logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் புதிய நிர்வாகிகளின் பணி சிறக்க வழக்கறிஞர்களின் வாழ்த்துக்களும், பாராட்டுகளும்... தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் நிர்வாகிகளுக்கான தேர்தலில் போட்டியின்றி வெற்றி பெற்று, புதிதாக பொறுப்புகளை ஏற்றுள்ள சேர்மன் செஞ்சி கதிரவன் துணைச் சேர்மன் ஈ. பாலமுருகன் அகில இந்திய பார் கவுன்சில் உறுப்பினர் பி.எஸ். அமல்ராஜ் ஆகியோருகளுக்கு சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களும், தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர்களும் அவர்களின் பணி சிறக்க தங்களது மனமார்ந்த வாழ்த்துகளையும் , பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். இந்த வாழ்த்து செய்தியில் வழக்கறிஞர் பெருமக்களின் நலன், உரிமைகள் மற்றும் கண்ணியத்தைப் பாதுகாத்து, பார் கவுன்சிலின் செயல்பாடுகளை மேலும் சிறப்புற வழிநடத்திடவும், நீதித்துறையின் மாண்பையும் மேன்மையையும் உயர்த்திடவும் தங்களது தலைமையும், பணியும் சிறப்பாக அமைந்திட புதிய பொறுப்புகள் புதிய சாதனைகளுக்கு வழிவகுக்கட்டும். வழக்கறிஞர் சமுதாயத்தின் நம்பிக்கையை நிலைநிறுத்தி, அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் புதிய நிர்வாகிகளின் பணிகள் சிறக்கட்டும் என்று வாழ்த்தி வருகின்றனர்.

7 hrs ago
user_முனைவர"நமது பூமி" சந்திரகுமார்
முனைவர"நமது பூமி" சந்திரகுமார்
பல்லடம், திருப்பூர், தமிழ்நாடு•
7 hrs ago
7b997254-c764-46cf-9ba2-a20da23f5f22

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் புதிய நிர்வாகிகளின் பணி சிறக்க வழக்கறிஞர்களின் வாழ்த்துக்களும், பாராட்டுகளும்... தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் நிர்வாகிகளுக்கான தேர்தலில் போட்டியின்றி வெற்றி பெற்று, புதிதாக பொறுப்புகளை ஏற்றுள்ள சேர்மன் செஞ்சி

d4d31ce6-5499-4d1a-befc-62480196424f

கதிரவன் துணைச் சேர்மன் ஈ. பாலமுருகன் அகில இந்திய பார் கவுன்சில் உறுப்பினர் பி.எஸ். அமல்ராஜ் ஆகியோருகளுக்கு சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களும், தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர்களும் அவர்களின் பணி சிறக்க தங்களது

febbea22-bc32-477f-bba8-57af412e8c58

மனமார்ந்த வாழ்த்துகளையும் , பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். இந்த வாழ்த்து செய்தியில் வழக்கறிஞர் பெருமக்களின் நலன், உரிமைகள் மற்றும் கண்ணியத்தைப் பாதுகாத்து, பார் கவுன்சிலின் செயல்பாடுகளை மேலும் சிறப்புற வழிநடத்திடவும், நீதித்துறையின் மாண்பையும் மேன்மையையும் உயர்த்திடவும்

4848b72d-72d2-475f-899d-fb7e5e323a37

தங்களது தலைமையும், பணியும் சிறப்பாக அமைந்திட புதிய பொறுப்புகள் புதிய சாதனைகளுக்கு வழிவகுக்கட்டும். வழக்கறிஞர் சமுதாயத்தின் நம்பிக்கையை நிலைநிறுத்தி, அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் புதிய நிர்வாகிகளின் பணிகள் சிறக்கட்டும் என்று வாழ்த்தி வருகின்றனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • தேர்தல் பணிமனை திறப்புவிழா விழாக்கோலம் பூண்ட தாராபுரம் தாராபுரத்தில் மின்வெட்டு, மின்கட்டணப் பிரச்சினை திடீர் கனமழையிலும் உரையாற்றிய கே.என்.நேரு விழா நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென கனமழை பெய்தது. இதனால் விழா மேடையில் இருந்த தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மழையில் நனைந்தனர். இருப்பினும், மழையைப் பொருட்படுத்தாமல் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பொதுமக்களிடையே உரையாற்றினார். மழையில் இருந்து தப்பிக்க தொண்டர்கள் நாற்காலிகளைத் தலைக்கு மேல் வைத்துக் கொண்டு தலைவர்களின் பேச்சைக் கேட்டனர். சிலர் மழையில் நனைந்தபடியே நிகழ்ச்சியில் தொடர்ந்து பங்கேற்றனர். மழை பெய்தபோதும் கூட்டம் கலைந்து செல்லாமல் இருந்தது விழாவில் குறிப்பிடத்தக்கதாக அமைந்தது. தாராபுரத்தில் மின்வெட்டு, மின்கட்டணப் பிரச்சினை முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், தாராபுரம் பகுதியில் கடந்த நான்கு மாதங்களாக மழையின்றி வறட்சி நிலவி வந்த நிலையில், திமுக வேட்பாளர் சுகன்யாவின் தேர்தல் பணிமனை திறப்பு விழாவில் திடீரென கனமழை பெய்துள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெயரை அறிவித்தவுடன் திமுகவிற்கு வெற்றி மழை பெய்துவிட்டது எனக் குறிப்பிட்டார். மேலும், தாராபுரம் பகுதியில் மின்சாரக் கட்டணக் கணக்கீட்டுப் பணிகள் தொய்வாக நடைபெறுவதாகவும், 200 யூனிட் மின்சாரம் தொடர்பான கணக்கீட்டுப் பணிகளில் ஏற்பட்டுள்ள சிக்கல்களால் மின்நுகர்வோர் பாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். மின்கட்டணமாக ரூ.2,000 செலுத்தி வந்தவர்களுக்கு ரூ.10,000 வரை கட்டணம் விதிக்கப்படுவதாகவும், அதிக மின்கட்டணம் செலுத்திய பின்னரும் தாராபுரத்தில் இரவு, பகல் என அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர்ந்து நிலவி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். மகளிர் உரிமைத்தொகை குறித்து சக்கரபாணி பேச்சு முன்னாள் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேசுகையில், திமுக ஆட்சி அமைந்தால் வேலையில்லாத படித்த இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.2,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்டார். தற்போதைய தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் தேர்தல் வாக்குறுதிகளில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என்றும், திமுக ஆட்சியில் வழங்கப்பட்டு வந்த மகளிர் உரிமைத்தொகையான ரூ.1,000 மட்டுமே தொடர்ந்து வழங்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். மேலும், தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி அனைத்து மகளிருக்கும் ரூ.2,500 மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படவில்லை என்றும் அவர் பேசினார். கனமழையால் சிறப்புப் பேச்சாளர்கள் உரையாற்ற முடியவில்லை இதனிடையே, விழா நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இடைவிடாது கனமழை பெய்ததால் நிகழ்ச்சியில் பாதிப்பு ஏற்பட்டது. மழை காரணமாக திட்டமிட்டபடி சிறப்புப் பேச்சாளர்கள் அனைவரும் உரையாற்ற முடியாத நிலை ஏற்பட்டது. மழை தொடர்ந்து பெய்ததால் தலைவர்கள் அவசர அவசரமாக உரையாற்றிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். இருப்பினும், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஒரே இடத்தில் திரண்டிருந்ததால் விழா களைகட்டியது. மழை நின்றுவிடும் என்ற எதிர்பார்ப்பில் பலர் புதிய பேருந்து நிலைய மேம்பாலத்தின் கீழும், சாலையின் இருபுறங்களிலும் காத்திருந்தனர். தொடர்ந்து மழை பெய்ததால் தொண்டர்கள் மழையில் நனைந்தபடியே அங்கிருந்து கலைந்து சென்றனர். தாராபுரத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு பெய்த கனமழைக்கு மத்தியில் நடைபெற்ற திமுக தேர்தல் பணிமனை திறப்பு விழா, அரசியல் பரபரப்பையும் தொண்டர்களின் உற்சாகத்தையும் ஒருசேர வெளிப்படுத்தும் நிகழ்வாக அமைந்தது.
    2
    தேர்தல் பணிமனை திறப்புவிழா விழாக்கோலம் பூண்ட தாராபுரம்
தாராபுரத்தில் மின்வெட்டு, மின்கட்டணப் பிரச்சினை
திடீர் கனமழையிலும் உரையாற்றிய கே.என்.நேரு
விழா நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென கனமழை பெய்தது. இதனால் விழா மேடையில் இருந்த தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மழையில் நனைந்தனர். இருப்பினும், மழையைப் பொருட்படுத்தாமல் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பொதுமக்களிடையே உரையாற்றினார்.
மழையில் இருந்து தப்பிக்க தொண்டர்கள் நாற்காலிகளைத் தலைக்கு மேல் வைத்துக் கொண்டு தலைவர்களின் பேச்சைக் கேட்டனர். சிலர் மழையில் நனைந்தபடியே நிகழ்ச்சியில் தொடர்ந்து பங்கேற்றனர். மழை பெய்தபோதும் கூட்டம் கலைந்து செல்லாமல் இருந்தது விழாவில் குறிப்பிடத்தக்கதாக அமைந்தது.
தாராபுரத்தில் மின்வெட்டு, மின்கட்டணப் பிரச்சினை
முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், தாராபுரம் பகுதியில் கடந்த நான்கு மாதங்களாக மழையின்றி வறட்சி நிலவி வந்த நிலையில், திமுக வேட்பாளர் சுகன்யாவின் தேர்தல் பணிமனை திறப்பு விழாவில் திடீரென கனமழை பெய்துள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெயரை அறிவித்தவுடன் திமுகவிற்கு வெற்றி மழை பெய்துவிட்டது எனக் குறிப்பிட்டார்.
மேலும், தாராபுரம் பகுதியில் மின்சாரக் கட்டணக் கணக்கீட்டுப் பணிகள் தொய்வாக நடைபெறுவதாகவும், 200 யூனிட் மின்சாரம் தொடர்பான கணக்கீட்டுப் பணிகளில் ஏற்பட்டுள்ள சிக்கல்களால் மின்நுகர்வோர் பாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
மின்கட்டணமாக ரூ.2,000 செலுத்தி வந்தவர்களுக்கு ரூ.10,000 வரை கட்டணம் விதிக்கப்படுவதாகவும், அதிக மின்கட்டணம் செலுத்திய பின்னரும் தாராபுரத்தில் இரவு, பகல் என அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர்ந்து நிலவி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மகளிர் உரிமைத்தொகை குறித்து சக்கரபாணி பேச்சு
முன்னாள் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேசுகையில், திமுக ஆட்சி அமைந்தால் வேலையில்லாத படித்த இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.2,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்டார்.
தற்போதைய தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் தேர்தல் வாக்குறுதிகளில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என்றும், திமுக ஆட்சியில் வழங்கப்பட்டு வந்த மகளிர் உரிமைத்தொகையான ரூ.1,000 மட்டுமே தொடர்ந்து வழங்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி அனைத்து மகளிருக்கும் ரூ.2,500 மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படவில்லை என்றும் அவர் பேசினார்.
கனமழையால் சிறப்புப் பேச்சாளர்கள் உரையாற்ற முடியவில்லை
இதனிடையே, விழா நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இடைவிடாது கனமழை பெய்ததால் நிகழ்ச்சியில் பாதிப்பு ஏற்பட்டது. மழை காரணமாக திட்டமிட்டபடி சிறப்புப் பேச்சாளர்கள் அனைவரும் உரையாற்ற முடியாத நிலை ஏற்பட்டது.
மழை தொடர்ந்து பெய்ததால் தலைவர்கள் அவசர அவசரமாக உரையாற்றிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். இருப்பினும், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஒரே இடத்தில் திரண்டிருந்ததால் விழா களைகட்டியது.
மழை நின்றுவிடும் என்ற எதிர்பார்ப்பில் பலர் புதிய பேருந்து நிலைய மேம்பாலத்தின் கீழும், சாலையின் இருபுறங்களிலும் காத்திருந்தனர். தொடர்ந்து மழை பெய்ததால் தொண்டர்கள் மழையில் நனைந்தபடியே அங்கிருந்து கலைந்து சென்றனர்.
தாராபுரத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு பெய்த கனமழைக்கு மத்தியில் நடைபெற்ற திமுக தேர்தல் பணிமனை திறப்பு விழா, அரசியல் பரபரப்பையும் தொண்டர்களின் உற்சாகத்தையும் ஒருசேர வெளிப்படுத்தும் நிகழ்வாக அமைந்தது.
    user_Dpm news
    Dpm news
    Photographer தாராபுரம், திருப்பூர், தமிழ்நாடு•
    23 hrs ago
  • தாராபுரத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் இடையே வாக்குவாதம் தாராபுரத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் பரபரப்பு கட்சி கொடி கட்டிய காரை நிறுத்திய போலீசார் – இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் வாக்குவாதம் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தில், கட்சி கொடி கட்டிய காரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தாராபுரம் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. இதில் இந்து மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஈஸ்வரன், கட்சி கொடி கட்டப்பட்ட காரில் ஊர்வலத்தில் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், கொடி கட்டிய காரை நிறுத்தியதாக தெரிகிறது. தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுவதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், ஊர்வலத்தில் கட்சி கொடியுடன் கார் செல்லக்கூடாது என போலீசார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஈஸ்வரனுக்கும் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், காரை அங்கிருந்து எடுத்துச் செல்லுமாறும், இல்லையெனில் காரை பறிமுதல் செய்ய நேரிடும் என போலீசார் எச்சரித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஊர்வலத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த டிஎஸ்பி சிவகுமார் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு காணப்பட்டு, விநாயகர் சிலை ஊர்வலம் தொடர்ந்து நடைபெற்றது. தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் நிலையில், விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கப்பட்டிருந்தபோதும், கட்சி கொடி கட்டிய கார் ஊர்வலத்தில் செல்லக்கூடாது என போலீசார் தெரிவித்த சம்பவம் அப்பகுதியில் பேசுபொருளாகியுள்ளது.
    1
    தாராபுரத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் இடையே வாக்குவாதம்
தாராபுரத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் பரபரப்பு
கட்சி கொடி கட்டிய காரை நிறுத்திய போலீசார் – இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள்  வாக்குவாதம்
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தில், கட்சி கொடி கட்டிய காரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தாராபுரம் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. இதில் இந்து மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஈஸ்வரன், கட்சி கொடி கட்டப்பட்ட காரில் ஊர்வலத்தில் சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், கொடி கட்டிய காரை நிறுத்தியதாக தெரிகிறது. தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுவதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், ஊர்வலத்தில் கட்சி கொடியுடன் கார் செல்லக்கூடாது என போலீசார் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக ஈஸ்வரனுக்கும் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், காரை அங்கிருந்து எடுத்துச் செல்லுமாறும், இல்லையெனில் காரை பறிமுதல் செய்ய நேரிடும் என போலீசார் எச்சரித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் ஊர்வலத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த டிஎஸ்பி சிவகுமார் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு காணப்பட்டு, விநாயகர் சிலை ஊர்வலம் தொடர்ந்து நடைபெற்றது.
தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் நிலையில், விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கப்பட்டிருந்தபோதும், கட்சி கொடி கட்டிய கார் ஊர்வலத்தில் செல்லக்கூடாது என போலீசார் தெரிவித்த சம்பவம் அப்பகுதியில் பேசுபொருளாகியுள்ளது.
    user_Dinesh
    Dinesh
    கோபிசெட்டிபாளையம், ஈரோடு, தமிழ்நாடு•
    6 hrs ago
  • 118 வது அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா திருவுருவப் படத்திற்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை கரூர்: அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் திமுக சார்பில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அறிஞர் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும், அறிஞர் அண்ணாவின் கொள்கைகள் மற்றும் சமூகநீதிக்கான அவரது பங்களிப்புகளை நினைவுகூர்ந்து, அவரது வழியில் தொடர்ந்து பணியாற்ற உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
    1
    118 வது அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா திருவுருவப் படத்திற்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை
கரூர்:
அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் திமுக சார்பில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அறிஞர் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மேலும், அறிஞர் அண்ணாவின் கொள்கைகள் மற்றும் சமூகநீதிக்கான அவரது பங்களிப்புகளை நினைவுகூர்ந்து, அவரது வழியில் தொடர்ந்து பணியாற்ற உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
    user_Karur Wood's Tv
    Karur Wood's Tv
    Photographer கரூர், கரூர், தமிழ்நாடு•
    17 hrs ago
  • ராசிபுரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி அளவில் பலத்த காற்றுடன் மழை ராசிபுரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி அளவில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. நகரில் பெய்த இந்த மழையால் பஸ் நிலையத்தில் மழை நீர் வெளியேற வழி இன்றி குளம் போல் நீர் தேங்கியது. இதனால் அங்கு கூடிய வார சந்தை வியாபாரிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகினர். காய்கறி பழங்கள் உள்ளிட்ட வார சந்தை பொருட்கள் நீரில் மூழ்கின. பயணிகள் மாணவர்கள் இருசக்கர வாகன ஓட்டிகள் என பலரும் பெரும் அவதிக்கு ஆளாகினர்.
    1
    ராசிபுரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி அளவில் பலத்த காற்றுடன் மழை
ராசிபுரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி அளவில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. நகரில் பெய்த இந்த மழையால் பஸ் நிலையத்தில் மழை நீர் வெளியேற வழி இன்றி குளம் போல் நீர் தேங்கியது. இதனால் அங்கு கூடிய வார சந்தை வியாபாரிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகினர். காய்கறி பழங்கள் உள்ளிட்ட வார சந்தை பொருட்கள் நீரில் மூழ்கின. பயணிகள் மாணவர்கள் இருசக்கர வாகன ஓட்டிகள் என பலரும் பெரும் அவதிக்கு ஆளாகினர்.
    user_DHINESH KUMAR
    DHINESH KUMAR
    Local News Reporter Namakkal, Tamil Nadu•
    6 hrs ago
  • விநாயகர் சதுர்த்தி அன்று வலம் வந்த ஒற்றைக் காட்டு யானை (எஸ்டேட்டில் உள்ள சிசிடிவி கேமரா பதிவு) திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை அருகே உள்ள சேம்பிலியூத்து என்ற மலை கிராமத்தில் உள்ள எஸ்டேட்டில் நேற்று விநாயகர் சதுர்த்தி அன்று வலம் வந்த ஒற்றைக் காட்டு யானை. (எஸ்டேட்டில் உள்ள சிசிடிவி கேமரா பதிவு)
    1
    விநாயகர் சதுர்த்தி அன்று வலம் வந்த ஒற்றைக் காட்டு யானை (எஸ்டேட்டில் உள்ள சிசிடிவி கேமரா பதிவு)
திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை அருகே உள்ள சேம்பிலியூத்து என்ற மலை கிராமத்தில் உள்ள எஸ்டேட்டில் நேற்று விநாயகர் சதுர்த்தி அன்று வலம் வந்த ஒற்றைக் காட்டு யானை. (எஸ்டேட்டில் உள்ள சிசிடிவி கேமரா பதிவு)
    user_RAJA
    RAJA
    பத்திரிகையாளர் ஆத்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    5 hrs ago
  • தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேவதானப்பட்டியில் குடிநீர் வேண்டி பெண்கள் சாலை மறியல் முயற்சி காவல் நிலையத்தில் பேரூராட்சி அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம் ​ தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட சாத்தா கோவில்பட்டி பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாகச் சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. ​இது குறித்துப் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதிப் பெண்களும் பொதுமக்களும், தேவதானப்பட்டி காவல் நிலையம் அருகே திரண்டு திடீர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். ​அப்போது அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், மறியலில் ஈடுபட முயன்றவர்களைத் தடுத்து நிறுத்தி காவல் நிலையத்திற்குள் அழைத்துச் சென்றனர். தொடர்ந்து காவல் நிலையத்திற்குள் குவிந்த பொதுமக்கள், தங்களின் கோரிக்கையைக் கண்டுகொள்ளாத பேரூராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து அதிகாரிகளுடன் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ​இதனைத் தொடர்ந்து, பேரூராட்சி அலுவலர்களைக் காவல் நிலையத்திற்கு வரவழைத்துக் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சாத்தா கோவில்பட்டி பகுதிக்கு உடனடியாகக் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பேரூராட்சி அதிகாரிகள் உறுதியளித்தனர். ​அதிகாரிகளின் இந்த உறுதியை ஏற்றுப் பொதுமக்கள் மற்றும் பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
    1
    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேவதானப்பட்டியில் குடிநீர் வேண்டி பெண்கள் சாலை மறியல் முயற்சி காவல் நிலையத்தில் பேரூராட்சி அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்
​
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட சாத்தா கோவில்பட்டி பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாகச் சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
​இது குறித்துப் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதிப் பெண்களும் பொதுமக்களும், தேவதானப்பட்டி காவல் நிலையம் அருகே திரண்டு திடீர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
​அப்போது அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், மறியலில் ஈடுபட முயன்றவர்களைத் தடுத்து நிறுத்தி காவல் நிலையத்திற்குள் அழைத்துச் சென்றனர். 
தொடர்ந்து காவல் நிலையத்திற்குள் குவிந்த பொதுமக்கள், தங்களின் கோரிக்கையைக் கண்டுகொள்ளாத பேரூராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து அதிகாரிகளுடன் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
​இதனைத் தொடர்ந்து, பேரூராட்சி அலுவலர்களைக் காவல் நிலையத்திற்கு வரவழைத்துக் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சாத்தா கோவில்பட்டி பகுதிக்கு உடனடியாகக் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பேரூராட்சி அதிகாரிகள் உறுதியளித்தனர்.
​அதிகாரிகளின் இந்த உறுதியை ஏற்றுப் பொதுமக்கள் மற்றும் பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    12 hrs ago
  • NGGO காலனியில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி கற்சிலை வடிவில் பிரம்மாண்ட விநாயகர் சிலை வைத்து வழிபாடு சுற்றுப்பகுதி பொதுமக்கள் திரளாக வந்து தரிசனம் செய்தனர் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி கோவை துடியலூர் அருகே அசோகபுரம், என் ஜி ஜி ஓ காலனி பகுதியில் இந்து முன்னணி சார்பில் கோவில் வடிவில் செட் அமைத்து கற்சிலை வடிவில் பிரம்மாண்டமான விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்தனர். சுற்று பகுதியில் இருந்து திரளான பொதுமக்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பொங்கல், சுண்டல், கொழுக்கட்டைகள் அன்னதானமாக வழங்கினர். விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் தமிழகத்திலும் விநாயகரின் பிரம்மாண்ட சிலைகளை வைத்தும், அன்னதானம், ஊர்வலம் நடத்தியும் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இதில் கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல், ரங்கம்மாள் காலனி, என் ஜி ஜி ஓ காலனி, நரசிம்மநாயக்கன்பாளையம், ராக்கிபாளையம், பன்னீர்மடை, ஏ பி எம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் 300 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை துடியலூர் அருகே அசோகபுரம், என் ஜி ஜி ஓ காலனி பகுதியில் இந்து முன்னணி சார்பில் கோவில் வடிவில் செட் அமைத்து கற்சிலை வடிவில் பிரம்மாண்டமான விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்தனர். சுற்று பகுதியில் இருந்து திரளான பொதுமக்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பொங்கல், சுண்டல், கொழுக்கட்டைகள் அன்னதானமாக வழங்கினர். மாலை விநாயகர் திருவீதி உலா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை இந்து முன்னணி நிர்வாகிகள் தியாகராஜன், சுதாகர், மணி, சரவணன், ஜீவானந்தம், ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
    4
    NGGO காலனியில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி
கற்சிலை வடிவில் பிரம்மாண்ட விநாயகர் சிலை வைத்து வழிபாடு
சுற்றுப்பகுதி பொதுமக்கள் திரளாக வந்து தரிசனம் செய்தனர்

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி கோவை துடியலூர் அருகே அசோகபுரம், என் ஜி ஜி ஓ காலனி பகுதியில் இந்து முன்னணி சார்பில் கோவில் வடிவில் செட் அமைத்து கற்சிலை வடிவில் பிரம்மாண்டமான விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்தனர். சுற்று பகுதியில் இருந்து திரளான பொதுமக்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பொங்கல், சுண்டல், கொழுக்கட்டைகள் அன்னதானமாக வழங்கினர்.  
விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் தமிழகத்திலும் விநாயகரின் பிரம்மாண்ட சிலைகளை வைத்தும், அன்னதானம், ஊர்வலம் நடத்தியும் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
இதில் கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல், ரங்கம்மாள் காலனி, என் ஜி ஜி ஓ காலனி, நரசிம்மநாயக்கன்பாளையம், ராக்கிபாளையம், பன்னீர்மடை, ஏ பி எம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் 300 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கோவை துடியலூர் அருகே அசோகபுரம், என் ஜி ஜி ஓ காலனி பகுதியில் இந்து முன்னணி சார்பில் கோவில் வடிவில் செட் அமைத்து கற்சிலை வடிவில் பிரம்மாண்டமான விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்தனர். சுற்று பகுதியில் இருந்து திரளான பொதுமக்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பொங்கல், சுண்டல், கொழுக்கட்டைகள் அன்னதானமாக வழங்கினர்.  மாலை விநாயகர் திருவீதி உலா நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை இந்து முன்னணி நிர்வாகிகள் தியாகராஜன், சுதாகர், மணி, சரவணன், ஜீவானந்தம், ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
    user_ரமேஷ்குமார்
    ரமேஷ்குமார்
    பத்திரிகையாளர் கோயம்புத்தூர் வடக்கு, கோயம்புத்தூர், தமிழ்நாடு•
    11 hrs ago
  • மறைந்த முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக அவரது திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் மறைந்த முன்னாள் முதல்வரும் பேரறிஞர் அண்ணா அவர்களின் 118 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் பெரியகுளம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக பெரியகுளம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ வெங்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் தேனி மாவட்டம் பெரியகுளம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக பெரியகுளம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ வெங்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் இந்நிகழ்ச்சியில் தெற்கு நகரக் கழகச் செயலாளர் VDR,பாலா, வடக்கு நகர் கழக செயலாளர் VS.தினேஷ், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பாலாஜி, நகர் மன்ற உறுப்பினர்கள் வெங்கடேசன் பால்பாண்டி, மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் மாஞ்சோலை செல்வம், அம்மா பேரவை இணைச் செயலாளர் முருகன்,நகர அவை தலைவர் மோகன், தொழிற்சங்க செயலாளரா ஜீவானந்தம் அடுத்து,மாவட்டத் துணைத் தலைவர் தர்மலிங்கம் வார்டு செயலாளர்கள் சார்பணி நிர்வாகிகள் உள்ளிட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமான கலந்துகொண்டு அறிஞர் அண்ணாவின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்
    1
    மறைந்த முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக அவரது திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்
மறைந்த முன்னாள் முதல்வரும் பேரறிஞர் அண்ணா அவர்களின் 118 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் பெரியகுளம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக பெரியகுளம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ வெங்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் தேனி மாவட்டம் பெரியகுளம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்   சார்பாக பெரியகுளம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ வெங்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்
இந்நிகழ்ச்சியில் தெற்கு நகரக் கழகச் செயலாளர் VDR,பாலா, வடக்கு நகர் கழக செயலாளர் VS.தினேஷ், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பாலாஜி, நகர் மன்ற உறுப்பினர்கள் வெங்கடேசன் பால்பாண்டி, மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் மாஞ்சோலை செல்வம், அம்மா பேரவை இணைச் செயலாளர் முருகன்,நகர அவை தலைவர் மோகன், தொழிற்சங்க செயலாளரா ஜீவானந்தம் அடுத்து,மாவட்டத் துணைத் தலைவர் தர்மலிங்கம் வார்டு செயலாளர்கள்  சார்பணி நிர்வாகிகள் உள்ளிட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமான கலந்துகொண்டு அறிஞர் அண்ணாவின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    12 hrs ago
  • குடிதண்ணீர் இல்லாமல் தவிக்கும் திண்டுக்கல் மாவட்ட வனவிலங்குகள் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் தண்ணீருக்காக சாலையில் திரியும் அரிய வகை சிங்கவால் குரங்குகள் சாலையில் ஓடிய மழைநீரை குரங்குகள் அருந்திய நிலையில், வனவிலங்குகளுக்கு குடிநீர் வசதி அமைத்து தர விலங்கு நல ஆர்வலர்கள் கோரிக்கை
    1
    குடிதண்ணீர் இல்லாமல் தவிக்கும் திண்டுக்கல் மாவட்ட வனவிலங்குகள்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் தண்ணீருக்காக சாலையில் திரியும் அரிய வகை சிங்கவால் குரங்குகள்
சாலையில் ஓடிய மழைநீரை குரங்குகள் அருந்திய நிலையில், வனவிலங்குகளுக்கு குடிநீர் வசதி அமைத்து தர விலங்கு நல ஆர்வலர்கள் கோரிக்கை
    user_Natarajan Pitchaimani
    Natarajan Pitchaimani
    Local News Reporter திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    19 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.