தூய்மை பணியாளர்களுக்கான காலை உணவு திட்டம்-கலெக்டர் துவக்கி வைப்பு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கான காலை உணவு திட்டத்தை இன்று துவக்கி வைத்ததைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட நேரு மார்க்கெட் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இத்திட்டத்தின் துவக்க விழா நடைபெற்றது. விழாவில், மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் கலந்து கொண்டு, தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவுகளை பரிமாறி திட்டத்தை துவக்கி வைத்ததைதொடர்ந்து, தூய்மை பணியாளர்களுடன் உடன் அமர்ந்து காலை உணவினை உண்டு மகிழ்ந்தார். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி,சார் ஆட்சியர் ஆஷிக் அலி,மாநகராட்சி ஆணையர் பாலசுப்பிரமணியம், மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தூய்மை பணியாளர்களுக்கான காலை உணவு திட்டம்-கலெக்டர் துவக்கி வைப்பு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கான காலை உணவு திட்டத்தை இன்று துவக்கி வைத்ததைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட நேரு மார்க்கெட் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இத்திட்டத்தின் துவக்க விழா நடைபெற்றது. விழாவில், மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் கலந்து கொண்டு, தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவுகளை பரிமாறி திட்டத்தை துவக்கி வைத்ததைதொடர்ந்து, தூய்மை பணியாளர்களுடன் உடன் அமர்ந்து காலை உணவினை உண்டு மகிழ்ந்தார். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி,சார் ஆட்சியர் ஆஷிக் அலி,மாநகராட்சி ஆணையர் பாலசுப்பிரமணியம், மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டை மேற்கு மாட வீதியில் 12வது வார்டு கவுன்சிலர் கவி கணேசன் அவர்களின் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட பூங்கா மற்றும் திறந்தவெளி உடற்பயிற்சி கூடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. இந்த பூங்காவில் சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் விளையாடுவதற்கான நவீன விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் உடல்நலத்தை மேம்படுத்தும் வகையில் திறந்தவெளி உடற்பயிற்சி கூடமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்தப் பகுதி மக்கள், இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் உடற்பயிற்சி மேற்கொள்ளவும், ஓய்வாக நேரத்தை கழிக்கவும் வசதி கிடைத்துள்ளது. இந்த புதிய பூங்கா மற்றும் திறந்தவெளி உடற்பயிற்சி கூடத்தை 12வது வார்டு கவுன்சிலர் கவி கணேசன் அவர்கள் திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். இந்நிகழ்வில் வட்டச் செயலாளர் சதீஷ், முன்னாள் கவுன்சிலர்கள் சைலேஷ், எம்.வி. குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஏ. ராஜு, சென்னை பெருநகர மாநகராட்சி உதவி பொறியாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் பொதுமக்கள், சிறுவர் சிறுமிகள் பலரும் கலந்து கொண்டு புதிய பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தை பார்வையிட்டு மகிழ்ந்தனர்.1
- திருவண்ணா மலை தெற்கு மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதி.ஜவ்வாது மலை வடக்கு ஒன்றிய மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக. அடுப்பு எரிக்க கேஸ் சிலிண்டர் பெட்ரோல் தட்டுப்பாடு குறித்து ஒன்றிய அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். திமுக மாநில துணை செயாளர்.பிரியா ப.விஜயரங்கன். கண்டனம் உரையாற்றினார்.திமுக வடக்கு ஒன்றியம் செயலாளர் ப.கேசவன் ஒன்றிய காங்கிரஸ் நிர்வாகி. மூர்த்தி. சின்னத்தம்பி. ஒன்றிய விசிக நிர்வாகி. காசி ஒன்றிய தேமுதிக நிர்வாகி.R.K. ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.1
- திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள அம்பேத்கர் சிலை அருகில் கேஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை கண்டித்து ஒன்றிய பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளை கண்டித்து திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் முபெ கிரி தலைமையில் நகர செயலாளர் அன்பழகன் நகர் மன்ற தலைவர் சாதிக் பாஷா ஒன்றிய துணை செயலாளர் செந்தில் முன்னாள் பேரூர் மன்ற தலைவர் சென்னம்மாள் முருகன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்1
- தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்த உடனடியாக வாணியம்பாடி சட்டமன்ற அலுவலகத்தை பொதுப்பணி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் சீல் வைத்தனர். தேர்தல் ஆணையம் தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்கு பதிவு மே நான்கு வாக்கு எண்ணிக்கை என அறிவிப்பு வெளியிட்டதை தொடர்ந்து. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி காதர் பேட்டை பகுதியில் அமைந்துள்ள சட்டமன்ற அலுவலகத்திற்கு விரைந்து வந்த பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ரவி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் சத்யா, பழனி ஆகியோர் வாணியம்பாடி சட்டமன்ற அலுவலகத்தில் அனைத்து இடங்களையும் ஆய்வு மேற்கொண்டு மின் இணைப்பைத் துண்டித்தனர். பின்னர் உள்ளே வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை அகற்றினர். மூன்று நுழைவாயில்களுக்கும் துணியை சுற்றி அறைக்கு ராக் வைத்து சீல் வைத்தனர். மேலும் அங்கு வெளியில் வைக்கப்பட்டிருந்த கட்சி ரீதியான அனைத்து பேனர்கள் மற்றும் போஸ்டர்களை அகற்றினர்.1
- திருப்பத்தூர் மாவட்டம்:. இந்த நிகழ்ச்சியில் அறப்போர் இயக்க தன்னார்வலர்கள் திரு. சுரேஷ், திரு. முனிராஜ், திரு. திருக்குமரன், திரு. வெங்கடேஷ், திரு. சுந்தரேசன் ஆகியோர் மற்றும் சேலம் மண்டல ஒருங்கிணைப்பாளர் இணைந்து பொதுமக்களிடம் “என் ஓட்டு விற்பனைக்கு அல்ல” என்ற விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினர். மேலும், வாக்குகளை பணத்திற்கு விற்காமல் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் என்பதைக் கூறி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, வீடுகள் மற்றும் கடைகளில் “என் ஓட்டு விற்பனைக்கு அல்ல” என்ற வாசகத்துடன் ஸ்டிக்கர்கள் ஒட்டி பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்ச்சி மூலம் பொதுமக்களிடம் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதாக தன்னார்வலர்கள் தெரிவித்தனர்.2
- அயிமிச்சேரியில் அன்னை உதவும் கரங்கள் அறக்கட்டளை துவக்கம்: அம்பேத்கர் சிலைக்கு மாலை அறிவித்து மரியாதை வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்டது அயிமிச்சேரி கிராமம். இந்த கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட நிர்வாக குழு உத்திரமேரூர் தொகுதியை சார்ந்த குடியரசு அவர்கள் அன்னை உதவும் கரங்கள் அறக்கட்டளை துவங்கி உள்ளார். அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு கல்வி உதவி, ஆதரவற்றோருக்கு நிதி உதவி மற்றும் கணவனால் கைவிடப்பட்டோர் முதியோர்களுக்கு உதவிகள் மேற்கொண்டு சமூக தேவையாற்றப்படுகிறது. இதற்கான அலுவலக திறப்பு விழா நேற்று அப்பகுதியில் நேற்று நடைபெற்றது. அலுவலக திறப்பு விழாவை தொடர்ந்து, அப்பகுதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு குடியரசு மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ன இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய செயலாளர் தியாகு மற்றும் நிர்வாகிகள் புருஷோத்தமன், சரத்குமார் பிரிதிவிராஜ், அஜித்குமார், சின்னத்தம்பி, வசந்த், பிரசாந்த், சதீஷ் சுகுமாரன் அருண் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.1
- தேர்தல் விதிமுறை நடைமுறைக்கு வந்துள்ளது அடுத்து தர்மபுரி மாவட்டத்தில் வருவாய் துறையினர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு சீல் வைத்து மூடப்பட்டனர். வரும் ஏப்ரல் 23ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் இன்று முதல் தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது. தேர்தல் ஆணையம் விதிமுறைப்படி தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம், தர்மபுரி, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய ஐந்து சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர். மேலும் பேருந்து நிலையம், கட்சி அலுவலகங்கள், சாலையோரம் உள்ளிட்ட பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கட்சி தலைவர்களின் சிலை மூடப்பட்டது. ஆங்காங்கே ஒட்டப்பட்ட வால் போஸ்டர்கள், சுவரொட்டிகள், பேனர்கள், விளம்பரப் பததைகள், கட்சி கொடிகள் என அனைத்தையும் நகராட்சி பேரூராட்சி அலுவலர்கள் மூலம் தூய்மை பணியாளர்களால் அகற்றப்பட்டனர்.1
- மத்திய பாஜக அரசு தமிழகத்தைத் தொடர்ந்து வஞ்சிப்பதாகக் கூறி சேலம் திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் எஸ்டிபிஐ சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் அப்சர் அலி பேசுகையில், "மத்திய பாஜக அரசு கல்வி மற்றும் 100 நாள் வேலைத் திட்டம் உள்ளிட்ட தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்குத் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது" எனச் சாடினார். இந்நிகழ்வில் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராகக் முழக்கமிட்டனர்1