logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

தாராபுரத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் இடையே வாக்குவாதம் தாராபுரத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் பரபரப்பு கட்சி கொடி கட்டிய காரை நிறுத்திய போலீசார் – இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் வாக்குவாதம் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தில், கட்சி கொடி கட்டிய காரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தாராபுரம் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. இதில் இந்து மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஈஸ்வரன், கட்சி கொடி கட்டப்பட்ட காரில் ஊர்வலத்தில் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், கொடி கட்டிய காரை நிறுத்தியதாக தெரிகிறது. தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுவதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், ஊர்வலத்தில் கட்சி கொடியுடன் கார் செல்லக்கூடாது என போலீசார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஈஸ்வரனுக்கும் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், காரை அங்கிருந்து எடுத்துச் செல்லுமாறும், இல்லையெனில் காரை பறிமுதல் செய்ய நேரிடும் என போலீசார் எச்சரித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஊர்வலத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த டிஎஸ்பி சிவகுமார் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு காணப்பட்டு, விநாயகர் சிலை ஊர்வலம் தொடர்ந்து நடைபெற்றது. தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் நிலையில், விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கப்பட்டிருந்தபோதும், கட்சி கொடி கட்டிய கார் ஊர்வலத்தில் செல்லக்கூடாது என போலீசார் தெரிவித்த சம்பவம் அப்பகுதியில் பேசுபொருளாகியுள்ளது.

1 hr ago
user_Dinesh
Dinesh
கோபிசெட்டிபாளையம், ஈரோடு, தமிழ்நாடு•
1 hr ago

தாராபுரத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் இடையே வாக்குவாதம் தாராபுரத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் பரபரப்பு கட்சி கொடி கட்டிய காரை நிறுத்திய போலீசார் – இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் வாக்குவாதம் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தில், கட்சி கொடி கட்டிய காரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தாராபுரம் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. இதில் இந்து மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஈஸ்வரன், கட்சி கொடி கட்டப்பட்ட காரில் ஊர்வலத்தில் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், கொடி கட்டிய காரை நிறுத்தியதாக தெரிகிறது. தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுவதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், ஊர்வலத்தில் கட்சி கொடியுடன் கார் செல்லக்கூடாது என போலீசார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஈஸ்வரனுக்கும் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், காரை அங்கிருந்து எடுத்துச் செல்லுமாறும், இல்லையெனில் காரை பறிமுதல் செய்ய நேரிடும் என போலீசார் எச்சரித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஊர்வலத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த டிஎஸ்பி சிவகுமார் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு காணப்பட்டு, விநாயகர் சிலை ஊர்வலம் தொடர்ந்து நடைபெற்றது. தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் நிலையில், விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கப்பட்டிருந்தபோதும், கட்சி கொடி கட்டிய கார் ஊர்வலத்தில் செல்லக்கூடாது என போலீசார் தெரிவித்த சம்பவம் அப்பகுதியில் பேசுபொருளாகியுள்ளது.

More news from தமிழ்நாடு and nearby areas
  • கோபியில் இந்து மக்கள் கட்சி (தமிழகம் )சார்பாக 18ம் ஆண்டு நடத்தும் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் இந்து எழுச்சி திருவிழா நடைபெற்றது. ஈரோடு மாவட்டம் கோபியில் இந்து மக்கள் கட்சி (தமிழகம் )சார்பாக 18ம் ஆண்டு நடத்தும் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் இந்து எழுச்சி திருவிழா நடைபெற்றது. ஈரோடு மாவட்ட பொதுச்செயலாளர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற விழாவில் மாவட்ட தலைவர் செல்வகுமார் முன்னிலை வகித்தார்.சிறப்பு அழைப்பாளராக இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டு ஆசியுரை வழங்கினார்.அதனை தொடர்ந்து விநாயகர் சிலை ஊர்வலத்தை கோபி அறிஞர் அண்ணா வியாபாரிகள் சங்க தலைவர் சிவன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.கலை நிகழ்ச்சியை சக்திவேல் துவக்கி வைத்தார்.மேலும் விழாவில் மாவட்ட செயலாளர் குமரவேல், மாநில இளைஞர் அணி செயலாளர் கராத்தே வசந்த்,மாநில அமைப்பு செயலாளர் அருண்ராஜ், மாநில செயலாளர் வாடிவாசல் ஹரி, தமிழ்செல்வம், சதீஸ்குமார், அருண்குமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக இந்து அதிரடி படை நிறுவன தலைவர் ராஜகுரு வாழ்த்துரை வழங்கினார்.இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் பேசும் போது,தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் சட்ட மன்ற தேர்தலில் திமுக வை தோற்கடித்து ஒரு நல்ல விஷயத்தை செய்துள்ளார்.திமுக மற்றும் அதிமுக இரண்டு கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் எனவும், அந்த வரிசையில் த வெ க வும் அதே குட்டையில் ஊறிய மட்டை தான் என கூறினார்.சட்ட சபையில் யாரெல்லாம் பொறுப்பில் இருக்கிறார்களோ அவர்கள் அனைவரும் மத போதகர்கள்,அமைச்சர் செங்கோட்டையன் பிறப்பில் இந்துவா இல்லை கிறிஸ்தவரா என கேள்வி எழுப்பினார்.உதயநிதி கார் பந்தயம் நடத்தினால் ஊதாரி தனம், ஆனால் த வெ க வினர் நடத்தினால் மக்களுக்கு நன்மையா மக்கள் ஏமாற கூடாது எனவும் பேசினார்.
    4
    கோபியில் இந்து மக்கள் கட்சி (தமிழகம் )சார்பாக 18ம் ஆண்டு நடத்தும் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் இந்து எழுச்சி திருவிழா நடைபெற்றது. 
ஈரோடு மாவட்டம் கோபியில் இந்து மக்கள் கட்சி (தமிழகம் )சார்பாக 18ம் ஆண்டு நடத்தும் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் இந்து எழுச்சி திருவிழா நடைபெற்றது. ஈரோடு மாவட்ட பொதுச்செயலாளர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற விழாவில் மாவட்ட தலைவர் செல்வகுமார் முன்னிலை வகித்தார்.சிறப்பு அழைப்பாளராக இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டு ஆசியுரை வழங்கினார்.அதனை தொடர்ந்து விநாயகர் சிலை ஊர்வலத்தை கோபி அறிஞர் அண்ணா வியாபாரிகள் சங்க தலைவர் சிவன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.கலை நிகழ்ச்சியை சக்திவேல் துவக்கி வைத்தார்.மேலும் விழாவில் மாவட்ட செயலாளர் குமரவேல், மாநில இளைஞர் அணி செயலாளர் கராத்தே வசந்த்,மாநில அமைப்பு செயலாளர் அருண்ராஜ், மாநில செயலாளர் வாடிவாசல் ஹரி, தமிழ்செல்வம், சதீஸ்குமார், அருண்குமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக இந்து அதிரடி படை நிறுவன தலைவர் ராஜகுரு வாழ்த்துரை வழங்கினார்.இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் பேசும் போது,தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் சட்ட மன்ற தேர்தலில் திமுக வை தோற்கடித்து ஒரு நல்ல விஷயத்தை செய்துள்ளார்.திமுக மற்றும் அதிமுக இரண்டு கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் எனவும், அந்த வரிசையில் த வெ க வும் அதே குட்டையில் ஊறிய மட்டை தான் என கூறினார்.சட்ட சபையில் யாரெல்லாம் பொறுப்பில் இருக்கிறார்களோ அவர்கள் அனைவரும் மத போதகர்கள்,அமைச்சர் செங்கோட்டையன் பிறப்பில் இந்துவா இல்லை கிறிஸ்தவரா என கேள்வி எழுப்பினார்.உதயநிதி கார் பந்தயம் நடத்தினால் ஊதாரி தனம், ஆனால் த வெ க வினர் நடத்தினால் மக்களுக்கு நன்மையா மக்கள் ஏமாற கூடாது எனவும் பேசினார்.
    user_Vengadesh
    Vengadesh
    கோபிசெட்டிபாளையம், ஈரோடு, தமிழ்நாடு•
    58 min ago
  • கோபிச்செட்டிப்பாளையத்தில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி ஹிந்தி பேசும் மாநிலங்களில் கூட முதலமைச்சர் விஜயின் தாக்கம் உள்ளது, வட இந்தியர்கள் கூட தமிழக முதலமைச்சரை போல ஒருவர் முதலமைச்சராக வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் என கோபிச்செட்டிபாளையத்தில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி. கோபிசெட்டிபாளையம் கரட்டூர் பகுதியில் உள்ள தமிழக வெற்றி கழகத்தின் அலுவலகத்தில் அறிஞர் அண்ணாவின் 118 ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி தமிழக வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் செங்கோட்டையன் அண்ணாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்த பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாகத் தேர்தல் களத்தில் முதலில் 1967, அதற்குப் பிறகு 1977 என்று கூறி, 2026-இல் தமிழகத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்படும் என்று தேர்தல் நேரத்தில் குறிப்பிட்டார்கள். இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் மேலை நாடுகளுக்குசென்று, 11,000 கோடி அளவுக்குத் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கான முதலீடுகளை ஈர்த்துள்ளார். தமிழ்நாடு இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக இருக்க வேண்டும்; கூடுதலாக இடம்பெற வேண்டும்; அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும்; அதே நேரத்தில் சட்ட ஒழுங்கு பேணிக் காக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்துடன், மக்களின் விருப்பங்களை பிரதிபலிக்கக்கூடிய முதலமைச்சராக விஜய் விளங்குகிறார். முதலமைச்சரை பொறுத்தவரையில், தூய்மையான ஆட்சி தமிழகத்தில் நடக்க வேண்டும் என்று சொன்ன ஒரே தலைவர் விஜய் ஆவார். அனைத்து மாநிலங்களும் அவரை எதிர்பார்த்து கொண்டிருக்கின்றன. பிற மாநில மக்கள் கூட, தமிழக விஜய் அவர்களைப் போல முதலமைச்சர் கிடைக்க வேண்டும் என்று பேசுகின்றனர். ஹிந்தி பேசும் மாநிலங்களில் கூட விஜயின் தாக்கம் அதிகமாக உள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனித்து போட்டியிடுவது குறித்து, 14, கூட்டணி ,17 கூட்டணிக் கட்சிகள் உள்ள சூழ்நிலையிலும், தனித்து நின்று வெற்றிபெறக்கூடிய ஒரு இயக்கமாக தமிழக வெற்றிக் கழகம் திகழ்கிறது. ஒரு இயக்கத்தில் இருப்பவர்கள் கொள்கை ரீதியாக என்ன முடிவுகளை எடுக்கிறார்களோ, அதைப்பற்றி நான் கருத்து சொல்ல முடியாது; அது அவரவர் விருப்பம். எங்களை பொறுத்தவரையில் தெளிவான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வெற்றி என்பது முடிவு செய்யப்பட்ட ஒன்று; அதே நேரத்தில், வாக்கு வித்தியாசம் எந்த அளவுக்குப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா ,முதல்வர் விஜய் குறித்து சர்ச்சை வார்த்தைகள் பேசியது குறித்து , அவர் இதே வேலையைத் தான் செய்து வருகிறார். ஜெயலலிதா இருக்கும் போதும், அவருக்கு பிறகும் ஆ. ராசா இதுபோன்ற வார்த்தைகளை தான் உச்சரித்து வருகிறார். பேரறிஞர் அண்ணாவின் கனவு என்னவென்றால், மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்பதுதான். தொடர்ந்து மின் நுகர்வு அதிகரித்து வருவது குறித்து, தமிழகத்தில் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டுதான் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிற மாநிலங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, கடந்த 20 நாட்களாக நம்மைவிட கூடுதலாக மின்வெட்டு அங்கு நிலவுகிறது; மின் பற்றாக்குறை உள்ளது. அதற்காகத்தான் நம்முடைய முதலமைச்சர் அவர்கள், எங்கெல்லாம் பற்றாக்குறை உள்ளதோ அதைச் சரிசெய்ய வேண்டும் என்பதற்காகத் துணை மின் நிலையங்களை ஆய்வு செய்து வருகிறார். சோலார் மூலம் பெறப்படும் மின்சாரத்தை பகல் நேரங்களில் மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதால், அதை இரவு நேரங்களில் சேமித்து வைப்பதற்கான வழிகளை தேர்வு செய்து வருகிறார். அவை செயல்பாட்டிற்கு வரும்போது, மின்மிகை மாநிலமாக தமிழகம் உருவெடுக்கும். வருவாய்துறையில் உள்ள காலி பணியிடங்களில் உதவிப் பணியாளர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட வேண்டி உள்ளது. கிராம நிர்வாக அலுவலர், வட்டாட்சியர் போன்ற பணியிடங்கள் தேவையான அளவிற்கு நிரப்பப்பட்டுள்ளன. உதவி பணியாளர்கள் பணியிடங்கள், திமுக ஆட்சியில் அனைத்து இடங்களிலும் தேர்வு செய்யப்பட்டபோது விதிகளின் அடிப்படையில் தவறுகள் ஏற்பட்டதால், அதன்பிறகு தேர்வுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. இரண்டு மாவட்டங்களை தவிர, பிற அனைத்து மாவட்டங்களிலும் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இதுகுறித்து முதலமைச்சரோடு கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும். சூப்பர் எல் நினோ முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை மாநகரத்தை பொறுத்தவரையில் சட்டமன்ற கூட்டம் நடைபெற்றபோது, சென்னை மாநகரம் 15 மண்டலங்களாக பிரிக்கப்பட்டது. இதற்கு அமைச்சர்கள் தலைமைப் பொறுப்பேற்று, 7 அமைச்சர்கள் கண்காணிப்பிற்காக நியமிக்கப்பட்டனர். 9 மண்டலங்களுக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இதற்கான நடவடிக்கைகளை முதலமைச்சர் அவர்கள் அறிந்து செயல்பட்டு வருகிறார். மக்கள் பிரச்சினைகள் குறித்து சட்டமன்றத்தில் பேசவில்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்த நிலையில், சட்டமன்ற உறுப்பினர்கள் என்ன பேசினார்கள் என்பதை அனைவரும் கண்கூடாக பார்த்தனர். வருவாய்த் துறையில் பணியாளர்களுக்கான வருகை பதிவேடு பயோமெட்ரிக் மெட்ரிக் முறையில் மாற்றப்படுவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. கோபிசெட்டிபாளையத்தில் புறவழிச்சாலை அமைக்கும் பணி இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கப்படும். பட்டினப்பாக்கத்தில் சட்டமன்ற அலுவலகம் அமைப்பது போன்ற எந்தத் திட்டங்கள் கொண்டு வந்தாலும், அதற்கு எதிர்ப்புகள் வரத்தான் செய்யும். அங்கு நான்கு ஏக்கர் நிலம் மட்டும்தான் உள்ளது, அது போதாது என்ற நிலையில், கர்நாடகாவில் இருப்பதைப் போல அனைத்து அலுவலகங்களும் ஒருங்கிணைந்து ஒரே இடத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.காலம் செல்லசெல்ல முதலமைச்சரே அதை பற்றி முடிவு செய்வார். வறட்சி காலத்தில் கால்நடைகளுக்காக 10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கால்நடைகளுக்கு வேண்டிய பராமரிப்புகளை மேற்கொள்வதற்கும், வைக்கோல் வாங்குவதற்கும், கால்நடை பராமரிப்புத் துறைக்காக இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது. வறட்சி வரும் காலத்தில் சூழலை ஆராய்ந்து, மனதில்கொண்டு அதற்கான முடிவுகளை எடுக்க 283 கோடி பகிர்ந்து வழங்கப்படும்.
    1
    கோபிச்செட்டிப்பாளையத்தில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
ஹிந்தி பேசும் மாநிலங்களில் கூட முதலமைச்சர் விஜயின் தாக்கம் உள்ளது, வட இந்தியர்கள் கூட தமிழக முதலமைச்சரை போல ஒருவர் முதலமைச்சராக வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் என கோபிச்செட்டிபாளையத்தில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.
கோபிசெட்டிபாளையம் கரட்டூர் பகுதியில் உள்ள தமிழக வெற்றி கழகத்தின் அலுவலகத்தில் அறிஞர் அண்ணாவின் 118 ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி தமிழக வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் செங்கோட்டையன் அண்ணாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்த பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். 
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன்,
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாகத் தேர்தல் களத்தில் முதலில் 1967, அதற்குப் பிறகு 1977 என்று கூறி, 2026-இல் தமிழகத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்படும் என்று தேர்தல் நேரத்தில் குறிப்பிட்டார்கள்.
இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் மேலை நாடுகளுக்குசென்று, 11,000 கோடி அளவுக்குத் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கான முதலீடுகளை ஈர்த்துள்ளார்.
தமிழ்நாடு இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக இருக்க வேண்டும்;  கூடுதலாக இடம்பெற வேண்டும்; அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும்; அதே நேரத்தில் சட்ட ஒழுங்கு பேணிக் காக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்துடன், மக்களின் விருப்பங்களை பிரதிபலிக்கக்கூடிய முதலமைச்சராக விஜய் விளங்குகிறார்.
முதலமைச்சரை பொறுத்தவரையில், தூய்மையான ஆட்சி தமிழகத்தில் நடக்க வேண்டும் என்று சொன்ன ஒரே தலைவர் விஜய் ஆவார்.
அனைத்து மாநிலங்களும் அவரை எதிர்பார்த்து கொண்டிருக்கின்றன. பிற மாநில மக்கள் கூட, தமிழக விஜய் அவர்களைப் போல  முதலமைச்சர் கிடைக்க வேண்டும் என்று பேசுகின்றனர். 
ஹிந்தி பேசும் மாநிலங்களில் கூட விஜயின் தாக்கம் அதிகமாக உள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனித்து போட்டியிடுவது குறித்து, 14, கூட்டணி ,17 கூட்டணிக் கட்சிகள் உள்ள சூழ்நிலையிலும், தனித்து நின்று வெற்றிபெறக்கூடிய ஒரு இயக்கமாக தமிழக வெற்றிக் கழகம் திகழ்கிறது. 
ஒரு இயக்கத்தில் இருப்பவர்கள் கொள்கை ரீதியாக என்ன முடிவுகளை எடுக்கிறார்களோ, அதைப்பற்றி நான் கருத்து சொல்ல முடியாது; அது அவரவர் விருப்பம். எங்களை பொறுத்தவரையில் தெளிவான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
வெற்றி என்பது முடிவு செய்யப்பட்ட ஒன்று;
அதே நேரத்தில், வாக்கு வித்தியாசம் எந்த அளவுக்குப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா ,முதல்வர் விஜய் குறித்து சர்ச்சை வார்த்தைகள் பேசியது குறித்து , அவர் இதே வேலையைத் தான் செய்து வருகிறார். ஜெயலலிதா இருக்கும் போதும், அவருக்கு  பிறகும் ஆ. ராசா இதுபோன்ற வார்த்தைகளை தான் உச்சரித்து வருகிறார். பேரறிஞர் அண்ணாவின் கனவு என்னவென்றால், மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்பதுதான்.
தொடர்ந்து மின் நுகர்வு அதிகரித்து வருவது குறித்து, தமிழகத்தில் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டுதான் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிற மாநிலங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, கடந்த 20 நாட்களாக நம்மைவிட கூடுதலாக மின்வெட்டு அங்கு நிலவுகிறது; மின் பற்றாக்குறை உள்ளது. அதற்காகத்தான் நம்முடைய முதலமைச்சர் அவர்கள், எங்கெல்லாம் பற்றாக்குறை உள்ளதோ அதைச் சரிசெய்ய வேண்டும் என்பதற்காகத் துணை மின் நிலையங்களை ஆய்வு செய்து வருகிறார். 
சோலார் மூலம் பெறப்படும் மின்சாரத்தை பகல் நேரங்களில் மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதால், அதை இரவு நேரங்களில் சேமித்து வைப்பதற்கான வழிகளை தேர்வு செய்து வருகிறார். அவை செயல்பாட்டிற்கு வரும்போது, மின்மிகை மாநிலமாக தமிழகம் உருவெடுக்கும்.
வருவாய்துறையில் உள்ள காலி பணியிடங்களில் உதவிப் பணியாளர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட வேண்டி உள்ளது. கிராம நிர்வாக அலுவலர், வட்டாட்சியர் போன்ற பணியிடங்கள் தேவையான அளவிற்கு நிரப்பப்பட்டுள்ளன.
உதவி பணியாளர்கள் பணியிடங்கள், திமுக ஆட்சியில் அனைத்து இடங்களிலும் தேர்வு செய்யப்பட்டபோது விதிகளின் அடிப்படையில் தவறுகள் ஏற்பட்டதால், அதன்பிறகு தேர்வுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. இரண்டு மாவட்டங்களை தவிர, பிற அனைத்து மாவட்டங்களிலும் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இதுகுறித்து முதலமைச்சரோடு கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.
சூப்பர் எல் நினோ முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை மாநகரத்தை பொறுத்தவரையில் சட்டமன்ற கூட்டம் நடைபெற்றபோது, சென்னை மாநகரம் 15 மண்டலங்களாக பிரிக்கப்பட்டது. இதற்கு அமைச்சர்கள் தலைமைப் பொறுப்பேற்று, 7 அமைச்சர்கள் கண்காணிப்பிற்காக நியமிக்கப்பட்டனர். 9 மண்டலங்களுக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இதற்கான நடவடிக்கைகளை முதலமைச்சர் அவர்கள் அறிந்து செயல்பட்டு வருகிறார்.
மக்கள் பிரச்சினைகள் குறித்து சட்டமன்றத்தில் பேசவில்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்த நிலையில், சட்டமன்ற உறுப்பினர்கள் என்ன பேசினார்கள் என்பதை அனைவரும் கண்கூடாக பார்த்தனர்.
வருவாய்த் துறையில் பணியாளர்களுக்கான வருகை பதிவேடு பயோமெட்ரிக் மெட்ரிக் முறையில் மாற்றப்படுவது குறித்து  இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
கோபிசெட்டிபாளையத்தில் புறவழிச்சாலை அமைக்கும் பணி இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கப்படும்.
பட்டினப்பாக்கத்தில் சட்டமன்ற அலுவலகம் அமைப்பது போன்ற எந்தத் திட்டங்கள் கொண்டு வந்தாலும், அதற்கு எதிர்ப்புகள் வரத்தான் செய்யும். அங்கு நான்கு ஏக்கர் நிலம் மட்டும்தான் உள்ளது, அது போதாது என்ற நிலையில், கர்நாடகாவில் இருப்பதைப் போல அனைத்து அலுவலகங்களும் ஒருங்கிணைந்து ஒரே இடத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.காலம் செல்லசெல்ல முதலமைச்சரே அதை பற்றி முடிவு செய்வார்.
வறட்சி காலத்தில் கால்நடைகளுக்காக 10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கால்நடைகளுக்கு வேண்டிய பராமரிப்புகளை மேற்கொள்வதற்கும், வைக்கோல் வாங்குவதற்கும், கால்நடை பராமரிப்புத் துறைக்காக இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது. வறட்சி வரும் காலத்தில் சூழலை ஆராய்ந்து, மனதில்கொண்டு அதற்கான முடிவுகளை எடுக்க 283 கோடி பகிர்ந்து வழங்கப்படும்.
    user_Dinesh
    Dinesh
    கோபிசெட்டிபாளையம், ஈரோடு, தமிழ்நாடு•
    1 hr ago
  • பாட்டியின் சாதனை. சாதிக்க வயது ஒரு தடையில்லை. சாதிக்க வேண்டும் என்ற நம்பிக்கை மற்றும் போதும்.
    1
    பாட்டியின் சாதனை.
சாதிக்க வயது ஒரு தடையில்லை. சாதிக்க வேண்டும் என்ற நம்பிக்கை மற்றும் போதும்.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist Coimbatore South, Tamil Nadu•
    4 hrs ago
  • விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி நரசிம்மநாயக்கன்பாளையம் 10 லட்சத்தில் NSN பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு அலங்காரம் செய்து வழிபாடு விநாயகர் சதுர்த்தியை ஒட்டி கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயக பெருமானுக்கு வெள்ளி கவசம் அணிவித்து கோவில் கருவறை முழுவதும் 10, 20, 50, 100, 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் 10 லட்சம் ரூபாயைக் கொண்டு அலங்காரம் செய்து வழிபாடு நடத்தினர். இதனை சுற்றுப் பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து சென்றனர். விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் தமிழகத்திலும் விநாயகரின் பிரம்மாண்ட சிலைகளை வைத்தும், அன்னதானம், ஊர்வலம் நடத்தியும் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இதில் கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல், ரங்கம்மாள் காலனி, என் ஜி ஜி ஓ காலனி, நரசிம்மநாயக்கன்பாளையம், ராக்கிபாளையம், பன்னீர்மடை, ஏ பி எம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் 300 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயக பெருமானுக்கு வெள்ளி கவசம் அணிவித்து கோவில் கருவறை முழுவதும் 10, 20, 50, 100, 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் 10 லட்சம் ரூபாயைக் கொண்டு அலங்காரம் செய்து வழிபாடு நடத்தினர். விழாவின் துவக்கமாக காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கி மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள அனைத்து தெய்வ விக்கிரகங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் சுற்றுப் பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து சென்றனர். இவ்விழாவில் கைலாய வாத்தியங்கள் இசைத்தும், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கியும் கொண்டாடினர். இதற்கான ஏற்பாடுகளை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் கோயில் கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
    4
    விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி நரசிம்மநாயக்கன்பாளையம் 
10 லட்சத்தில் NSN பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு அலங்காரம் செய்து வழிபாடு

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயக பெருமானுக்கு வெள்ளி கவசம் அணிவித்து கோவில் கருவறை முழுவதும் 10, 20, 50, 100, 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் 10 லட்சம் ரூபாயைக் கொண்டு அலங்காரம் செய்து வழிபாடு நடத்தினர். இதனை சுற்றுப் பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து சென்றனர்.
விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் தமிழகத்திலும் விநாயகரின் பிரம்மாண்ட சிலைகளை வைத்தும், அன்னதானம், ஊர்வலம் நடத்தியும் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
இதில் கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல், ரங்கம்மாள் காலனி, என் ஜி ஜி ஓ காலனி, நரசிம்மநாயக்கன்பாளையம், ராக்கிபாளையம், பன்னீர்மடை, ஏ பி எம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் 300 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயக பெருமானுக்கு வெள்ளி கவசம் அணிவித்து கோவில் கருவறை முழுவதும் 10, 20, 50, 100, 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் 10 லட்சம் ரூபாயைக் கொண்டு அலங்காரம் செய்து வழிபாடு நடத்தினர். விழாவின் துவக்கமாக காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கி மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள அனைத்து தெய்வ விக்கிரகங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் சுற்றுப் பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து சென்றனர். 
இவ்விழாவில் கைலாய வாத்தியங்கள் இசைத்தும், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கியும் கொண்டாடினர். இதற்கான ஏற்பாடுகளை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் கோயில் கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
    user_ரமேஷ்குமார்
    ரமேஷ்குமார்
    பத்திரிகையாளர் கோயம்புத்தூர் வடக்கு, கோயம்புத்தூர், தமிழ்நாடு•
    5 hrs ago
  • ராசிபுரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி அளவில் பலத்த காற்றுடன் மழை ராசிபுரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி அளவில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. நகரில் பெய்த இந்த மழையால் பஸ் நிலையத்தில் மழை நீர் வெளியேற வழி இன்றி குளம் போல் நீர் தேங்கியது. இதனால் அங்கு கூடிய வார சந்தை வியாபாரிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகினர். காய்கறி பழங்கள் உள்ளிட்ட வார சந்தை பொருட்கள் நீரில் மூழ்கின. பயணிகள் மாணவர்கள் இருசக்கர வாகன ஓட்டிகள் என பலரும் பெரும் அவதிக்கு ஆளாகினர்.
    1
    ராசிபுரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி அளவில் பலத்த காற்றுடன் மழை
ராசிபுரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி அளவில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. நகரில் பெய்த இந்த மழையால் பஸ் நிலையத்தில் மழை நீர் வெளியேற வழி இன்றி குளம் போல் நீர் தேங்கியது. இதனால் அங்கு கூடிய வார சந்தை வியாபாரிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகினர். காய்கறி பழங்கள் உள்ளிட்ட வார சந்தை பொருட்கள் நீரில் மூழ்கின. பயணிகள் மாணவர்கள் இருசக்கர வாகன ஓட்டிகள் என பலரும் பெரும் அவதிக்கு ஆளாகினர்.
    user_DHINESH KUMAR
    DHINESH KUMAR
    Local News Reporter Namakkal, Tamil Nadu•
    1 hr ago
  • ராசிபுரம் புதிய பஸ் நிலையத்தில் குளம்போல் தேங்கிய மழைநீரால் வாரச்சந்தை வியாபாரிகள், பயணிகள் கடும் அவதி... நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. நகரில் பெய்த மழையால் ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் மழைநீர் வெளியேற வழியின்றி குளம்போல் தேங்கியது. அதே பகுதியில் வாரச்சந்தை நடைபெற்ற நிலையில், சந்தை வியாபாரிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகினர். காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பல்வேறு சந்தை பொருட்கள் மழைநீரில் மூழ்கின. மேலும், பேருந்து நிலையத்தில் தேங்கிய மழைநீரால் பயணிகள், மாணவர்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர். மழைநீர் முறையாக வெளியேறுவதற்கான வசதி இல்லாததே தண்ணீர் தேங்குவதற்கு காரணம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.
    1
    ராசிபுரம் புதிய பஸ் நிலையத்தில் குளம்போல் தேங்கிய மழைநீரால் வாரச்சந்தை வியாபாரிகள், பயணிகள் கடும் அவதி...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. நகரில் பெய்த மழையால் ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் மழைநீர் வெளியேற வழியின்றி குளம்போல் தேங்கியது.
அதே பகுதியில் வாரச்சந்தை நடைபெற்ற நிலையில், சந்தை வியாபாரிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகினர். காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பல்வேறு சந்தை பொருட்கள் மழைநீரில் மூழ்கின.
மேலும், பேருந்து நிலையத்தில் தேங்கிய மழைநீரால் பயணிகள், மாணவர்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர். மழைநீர் முறையாக வெளியேறுவதற்கான வசதி இல்லாததே தண்ணீர் தேங்குவதற்கு காரணம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.
    user_Aravinth
    Aravinth
    ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    1 hr ago
  • கரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை சாலையில் தேங்கிய மழை நீர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில், கரூர் மாவட்டத்தில் இன்று திடீரென கனமழை பெய்தது. காலை முதலே வெயில் வாட்டி வதைத்த நிலையில், மாலை நேரத்தில் வானம் திடீரென மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதையடுத்து கரூர் மாநகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. கரூர் மாநகரம், வெங்கமேடு, வேலுச்சாமிபுரம், தான்தோன்றிமலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். தொடர்ந்து பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. கரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
    1
    கரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை சாலையில் தேங்கிய மழை நீர். 
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில், கரூர் மாவட்டத்தில் இன்று திடீரென கனமழை பெய்தது.
காலை முதலே வெயில் வாட்டி வதைத்த நிலையில், மாலை நேரத்தில் வானம் திடீரென மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதையடுத்து கரூர் மாநகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது.
கரூர் மாநகரம், வெங்கமேடு, வேலுச்சாமிபுரம், தான்தோன்றிமலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
தொடர்ந்து பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. 
கரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
    user_Karur clicks
    Karur clicks
    Photographer கரூர், கரூர், தமிழ்நாடு•
    4 hrs ago
  • தாராபுரத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் இடையே வாக்குவாதம் தாராபுரத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் பரபரப்பு கட்சி கொடி கட்டிய காரை நிறுத்திய போலீசார் – இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் வாக்குவாதம் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தில், கட்சி கொடி கட்டிய காரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தாராபுரம் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. இதில் இந்து மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஈஸ்வரன், கட்சி கொடி கட்டப்பட்ட காரில் ஊர்வலத்தில் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், கொடி கட்டிய காரை நிறுத்தியதாக தெரிகிறது. தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுவதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், ஊர்வலத்தில் கட்சி கொடியுடன் கார் செல்லக்கூடாது என போலீசார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஈஸ்வரனுக்கும் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், காரை அங்கிருந்து எடுத்துச் செல்லுமாறும், இல்லையெனில் காரை பறிமுதல் செய்ய நேரிடும் என போலீசார் எச்சரித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஊர்வலத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த டிஎஸ்பி சிவகுமார் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு காணப்பட்டு, விநாயகர் சிலை ஊர்வலம் தொடர்ந்து நடைபெற்றது. தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் நிலையில், விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கப்பட்டிருந்தபோதும், கட்சி கொடி கட்டிய கார் ஊர்வலத்தில் செல்லக்கூடாது என போலீசார் தெரிவித்த சம்பவம் அப்பகுதியில் பேசுபொருளாகியுள்ளது.
    1
    தாராபுரத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் இடையே வாக்குவாதம்
தாராபுரத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் பரபரப்பு
கட்சி கொடி கட்டிய காரை நிறுத்திய போலீசார் – இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள்  வாக்குவாதம்
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தில், கட்சி கொடி கட்டிய காரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தாராபுரம் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. இதில் இந்து மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஈஸ்வரன், கட்சி கொடி கட்டப்பட்ட காரில் ஊர்வலத்தில் சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், கொடி கட்டிய காரை நிறுத்தியதாக தெரிகிறது. தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுவதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், ஊர்வலத்தில் கட்சி கொடியுடன் கார் செல்லக்கூடாது என போலீசார் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக ஈஸ்வரனுக்கும் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், காரை அங்கிருந்து எடுத்துச் செல்லுமாறும், இல்லையெனில் காரை பறிமுதல் செய்ய நேரிடும் என போலீசார் எச்சரித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் ஊர்வலத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த டிஎஸ்பி சிவகுமார் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு காணப்பட்டு, விநாயகர் சிலை ஊர்வலம் தொடர்ந்து நடைபெற்றது.
தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் நிலையில், விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கப்பட்டிருந்தபோதும், கட்சி கொடி கட்டிய கார் ஊர்வலத்தில் செல்லக்கூடாது என போலீசார் தெரிவித்த சம்பவம் அப்பகுதியில் பேசுபொருளாகியுள்ளது.
    user_Dinesh
    Dinesh
    கோபிசெட்டிபாளையம், ஈரோடு, தமிழ்நாடு•
    1 hr ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.