Shuru
Apke Nagar Ki App…
காலை கதிரில் இன்றைய தலைப்புச் செய்தி/மொபட்டில் ஊர் சுற்றும் விஜய்
R. Suresh
காலை கதிரில் இன்றைய தலைப்புச் செய்தி/மொபட்டில் ஊர் சுற்றும் விஜய்
More news from தமிழ்நாடு and nearby areas
- Post by R. Suresh1
- திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அதிமுக மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம் இன்று (02-04-2026) வேடசந்தூர் தாசில்தார் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். உடன் குஜிலியம்பாறை வேடசந்தூர் வடமதுரை ஒன்றியங்களைச் சேர்ந்த செயலாளர் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.1
- குளித்தலையில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தெப்ப திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் உள்ள அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தெப்ப திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்வில் அயர்மலையிலிருந்து சுவாமிகள் அலங்காரத்துடன் கொண்டு வரப்பட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு தெப்பத்தில் எழுந்தருளி தெப்பக்குளத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார் இந்நிகழ்வில் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்1
- திருச்சி மரக்கடை பகுதியில் தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அதனை தொடர்ந்து பிரச்சாரம் முடித்துவிட்டு புறப்பட்டு சென்றபோது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை காவலர் சதீஷ் என்பவர் மீது ஆதவ் அர்ஜுனாவின் கார் மோதியது. இதில், காவலரின் கால் எலும்பு முறிந்தது. உடனடியாக அங்கு நின்றிருந்த தவெக தொண்டர்கள் அவரை தூக்கிச்சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர்.1
- மணப்பாறை அருகே நடைபெற்ற தொட்டியப்பட்டி பாம்பாளம்மன் கோயில் திருவிழாவையொட்டி,கரகம் பாலித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கு நாய்க்கா் இன மக்களின் தேவராட்டம், கரகம் அருள் சக்தியுடன் உயிரூட்டல் நிகழ்வுகள் நடைபெற்றன. தொடா்ந்து பல லட்சம் மதிப்பில் வானவேடிக்கை நிகழ்ச்சி, கரகம் பாலித்து அம்பாள் அருள் சக்தியுடன் ஆலயம் வந்தடைதல் நிகழ்வு நடைபெற்றது. தொடா்ந்து கோயில் வளாகத்தில் பொங்கலிடுதல், அங்கப்பிரதட்சணம், ஆடு - கோழி பலியிடுதல், மாவிளக்கு, கரும்புத்தொட்டில் என பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனா். மாலையில் நாய்க்கா் இன மக்களின் எருது விடும் நிகழ்ச்சி, தேவராட்டம் நடைபெற்றது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு களித்தனர்.1
- பழநியில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பங்குனி உத்திர திருத்தேரோட்டம் நேற்று நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் திராளன பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்1
- *திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பங்குனி உத்திர திருத்தேரோட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.*1
- சமயபுரம் பூச்செறிதல் விழாவை முன்னிட்டு கரூர் மாவட்டம் குளித்தலை அருகே குப்பிரெட்டிபட்டி கிராமத்தில் ஊர் பொதுமக்கள் பக்தர்கள் சார்பில் அம்மனுக்கு அலங்காரம் செய்து வாகனத்தின் மூலம் ஏற்றுக் கொண்டு ஊர்வலமாக சமயபுரம் நோக்கி சென்றனர்1