பெரியகுளம் பகுதியில் பிரச்சாரக் கூட்டங்களில் சிறுவர்களை பயன்படுத்தும் தமிழக வெற்றிக்காக வேட்பாளர் தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தொகுதியின் தமிழக வெற்றி கழகம் சார்பாக சபரி என்பவர் போட்டியிடுகிறார் இவர் தற்போது சட்டமன்ற தொகுதி முழுவதும் பொது மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் இந்நிலையில் இன்று பெரியகுளம் பகுதியில் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிக்க வந்த தமிழக வெற்றிக்கழக நிர்வாகி பள்ளிக்குச் செல்லும் மாணவர்களுக்கு கையில் கொடிகளை கொடுத்து சாலையில் நிக்க வச்சு தனது பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார் தொடர்ந்து இவர் பள்ளி சிறுவர்களை பிரச்சாரக் கூட்டங்களில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர் இதனால் பள்ளி மாணவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது மேலும் சாலைகளில் வேட்பாளரை வரவேற்பதற்காக நிர்வாகிகள் கலர் பேப்பர்களை தூவி வரவேற்பதால் சாலை முழுவதும் குப்பை காடாக மாறி உள்ளது தொடர்ந்து தேர்தல் விதிகளை மீறி செயல்பட்டு வரும் தமிழக வெற்றிக்காக நிர்வாகியின் மீது ஏன் தேர்தல் அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகிறேன் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்
பெரியகுளம் பகுதியில் பிரச்சாரக் கூட்டங்களில் சிறுவர்களை பயன்படுத்தும் தமிழக வெற்றிக்காக வேட்பாளர் தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தொகுதியின் தமிழக வெற்றி கழகம் சார்பாக சபரி என்பவர் போட்டியிடுகிறார் இவர் தற்போது சட்டமன்ற தொகுதி முழுவதும் பொது மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் இந்நிலையில் இன்று பெரியகுளம் பகுதியில் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிக்க வந்த தமிழக வெற்றிக்கழக நிர்வாகி பள்ளிக்குச் செல்லும் மாணவர்களுக்கு கையில் கொடிகளை கொடுத்து சாலையில் நிக்க வச்சு தனது பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார் தொடர்ந்து இவர் பள்ளி சிறுவர்களை பிரச்சாரக் கூட்டங்களில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர் இதனால் பள்ளி மாணவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது மேலும் சாலைகளில் வேட்பாளரை வரவேற்பதற்காக நிர்வாகிகள் கலர் பேப்பர்களை தூவி வரவேற்பதால் சாலை முழுவதும் குப்பை காடாக மாறி உள்ளது தொடர்ந்து தேர்தல் விதிகளை மீறி செயல்பட்டு வரும் தமிழக வெற்றிக்காக நிர்வாகியின் மீது ஏன் தேர்தல் அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகிறேன் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்
- மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு இன்று (ஏப்.19) காலை கோவிலில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள், கோவில் அறங்காவலர் குழு தலைவர் , குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட கோயில் நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.1
- அதன் ஒரு பகுதியாக, இன்று திருச்சுழி ஒன்றியத்திற்கு உட்பட்ட ம.லட்சுமிபுரம், ம.ரெட்டியாபட்டி, புதூர், சிலுக்கப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமப்பகுதிகளில் நேரில் சென்று மக்களுடன் சந்தித்து வாக்கு சேகரித்தார். ஒவ்வொரு கிராமத்திலும் மக்களை நேரடியாக சந்தித்து, அரசு மேற்கொண்ட நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து விளக்கினார். மேலும், எதிர்காலத்தில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள புதிய திட்டங்களையும் பொதுமக்களிடம் பகிர்ந்து, ஆதரவை கோரினார். பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் பிரச்சனைகளையும் கவனமாக கேட்டு, அவற்றை தீர்க்க உறுதி அளித்தார். அவரது வருகையையொட்டி பல இடங்களில் உற்சாகமான வரவேற்பு காணப்பட்டது. பெண்கள் ஆரத்தி எடுத்தும், இளைஞர்கள் மலர்மாலை அணிவித்தும் அவரை வரவேற்றனர். சில இடங்களில் உள்ளூர் மக்கள் கூட்டம் திரண்டு, உற்சாக கோஷங்களை எழுப்பி தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர். இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்வில் கட்சி நிர்வாகிகள், உள்ளூர் நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் பலரும் கலந்து கொண்டு, வீடு தோறும் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதனால் திருச்சுழி தொகுதியில் தேர்தல் சூழல் மேலும் சூடுபிடித்துள்ளது.1
- திண்டுக்கல் மாவட்டம் 2026 சட்டமன்ற தேர்தலில் முன்னிட்டு வேடசந்தூர் சட்டமன்ற திமுக வேட்பாளர் வீராசாமிநாதன் இன்று வேடசந்தூர் பகுதியில் பொதுமக்களிடம் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது மாயனூர் அணை திட்டம் திமுக ஆட்சியில் தான் அரசாணை வெளியிடப்பட்டது. ஆட்சி அமைந்த உடன் அந்தத் திட்டம் உடனடியாக செயல்படுத்தப்படும் என்று கூறி பிரச்சாரம் செய்தார். இந்நிகழ்வில் திமுக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.1
- காரைக்குடி சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற* *முற்போக்கு கூட்டணி இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளர்* எஸ்.மாங்குடி அவர்களை ஆதரித்து தேவகோட்டை அண்ணா அரங்கில் தேர்தல் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் எம்பி ,சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம்,திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுசெயலாளர் சுப.வீரபாண்டியன்,முன்னாள் அமைச்சர் தென்னவன்,திமுக மாவட்ட துணைச்செயலாளர் ஜோன்ஸ் ரூசோ ,நகர செயலாளர் பெரி.பாலமுருகன்,காங்கிரஸ் கட்சி நகர தலைவர் சஞ்சய் ,திமுக மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் நாகனி செந்தில்குமார் மற்றும் ஒன்றிய,நகர செயலாளர்கள்,திமுக ,காங்கிரஸ்,தேமுதிக , எஸ் டி பி ஐ,விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் நிர்வாகிகள் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.1
- மணப்பாறை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பன்னாங்கொம்பு பகுதியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திமுக கூட்டணி கட்சி மமக வேட்பாளர் ப.அப்துல் சமது உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பு.2
- மணப்பாறையில் அமைந்துள்ள மாரியம்மன் கோயிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குத்துவிளக்கு பூஜையுடன் சித்திரை மாத திருவிழா துவங்கியது. இந்த திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான பூச்சொரிதல் நிகழ்ச்சி வரும் (ஏப்- 26) அன்று நடைபெற உள்ளது. இதில் மணப்பாறை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் தவறாமல் கலந்து கொள்ள கோவில் அறங்காவலர் ஆர்விஎஸ். மணி அறிவுறுத்தியுள்ளார்.1
- தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தனி தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் டாக்டர் கதிர்காமு சோத்துப்பாறை சாலையில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நடை பயிற்சி மேற்கொண்டு வரும் பொதுமக்கள் மற்றும் பெண்கள் மற்றும் அங்கு உள்ள விளையாட்டு வீரர்களை சந்தித்து குக்கர் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார் அதனைத் தொடர்ந்து மார்க்கெட் வீதியில் உள்ள இறைச்சி கடை மற்றும் காய்கறி கடைகள் மற்றும் அப்பகுதியில் உள்ள பொதுமக்களை சந்தித்து குக்கர் சின்னத்துக்கு வாக்களித்து தன்னை வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக் கொண்டார் மேலும் அதிமுக தேர்தல் வாக்குறுதிகளை பொதுமக்களிடம் எடுத்துரைத்து தங்கள் வாக்குகளை குக்கர் சின்னத்துக்கு வாக்களித்து தன்னை வெற்றி பெற செய்யுங்கள் என கை எடுத்து கும்பிட்டு வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டார் இதில் நகரச் செயலாளர்கள் குபேந்திரன், பாலா, நகர்மன்ற உறுப்பினர் மணி வெங்கடேஷ், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் அபுதாஹிர், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பாலாஜி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் சிவசுப்பிரமணியன், அதிமுக நகர செயலாளர் பழனியப்பன் மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்1
- மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம் இன்று (ஏப்.19) நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள நடிகை குஷ்பு கோவிலுக்கு வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களை கோவில் நிர்வாகம் அனுமதிப்பதில்லை என்று குஷ்புவிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு இதுகுறித்த ரூல்ஸ் தெரியவில்லை. விவரம் தெரியாமல் ஏதும் சொல்லக்கூடாது. ரூல்ஸ் தெரிந்த பின்பு அதற்கான விளக்கத்தை அளிப்பதாக கூறி கோயிலுக்குள் சென்றார்.1
- சிவகங்கையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் சிவகங்கை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கருணாஸ், காளையார் கோவில் தெற்கு ஒன்றியத்தில் , பெரியகண்ணணூர் கிராம பொதுமக்களிடம் வாக்குசேகரித்தார், பெரியகண்ணனூரில் திமுக முக்கிய பிரமுகரான வழக்கறிஞர் ஆசைத்தம்பி தலைமையில், கிராம மக்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர், வேட்பாளருக்கு பிரம்மாண்ட மாலை வெங்கல வாள் , சால்வைகள் அணிவித்து உற்சாக வரவேற்பளித்தனர். கிராம மக்களின் எழுச்சியான வரவேற்பை ஏற்றுக் கொண்ட கருணாஸ் மாட்டு வண்டியில் ஏறி பெரியகண்ணனூர் கிராமத்தில் சுற்றி வந்து வாக்கு சேகரித்தார், பின்னர் அவர்களிடம் பேசும் பொழுது இந்தத் தொகுதியில் போட்டியிட முதலமைச்சர் வாய்ப்பளித்ததை வாழ்நாள் பாக்கியமாக கருதுகிறேன், பாசிச சித்தாந்ததின் மூலம் மதத்தின்பால் பிளவு படுத்தி தமிழகத்தில் நுழைய வரும் பாரதிய ஜனதா கட்சி, அதிமுகவை வீழ்த்த இந்த தேர்தலில் தனக்கு வாக்களித்து என்னை தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் சட்டமன்ற முதல் கூட்டத்திலே முதல்வரிடம் சிவகங்கை தொகுதியில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெருக்கிட 4 தொழிற்சாலைகள் அமைக்க பாடுபடுவேன் என்று உறுதி அளித்தார் . தமிழக முதல்வரின் எண்ணற்ற திட்டங்களை எடுத்து கூறி வாக்கு சேகரித்த கருணாஸ், இந்த தொகுதியின் மேம்பாட்டுக்கு திட்டங்களுக்கு சட்டமன்றத்தில் உங்கள் குரலாக ஒழித்து உங்களுக்காக பாடுபடுவேன் என்று கிராம மக்களிடம் உறுதியளித்தார்.1