logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

கோவையில் சி.ஐ.எஸ்.சி.இ மண்டல விளையாட்டுப் போட்டிகள் : செயிண்ட் ஜூட்ஸ் பள்ளி முதலிடம் பிடித்து சாதனை. கோவை கோவையில் சி.ஐ.எஸ்.சி.இ மண்டல விளையாட்டுப் போட்டிகள் : செயிண்ட் ஜூட்ஸ் பள்ளி முதலிடம் பிடித்து சாதனை. இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் சார்பில், மண்டலம் பி (Zone B) அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் 2026 கோவையில் நடைபெற்று முடிந்தது. கோவை ஜி.டி. பள்ளி நடத்திய இப்போட்டிகள், ஜூலை 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நேரு ஸ்டேடியத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நடுவர்களால் சிறப்பாக நடத்தப்பட்ட இப்போட்டிகளில், மண்டலம் பி-க்குட்பட்ட 45 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 700 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். செயிண்ட் ஜூட்ஸ் பள்ளி மாணவ, மாணவிகள் இப்போட்டியில் மிகச்சிறப்பான திறமையை வெளிப்படுத்திய செயிண்ட் ஜூட்ஸ் பள்ளி ஒட்டுமொத்தப் பிரிவில் 355 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து அசத்தியது. மாணவர்கள் - 34 தங்கப்பதக்கங்களும், மாணவிகள் - 26 தங்கப்பதக்கங்களும் என மொத்தம் 60 தங்கப் பதக்கங்களை வென்றனர். மாணவர்கள் 23 வெள்ளிப் பதக்கங்களும், , மாணவிகள் 22 வெள்ளிப் பதக்கங்கள் என மொத்தம் 45 பதக்கங்களை வென்றனர். மாணவர்கள் - 16 வெண்கல பதக்கங்களையும், , மாணவிகள் - 7 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 23 வெண்கல பதக்கங்களை வென்றனர். இத்தொடரில் 7 மாணவர்கள் மற்றும் 5 மாணவிகள் என மொத்தம் 12 பேர் முந்தைய சாதனைகளை முறியடித்து புதிய சாதனைகளை படைத்தனர்: மாணவர்கள் பிரிவில், லோகமித்ரன் செல்வராஜ் (ஜூனியர்) - ஹேமர் எறிதல் (32.81 மீ) மற்றும் ஈட்டி எறிதல் (36.80 மீ),தன்வந்த் ராஜா (ஜூனியர்) - 1500 மீ ஓட்டம் (4:40:00 நிமிடங்கள்), கிருத்திக் (ஜூனியர்) - 5 கி.மீ நடத்தல் (31:08:96 நிமிடங்கள்), சபரிஷ் பிரணவ் ராஜா (ஜூனியர்) மும்முனைத் தாண்டுதல் ( 12.27 மீ), ரித்விக் ராகுல் (சீனியர்) - 5 கி.மீ நடத்தல் (29:13 நிமிடங்கள்), வைஷ்ணவ் சர்வின் (சீனியர்) - 110 மீ தடைதாண்டும் ஓட்டம் (16.40 வினாடிகள்) என சாதனை படைத்தனர்.மாணவிகள் பிரிவில், சிந்து வர்ஷினி (சப்-ஜூனியர்) - 80 மீ தடைதாண்டும் ஓட்டம் (15.14 வினாடிகள்) ஆராத்தியா (சப்-ஜூனியர்) - நீளம் தாண்டுதல் (4.49 மீ), விவிதா சிவகுமார் (ஜூனியர்) - நீளம் தாண்டுதல் (4.79 மீ), பூர்விகா (சீனியர்) - ஹேமர் எறிதல் (36.85 மீ) மற்றும் குண்டு எறிதல் (9.62 மீ) ஆகியவற்றில் சாதனை படைத்தனர். விழாவில் ஜி.டி. பள்ளியின் முன்னாள் மாணவரும், தொடர்ச்சியாக 4 முறை இந்திய தேசிய டூரிங் கார் சாம்பியன் பட்டம் வென்ற பிரபல ரேஸ் வீரருமான அர்ஜுன் நரேந்திரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வழங்கிப் பாராட்டினார். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி முதல்வர் சரோ தன்ராஜன், பள்ளியின் தாளாளர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பெருமிதத்துடன் வாழ்த்தினர்.

7 hrs ago
user_Political Pulse
Political Pulse
Reporter கோயம்புத்தூர் தெற்கு, கோயம்புத்தூர், தமிழ்நாடு•
7 hrs ago
406cd25a-3d4f-47b4-94c1-e57a9a53a3c8

கோவையில் சி.ஐ.எஸ்.சி.இ மண்டல விளையாட்டுப் போட்டிகள் : செயிண்ட் ஜூட்ஸ் பள்ளி முதலிடம் பிடித்து சாதனை. கோவை கோவையில் சி.ஐ.எஸ்.சி.இ மண்டல விளையாட்டுப் போட்டிகள் : செயிண்ட் ஜூட்ஸ் பள்ளி முதலிடம் பிடித்து சாதனை. இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் சார்பில், மண்டலம் பி (Zone B) அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் 2026 கோவையில் நடைபெற்று முடிந்தது. கோவை ஜி.டி. பள்ளி நடத்திய இப்போட்டிகள், ஜூலை 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நேரு ஸ்டேடியத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நடுவர்களால் சிறப்பாக நடத்தப்பட்ட இப்போட்டிகளில், மண்டலம் பி-க்குட்பட்ட 45 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 700 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். செயிண்ட் ஜூட்ஸ் பள்ளி மாணவ, மாணவிகள் இப்போட்டியில் மிகச்சிறப்பான திறமையை வெளிப்படுத்திய செயிண்ட் ஜூட்ஸ் பள்ளி ஒட்டுமொத்தப் பிரிவில் 355 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து அசத்தியது. மாணவர்கள் - 34 தங்கப்பதக்கங்களும், மாணவிகள் - 26 தங்கப்பதக்கங்களும் என மொத்தம் 60 தங்கப் பதக்கங்களை வென்றனர். மாணவர்கள் 23 வெள்ளிப் பதக்கங்களும், , மாணவிகள் 22 வெள்ளிப் பதக்கங்கள் என மொத்தம் 45 பதக்கங்களை வென்றனர். மாணவர்கள் - 16 வெண்கல பதக்கங்களையும், , மாணவிகள் - 7 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 23 வெண்கல பதக்கங்களை வென்றனர். இத்தொடரில் 7 மாணவர்கள் மற்றும் 5 மாணவிகள் என மொத்தம் 12 பேர் முந்தைய சாதனைகளை முறியடித்து புதிய சாதனைகளை

63bb69ff-2734-4846-88d1-ff81d34ff7f9

படைத்தனர்: மாணவர்கள் பிரிவில், லோகமித்ரன் செல்வராஜ் (ஜூனியர்) - ஹேமர் எறிதல் (32.81 மீ) மற்றும் ஈட்டி எறிதல் (36.80 மீ),தன்வந்த் ராஜா (ஜூனியர்) - 1500 மீ ஓட்டம் (4:40:00 நிமிடங்கள்), கிருத்திக் (ஜூனியர்) - 5 கி.மீ நடத்தல் (31:08:96 நிமிடங்கள்), சபரிஷ் பிரணவ் ராஜா (ஜூனியர்) மும்முனைத் தாண்டுதல் ( 12.27 மீ), ரித்விக் ராகுல் (சீனியர்) - 5 கி.மீ நடத்தல் (29:13 நிமிடங்கள்), வைஷ்ணவ் சர்வின் (சீனியர்) - 110 மீ தடைதாண்டும் ஓட்டம் (16.40 வினாடிகள்) என சாதனை படைத்தனர்.மாணவிகள் பிரிவில், சிந்து வர்ஷினி (சப்-ஜூனியர்) - 80 மீ தடைதாண்டும் ஓட்டம் (15.14 வினாடிகள்) ஆராத்தியா (சப்-ஜூனியர்) - நீளம் தாண்டுதல் (4.49 மீ), விவிதா சிவகுமார் (ஜூனியர்) - நீளம் தாண்டுதல் (4.79 மீ), பூர்விகா (சீனியர்) - ஹேமர் எறிதல் (36.85 மீ) மற்றும் குண்டு எறிதல் (9.62 மீ) ஆகியவற்றில் சாதனை படைத்தனர். விழாவில் ஜி.டி. பள்ளியின் முன்னாள் மாணவரும், தொடர்ச்சியாக 4 முறை இந்திய தேசிய டூரிங் கார் சாம்பியன் பட்டம் வென்ற பிரபல ரேஸ் வீரருமான அர்ஜுன் நரேந்திரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வழங்கிப் பாராட்டினார். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி முதல்வர் சரோ தன்ராஜன், பள்ளியின் தாளாளர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பெருமிதத்துடன் வாழ்த்தினர்.

More news from Tamil Nadu and nearby areas
  • கிரிக்கெட் விளையாடும் போது நடந்த சில ரசிக்கும் படியான காட்சிகள்.
    1
    கிரிக்கெட் விளையாடும் போது நடந்த சில ரசிக்கும் படியான காட்சிகள்.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist Coimbatore South, Tamil Nadu•
    6 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில் நிலமோசடி சம்பந்தமாக சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் அவர்கள் இரண்டாவது நாளாக சிபிசிஐடி காவல்துறையினரிடம் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்
    1
    திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில் நிலமோசடி சம்பந்தமாக சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் அவர்கள் இரண்டாவது நாளாக சிபிசிஐடி காவல்துறையினரிடம் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்
    user_RAJA news
    RAJA news
    Oddanchatram, Dindigul•
    3 hrs ago
  • ஒட்டன்சத்திரம் அருகே 32 1/2பவுன் மற்றும் 280 கிராம் வெள்ளி பொருட்கள் திருடியவர் கைது மாவட்ட எஸ்பி பாராட்டு! ஒட்டன்சத்திரம் அருகே 32 1/2பவுன் மற்றும் 280 கிராம் வெள்ளி பொருட்கள் திருடியவர் கைது மாவட்ட எஸ்பி பாராட்டு! திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே பழைய பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் த/பெ பாண்டி கடந்த 7 ந் தேதி பூட்டை உடைத்து‌ பீரோவிலிருந்த 32 1/2 பவுன் நகை மற்றும் 280 கிராம் வெள்ளி பொருட்களை மர்ம நபர் திருடி சென்றார். இது குறித்து ஒட்டன்சத்திரம் கோட்ட காவல் துணை காணிப்பாளர் கார்த்திகேயன் ஆய்வாளர் லிங்கபாண்டியன் சார்பு ஆய்வாளர் சிவராஜ் தலைமையிலான போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். இப்பகுதியில் கண்காணிப்பு கேமராவில் பதிவு ஆகி உள்ள காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் திருட்டு சம்பவத்தில் திண்டுக்கல் அருகே கதிரியன் குளத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவர் ஈடுபட்டதும் அவர் மற்றொரு வழக்கில் திருட்டு வழக்கில் கைதாகி மதுரை சிறையில் இருப்பதும் தெரியவந்தது இதையடுத்து அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர் .அப்போது அவர் பாலகிருஷ்ணன் வீட்டில் திருடிய இத ஒப்பிக்கொண்டதை அடுத்து அவரை கைது செய்து அவரிடமிருந்து 32 1/2 பவுன் நகைகள் 280 கிராம் வெள்ளி பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர் குற்றவாளி விரைந்து செயல்பட்டு கைது செய்து நகைகளை முழுவதையும் மீட்ட ஒட்டன்சத்திரம் போலீசாரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டினார்.
    2
    ஒட்டன்சத்திரம் அருகே 32 1/2பவுன் மற்றும் 280 கிராம் வெள்ளி பொருட்கள் திருடியவர் கைது மாவட்ட எஸ்பி பாராட்டு!
ஒட்டன்சத்திரம் அருகே 32 1/2பவுன் மற்றும் 280 கிராம் வெள்ளி பொருட்கள் திருடியவர் கைது மாவட்ட எஸ்பி பாராட்டு! 
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே பழைய பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் த/பெ பாண்டி கடந்த 7 ந் தேதி  பூட்டை உடைத்து‌ பீரோவிலிருந்த 32 1/2  பவுன் நகை மற்றும் 280 கிராம் வெள்ளி பொருட்களை மர்ம நபர் திருடி சென்றார். இது குறித்து  ஒட்டன்சத்திரம் கோட்ட காவல் துணை காணிப்பாளர் கார்த்திகேயன்  ஆய்வாளர் லிங்கபாண்டியன் சார்பு ஆய்வாளர் சிவராஜ் தலைமையிலான போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர்.   இப்பகுதியில் கண்காணிப்பு கேமராவில் பதிவு ஆகி உள்ள காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் திருட்டு சம்பவத்தில் திண்டுக்கல் அருகே கதிரியன் குளத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவர் ஈடுபட்டதும் அவர் மற்றொரு வழக்கில் திருட்டு வழக்கில் கைதாகி மதுரை சிறையில் இருப்பதும் தெரியவந்தது இதையடுத்து அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர் .அப்போது அவர் பாலகிருஷ்ணன் வீட்டில் திருடிய இத ஒப்பிக்கொண்டதை அடுத்து அவரை கைது செய்து அவரிடமிருந்து 32 1/2  பவுன்  நகைகள் 280 கிராம்  வெள்ளி பொருட்களை போலீசார்  பறிமுதல் செய்தனர் குற்றவாளி விரைந்து செயல்பட்டு கைது செய்து நகைகளை முழுவதையும் மீட்ட ஒட்டன்சத்திரம் போலீசாரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டினார்.
    user_Elangovan
    Elangovan
    Local News Reporter ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், தமிழ்நாடு•
    23 hrs ago
  • இடுக்கியில் நிலச்சரிவுக்கு பெண் பலி; கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தது:இடுக்கியில் நிலச்சரிவுக்கு பெண் பலி; 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! ​ ​கேரள மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக மந்தமாக இருந்த தென்மேற்கு பருவமழை, கடந்த மூன்று நாட்களாக மீண்டும் தீவிரமடையத் தொடங்கியுள்ளது. நேற்று இரவு முழுவதும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக, பல்வேறு இடங்களில் நிலச்சரிவு மற்றும் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. ​ தமிழக-கேரள எல்லைப் பகுதியான இடுக்கி மாவட்டம், தொடுபுழா தாலுகாவிற்கு உட்பட்ட குடயத்தூர் கொலப்ரா அருகிலுள்ள அடூர் மலைப்பகுதியில் இன்று அதிகாலை திடீரெனப் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.இந்த இயற்கை சீற்றத்தில் சிக்கி சுமதி என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புத் துறையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டு, சுமதியின் சடலத்தைக் கைப்பற்றியுள்ளனர். ​ இதேபோல், கோட்டயம் மாவட்டத்திலும் இடைவிடாது பெய்து வரும் கனமழையால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.பூஞ்சார் தெக்கேக்கரா பையனித்தோட்டம் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு குடியிருப்பு வீடு முழுமையாகச் சேதமடைந்துள்ளது. ​ மழை நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில்; இடுக்கி, ஆலப்புழா, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம் மற்றும் கோழிக்கோடு ஆகிய 7 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ (Red Alert) விடுக்கப்பட்டுள்ளது. எஞ்சிய மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’ (Orange Alert) விடுக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ​ முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வயநாடு, இடுக்கி, பத்தனம்திட்டா, கோட்டயம், மலப்புரம் மற்றும் பாலக்காடு ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். ​ மீட்புப் பணிகளை விரைவுபடுத்தும் பொருட்டு, தமிழகத்தின் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இருந்து 34 வீரர்கள் அடங்கிய தேசிய பேரிடர் மீட்புப் படையின் சிறப்புப் பிரிவு கேரளா விரைந்துள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.
    1
    இடுக்கியில் நிலச்சரிவுக்கு பெண் பலி;

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தது:இடுக்கியில் நிலச்சரிவுக்கு பெண் பலி;
6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
​
​கேரள மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக மந்தமாக இருந்த தென்மேற்கு பருவமழை, கடந்த மூன்று நாட்களாக மீண்டும் தீவிரமடையத் தொடங்கியுள்ளது. நேற்று இரவு முழுவதும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக, பல்வேறு இடங்களில் நிலச்சரிவு மற்றும் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
​
தமிழக-கேரள எல்லைப் பகுதியான இடுக்கி மாவட்டம், தொடுபுழா தாலுகாவிற்கு உட்பட்ட குடயத்தூர் கொலப்ரா அருகிலுள்ள அடூர் மலைப்பகுதியில் இன்று அதிகாலை திடீரெனப் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.இந்த இயற்கை சீற்றத்தில் சிக்கி சுமதி என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புத் துறையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டு, சுமதியின் சடலத்தைக் கைப்பற்றியுள்ளனர்.
​
இதேபோல், கோட்டயம் மாவட்டத்திலும் இடைவிடாது பெய்து வரும் கனமழையால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.பூஞ்சார் தெக்கேக்கரா பையனித்தோட்டம் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு குடியிருப்பு வீடு முழுமையாகச் சேதமடைந்துள்ளது.
​
மழை நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில்; இடுக்கி, ஆலப்புழா, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம் மற்றும் கோழிக்கோடு ஆகிய 7 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ (Red Alert) விடுக்கப்பட்டுள்ளது. எஞ்சிய மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’ (Orange Alert) விடுக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
​
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வயநாடு, இடுக்கி, பத்தனம்திட்டா, கோட்டயம், மலப்புரம் மற்றும் பாலக்காடு ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
​
மீட்புப் பணிகளை விரைவுபடுத்தும் பொருட்டு, தமிழகத்தின் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இருந்து 34 வீரர்கள் அடங்கிய தேசிய பேரிடர் மீட்புப் படையின் சிறப்புப் பிரிவு கேரளா விரைந்துள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    4 hrs ago
  • மேகதாதுவில் அணை கட்டுவதற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கக் கூடாது என்பதை வலியுறுத்தி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் கரூர், ஆகஸ்ட் 1: மேகதாதுவில் அணை கட்டுவதற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கக் கூடாது என்பதை வலியுறுத்தி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (CPI) கரூர் மாவட்டத்தின் 5ஆம் வட்டம் சார்பில் இன்று (01.08.2026) காலை 10.00 மணியளவில் கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளர் தோழர் K. கலாராணி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர், காவேரி தமிழ்நாட்டின் உயிர்நதி என்பதையும், மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்திற்கு ஒன்றிய அரசு எந்தவித அனுமதியும் வழங்கக் கூடாது என்பதையும் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். மேலும், காவேரி நீர் உரிமையைப் பாதுகாக்க ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    1
    மேகதாதுவில் அணை கட்டுவதற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கக் கூடாது
என்பதை வலியுறுத்தி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
கரூர், ஆகஸ்ட் 1:
மேகதாதுவில் அணை கட்டுவதற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கக் கூடாது என்பதை வலியுறுத்தி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (CPI) கரூர் மாவட்டத்தின் 5ஆம் வட்டம் சார்பில் இன்று (01.08.2026) காலை 10.00 மணியளவில் கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளர் தோழர் K. கலாராணி தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர், காவேரி தமிழ்நாட்டின் உயிர்நதி என்பதையும், மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்திற்கு ஒன்றிய அரசு எந்தவித அனுமதியும் வழங்கக் கூடாது என்பதையும் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். மேலும், காவேரி நீர் உரிமையைப் பாதுகாக்க ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    user_Karur Wood's Tv
    Karur Wood's Tv
    Photographer கரூர், கரூர், தமிழ்நாடு•
    48 min ago
  • ஆண்டிபட்டி வருசநாடு அருகே சின்ன சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு குளிக்க தடை தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை ஒட்டிய மேகமலை, ஹைவேவிஸ் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் சாரல்மழையால் சின்ன சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. தேனி மாவட்டம், மேகமலை அடிவாரத்தில் கோம்பைத்தொழு வடக்கு மலைப்பகுதியில் மேகமலை அருவி உள்ளது. மேகமலை ஸ்ரீவில்லிபுத்தூர் புலிகள் சரணாலயத்தில் அமைந்துள்ள இந்த அருவிக்கு திண்டுக்கல் ,மதுரை, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆண்டு முழுவதும் அருவியில் நீர்வரத்து இருக்கும். நேற்று விடிய விடிய நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் சாரல்மழை பெய்து வருவதால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது ஏற்கனவே பெய்த கனமழையால் அருவிக்குச் செல்லும் சாலை பகுதியில் சாலைகள் மிகவும் மண்ணரிப்புகளால் மிகவும் சேதம் அடைந்துள்ளது மேலும் படிக்கட்டுகள் தடுப்புக்கம்பிகள் உடைந்து காணப்படுவதாகவும் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. இந்நிலையில் தொடர் மழையால் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளதால் வெள்ளப்பெருக்கிற்கான பயணிகளுக்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது இதனைத் தொடர்ந்து சின்ன சுருளி அருவிக்கு மீறி செல்வோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்..
    1
    ஆண்டிபட்டி வருசநாடு அருகே சின்ன சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு குளிக்க தடை

தேனி மாவட்டம்  ஆண்டிபட்டியை ஒட்டிய மேகமலை, ஹைவேவிஸ்  நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் சாரல்மழையால் சின்ன சுருளி   அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 
இதனால் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை  தடை விதித்துள்ளது. 
தேனி மாவட்டம், மேகமலை அடிவாரத்தில் கோம்பைத்தொழு வடக்கு  மலைப்பகுதியில் மேகமலை அருவி உள்ளது. 
மேகமலை  ஸ்ரீவில்லிபுத்தூர் புலிகள்  சரணாலயத்தில் அமைந்துள்ள இந்த அருவிக்கு திண்டுக்கல் ,மதுரை, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.  
ஆண்டு முழுவதும் அருவியில் நீர்வரத்து இருக்கும். 
நேற்று விடிய விடிய நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் சாரல்மழை பெய்து வருவதால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது 
ஏற்கனவே பெய்த  கனமழையால்  அருவிக்குச் செல்லும் சாலை பகுதியில் சாலைகள் மிகவும் மண்ணரிப்புகளால்   மிகவும் சேதம் அடைந்துள்ளது 
மேலும் படிக்கட்டுகள் தடுப்புக்கம்பிகள் உடைந்து காணப்படுவதாகவும் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. 
இந்நிலையில் தொடர் மழையால்  வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளதால் வெள்ளப்பெருக்கிற்கான  பயணிகளுக்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது
இதனைத் தொடர்ந்து சின்ன சுருளி  அருவிக்கு மீறி செல்வோர் மீது  உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்..
    user_VIGNESH
    VIGNESH
    Photographer ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • திண்டுக்கல் மாநகராட்சி ஆணையரின் வேண்டுகோள் ஆத்தூர் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து உள்ளதால் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்
    1
    திண்டுக்கல் மாநகராட்சி ஆணையரின் வேண்டுகோள் ஆத்தூர் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து உள்ளதால் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்
    user_RAJA news
    RAJA news
    Oddanchatram, Dindigul•
    3 hrs ago
  • கண்ணெதிரே கருகிப்போன கனவு!” தமிழ்புரம் விவசாயிக்கு பெரும் இழப்பை ஏற்படுத்திய தீ விபத்து – 2 ஏக்கர் கரும்பு பயிர்கள் சாம்பல்! “கண்ணெதிரே கருகிப்போன கனவு!” தமிழ்புரம் விவசாயிக்கு பெரும் இழப்பை ஏற்படுத்திய தீ விபத்து – 2 ஏக்கர் கரும்பு பயிர்கள் சாம்பல்! ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த தமிழ்புரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஆறுமுகம், தனது விவசாய நிலத்தில் சுமார் 3½ ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்கு தயாராக இருந்த கரும்பு பயிர்களை சாகுபடி செய்திருந்தார். இந்நிலையில், நேற்று கரும்பு வயலில் எதிர்பாராத விதமாக திடீரென தீப்பற்றி மளமளவென எரியத் தொடங்கியது. கரும்பு பயிர்கள் தீப்பற்றி எரிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த விவசாயி ஆறுமுகம், அருகிலிருந்த விவசாயிகளின் உதவியுடன் டிராக்டர்களை பயன்படுத்தி தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டார். ஆனால், காற்றின் வேகத்தால் தீ கொழுந்துவிட்டு வேகமாக பரவியதால், விவசாயிகள் மேற்கொண்ட தீயணைப்பு முயற்சிகள் பலனளிக்கவில்லை. இதையடுத்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆசனூரிலிருந்து தமிழ்புரம் கிராமத்திற்கு தீயணைப்பு வாகனம் விரைந்து சென்ற நிலையில், அது சம்பவ இடத்தை அடைவதற்குள் தீ வேகமாக பரவி, சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்கு தயாராக இருந்த கரும்பு பயிர்கள் முற்றிலும் தீயில் கருகி சாம்பலாகின. பல மாதங்களாக கடுமையாக உழைத்து, அறுவடையை எதிர்பார்த்து வளர்த்து வந்த கரும்பு பயிர்கள் கண்முன்னே தீயில் கருகி நாசமானதை கண்டு விவசாயி ஆறுமுகம் பெரும் வேதனை அடைந்தார். இந்த தீ விபத்தால் அவருக்கு கணிசமான பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. தாளவாடியில் தீயணைப்பு நிலையம் அவசியம்! தாளவாடி மலைப்பகுதியில் விவசாய நிலங்கள் அதிகளவில் உள்ள நிலையில், தீ விபத்து போன்ற அவசர காலங்களில் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்தை சென்றடைவதில் ஏற்படும் காலதாமதத்தால் பெரும் சேதங்கள் ஏற்படுவதாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே, தீ விபத்தில் பாதிக்கப்பட்ட விவசாயி ஆறுமுகத்திற்கு அரசு உரிய இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற தீ விபத்துகளில் பெரும் சேதம் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் தாளவாடி பகுதியில் நிரந்தர தீயணைப்பு நிலையம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    கண்ணெதிரே கருகிப்போன கனவு!”
தமிழ்புரம் விவசாயிக்கு பெரும் இழப்பை ஏற்படுத்திய தீ விபத்து – 2 ஏக்கர் கரும்பு பயிர்கள் சாம்பல்!
“கண்ணெதிரே கருகிப்போன கனவு!”
தமிழ்புரம் விவசாயிக்கு பெரும் இழப்பை ஏற்படுத்திய தீ விபத்து – 2 ஏக்கர் கரும்பு பயிர்கள் சாம்பல்!
ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த தமிழ்புரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஆறுமுகம், தனது விவசாய நிலத்தில் சுமார் 3½ ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்கு தயாராக இருந்த கரும்பு பயிர்களை சாகுபடி செய்திருந்தார்.
இந்நிலையில், நேற்று கரும்பு வயலில் எதிர்பாராத விதமாக திடீரென தீப்பற்றி மளமளவென எரியத் தொடங்கியது. கரும்பு பயிர்கள் தீப்பற்றி எரிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த விவசாயி ஆறுமுகம், அருகிலிருந்த விவசாயிகளின் உதவியுடன் டிராக்டர்களை பயன்படுத்தி தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டார்.
ஆனால், காற்றின் வேகத்தால் தீ கொழுந்துவிட்டு வேகமாக பரவியதால், விவசாயிகள் மேற்கொண்ட தீயணைப்பு முயற்சிகள் பலனளிக்கவில்லை. இதையடுத்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆசனூரிலிருந்து தமிழ்புரம் கிராமத்திற்கு தீயணைப்பு வாகனம் விரைந்து சென்ற நிலையில், அது சம்பவ இடத்தை அடைவதற்குள் தீ வேகமாக பரவி, சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்கு தயாராக இருந்த கரும்பு பயிர்கள் முற்றிலும் தீயில் கருகி சாம்பலாகின.
பல மாதங்களாக கடுமையாக உழைத்து, அறுவடையை எதிர்பார்த்து வளர்த்து வந்த கரும்பு பயிர்கள் கண்முன்னே தீயில் கருகி நாசமானதை கண்டு விவசாயி ஆறுமுகம் பெரும் வேதனை அடைந்தார். இந்த தீ விபத்தால் அவருக்கு கணிசமான பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.
தாளவாடியில் தீயணைப்பு நிலையம் அவசியம்!
தாளவாடி மலைப்பகுதியில் விவசாய நிலங்கள் அதிகளவில் உள்ள நிலையில், தீ விபத்து போன்ற அவசர காலங்களில் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்தை சென்றடைவதில் ஏற்படும் காலதாமதத்தால் பெரும் சேதங்கள் ஏற்படுவதாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, தீ விபத்தில் பாதிக்கப்பட்ட விவசாயி ஆறுமுகத்திற்கு அரசு உரிய இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற தீ விபத்துகளில் பெரும் சேதம் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் தாளவாடி பகுதியில் நிரந்தர தீயணைப்பு நிலையம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_Sathees kumar
    Sathees kumar
    Local News Reporter சத்தியமங்கலம், ஈரோடு, தமிழ்நாடு•
    2 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.