ஆர்.வி.எஸ்.கல்வி, மருத்துவ, விவசாய பண்பாட்டு அறக்கட்டளையின் நிறுவன தலைவர் முனைவர் (Dr) K.V.குப்புசாமி செட்டியார் அய்யா அவர்களின் 85-ஆம் ஆண்டு அகவை தினத்தில் ஒரு ஜோடி தம்பதியர்களுக்கு திருமணம்... கோவை மாவட்டம், சூலூர் வட்டம், கண்ணம்பாளையம் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அனைவருக்கு அருள்பாலித்து வரும் அருள்மிகு குமரன்கோட்டம் சுவாமிநாத சுவாமி திருக்கோயிலின் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டும், ஆர்.வி.எஸ்.கல்வி, மருத்துவ, விவசாய பண்பாட்டு அறக்கட்டளையின் நிறுவன தலைவர் முனைவர் (Dr) K.V.குப்புசாமி செட்டியார் அய்யா அவர்களின் 85-ஆம் ஆண்டு அகவை தினத்தை முன்னிட்டும் ஆர்.வி.எஸ்.ஆறு படைவீடு பண்பாட்டு அறக்கட்டளை ஆன்மீக அருளாளர்களின் அருள் ஆசியுடன் துவக்கிவைக்கப்பட்டது. அத்துடன் சூலூர் "இந்திய தமிழ் தேசிய களம்" அமைப்பினர்களால் ஒரு ஜோடி தம்பதியர்களுக்கு அனைத்து சீர்வரிசையுடன் திருமணமும் நடத்தி வைக்கப்பட்டது. இந்த திருவிழா நிகழ்வுகளில் சிறப்பு அம்சமாக காணப்பட்டது.
ஆர்.வி.எஸ்.கல்வி, மருத்துவ, விவசாய பண்பாட்டு அறக்கட்டளையின் நிறுவன தலைவர் முனைவர் (Dr) K.V.குப்புசாமி செட்டியார் அய்யா அவர்களின் 85-ஆம் ஆண்டு அகவை தினத்தில் ஒரு ஜோடி தம்பதியர்களுக்கு திருமணம்... கோவை மாவட்டம்,
சூலூர் வட்டம், கண்ணம்பாளையம் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அனைவருக்கு அருள்பாலித்து வரும் அருள்மிகு குமரன்கோட்டம் சுவாமிநாத சுவாமி திருக்கோயிலின் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டும், ஆர்.வி.எஸ்.கல்வி, மருத்துவ, விவசாய பண்பாட்டு அறக்கட்டளையின்
நிறுவன தலைவர் முனைவர் (Dr) K.V.குப்புசாமி செட்டியார் அய்யா அவர்களின் 85-ஆம் ஆண்டு அகவை தினத்தை முன்னிட்டும் ஆர்.வி.எஸ்.ஆறு படைவீடு பண்பாட்டு அறக்கட்டளை ஆன்மீக அருளாளர்களின் அருள் ஆசியுடன் துவக்கிவைக்கப்பட்டது.
அத்துடன் சூலூர் "இந்திய தமிழ் தேசிய களம்" அமைப்பினர்களால் ஒரு ஜோடி தம்பதியர்களுக்கு அனைத்து சீர்வரிசையுடன் திருமணமும் நடத்தி வைக்கப்பட்டது. இந்த திருவிழா நிகழ்வுகளில் சிறப்பு அம்சமாக காணப்பட்டது.
- தேர்தல் பணிமனை திறப்புவிழா விழாக்கோலம் பூண்ட தாராபுரம் தாராபுரத்தில் மின்வெட்டு, மின்கட்டணப் பிரச்சினை திடீர் கனமழையிலும் உரையாற்றிய கே.என்.நேரு விழா நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென கனமழை பெய்தது. இதனால் விழா மேடையில் இருந்த தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மழையில் நனைந்தனர். இருப்பினும், மழையைப் பொருட்படுத்தாமல் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பொதுமக்களிடையே உரையாற்றினார். மழையில் இருந்து தப்பிக்க தொண்டர்கள் நாற்காலிகளைத் தலைக்கு மேல் வைத்துக் கொண்டு தலைவர்களின் பேச்சைக் கேட்டனர். சிலர் மழையில் நனைந்தபடியே நிகழ்ச்சியில் தொடர்ந்து பங்கேற்றனர். மழை பெய்தபோதும் கூட்டம் கலைந்து செல்லாமல் இருந்தது விழாவில் குறிப்பிடத்தக்கதாக அமைந்தது. தாராபுரத்தில் மின்வெட்டு, மின்கட்டணப் பிரச்சினை முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், தாராபுரம் பகுதியில் கடந்த நான்கு மாதங்களாக மழையின்றி வறட்சி நிலவி வந்த நிலையில், திமுக வேட்பாளர் சுகன்யாவின் தேர்தல் பணிமனை திறப்பு விழாவில் திடீரென கனமழை பெய்துள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெயரை அறிவித்தவுடன் திமுகவிற்கு வெற்றி மழை பெய்துவிட்டது எனக் குறிப்பிட்டார். மேலும், தாராபுரம் பகுதியில் மின்சாரக் கட்டணக் கணக்கீட்டுப் பணிகள் தொய்வாக நடைபெறுவதாகவும், 200 யூனிட் மின்சாரம் தொடர்பான கணக்கீட்டுப் பணிகளில் ஏற்பட்டுள்ள சிக்கல்களால் மின்நுகர்வோர் பாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். மின்கட்டணமாக ரூ.2,000 செலுத்தி வந்தவர்களுக்கு ரூ.10,000 வரை கட்டணம் விதிக்கப்படுவதாகவும், அதிக மின்கட்டணம் செலுத்திய பின்னரும் தாராபுரத்தில் இரவு, பகல் என அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர்ந்து நிலவி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். மகளிர் உரிமைத்தொகை குறித்து சக்கரபாணி பேச்சு முன்னாள் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேசுகையில், திமுக ஆட்சி அமைந்தால் வேலையில்லாத படித்த இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.2,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்டார். தற்போதைய தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் தேர்தல் வாக்குறுதிகளில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என்றும், திமுக ஆட்சியில் வழங்கப்பட்டு வந்த மகளிர் உரிமைத்தொகையான ரூ.1,000 மட்டுமே தொடர்ந்து வழங்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். மேலும், தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி அனைத்து மகளிருக்கும் ரூ.2,500 மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படவில்லை என்றும் அவர் பேசினார். கனமழையால் சிறப்புப் பேச்சாளர்கள் உரையாற்ற முடியவில்லை இதனிடையே, விழா நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இடைவிடாது கனமழை பெய்ததால் நிகழ்ச்சியில் பாதிப்பு ஏற்பட்டது. மழை காரணமாக திட்டமிட்டபடி சிறப்புப் பேச்சாளர்கள் அனைவரும் உரையாற்ற முடியாத நிலை ஏற்பட்டது. மழை தொடர்ந்து பெய்ததால் தலைவர்கள் அவசர அவசரமாக உரையாற்றிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். இருப்பினும், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஒரே இடத்தில் திரண்டிருந்ததால் விழா களைகட்டியது. மழை நின்றுவிடும் என்ற எதிர்பார்ப்பில் பலர் புதிய பேருந்து நிலைய மேம்பாலத்தின் கீழும், சாலையின் இருபுறங்களிலும் காத்திருந்தனர். தொடர்ந்து மழை பெய்ததால் தொண்டர்கள் மழையில் நனைந்தபடியே அங்கிருந்து கலைந்து சென்றனர். தாராபுரத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு பெய்த கனமழைக்கு மத்தியில் நடைபெற்ற திமுக தேர்தல் பணிமனை திறப்பு விழா, அரசியல் பரபரப்பையும் தொண்டர்களின் உற்சாகத்தையும் ஒருசேர வெளிப்படுத்தும் நிகழ்வாக அமைந்தது.2
- தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேவதானப்பட்டியில் குடிநீர் வேண்டி பெண்கள் சாலை மறியல் முயற்சி காவல் நிலையத்தில் பேரூராட்சி அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம் தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட சாத்தா கோவில்பட்டி பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாகச் சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்துப் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதிப் பெண்களும் பொதுமக்களும், தேவதானப்பட்டி காவல் நிலையம் அருகே திரண்டு திடீர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், மறியலில் ஈடுபட முயன்றவர்களைத் தடுத்து நிறுத்தி காவல் நிலையத்திற்குள் அழைத்துச் சென்றனர். தொடர்ந்து காவல் நிலையத்திற்குள் குவிந்த பொதுமக்கள், தங்களின் கோரிக்கையைக் கண்டுகொள்ளாத பேரூராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து அதிகாரிகளுடன் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, பேரூராட்சி அலுவலர்களைக் காவல் நிலையத்திற்கு வரவழைத்துக் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சாத்தா கோவில்பட்டி பகுதிக்கு உடனடியாகக் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பேரூராட்சி அதிகாரிகள் உறுதியளித்தனர். அதிகாரிகளின் இந்த உறுதியை ஏற்றுப் பொதுமக்கள் மற்றும் பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.1
- குடிதண்ணீர் இல்லாமல் தவிக்கும் திண்டுக்கல் மாவட்ட வனவிலங்குகள் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் தண்ணீருக்காக சாலையில் திரியும் அரிய வகை சிங்கவால் குரங்குகள் சாலையில் ஓடிய மழைநீரை குரங்குகள் அருந்திய நிலையில், வனவிலங்குகளுக்கு குடிநீர் வசதி அமைத்து தர விலங்கு நல ஆர்வலர்கள் கோரிக்கை1
- திண்டுக்கல் மற்றும் திண்டுக்கல் மாவட்ட சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி. திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளான செட்டிநாயக்கன்பட்டி, சிலப்பாடி, தாடிக்கொம்பு , சின்னாளப்பட்டி, காந்திகிராமம், ஆத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் நீண்ட நாட்களாக போதிய மழையில்லாமல் வறண்ட வானிலை காரணமாக கடும் வெப்பம் இருந்து வந்த நிலையில் இன்று மாலை 5 மணி முதல் கனமழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து சற்று குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.1
- இந்து எழுச்சி முன்னணி 11ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் தேனியில் விமர்சியாக நடந்தது தேனியில் செயல்பட்டு வரும் இந்து எழுச்சி முன்னணி அமைப்பு சார்பில் 11ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது இந்த ஊர்வலத்திற்கு நிறுவனத் தலைவர் பொன் ரவி வழிகாட்டிட மாவட்ட தலைவர் ராமராஜ் தலைமை வகிக்க மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் முன்னிலையில் 11ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது இந்த ஊர்வலத்தில் செண்டா மேளம் முழங்க அரிசி கொம்பன் யானை முன் நின்று வழிநடத்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தலையில் முளைப்பாரி சுமந்தும், 50-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடங்கள் ஏந்தி ஊர்வலம் நடைபெற்றது போலீசாரால் அனுமதி வழங்கப்பட்டிருந்த அரண்மனை புதூர் முல்லை ஆற்றில் கரைக்க இந்த ஊர்வலமானது அல்லிநகரம் சாலை பிள்ளையார் கோவிலில் தொடங்கி பெரியகுளம் சாலை நேரு சிலை மதுரை சாலை வழியாக அரண்மனை புதூர் முல்லை ஆற்று பாலம் வந்தடைந்து அங்கு சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டு நகர் முழுவதும் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட விநாயகர் திருமேனிகள் முல்லை ஆற்றில் கரைக்கப்பட்டது இந்த ஊர்வலத்திற்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அலெக்ஸாண்டர் ஜெரால்டு தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்1
- ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் காற்றுடன் மிதமான மழை... ராசிபுரம் ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் காற்றுடன் மிதமான மழை... நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது. ராசிபுரம், பட்டணம், வடுகம், நாமகிரிப்பேட்டை, குருசாமிபாளையம், வெண்ணந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான காற்றுடன் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. காலை முதலே வெயில் வாட்டி வந்த நிலையில், தற்போது பெய்து வரும் மழையால் வெப்பம் தணிந்து, ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இதமான குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. மழை காரணமாக சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக மிதமான மழை பெய்து வருகிறது....1
- NGGO காலனியில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி கற்சிலை வடிவில் பிரம்மாண்ட விநாயகர் சிலை வைத்து வழிபாடு சுற்றுப்பகுதி பொதுமக்கள் திரளாக வந்து தரிசனம் செய்தனர் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி கோவை துடியலூர் அருகே அசோகபுரம், என் ஜி ஜி ஓ காலனி பகுதியில் இந்து முன்னணி சார்பில் கோவில் வடிவில் செட் அமைத்து கற்சிலை வடிவில் பிரம்மாண்டமான விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்தனர். சுற்று பகுதியில் இருந்து திரளான பொதுமக்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பொங்கல், சுண்டல், கொழுக்கட்டைகள் அன்னதானமாக வழங்கினர். விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் தமிழகத்திலும் விநாயகரின் பிரம்மாண்ட சிலைகளை வைத்தும், அன்னதானம், ஊர்வலம் நடத்தியும் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இதில் கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல், ரங்கம்மாள் காலனி, என் ஜி ஜி ஓ காலனி, நரசிம்மநாயக்கன்பாளையம், ராக்கிபாளையம், பன்னீர்மடை, ஏ பி எம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் 300 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை துடியலூர் அருகே அசோகபுரம், என் ஜி ஜி ஓ காலனி பகுதியில் இந்து முன்னணி சார்பில் கோவில் வடிவில் செட் அமைத்து கற்சிலை வடிவில் பிரம்மாண்டமான விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்தனர். சுற்று பகுதியில் இருந்து திரளான பொதுமக்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பொங்கல், சுண்டல், கொழுக்கட்டைகள் அன்னதானமாக வழங்கினர். மாலை விநாயகர் திருவீதி உலா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை இந்து முன்னணி நிர்வாகிகள் தியாகராஜன், சுதாகர், மணி, சரவணன், ஜீவானந்தம், ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.4
- காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த முடியும் என்பதை நிரூபித்துக் காட்டும் அரசியல் தலைவர்களுக்கு ரூ.10 கோடி பரிசு வழங்கப்படும் என்றும் கல் இறக்குவதும் பருகுவதும் போதைப்பொருள் என நிரூபித்தால் அது குறித்து வாதிட விவசாய சங்க நிர்வாகிகளுடன் அரசியல் தலைவர்கள் வந்து அதை நிரூபித்தால் அவர்களுக்கும் 10 கோடி வழங்கப்படும் விஜய், மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட எந்த அரசியல் தலைவராக இருந்தாலும் இந்தச் சவாலை ஏற்கத் தயாரா? என்றும் கேள்வி ரூ.10 கோடி பரிசு அறிவிப்பு! திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க அலுவலக கட்டிடத்தில் தமிழ்நாடு கல் இயக்க ஒருங்கிணைப்பாளர் கல் நல்ல சாமி பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது தாராபுரம் இடைத்தேர்தலில் அனைத்து விவசாய சங்கங்களின் சார்பாக தாராபுரம் பொள்ளாச்சி சாலையில் உள்ள பெஸ்ட் நகரை சேர்ந்த முத்துச்சாமி வயது 55 என்ற வேட்பாளரை அறிமுகப்படுத்தி வைத்து பேசிய கல் நல்ல சாமி தெரிவித்ததாவது:- காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த முடியும் என்பதை நிரூபித்துக் காட்டும் அரசியல் தலைவர்களுக்கு ரூ.10 கோடி பரிசு வழங்கப்படும் என்றும் கல் இறக்குவதும் பருகுவதும் போதைப்பொருள் என நிரூபித்தால் அது குறித்து வாதிட விவசாய சங்க நிர்வாகிகளுடன் அரசியல் தலைவர்கள் வந்து அதை நிரூபித்தால் அவர்களுக்கும் 10 கோடி வழங்கப்படும் என விவசாயிகள் சங்கம் சார்பில் பகிரங்க சவால் விடுத்துள்ளது. தாராபுரம் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்திற்கு வரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட எந்த அரசியல் தலைவராக இருந்தாலும் இந்தச் சவாலை ஏற்கத் தயாரா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. விவசாயிகள் சங்க நிர்வாகிகள், காவிரி நதிநீர் விவகாரம் மற்றும் அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். கட்சி மாறுவது காலம் காலமாக நடப்பதுதான்! அப்போது பேசிய விவசாயிகள் சங்க நிர்வாகி, அரசியல் கட்சிகளில் இருந்து தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் மற்றொரு கட்சிக்குச் செல்வது காலம் காலமாக நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டார். கட்சி மாறுபவர்களுக்கு உரிய பதவியும் மரியாதையும் வழங்கப்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்த அவர், இதற்குத் திருவள்ளுவரின் குறளையும் மேற்கோள் காட்டினார். “கட்சி மாறுபவர்களுக்கு உரிய மரியாதையும் சன்மானமும் வழங்க வேண்டும் என்று வள்ளுவரே கூறியிருக்கிறார். ‘உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன் இழைத்திருந்து எண்ணிக்கொளல்’ என்பது வள்ளுவர் காட்டிய வழி. இதிகாச காலத்திலேயே தரப்பு மாறுவது இருந்திருக்கிறது” என்று தெரிவித்தார். ரூ.10 கோடி பரிசு அறிவிப்பு! தொடர்ந்து, காவிரி நதிநீர் விவகாரத்தில் அரசியல் கட்சிகள் அளித்து வரும் வாக்குறுதிகள் குறித்து அவர் பேசுகையில், விவசாயிகளின் நீண்டகாலப் பிரச்சினைக்கு இதுவரை நிரந்தரத் தீர்வு காணப்படவில்லை என்று குற்றம்சாட்டினார். “தாராபுரம் தொகுதியில் தற்போதைய முதல்வர் ஜோசப் விஜய் பிரச்சாரத்திற்கு வந்தாலும் சரி, முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்தாலும் சரி, எடப்பாடி பழனிசாமி அல்லது இடதுசாரித் தலைவர்கள் வந்தாலும் சரி, யார் வந்தாலும் எங்களுக்கு ஒரு கேள்வி இருக்கிறது. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த முடியும் என்பதை நிரூபித்துக் காட்டுங்கள். அவ்வாறு நிரூபித்தால் அவர்களுக்கு ரூ.10 கோடி பரிசு வழங்கத் தயாராக இருக்கிறோம். இந்தக் கேள்வியை முன்னிறுத்தித்தான் நாங்கள் தேர்தலில் களமிறங்குகிறோம். ஏட்டுச் சுரைக்காய், கானல் நீர், மாய மான் ஆகியவற்றைக் கையில் வைத்துக்கொண்டு அலைவது போல அரசியல் கட்சிகள் விவசாயிகளுக்கு வெறும் நம்பிக்கைகளை மட்டுமே அளித்து வருகின்றன. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கம்” என்று ஆவேசமாகத் தெரிவித்தார். தேர்தல் வாக்குறுதிகளால் விவசாயிகளுக்கு என்ன பயன். காவிரி நதிநீர் பிரச்சினை விவசாயிகளின் வாழ்வாதாரத்துடன் நேரடியாகத் தொடர்புடையது. எனவே, தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சிகள் அளிக்கும் வாக்குறுதிகள் நடைமுறையில் சாத்தியமாகுமா என்பதையும், அவற்றை நிறைவேற்றுவதற்கான தெளிவான திட்டங்கள் உள்ளனவா என்பதையும் மக்கள் அறிந்துகொள்ள வேண்டும் என விவசாயிகள் சங்க நிர்வாகிகள் வலியுறுத்தினர். தேர்தல் பிரச்சாரத்தின்போது விவசாயிகளின் வாக்குகளைப் பெறுவதற்காக வெற்று வாக்குறுதிகளை அளிப்பதை அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். காவிரி விவகாரத்தில் தீர்வு காண முடியும் என்று கூறும் அரசியல் தலைவர்கள், அதற்கான வழிமுறைகளையும் நடைமுறைச் சாத்தியங்களையும் வெளிப்படையாக விளக்க வேண்டும் என்பதே தங்களது எதிர்பார்ப்பு என்றும் குறிப்பிட்டனர். தாராபுரம் தேர்தல் களத்தில் புதிய விவாதம்! தாராபுரம் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்து வரும் நிலையில், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ள ரூ.10 கோடி பரிசு சவால் அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகளின் நீண்டகாலக் கோரிக்கைகளுக்கு அரசியல் கட்சிகள் அளிக்கும் பதில் என்ன? தேர்தல் பிரச்சாரத்திற்கு வரும் தலைவர்கள் இந்தச் சவாலை ஏற்றுக்கொள்வார்களா? காவிரி விவகாரத்தில் தங்களது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துவார்களா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு உறுதியான தீர்வு காணப்பட வேண்டும் என்பதையும், தேர்தல் வாக்குறுதிகள் வெறும் வார்த்தைகளாக இல்லாமல் செயல்பாட்டுக்கு வர வேண்டும் என்பதையும் வலியுறுத்தியே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக விவசாயிகள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.1
- மறைந்த முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக அவரது திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் மறைந்த முன்னாள் முதல்வரும் பேரறிஞர் அண்ணா அவர்களின் 118 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் பெரியகுளம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக பெரியகுளம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ வெங்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் தேனி மாவட்டம் பெரியகுளம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக பெரியகுளம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ வெங்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் இந்நிகழ்ச்சியில் தெற்கு நகரக் கழகச் செயலாளர் VDR,பாலா, வடக்கு நகர் கழக செயலாளர் VS.தினேஷ், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பாலாஜி, நகர் மன்ற உறுப்பினர்கள் வெங்கடேசன் பால்பாண்டி, மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் மாஞ்சோலை செல்வம், அம்மா பேரவை இணைச் செயலாளர் முருகன்,நகர அவை தலைவர் மோகன், தொழிற்சங்க செயலாளரா ஜீவானந்தம் அடுத்து,மாவட்டத் துணைத் தலைவர் தர்மலிங்கம் வார்டு செயலாளர்கள் சார்பணி நிர்வாகிகள் உள்ளிட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமான கலந்துகொண்டு அறிஞர் அண்ணாவின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்1