Shuru
Apke Nagar Ki App…
வீட்டின் கதவை உடைத்து பணம் நகை திருட்டு; போலீசார் விசாரணை ஸ்ரீரங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன். இவர் சில தினங்களுக்கு முன்பு அவரது வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் உள்ள அவரது மகள் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் வீடு உடைக்கப்பட்டு இருப்பதாக தகவல் அறிந்து வீட்டிற்கு வந்து பார்த்த பொழுது வீட்டில் இருந்த பணம், தங்க நகைகள் உள்ளிட்ட 2,37,500 மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டது தெரியவந்தது. இது குறித்து வீரபாண்டி போலீசார் வழக்கு பதிவு.
Vivek Selvaa
வீட்டின் கதவை உடைத்து பணம் நகை திருட்டு; போலீசார் விசாரணை ஸ்ரீரங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன். இவர் சில தினங்களுக்கு முன்பு அவரது வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் உள்ள அவரது மகள் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் வீடு உடைக்கப்பட்டு இருப்பதாக தகவல் அறிந்து வீட்டிற்கு வந்து பார்த்த பொழுது வீட்டில் இருந்த பணம், தங்க நகைகள் உள்ளிட்ட 2,37,500 மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டது தெரியவந்தது. இது குறித்து வீரபாண்டி போலீசார் வழக்கு பதிவு.
More news from தமிழ்நாடு and nearby areas
- பெரியகுளம் அருள்மிகு பகவதி அம்மன் கோவில் திருவிழா 8 வது நாளான இன்று யாதவர் சமுதாயம் மண்டகப்படி முன்னிட்டு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பெரியகுளம் முக்கிய வீதிகள் ஆன அரண்மனை தெரு தேரடி வீதி மேலரத வீதி சுப்பிரமணியர் சாவடி தெரு உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில் இளைஞர்களின் ஆட்டம் மற்றும் மேளதாளத்துடன் சுவாமி வீதி உலா நடைபெற்றது இதில் தெருக்களில் இருந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்1
- தேனி மாவட்டம் குன்னூர் அருகே அம்மாச்சியாபுரம் வைகை ஆற்றின் நீர் தேக்கத்தின் அடிப்படையில் பல ஏக்கர் நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பெய்த மழையினால் இந்த பகுதியில் உள்ள நெற்கதிர்கள் அனைத்தும் சாய்ந்து விட்டது இதனால் இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றன1
- தேனியில் உள்ள தேனி அல்லிநகரம் நகராட்சியில் மாதந்திர கூட்டம் நடைபெற்றது,நகராட்சி சேர்மன் ரேணுப்பிரியா பாலமுருகன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவிற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்த நிகழ்வில் துணை சேர்மன், வார்டு கவுன்சிலர்கள் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்1
- Post by கம்யூனிஸ்ட் காரன்2
- மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே குமாரம் பகுதியில் நடைபெற்ற மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சியில் முன்னாள் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் கலந்து கொண்டு பேசினார்1
- Post by RAJA news1
- திருமங்கலம் பன்னிரண்டாவது வார்டு முனிசிபல் காலனி பகுதியில் சுமார் மூன்று மாத காலமாக கழிவுநீர் சாக்கடை அடைத்துக் கொண்டிருக்கிறது அதில் கொசு புழு உற்பத்தி ஆகிறது சிறுவர்களுக்கு காய்ச்சல் அப்பப்போது வருகிறது அதனால் சாக்கடை மற்றும் சாக்கடை போகும் பாதையை சரி செய்யுமாறு தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் நன்றி4
- தேனி அருகே அல்லிநகரத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது இந்த திருக்கோயிலில் இன்று தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது தனி சன்னதியில் அருள் பாலிக்கும் சிவசுப்பிரமணியருக்கு பால், தயிர், சந்தனம், தேன், மஞ்சள், விபூதி உள்ளிட்ட பலவித திரவியங்கள் கொண்டு சிறப்பாக அபிஷேகம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து வஸ்திரம் கட்டி வண்ணமலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு கையில் வேலுடன் மயில் மேல் அமர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சுப்ரமணிய சுவாமி பக்தர்களுக்கு காட்சி தந்தார் பின்னர் முருகனுக்கு தூபம் காட்டப்பட்டு மகா தீபாராதனை, பஞ்ச கற்பூர ஆரத்தி உடன் தீபாராதனை காட்டப்பட்டது இதில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு முருகப் பெருமானுக்கு நடைபெற்ற சிறப்பு வழிபாடு பூஜையை கண்டு தரிசித்துச் சென்றனர்1