கனிம வள கடத்தல், போதைப்பொருள் தடுப்பு: ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்! தூத்துக்குடியில் சட்டம் - ஒழுங்கு மற்றும் கனிம வளங்கள் கடத்தல் தடுப்புக் குழு ஒருங்கிணைப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் சட்டம் - ஒழுங்கு, சாலை பாதுகாப்பு, போதைப்பொருள்கள் தடுப்பு, கள்ளச்சாராயம் தடுப்பு மற்றும் கனிம வளங்கள் கடத்தல் தடுப்பு ஆகியவை தொடர்பான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (27.08.2026) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமை தாங்கினார். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்டத்தில் சட்டம் - ஒழுங்கைப் பராமரித்தல், விபத்துகளைக் குறைக்கச் சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துதல், போதைப்பொருள்கள் மற்றும் கள்ளச்சாராய விற்பனையை முற்றிலுமாகத் தடுத்தல், சட்டவிரோத கனிம வளங்கள் கடத்தலைக் கண்காணித்து கடும் நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் பல்வேறு துறை சார்ந்த மாவட்ட அளவிலான அரசு அலுவலர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
கனிம வள கடத்தல், போதைப்பொருள் தடுப்பு: ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்! தூத்துக்குடியில் சட்டம் - ஒழுங்கு மற்றும் கனிம வளங்கள் கடத்தல் தடுப்புக் குழு ஒருங்கிணைப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் சட்டம் - ஒழுங்கு, சாலை பாதுகாப்பு, போதைப்பொருள்கள் தடுப்பு, கள்ளச்சாராயம் தடுப்பு மற்றும் கனிம வளங்கள் கடத்தல் தடுப்பு ஆகியவை தொடர்பான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (27.08.2026) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமை தாங்கினார். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்டத்தில் சட்டம் - ஒழுங்கைப் பராமரித்தல், விபத்துகளைக் குறைக்கச் சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துதல், போதைப்பொருள்கள் மற்றும் கள்ளச்சாராய விற்பனையை முற்றிலுமாகத் தடுத்தல், சட்டவிரோத கனிம வளங்கள் கடத்தலைக் கண்காணித்து கடும் நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் பல்வேறு துறை சார்ந்த மாவட்ட அளவிலான அரசு அலுவலர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
- தூத்துக்குடி வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்க புத்தகக் கண்காட்சி தூத்துக்குடியில் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் இளைஞர்களின் வாசிப்புத் திறனை அதிகப்படுத்தும் வகையில் தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம் மற்றும் சென்னை சில்க்ஸ் நிறுவனம் சார்பில் புத்தக கண்காட்சி தொடங்கியுள்ளது. 25 அரங்குலுடன் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பல்வேறு தலைப்புகளிலான புத்தகங்கள் இடம் பெற்றுள்ள இந்த புத்தக கண்காட்சியை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மாநகராட்சி ஆணையர் பிரியங்கா ஆகியோர் தொடங்கி வைத்து புத்தக கண்காட்சியை பார்வையிட்டனர். 11 நாட்கள் நடைபெறும் இந்த புத்தக கண்காட்சியில் அரசியல் இலக்கியம் கதைகள் கவிதைகள் போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் என பல்வேறு தலைப்பிலான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன இந்த புத்தக கண்காட்சியின் போது பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவிய போட்டிகள் கட்டுரை போட்டிகள் பேச்சுப்போட்டி உள்ளிட்ட போட்டிகளும் நடத்தப்பட்டு அவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட உள்ளது.1
- அருப்புக்கோட்டை இந்து நாடார் நடுநிலைப்பள்ளி முன்பு உள்ள காலி இடத்தில் பொதுமக்களுக்கும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் சரக்கு வாகனங்களை நிறுத்துவதாகவும், அந்த வழியாக செல்லும் பெண்களை சிலர் கிண்டல் செய்வதாகவும் புகார் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சி பகுதியில் இயங்கி வரும் இந்து நாடார் நடுநிலைப்பள்ளி கடந்த 87 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. அரசு உதவி பெறும் இந்த பள்ளியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியின் ஒரு கட்டிடத்தை அன்றைய முதலமைச்சர் காமராஜர் திறந்து வைத்துள்ளார். இந்நிலையில் இந்த பள்ளி முன்பு உள்ள காலி இடத்தில் தேவையற்ற சரக்கு வாகனங்கள் டூரிஸ்ட் வேன்கள் போன்ற வாகனங்களை நிறுத்துவதால் பள்ளிக்கு வரும் மாணவ மாணவியர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த இடம் நகராட்சிக்கு சொந்தமான இடம் எனவும் அத்துமீறி இப்பகுதியில் வாகனங்களை நிறுத்துவதால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாவதாகவும் மேலும் அங்கு சிலர் பெண்களை கேலி செய்வதாகவும் அருப்புக்கோட்டை நகராட்சி நகர்மன்ற கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்களும் புகார் தெரிவித்தனர். மேலும் இது குறித்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. பள்ளி முன்பு அதுவும் பொதுமக்கள் நடந்து செல்லும் முக்கியமான பகுதியில் பொதுமக்களுக்கும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கும் இடையூறாக நிறுத்தப்பட்டு இருக்கும் இது போன்ற வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து பள்ளி நிர்வாகிகள் கூறுகையில், இந்து நாடார் நடுநிலை பள்ளி முன்பு நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சரக்கு வாகனங்களை தேவையில்லாத வகையில் நிறுத்துகின்றனர். மேலும் இங்கு வாகனங்கள் நிறுத்தப்படுவதால் அங்கு இருக்கும் சிலர் இவ்வழியாக நடந்து செல்லும் பெண்களை கேலி செய்கின்றனர். இது தொடர்பாக இங்கு வாகனங்களை நிறுத்தக்கூடாது என பலமுறை அரசு உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இதுபோன்று புகார் அளித்தால் சிலர் நாங்கள் பத்திரிக்கையாளர்கள் எனக்கூறி பள்ளிக்குள் வந்து மிரட்டுகின்றனர். அரசு உரிய நடவடிக்கை எடுத்து இங்கு வாகனங்களை நிறுத்துவதை தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- தென்காசி மாவட்டம் குற்றாலம் இன்றைய நிலவரம் மிதமான மழை இதமான காற்று லேசான வெயில் அனைத்து அருவிகளிலும் சீராக விழும் தண்ணீர் குளிக்க குவிந்த சுற்றுலா பயணிகள்1
- ஆபத்தான ஆயுதங்களுடன் இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டதாக 3 பேர் கைது விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆபத்தான ஆயுதங்களுடன் இருப்பது போன்ற காட்சிகளை பதிவு செய்து, அவற்றை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட்டு பரப்பியதாக 3 இளைஞர்களை காரியாபட்டி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அச்சம்பட்டி முத்தாலம்மன் கோவில் கிழக்கு தெருவைச் சேர்ந்த முத்துராமன் (22), அதே பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் (23) மற்றும் ஆவியூர் வடக்கு தெருவைச் சேர்ந்த கருப்பசாமி (23) ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஆபத்தான ஆயுதங்களுடன் இருப்பது போன்ற காட்சிகளை பதிவு செய்து, அதனை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டதாகவும், அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்ததாகவும் கூறப்படுகிறது. சமூக வலைதளங்களில் இளைஞர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலும், பொதுமக்களின் பாதுகாப்புக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் இதுபோன்ற காட்சிகள் வெளியிடப்படுகிறதா என்பது குறித்து காவல்துறையினர் கண்காணிப்பு மேற்கொண்டு வந்தனர். இதன் அடிப்படையில், சம்பந்தப்பட்டவர்களை காரியாபட்டி காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து, முத்துராமன், ராமச்சந்திரன், கருப்பசாமி ஆகிய 3 பேரையும் கைது செய்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இதுபோன்ற ஆபத்தான ஆயுதங்களைக் காட்டி வீடியோக்களை வெளியிடுவது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருவதுடன், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.1
- அணுக்கனிம சுரங்க அனுமதி நீட்டிப்பு ரத்து செய்யப்படுமா ?ஆஸ்டின் எம்எல்ஏ கேள்வி தமிழக சட்டமன்றத்தில் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஆஸ்டின் பேசுகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அணு கனிம சுரங்கம் அமைப்பது தொடர்பான அனுமதியை திமுக அரசு நிறுத்தி வைத்திருந்தது ஆனால் தற்போது புதிதாக பதவி ஏற்று உள்ள அரசு ஓர் ஆண்டு காலத்திற்கு அந்த அனுமதியை நீட்டித்து வழங்கி உள்ளது.இந்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.இந்த அனுமதி ரத்து செய்யப்படுமா என்று கேள்வி எழுப்பினார்.இதற்கு பதிலளித்த அமைச்சர் மக்களுக்கு எதிரான எந்த திட்டங்களையும் இந்த அரசு செயல்படுத்தாது என்று கூறினார்.1
- சிவகங்கையில் மரபுக் கண்காட்சி – தொல்லியல் பயணம் குறித்த நூல் வெளியீட்டு விழா சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகரில் மரபுக் கண்காட்சி மற்றும் தொல்லியல் பயணம் குறித்த நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் ஏராளமான தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். சிவகங்கை தொல் நடை குழு மற்றும் தமிழ் வையம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்ச்செம்மல் பகிரத நாச்சியப்பன் தலைமையில்துன்னுடைக்குழு செயற்குழு உறுப்பினர் வித்தியா கணபதி முன்னிலை வகித்தார். தொல் நடை குழு செயலாளர் நரசிம்மன் வரவேற்புரை வழங்கினார்.தொல்நடைக்குழு நிறுவனர்காளி ராசா நூலினை பற்றி எடுத்துரைத்தார்தொடர்ந்து மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் நடைபெற்ற மரபுசார் கண்காட்சியில் பழமையான நாணயங்கள், ஓலைச்சுவடிகள், செப்பேடுகள், பண்டைய நாகரிகத்தை வெளிப்படுத்தும் பானை ஓடுகள் உள்ளிட்ட பல்வேறு தொல்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன. மேலும், ஓவிய ஆசிரியர் முத்துக்கிருஷ்ணனின் கைவண்ணத்தில் உருவானஅணு என்ற கையடக்க மாத இதழும் படைப்புகளும் இடம்பெற்றிருந்தன. கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு, நமது பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் அறிந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து ‘தொல்லியல் பயணம்’ என்ற நூல் வெளியிடப்பட்டது. தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் சிவப்பிரகாஷ் நூலை வெளியிட, மன்னர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தர்ராஜன் பெற்றுக்கொண்டார். நமது வரலாறு, பண்பாடு மற்றும் தொல்லியல் சிறப்புகளை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழ் ஆர்வலர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.1
- மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தண்ணீருக்கு தவிக்கும் கிராம மக்கள் ஒட்டப்பிடாரம் தாலுகாவை சேர்ந்தது மாப்பிள்ளை யூரனி.. இங்கு தற்போது குடிநீர் பிரச்சனை தலைவிரித்தாடுகிறது நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஏற்பாட்டில் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு குடிநீர் பைப் லைன் புதியதாக பதிக்கப்பட்டு அதற்கான நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது ஆனால் தற்போது அந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுவிட்டது அதுபோக மங்களக்குறிச்சி கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து மாப்பிள்ளை யூரணிக்கு வரும் குடிநீர் பைப் லைன் 18 லட்சம் தண்ணீர் வரக் கூடிய அளவுக்கு தான் பைப்லைன் பதிக்கப்பட்டுள்ளது. அதுவும் ஒரு பிரச்சினையாகவே உள்ளது கடந்த திமுக ஆட்சியின் இறுதி கட்டத்தில் மாப்பிள்ளையூரனிபஞ்சாயத்தில் குடிநீர் பிரச்சனை தீர்ப்பதற்கு பஞ்சாயத்து மாநகராட்சி உடன் இணைக்கப்படுவதால் தூத்துக்குடி மாநகராட்சியில் இருந்து மாப்பிள்ளை யூரணி பஞ்சாயத்துக்கு தேவையான 95 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்குவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது தற்போது அந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இத்தனைக்கும் இந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் மதன் ராஜா அவர் அமைச்சராகவும் உள்ளார் ஆனால் இதுவரை மாப்பிள்னளயூரனிபஞ்சாயத்தில் வந்து மக்களுக்கு தேவையான பிரச்சனைகளை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான மதன் ராஜா வந்து இதுவரை மக்களை சந்தித்து குறைகளை கேட்கவில்லை நாங்கள் குடிநீர் பிரச்சனையில் திண்டாடி வருகிறோம் என்ற ஒரு குற்றச்சாட்டும் வருகிறது இது பற்றி அப்பகுதியைச் சேர்ந்த பல்வேறு பெண்களிடம் கேட்டபோது சொன்ன ஒரே பதில் ஒரு குடம் தண்ணீர் 10 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை பணம் கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை தான் உள்ளது . என்றனர்.1
- *தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம் பொய்கை ஊராட்சி கோலாண்டனூர் 7,வது வார்டு ஊராட்சி அலுவலகத்திற்கு கீழ்புரம் ஒரு வருடத்திற்கு முன் போடப்பட்ட புதிய சிமிண்ட் சாலையில் வாறுகாலில் அமைக்காததால் வீடுகளில் உபயோகப்படுத்தும் கழிவுநீரை பைப்பு மூலம் பொது தெரிவில் விடுவதனால் சாலை பழுதாகுவதோடு சாக்கடை நீர் தேங்கி கொசுக்கள், மற்றும் புளுக்கள் உற்பத்தியாகி டெங்கு போன்ற விசக்காய்சல் பரவி வருவதாகவும் மேலும் இரு சக்கர வாகனத்தில் வருபவர்க்கு விபத்து ஏற்படுவதும் வாடிக்கையாகி விட்ட நிலையில் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை எடுக்காததால் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை அருகே பழைய மது பாட்டில்கள் சேகரிக்கும் நபர் ரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் மது போதையில் அந்த நபரை காலி மது பாட்டிலை உடைத்து குத்தி கொலை செய்ததாக இளைஞர் கைது விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் மதுபான கடை அருகே பாரத ஸ்டேட் வங்கி எதிர்புறம் உள்ள காம்ப்ளக்ஸ் வாசலில் அடையாளம் தெரியாத பழைய இரும்பு பொருட்கள் மது பாட்டில்கள் சேகரிக்கும் நபர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதாக அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து துணை காவல் கண்காணிப்பாளர் விக்னேஷ் நகர் காவல் நிலைய ஆய்வாளர் சுஜாதா தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் மோப்பநாய் உதவியுடனும் அப்பகுதியில் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். போலீசார் இறந்து கிடந்த சடலத்தை ஆய்வு செய்த போது அந்த நபர் கழுத்து அறுக்கப்பட்டும் பல இடங்களில் ரத்த காயங்கள் இருப்பதும் தெரியவந்தது. அப்பகுதி அருகே ஆங்காங்கே ரத்தம் சிதறி கிடந்ததால் இறந்த கிடந்த நபர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். மேலும் போலீசார் விசாரணையில் கழுத்து அறுக்கப்பட்டு இறந்த நிலையில் கடந்த அந்த நபர் அருப்புக்கோட்டை வடக்கு துரைராஜபுரம் தெருவை சேர்ந்த பெரிய சர்க்கரை என்பவரது மகன் சந்திரசேகர்(49) என்பது தெரிய வந்தது. சந்திரசேகர் டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் முடித்துவிட்டு சரியாக வேலைக்குச் செல்லாமல் மது போதைக்கு அடிமையாகி குடிப்பதற்காக மது பாட்டில்களை சேகரித்து அதை இரும்பு கடையில் போட்டு பணம் ஆக்கி தினமும் மது அருந்தி வந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. சந்திரசேகர் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அமரர் ஊர்தி மூலம் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து சந்திரசேகர் கொலை செய்யப்பட்டாரா கொலை செய்தது யார் முன் விரோதமாக கொலை நடைபெற்றது வேறு என்ன காரணம் என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆராய்ந்ததில் சம்பவத்தன்று இரவு மதுபான கடையில் இருந்து மது போதையில் இருந்த சந்திரசேகரை இளைஞர் ஒருவர் கை தாங்கலாக பிடித்து அழைத்துச் சென்றது பதிவாகி இருந்தது. இதனால் சந்தேகத்தின் அடிப்படையில் அருப்புக்கோட்டை அருகே போடம்பட்டியை சேர்ந்த அந்த இளைஞர் கருப்பசாமியை(22) போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த இளைஞர் கருப்பசாமி அவ்வப்போது கட்டிட வேலைக்கு செல்வதாகவும் சரியாக வேலைக்கு செல்லாமல் மது அருந்தி விட்டு சுற்றி திரிந்ததாகவும், வழக்கமாக புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மதுபான கடையில் மது அருந்துவதாகவும் அப்போது கொலை செய்யப்பட்ட சந்திரசேகருக்கும், கருப்பசாமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாகவும் தெரிய வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று கொலை செய்யப்பட்ட சந்திரசேகர் மது போதையில் நடக்க முடியாமல் தள்ளாடியபடி சென்றதாகவும், இதனால் அந்த இளைஞர் கருப்பசாமி சந்திரசேகரை கை தாங்கலாக மதுபான கடையில் இருந்து வெளியே அழைத்துச் சென்றதாகவும், அப்போது மிகுந்த போதையில் இருந்த சந்திரசேகர் தன்னை யாரோ இழுத்துச் செல்வதாக நினைத்து கெட்ட வார்த்தைகளால் கருப்பசாமியை மிகவும் அசிங்கமாக திட்டியதாகவும் இதனால் மது போதையில் இருந்த கருப்பசாமி ஆத்திரத்தில் அங்கு கீழே கிடந்த காலி மது பாட்டிலை எடுத்து உடைத்து சந்திரசேகரின் வயிறு நெஞ்சு உள்ளிட்ட பல இடங்களில் குத்தி உள்ளார். மேலும் மது போதையில் என்ன செய்கிறோம் என தெரியாமல் சந்திரசேகரின் கழுத்திலும் குத்தி கிழித்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சந்திரசேகர் உயிரிழந்தார் என்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. மேலும் இந்த சம்பவம் நடந்து காலையில் வந்து சந்திரசேகர் இறந்துவிட்டாரா என கருப்பசாமி வந்து பார்த்து சென்றதாகவும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இதனை அடுத்து சந்திரசேகரை கொலை செய்ததாக போலீசார் கருப்பசாமியை கைது செய்தனர். தொடர்ந்து கருப்பசாமியிடம் போலீசார் விசாரணை நடத்தி அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.1