விருதுநகர் மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (11.05.2026) மாவட்ட ஆட்சியர் மரு. என்.ஓ. சுகபுத்ரா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டங்கள், நலிந்தோர் நல உதவித்திட்டம், விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை மற்றும் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டன. மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக அமைக்கப்பட்டிருந்த சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று மாவட்ட ஆட்சியர் கோரிக்கை மனுக்களை நேரடியாக பெற்றுக்கொண்டார். பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்க ஒப்படைக்கப்பட்டன. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆனந்தி, திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திரு. வீ. கேசவதாசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திருமதி பிர்தௌஸ் பாத்திமா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (11.05.2026) மாவட்ட ஆட்சியர் மரு. என்.ஓ. சுகபுத்ரா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இலவச
வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டங்கள், நலிந்தோர் நல உதவித்திட்டம், விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை மற்றும் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டன. மேலும்,
மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக அமைக்கப்பட்டிருந்த சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று மாவட்ட ஆட்சியர் கோரிக்கை மனுக்களை நேரடியாக பெற்றுக்கொண்டார். பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்க ஒப்படைக்கப்பட்டன. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி
ஆனந்தி, திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திரு. வீ. கேசவதாசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திருமதி பிர்தௌஸ் பாத்திமா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- தமிழக சட்டப்பேரவையில் எம்எல்ஏ'வாக பதவியேற்க வந்த அமைச்சர் கீர்த்தனாவுக்கு திடீரென அனுமதி மறுக்கப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் சான்றிதழ் இல்லாமல் வந்ததால் பேரவை செயலாளர் சீனிவாசன் இந்த முடிவை எடுத்தார். சான்றிதழை சமர்ப்பித்த பிறகு அவர் பதவியேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.1
- குழந்தைகள்Vsபெற்றோர்கள் !!! ஊர் மக்களை கதறடித்த மாணவன் !!!1
- திருவாடானை முதலமைச்சர் விஜய் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடினார்கள் வெடி வெடித்து இனிப்புகள் வழங்கி ஆதரவு தெரிவித்தார்கள்1
- 2026 ஆம் ஆண்டுக்கான மாநில அளவிலான அமெச்சூர் கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் பட்டத்தை சென்னை அணி தட்டி சென்றது* *4 நாட்களாக நடைபெற்று வந்த போட்டியில் காஞ்சிபுரம் இரண்டாம் இடமும், மதுரை அணி மூன்றாம் இடத்தையும் பெற்றது* *2026 ஆம் ஆண்டுக்கான மாநில அளவிலான அமெச்சூர் கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் பட்டத்தை சென்னை அணி தட்டி சென்றது* *4 நாட்களாக நடைபெற்று வந்த போட்டியில் காஞ்சிபுரம் இரண்டாம் இடமும், மதுரை அணி மூன்றாம் இடத்தையும் பெற்றது* தமிழ்நாடு அமெச்சூர் கிக் பாக்சிங் அசோசியேஷன் மற்றும் தேனி மாவட்ட அமெச்சூர் கிக் பாக்சிங் அசோசியேஷன் சார்பில் 2026 ஆம் ஆண்டுக்கான மாநில அளவிலான கிக் பாக்ஸிங் போட்டி தேனியில் நடைபெற்றது தேனி மாவட்ட உள்விளையாட்டு அரங்கில் கடந்த 7ஆம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியானது இன்று 10-ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெற்று முடிந்தது இந்த போட்டியில் சென்னை, காஞ்சிபுரம், சேலம், மதுரை, திருச்சி, திண்டுக்கல், அரியலூர் உள்ளிட்ட 24 மாவட்டங்களில் இருந்து சுமார் 1000 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு வயது வாரியாக பல்வேறு பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றது நான்கு நாட்களாக நடைபெற்ற இந்த போட்டியில் சென்னை அணி முதலாவது இடம் பெற்று சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டி சென்றது, அவர்களுக்கு பரிசு கோப்பை வழங்கப்பட்டது தொடர்ந்து இரண்டாம் இடத்தில் காஞ்சிபுரம் அணியும் மற்றும் மூன்றாம் இடத்தில் மதுரை அணியும் வெற்றி பெற்றது போட்டியில் கலந்து கொண்ட அனைத்து வீரர்களுக்கும் பாராட்டுச் சான்றிதல் வழங்கப்பட்டது இந்த போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு வரக்கூடிய மாதங்களில் தொடர்ந்து நடைபெறும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும் என கிக் பாக்ஸிங் அசோசியேஷன் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது1
- மாவட்ட ஆட்சித்தலைவர் மக்கள் குறைதீர்க்கும் நாளில் அலுவலர்களின் அலட்சியம். நீண்ட நாட்களுக்கு பின்பாக நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் நிகழ்ச்சியில் அலுவலர்கள் அனைவரும் செல்போனை பயன்படுத்தியவாறு மக்கள் குறைதீர்க்கும் நாளும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அலுவலர்கள் அதிர்ச்சியில் மக்கள்1
- தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் புதிய சிசிடிவி கேமராக்கள் மற்றும் ஒலிபெருக்கி அமைப்பை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தொடங்கி வைத்தார். பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் குற்றச் செயல்களைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனி பேருந்து நிலையம் முழுவதும் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் இருக்கும்.1
- தேனியில் நடைபெற்ற மாநில அளவிலான அமெச்சூர் கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் பட்டத்தை சென்னை அணி தட்டிச் சென்றது. நான்கு நாட்கள் நடந்த இப்போட்டியில் காஞ்சிபுரம் இரண்டாம் இடத்தையும், மதுரை மூன்றாம் இடத்தையும் வென்றன. இதில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும்.1
- திமுகVsஊழல் !!! யார் பார்த்த வேலைடா இது சூப்பர் !!! அனைவரும் கண்டு மகிழுங்கள்1
- சாதி வாரி கணக்கெடுப்பின் போது ஓபிசி / டி எண்டி புள்ளிவிபரங்களை சேர்க்க கூறி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சீர் மரபினர் நல சங்கம் சார்பில் மனு சாதி வாரி கணக்கெடுப்பின் போது ஓபிசி / டி எண்டி புள்ளிவிபரங்களை சேர்க்க கூறி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சீர் மரபினர் நல சங்கம் சார்பில் மனு தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சீர்மரம்பினால் நல சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது இந்த மனுவில் ஓபிசி மற்றும் டிஎன்டி வகுப்பினரை கடந்த 1872 முதல் 1931 வரைநடைபெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது புள்ளி விவரங்கள் சரியாக சேர்க்கப்பட்டது என்றும் மேலும் அந்நிய அரசு கூட இந்த புள்ளி விவரங்களின் அவசியத்தை உணர்ந்து சரியான முறையில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது என்றும் தற்பொழுது இந்தியாவில் மத்திய அரசு எந்த புள்ளி விவரங்களை இதுவரை கணக்கெடுக்காமல் இருப்பது ஓபிசி டிஎன்டி மக்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அணு நீதியாக உள்ளது என்றும்,மத்திய அரசு இந்த முறை சென்செஸ் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவித்துவிட்டு கடந்த 1 - 4- 2026 முதல் 15 -4-2026 வரை நாடு முழுவதும் நடந்த முதல் கட்ட சென்செஸ் கணக்கெடுப்பில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்றும் இரண்டாம் கட்ட கணக்கெடுக்கும் போது நடத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளதாகவும் தமிழகத்தில் தேர்தல் நடத்தல்முறை இருந்ததன் காரணமாக 17 7 2026 முதல் 31 7 2026 வரை முதல் கட்ட சென்செஸ் கணக்கெடுப்பு நடைபெறவு உள்ளது என்றும் அந்த கணக்கெடுப்பின் போது ஓபிசி டிஎன்டி வகுப்பினை புள்ளி விபரங்களுடன் சேர்க்க வேண்டும் என்றும் கூறி மனு அளித்தனர் இந்த மனு அளிக்கும்போது சீர்மரபினர் நல சங்கம் மற்றும் அகில இந்திய ஓபிசி ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள் உடன் இருந்தனர்2