Shuru
Apke Nagar Ki App…
சிலுவம்பாளையத்தில் வாக்களித்த பின் எடப்பாடி பழனிசாமி பேட்டி எடப்பாடி தொகுதியில் உள்ள சிலுவம்பாளையம் வாக்குச்சாவடியில் மகன் மிதுன் மற்றும் மனைவி ராதா ஆகியோருடன் எடப்பாடி பழனிசாமி ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து எடப்பாடி பழனிசாமி, அனைத்து வாக்காளர்களும் வாக்குச்சாவடி வந்து ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். எதனை மனதில் வைத்து மக்கள் வாக்களிக்க வேண்டும் என்பது அவரவர் விருப்பம். தேர்தலில் வெற்றி பெறுவது தொடர்பாக மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
Salem_Updates
சிலுவம்பாளையத்தில் வாக்களித்த பின் எடப்பாடி பழனிசாமி பேட்டி எடப்பாடி தொகுதியில் உள்ள சிலுவம்பாளையம் வாக்குச்சாவடியில் மகன் மிதுன் மற்றும் மனைவி ராதா ஆகியோருடன் எடப்பாடி பழனிசாமி ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து எடப்பாடி பழனிசாமி, அனைத்து வாக்காளர்களும் வாக்குச்சாவடி வந்து ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். எதனை மனதில் வைத்து மக்கள் வாக்களிக்க வேண்டும் என்பது அவரவர் விருப்பம். தேர்தலில் வெற்றி பெறுவது தொடர்பாக மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
More news from தமிழ்நாடு and nearby areas
- எடப்பாடி தொகுதியில் உள்ள சிலுவம்பாளையம் வாக்குச்சாவடியில் மகன் மிதுன் மற்றும் மனைவி ராதா ஆகியோருடன் எடப்பாடி பழனிசாமி ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து எடப்பாடி பழனிசாமி, அனைத்து வாக்காளர்களும் வாக்குச்சாவடி வந்து ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். எதனை மனதில் வைத்து மக்கள் வாக்களிக்க வேண்டும் என்பது அவரவர் விருப்பம். தேர்தலில் வெற்றி பெறுவது தொடர்பாக மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.1
- தருமபுரி மாவட்டத்தில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர் என தருமபுரி சட்டமன்ற தொகுதி பாமக வேட்பாளர் முனைவர் சௌமியா அன்புமணி வாக்குச்சாவடி மையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டு தகவல். தமிழகம் முழுவதும இன்று காலை முதலே விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்கு சாவடி மையங்களுக்கு சென்று நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். தருமபுரி சட்டமன்ற தொகுதியில் ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி கடந்த 15 தினங்களாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார் தொடர்ந்து இன்று வாக்குச்சாவடி மையங்களுக்கு நேரில் சென்று வாக்குச்சாவடி முகவர்கள் வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் பொதுமக்களிடம் வாக்குப்பதிவு குறித்து கேட்டு அறிந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழகம் முழுவதும் இன்று விறுவிறுப்பாக பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்கு சாவடி மையங்களுக்கு வந்து நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர் தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதியிலும் காலை முதலே வாக்களித்து வருகின்றனர். தருமபுரி மாவட்டம் முழுவதும் ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என அவர் தெரிவித்தார். பேட்டி - சௌமியா அன்புமணி - பாமக வேட்பாளர்1
- பர்கூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் தே.மதியழகன் தனது குடும்பத்தினருடன் தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டு வாக்களித்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் தே.மதியழகன் அவருடைய சொந்த ஊரான குட்டூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் தனது குடும்பத்தினருடன் தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டு வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார்.1
- கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை வட்டத்திற்குட்பட்ட வெள்ளிமலை அரசு ஏகலைவா ஒண்டி உரையிட மேல்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குப்பதிவு மையங்களில் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை செய்து வருகின்றனர் இதுவரை ஆண்கள் 71 நபர்களும் பெண்கள் 52 நபர்களும் வாக்களித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.1
- திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் வட்டத்திற்குட்பட்ட ஏலகிரி கிராமத்தில் உள்ள 1, 2, 3 ஆகிய வார்டுகளில் இன்று வாக்குப்பதிவு அமைதியான சூழலில் நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் காலை முதலே வாக்குச்சாவடிகளுக்கு திரண்டு, ஒழுங்காக வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமையை உணர்வுடன் நிறைவேற்றி வருகின்றனர். எந்த வித அசம்பாவிதங்களும் இன்றி, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் வாக்குப்பதிவு சுமூகமாக நடைபெறுகிறது. மக்களின் ஒத்துழைப்பும், தேர்தல் பணியாளர்களின் ஒருங்கிணைப்பும் காரணமாக, ஏலகிரி பகுதியில் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.1
- சட்டமன்ற பொது தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. இதில் வாக்களிப்பதற்காக திருப்பூரில் தங்கி உள்ள வெளி மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல திருப்பூர் பேருந்து நிலையங்களில் திரண்டதால் பேருந்து நிலையங்களில் கூட்ட நெரிசல் காணப்படுகிறது. மாநகரில் உள்ள மூன்று பேருந்து நிலையங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றனர்.1
- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தொகுதியில் (இன்று ஏப்ரல் 23 காலை) ஆம்பூர் தாலுகா மின்னூர் ஊராட்சியில் 42 - பூத்து பகுதியில் வாக்காளர்கள் தங்கள் தொகுதி வேட்பாளர்கள் யார் யார் என தெரிய பூத்து சுவற்றில் உள்ள வேட்பாளர்கள் பட்டியல் பெயர் சின்னம் உள்ளது1
- Post by Salem_Updates1