ஒன்றிய,நகர செயலாளர்கள்,திமுக ,காங்கிரஸ்,தேமுதிக , எஸ் டி பி ஐ,விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் நிர்வாகிகள் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தேவகோட்டையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மாபெரும் தேர்தல் பரப்பரை கூட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற* *முற்போக்கு கூட்டணி இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளர்* எஸ்.மாங்குடி அவர்களை ஆதரித்து தேவகோட்டை அண்ணா அரங்கில் தேர்தல் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் எம்பி ,சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம்,திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுசெயலாளர் சுப.வீரபாண்டியன்,முன்னாள் அமைச்சர் தென்னவன்,திமுக மாவட்ட துணைச்செயலாளர் ஜோன்ஸ் ரூசோ ,நகர செயலாளர் பெரி.பாலமுருகன்,காங்கிரஸ் கட்சி நகர தலைவர் சஞ்சய் ,திமுக மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் நாகனி செந்தில்குமார் மற்றும் ஒன்றிய,நகர செயலாளர்கள்,திமுக ,காங்கிரஸ்,தேமுதிக , எஸ் டி பி ஐ,விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் நிர்வாகிகள் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு இன்று (ஏப்.19) காலை கோவிலில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள், கோவில் அறங்காவலர் குழு தலைவர் , குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட கோயில் நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.1
- திருமயம் ஊராட்சியில் வாக்கு சேகரிப்பு பணி சூடு பிடித்துள்ளது. அந்த வகையில், திருமயம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ரகுபதிக்கு ஆதரவாக நேற்று திருமயம் அருகே உள்ள மெய்யபுரத்தில் மகளிர் அணியினர் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இந்நிகழ்வில், மகளிர் அணியினர் ஏராளமானோர் கலந்துகொண்டு வாக்கு சேகரித்தனர்.1
- மணப்பாறை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பன்னாங்கொம்பு பகுதியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திமுக கூட்டணி கட்சி மமக வேட்பாளர் ப.அப்துல் சமது உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பு.2
- மணப்பாறையில் அமைந்துள்ள மாரியம்மன் கோயிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குத்துவிளக்கு பூஜையுடன் சித்திரை மாத திருவிழா துவங்கியது. இந்த திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான பூச்சொரிதல் நிகழ்ச்சி வரும் (ஏப்- 26) அன்று நடைபெற உள்ளது. இதில் மணப்பாறை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் தவறாமல் கலந்து கொள்ள கோவில் அறங்காவலர் ஆர்விஎஸ். மணி அறிவுறுத்தியுள்ளார்.1
- ஆண்டிப்பட்டி அருகே உள்ள நாச்சியார் புரம் கிராமத்தில் இன்று ஆண்டிப்பட்டி திமுக வேட்பாளர் மகாராஜன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது கிராம மக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அவருக்கு மேளதாளம் முழங்க கிரேன் மூலம் மாலை அணிவித்தும் வால் கொடுத்தும் வரவேற்பு அளித்தனர். இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.1
- தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தொகுதியின் தமிழக வெற்றி கழகம் சார்பாக சபரி என்பவர் போட்டியிடுகிறார் இவர் தற்போது சட்டமன்ற தொகுதி முழுவதும் பொது மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் இந்நிலையில் இன்று பெரியகுளம் பகுதியில் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிக்க வந்த தமிழக வெற்றிக்கழக நிர்வாகி பள்ளிக்குச் செல்லும் மாணவர்களுக்கு கையில் கொடிகளை கொடுத்து சாலையில் நிக்க வச்சு தனது பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார் தொடர்ந்து இவர் பள்ளி சிறுவர்களை பிரச்சாரக் கூட்டங்களில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர் இதனால் பள்ளி மாணவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது மேலும் சாலைகளில் வேட்பாளரை வரவேற்பதற்காக நிர்வாகிகள் கலர் பேப்பர்களை தூவி வரவேற்பதால் சாலை முழுவதும் குப்பை காடாக மாறி உள்ளது தொடர்ந்து தேர்தல் விதிகளை மீறி செயல்பட்டு வரும் தமிழக வெற்றிக்காக நிர்வாகியின் மீது ஏன் தேர்தல் அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகிறேன் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்1
- மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம் இன்று (ஏப்.19) நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள நடிகை குஷ்பு கோவிலுக்கு வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களை கோவில் நிர்வாகம் அனுமதிப்பதில்லை என்று குஷ்புவிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு இதுகுறித்த ரூல்ஸ் தெரியவில்லை. விவரம் தெரியாமல் ஏதும் சொல்லக்கூடாது. ரூல்ஸ் தெரிந்த பின்பு அதற்கான விளக்கத்தை அளிப்பதாக கூறி கோயிலுக்குள் சென்றார்.1
- மணப்பாறை தொகுதியில் தவெக சார்பில் விசில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஆர். கதிரவன் நேற்று இரவு மணப்பாறை அடுத்த அனியாப்பூர் அருகே என்.பூலாம்பட்டியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து பரப்புரை ஆற்றி வாக்குகள் சேகரித்தனர். இந்த நிகழ்வில் இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நல்ல வரவேற்பு அளித்தனர். இதில் இப்பகுதியை சேர்ந்த ஏராளமான தவெகவினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.1
- சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் நிறைவுபெற இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் களத்தில் உள்ள வேட்பாளர்கள் தங்கள் சுழன்று சுழன்று சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் டாக்டர். விஜயகுமார், இன்று மாலை மணப்பாறை நகர பகுதிகளில் வீதிவீதியாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பேருந்து நிலையம், மாரியம்மன் கோவில், அண்ணாவிநகர், எட்டுத் தெரு, காமராஜர்சிலை, காந்திநகர், சேதுரெத்தினபுரம், ராஜீவ் நகர், முத்தன் தெரு பாத்திமா மலை, சந்தியாகுபுரம் உள்ளிட்ட நகரின் அனைத்து பகுதிகளுக்கும் வீதிவீதியாகச் சென்று வாக்கு சேகரித்தார். வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்தும், சால்வை அணிவித்தும் வரவேற்றனர். பிரச்சாரத்தின்போது வேட்பாளர் டாக்டர்.விஜயகுமார் பேசுகையில், மணப்பாறை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வெளிவட்ட சுற்றுசாலை, காவிரி குடிநீர் தங்குதடையின்றி கிடைக்க நடவடிக்கை, விபத்துகளை குறைக்க பறக்கும் சாலை, நகரில் பாதாள சாக்கடை அமைத்து சுகாதாரத்தை பேணி காப்பேன் எனவும் வாக்குறுதி அளித்தார். வேட்பாளருடன் கூட்டணி கட்சியினர் இருசக்கர வாகனத்தில் பேரணியாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.1