Shuru
Apke Nagar Ki App…
திண்டுக்கல் பேரூராட்சி பகுதியில் காவிரி கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு திண்டுக்கல்லில் எரியோடு பேரூராட்சி பகுதிக்கு பஸ் ஸ்டாண்ட் அருகில் காவிரி கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு கடந்த 20 நாட்களாக அப்பகுதியில் குடிநீர் வீணாக செல்கிறது எனவே குடிநீர் வீணாவதை தடுக்க மாநகராட்சி விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
Gayathri devi Gayathri
திண்டுக்கல் பேரூராட்சி பகுதியில் காவிரி கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு திண்டுக்கல்லில் எரியோடு பேரூராட்சி பகுதிக்கு பஸ் ஸ்டாண்ட் அருகில் காவிரி கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு கடந்த 20 நாட்களாக அப்பகுதியில் குடிநீர் வீணாக செல்கிறது எனவே குடிநீர் வீணாவதை தடுக்க மாநகராட்சி விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
More news from தமிழ்நாடு and nearby areas
- திண்டுக்கல்-பழனி ரோடு முத்தழகுப்பட்டி பிரிவு அருகே கருணாநிதி நகர் பகுதியில் பொதுமக்களுக்கு நான்கு மாத காலமாக குடிநீர் வராத காரணத்தால் அதை கண்டித்து காலி குடங்களுடன் பெண்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலையில் மறியல் செய்தனர் இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது1
- E.மகேஷ்வரன் தேனி 20.10.2026 Visual: jaya district Vis Group ல் உள்ளது. ஆன்மீக வழியில் ஆண்ட அஇஅதிமுக மீண்டும் அமைக்க பிரிந்து சென்றவர்கள் மீண்டும் ஒன்றினைய வேண்டும், கோயில்களில் மதிய உணவு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிய அம்மாவின் ஆட்சி அமைய பிரிந்து சென்றவர்கள் ஒன்றிணைந்தால் நிச்சயம் அம்மா ஆட்சி அமையும்: ஆன்மீக வழியை திமுக ஏற்றால் அதிமுக திமுக கூட்டணி வைக்க சம்மதிக்கலாம் என சிவசேனா ஆன்மீக பகுத்தறிவு அறக்கட்டளை நிறுவன தலைவர் பேட்டி தேனி மாவட்டம் கம்பத்தில் இறைவி நுண்கலை பயிற்சி பள்ளி சார்பில் இயல் இசை நாடகம் என பல்வேறு நிகழ்ச்சிகள் தனிய தனியா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் குன்றக்குடி அடிகளாரும், தருமபுரம் ஆதீனத்தின் சார்பில் தவத்திரு ஸ்ரீலஸ்ரீ சொக்கலிங்க தம்பிரான் அவர்களும் பங்கேற்று சிறப்புரையாற்றினர். குன்றக்குடி அடிகளாருக்கும். தருமபுரம் ஆதீனத்திற்கும் ருத்ர பூஷன் விருதும் நினைவு பரிசையும் சிவசேனா ஆன்மீக பகுத்தறிவு அறக்கட்டளை நிறுவன தலைவர் சிவக்குமார் என்ற ருத்ரபாபு வழங்கினார். செய்தியாளர்களை சந்தித்த சிவக்குமார், கிறித்தவ இஸ்லாமியர்களை போல் இந்து மயானங்களை புனிதமாக கருதி தூய்மைபடுத்தி வருவதாகவும், குடிநீர் கழிப்பறை வசதி செய்து வருவதாகவும், இதுபோல அனைத்து மாநில அரசுகளும் இந்து மயானங்களை தூய்மையாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார மேலும், ஆன்மீக பாதையிலும் செல்லும் அஇஅதிமுக ஆட்சியில் திருக்கோயில்களில் மதிய அன்னதான திட்டத்தை நிறைவேற்றியவர் அம்மா என புகழாரம் சூட்டினார். ஆன்மீக பாதையிலும் செல்லும் செல்லும் அஇஅதிமுகவுடன் கூட்டணி வைக்க திமுக திட்டமிட்டால் ஆன்மீக பாதையை திமுக விரும்பினால் கூட்டணி வைத்துக்கொள்ளலாம் என கருத்து தெரிவித்தார். தொடர்ந்து தோல்விகளை கண்டு தேய்ந்து வரும் அஇஅதிமுக மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் பிரிந்து சென்றவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்றும், ஒன்றிணைந்தால் மீண்டும் அஇஅதிமுக ஆட்சி அமைப்பது நிச்சயம் என்றார் பேட்டி:திரு, N.சிவக்குமார் என்ற ருத்ரபாபு : நிறுவன தலைவர். சிவசேனா ஆன்மீக பகுத்தறிவு அறக்கட்டளை1
- சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் 3வது நாளாக தொடர் தடை தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் மூன்றாவதுநாளாக தொடர் தடை அருவியில் தண்ணீர் வரத்து சீராகும் வரை அருவி பகுதிக்கு யாரும் வரவேண்டாம் என அறிவிப்பு தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் வனச்சரணலாயத்தில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் சுருளி அருவி அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாகவும் ஆன்மீக தலமாகவும் உள்ள இந்த சுருளி அருவிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் வருகை தந்து அருவியில் குளித்துவிட்டு அங்குள்ள சிவாலயங்களில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம். இந்நிலையில் கடந்த சில தினங்களாக சுருளி அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான அரிசி பாறை, ஈத்தக்காடு, தூவானம் அணை, வென்னியாறு மற்றும் சுருளி அருவியின் ஆற்றுப்படுகை பகுதிகளில் வடகிழக்குப் பருவ மழை தீவிரம் அடைந்து மழை பொழிவு ஏற்பட்டுள்ளதால் அருவிக்கு வரும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அருவியில் வெள்ள நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் நலன் கருதி அருவியில் மூன்றாவது நாளாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தொடர் தடை விதித்துள்ளனர். மேலும் நீர்வரத்து சீராகும் வரை சுருளி அருவிப்பகுதிக்கு யாரும் வர வேண்டாம் என வனத்துறையினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். சுருளி அருவிப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அருவியில் குளிப்பதற்காக வருகை தந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.1
- உலக நன்மை வேண்டியும், நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும், தொழில் வளம் பெருக வேண்டியும், ஆண்டிபட்டி அருகே மகா சூலிணி துர்க்கை ஹோமவிழா நிகழ்ச்சி நடைபெற்றது1
- உலக நன்மை வேண்டியும், நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும், தொழில் வளம் பெருக வேண்டியும், ஆண்டிபட்டி அருகே மகா சூலிணி துர்க்கை ஹோமவிழா நிகழ்ச்சி நடைபெற்றது தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பகவதி அம்மன் , ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவிலில் கடந்த புரட்டாசி மாதம் 24 ஆம் தேதி முதல் நேற்று வரை நவராத்திரி கொலு விழா விமரிசையாக நடைபெற்ற நிலையில் இன்று ஸ்ரீ மகா சூலிணி துர்க்கை ஹோமம் நிகழ்ச்சி நடைபெற்றது உலக நன்மை வேண்டியும், நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும், தொழில் வளம் பெருக வேண்டியும் கோவில் முன்பு குண்டம் வைத்து சிறப்பு யாகம் வளர்த்து நடைபெற்ற இந்த நிகழ்வில் நெசவாளர் குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்1
- திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் திண்டுக்கல் பழனி ரோடு கருணாநிதி நகர் வையாபுரி குளம் பகுதியை சேர்ந்த மக்கள் தங்கள் பகுதியில் மாநகராட்சி சார்பில் குடிநீர் கடந்த 4-மாதமாக மாநகராட்சி சார்பில் முறையாக விநியோகம் செய்யவில்லை என சாலை மறியலில் ஈடுபட்டனர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் பொதுமக்களிடம் சமரசம் செய்து சாலை மறியலை தற்காலிகமாக கைவிட செய்தனர்1
- உடுமலை அருகே பாசனக் கால்வாய் தூர்வாரும் பணி: எம்.எல்.ஏ. சத்யபாமா ஆய்வு! உடுமலை: திருமூர்த்தி அணை பாசனக் கால்வாய்களைத் தூர்வார தமிழக அரசு ரூ.14 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதன் முதற்கட்டமாக, பெரியகுமாரபாளையம், பெல்லப்பட்டி பகுதிகளில் ரூ.16 லட்சம் மதிப்பில் பி.ஏ.பி. கிளை வாய்க்கால்களைத் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டன. இப்பணிகளை தாராபுரம் எம்.எல்.ஏ. சத்யபாமா நேரில் ஆய்வு செய்து, விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.1
- திண்டுக்கல் பேரூராட்சி பகுதியில் காவிரி கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு திண்டுக்கல்லில் எரியோடு பேரூராட்சி பகுதிக்கு பஸ் ஸ்டாண்ட் அருகில் காவிரி கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு கடந்த 20 நாட்களாக அப்பகுதியில் குடிநீர் வீணாக செல்கிறது எனவே குடிநீர் வீணாவதை தடுக்க மாநகராட்சி விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்1