தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கப்பிகுளத்தைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி சரஸ்வதி, தன் மீது சொத்து தகராறு தொடர்பாகப் பதியப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். அவர் அளித்துள்ள மனுவில், கப்பிகுளத்தில் தனியாக வசித்து வரும் தான், கடந்த 14ஆம் தேதி அன்று அதே பகுதியைச் சேர்ந்த முனியசாமி மகன் சேகர், சொத்துத் தகராறு காரணமாகத் தனது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து இடத்திற்குரிய கணினி பட்டாவை எடுக்க முயன்றதாகக் குறிப்பிட்டுள்ளார். இதனைத் தடுக்க முயன்றபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில், சேகர் தன்னைத் தாக்கியதாகவும், அதில் தான் மயக்கமடைந்த நிலையில், தனது கழுத்தில் இருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியையும் அவர் எடுத்துச் சென்றுவிட்டதாகவும் சரஸ்வதி குற்றம்சாட்டியுள்ளார். இச்சம்பவம் குறித்து அவசர உதவி எண்களான 100 மற்றும் 181 ஆகியவற்றுக்குத் தகவல் அளித்தும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் புகார் தெரிவித்துள்ளார். பின்னர், ஊர் பொதுமக்களின் உதவியுடன் மீட்கப்பட்டு, ஒட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையில் சுமார் 7 நாட்கள் உள்நோயாளியாகச் சிகிச்சை பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார். தன்னைத் தாக்கிய சேகர், தனது கையை அவரே அறுத்துக் கொண்டு பசுவந்தனை காவல் நிலையத்தில் தன் மீது எதிர் புகார் அளித்ததாகவும், அதன் அடிப்படையில் தன் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் மூதாட்டி சரஸ்வதி வேதனை தெரிவித்துள்ளார். வயது மூப்பு காரணமாகச் சரியாக நடக்கக்கூட முடியாத நிலையில் உள்ள தன் மீது பதியப்பட்டுள்ள இந்த வழக்குப் பொய் வழக்கு என்பதால், அதனை ரத்து செய்ய வேண்டும் என்றும், தன்னைத் தாக்கி தங்கச் சங்கிலியை எடுத்துச் சென்ற சேகர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் வலியுறுத்தியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கப்பிகுளத்தைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி சரஸ்வதி, தன் மீது சொத்து தகராறு தொடர்பாகப் பதியப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். அவர் அளித்துள்ள மனுவில், கப்பிகுளத்தில் தனியாக வசித்து வரும் தான், கடந்த 14ஆம் தேதி அன்று அதே பகுதியைச் சேர்ந்த முனியசாமி மகன் சேகர், சொத்துத் தகராறு காரணமாகத் தனது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து இடத்திற்குரிய கணினி பட்டாவை எடுக்க முயன்றதாகக் குறிப்பிட்டுள்ளார். இதனைத் தடுக்க முயன்றபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில், சேகர் தன்னைத் தாக்கியதாகவும், அதில் தான் மயக்கமடைந்த நிலையில், தனது கழுத்தில் இருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியையும் அவர் எடுத்துச் சென்றுவிட்டதாகவும் சரஸ்வதி குற்றம்சாட்டியுள்ளார். இச்சம்பவம் குறித்து அவசர உதவி எண்களான 100 மற்றும் 181 ஆகியவற்றுக்குத் தகவல் அளித்தும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் புகார் தெரிவித்துள்ளார். பின்னர், ஊர் பொதுமக்களின் உதவியுடன் மீட்கப்பட்டு, ஒட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையில் சுமார் 7 நாட்கள் உள்நோயாளியாகச் சிகிச்சை பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார். தன்னைத் தாக்கிய சேகர், தனது கையை அவரே அறுத்துக் கொண்டு பசுவந்தனை காவல் நிலையத்தில் தன் மீது எதிர் புகார் அளித்ததாகவும், அதன் அடிப்படையில் தன் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் மூதாட்டி சரஸ்வதி வேதனை தெரிவித்துள்ளார். வயது மூப்பு காரணமாகச் சரியாக நடக்கக்கூட முடியாத நிலையில் உள்ள தன் மீது பதியப்பட்டுள்ள இந்த வழக்குப் பொய் வழக்கு என்பதால், அதனை ரத்து செய்ய வேண்டும் என்றும், தன்னைத் தாக்கி தங்கச் சங்கிலியை எடுத்துச் சென்ற சேகர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் வலியுறுத்தியுள்ளார்.
- தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு, தூத்துக்குடி புறநகர் மாவட்டம், புதிய பேருந்து நிலைய வளாகத்தில் திங்கட்கிழமை (22-6-2026) அன்னதானம் வழங்கப்பட்டது. மாநகர வடக்கு பகுதி செயலாளர் M. கணேஷ் தலைமையில், மாவட்ட மாணவர் அணி இணை அமைப்பாளர் சதீஷ் முன்னிலையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. அன்னதானத்தில் சிக்கன் பிரியாணி, அவித்த முட்டை மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் பகுதி இணை செயலாளர் S. வேல் முருகன், பகுதி துணை செயலாளர் ராஜா, பகுதி துணை செயலாளர் மாரி, 14வது வார்டு செயலாளர் வாசன், பகுதி செயற்குழு உறுப்பினர்கள் S. அன்னபூரணி, E. அருணா தேவி, V. அன்னலட்சுமி மற்றும் மல்லிகா ஆகியோர் கலந்துகொண்டனர்.1
- தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பல்லாக்கு சாலை முத்து நகரில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலின் முதலாம் ஆண்டு வருஷாபிஷேக விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவையொட்டி, இன்று காலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, திருப்பள்ளியெழுச்சி பூஜையும் நித்திய பூஜையும் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, காலை 6.25 மணிக்கு கணபதி பூஜை, சங்கல்பம், புண்ணியாக வாசனம், கும்ப பூஜை, கணபதி ஹோமம், அம்பாள் மூல மந்திர ஹோமம், பூர்ணாஷுதி மற்றும் தீபாராதனை போன்ற சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவின் ஒரு பகுதியாக, ஸ்ரீ மகா கணபதி கோயிலில் இருந்து பால் குடம் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. யாக சாலையில் வைக்கப்பட்ட புனித நீரால் கோபுர கலசத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து, மூலவர் முத்துமாரியம்மனுக்கு மஞ்சள் பொடி, மாப்பொடி, திரவியம், பால், தயிர், இளநீர், தேன், சந்தனம், வாசனை திரவியங்கள் மற்றும் கும்ப கலச நீரால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், அம்பாள் அழகிய அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளித்தார்; சோடச தீபாராதனையும் நடைபெற்றது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பஜனைப் பாடல்களைப் பாடி அம்பாளை தரிசித்தனர். நிறைவாக, பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது.1
- சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகேயுள்ள கிருங்காக்கோட்டையில், விவசாயிகளுக்குப் பாசனத்திற்காகப் பயன்படுத்தப்படும் 450-க்கும் மேற்பட்ட மின் மோட்டார்களுக்கு அடிக்கடி குறைவான மின்சாரம் வழங்கப்படுவதாகப் புகார் இருந்துள்ளது. இதனையடுத்து, விவசாயிகளுக்குத் தடையின்றி மின்சாரம் வழங்கும் நோக்கில், அரசு சார்பில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைப்பதற்கான டெண்டர் வழங்கப்பட்டு, மின் கம்பங்கள் ஊன்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் லேசான காற்று வீசியபோது, கீழக்களம் குடியிருப்புப் பகுதி அருகே ஒரு தரமில்லாத உயர் மின்னழுத்த மின் கம்பம் இரண்டாக உடைந்து வயல் பகுதியில் விழுந்தது. நல்லவேளையாக, இந்தக் கம்பம் குடியிருப்புப் பகுதியில் விழுந்திருந்தால் உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டிருக்கக்கூடும். மேலும், முக்கரை பிள்ளையார் வயல் பகுதியில் மின் கம்பம் ஆழமாக ஊன்றப்படாததாலும், மேல் பகுதியில் அரை அடியில் கடனுக்கான தரமில்லாத கான்கிரீட் கலவை போடப்பட்டதாலும் கம்பம் சாய்ந்ததாகக் கூறப்படுகிறது. கிருங்காக்கோட்டை பிரான்மலை சாலையோரம் உள்ள ஒரு வீட்டின் மீது உயர் மின்னழுத்த மின் கம்பி உரசிக் கொண்டிருப்பதும், வல்ராங் கண்மாய் செல்லும் வழியில் ஒரு வீட்டின் மின் இணைப்பு கம்பி உயர் மின்னழுத்த கம்பத்தில் உரசிக் கொண்டிருப்பதும் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதிகளில் உள்ள கண்மாய் கரைகளில் ஊன்றப்பட்ட அனைத்து உயர் மின்னழுத்த மின் கம்பங்களும் ஆழமாக ஊன்றப்படாததாலும், தரமற்ற கான்கிரீட் கலவை பயன்படுத்தப்பட்டதாலும் ஒரு மழைக்குக்கூட தாக்குப்பிடிக்காமல் சாய்ந்த நிலையில் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தங்களது உயிருக்கு உத்தரவாதம் இல்லாத இந்தத் தரமில்லாத மின் கம்பங்கள் அனைத்தையும் அகற்றிவிட்டு, தரமான மின் கம்பங்களை ஊன்ற வேண்டுமெனத் துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் அரசுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான ச. ஜோசப் விஜய் அவர்களின் 52வது பிறந்தநாள் விழா, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாநிலம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு, பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டன. இதன் ஒரு பகுதியாக, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள பாலக்கோம்பை கிராமத்தில், ச. ஜோசப் விஜயின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகளுடன் கோலாகலமான நிகழ்ச்சி நடைபெற்றது. மாநிலச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் ஆணைக்கிணங்க, ஒன்றிய செயலாளர் ஈஸ் முருகன் தலைமையில், சஞ்சீவியின் முன்னிலையிலும் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இவ்விழாவில் தூய்மைப் பணியாளர்களுக்கு வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டதுடன், அன்னதானமும், பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. பரமசிவம் மற்றும் மாரி செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்த இந்நிகழ்ச்சியில், தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.1
- தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் ஆகியவை கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வாடகை கட்டிடத்தில், போதிய இடவசதியின்றி செயல்பட்டு வருகின்றன. இதற்குத் தீர்வாக, ஆண்டிபட்டி அரசு கலைக் கல்லூரிக்கு பின்புறம் உள்ள அரசு நிலத்தில், ரூ.11.70 கோடி மதிப்பீட்டில் 22,581 சதுர அடி பரப்பளவில், மூன்று தளங்களைக் கொண்ட புதிய அதிநவீன ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டிடமும், நீதிபதிகளுக்கான குடியிருப்புகளும் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இந்த புதிய வளாகத்தில், காணொளி அறை, கணினி அறை, மாற்றுத்திறனாளிகளுக்கான மின்தூக்கி (லிஃப்ட்) மற்றும் சாய்வுதளப் பாதை, வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் உயர்தரத்துடன் உருவாக்கப்பட்டுள்ளன. கட்டுமானப் பணிகள் அனைத்தும் முழுமையாக நிறைவடைந்து பல மாதங்கள் ஆகியும், இந்த நீதிமன்றக் கட்டிடம் இன்னும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை. எனவே, வாடகை கட்டிடத்தில் அன்றாடம் அவதிப்படும் ஏழை எளிய பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்களின் நலன் கருதி, தயார் நிலையில் உள்ள இந்த நீதிமன்ற வளாகத்தை உடனடியாகத் திறந்து பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் எனப் பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.1
- தமிழக முதல்வர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, திருவாடானை ஓரிக்கோட்டை ஊனமுற்றோர் பள்ளியில் சிறப்பான விருந்து ஒன்று நடைபெற்றது.1
- லடாக் பயணம் பலரது கனவாகவும், அங்கு பைக் ரைடு செல்வது பலருக்கு விருப்பமான ஒன்றாகவும் இருக்கும் நிலையில், கொல்கத்தாவைச் சேர்ந்த அபி பௌமிக் என்பவர் சைக்கிளிலேயே லடாக்கிற்குப் பயணம் மேற்கொண்டு பெரும் சாதனை படைத்துள்ளார். கடுமையான வானிலை மற்றும் உயரமான மலைப் பகுதிகளைக் கடந்து, அவர் தொடர்ச்சியாக 119 நாட்கள் சைக்கிளில் பயணம் செய்து லடாக்கை அடைந்துள்ளார். இவரது இந்த அசாத்திய சாகசத்தைப் பல பைக் ரைடர்கள் பாராட்டி வரும் நிலையில், இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.1
- தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பசுவந்தனை சாலையில் காரும் சாலையோர ஓடைக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கோவில்பட்டி பசுவந்தனை சாலையைச் சேர்ந்த மகாராஜன், மார்க்கெட்டில் கடை நடத்தி வருபவர். இவர் மதுரையில் டைல்ஸ் வாங்குவதற்காக புதுக் கிராமத்தைச் சேர்ந்த தனது நண்பர் ஒருவருடன் காரில் இலுப்பையூரணி ரெயில்வே சுரங்க பாலம் வழியாக மெயின் ரோட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, அருகில் இருந்த சாலையோர ஓடைக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மகாராஜனும் அவரது நண்பரும் எவ்வித காயங்களுமின்றி உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.1
- ஆண்டிபட்டி பேரூராட்சிக்குட்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் குப்பைகளைச் சேகரிக்கப் பயன்படுத்தப்படும் மின்சார வாகனங்களில் சில பழுதடைந்து சேதமடைந்துள்ளன. இந்தச் சேதமடைந்த வாகனங்களை பேரூராட்சி நிர்வாகத்தினர் சீரமைக்காமல், பேரூராட்சி வளாகத்திலேயே அப்படியே வைத்துள்ளனர். இதன் விளைவாக, வாகனங்கள் மேலும் சேதமடைந்து, உபயோகப்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றன. இதேபோல, பல்வேறு வாகனங்களும் மற்றும் கைகளில் தள்ளும் வண்டிகளும் கூடச் சேதமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, சேதமடைந்த இந்த வாகனங்களை உடனடியாகச் சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1