Shuru
Apke Nagar Ki App…
சீனாவின் மீண்டும் ஒரு நவீன கண்டுபிடிப்பு விமானநிலையங்களில் சார்ஜ்ர் அது எப்படி என்று தான் பாருங்கள்.
Senthilkumarankumaran
சீனாவின் மீண்டும் ஒரு நவீன கண்டுபிடிப்பு விமானநிலையங்களில் சார்ஜ்ர் அது எப்படி என்று தான் பாருங்கள்.
More news from தமிழ்நாடு and nearby areas
- சாலை பாதுகாப்பு மாதம் முன்னிட்டு தேனியில் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் தொடங்கி வைத்தார் தேனி மாவட்டம் தேனியில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் தலைமையில் 37 ஆவது சாலை பாதுகாப்பு மாதம் உறுதிமொழி மற்றும் ஊர்வலம் நடைபெற்றது இந்த ஊர்வலம் தேனி நெடுஞ்சாலைத்துறை தேனி கோட்டம் மற்றும் கம்மவார் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் கையில் பதாகை ஏந்தி ஊர்வலம் சென்றனர் இந்த ஊர்வலம் பங்களா மாடு நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் தொடங்கி தேனி பெரியகுளம் ரோட்டில் உள்ள வாணி ஸ்வீட்ஸ் அருகில் நிறைவுற்றது இந்த ஊர்வலத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் மற்றும் நெடுஞ்சாலைத்துறை டிவிஷனல் இன்ஜினியர் குமணன் மற்றும் தேனி ஏடி திருக்குமரன் ஆண்டிபட்டி ஏ டி ராமமூர்த்தி மற்றும் டிஎஸ்பி முத்துக்குமார் தேனி காவல் நிலைய ஆய்வாளர் ராமலட்சுமி மற்றும் ஜவகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஏ இ ராஜசேகர் டெக்னிக்கல் இன்ஜினியர் செந்தில் மற்றும் கம்மவார் கல்லூரி செயலாளர் மகேஷ் ஆகியோர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது இரு சக்கர வாகனங்களில் இருவருக்கு மேல் செல்லாதீர்ப்போம் சாலையில் போட்டி போட்டுக் கொண்டு வாகனம் ஓட்ட வேண்டாம் குடிபோதையில் வாகனம் ஓட்ட வேண்டாம் செல்போன் பேசியபடி வாகனத்தை ஓட்ட வேண்டாம் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்ட வேண்டாம் முறையான பயிற்சி இல்லாமல் வாகனத்தை ஓட்டக் கூடாது சாலை விதிகளை மதித்து விபத்தினை தவிர்ப்போம் அதிக வேகம் அதிக சத்தம் ஆபத்தை விளைவிக்கும் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர் மாணவ மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது1
- சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள அதிமுக, பாமக, பாஜக மற்றும் தவெக ஆகிய கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகி திமுகவில் இணைந்தார்... சேலம் மாவட்டம் எடப்பாடியில் கொங்கணாபுரம் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அதிமுகவின் முக்கிய நிர்வாகி சிவாசின்னமுனி,பிரபு, பாமகவின் முக்கிய நிர்வாகி சக்திவேல்,ஹரிராம், தவெகவின் முக்கிய நிர்வாகி சங்கர் ,வெங்கடாஜலம் மற்றும் பாஜகவின் முக்கிய நிர்வாகி ஹரி உட்பட 100க்கும் மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து விலகி முன்னாள் அமைச்சரும்,சேலம் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.எம்.செல்வகணபதி முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். மாற்றுக்கட்சியில் இறந்த விலகிய மாற்று கட்சி நிர்வாகிகளுக்கு முன்னாள் அமைச்சர் பொன்னாடை அணிவித்து வாழ்த்தி வரவேற்றார்... அப்போது கொங்கணாபுரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் டாட்டா, ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பிர்லா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்...1
- தர்மபுரி மாவட்டம் அரூர் நகராட்சிக்கு உட்பட்ட லிங்காபுரம் கிராம ஏரிக்கரையில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்கு தார் மற்றும் சிமெண்ட் சாலை அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தி பல நாட்களாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் நிர்வாகம் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இன்று (ஜன 23) வெள்ளிக்கிழமை லிங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பள்ளி குழந்தைகள் என 50-க்கும் மேற்பட்டோர் அரூர் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து காவலர்கள் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்1
- தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தருமபுரியில் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் சதீஷ் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தும் வகையில் இன்று தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் சதீஷ் கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக வாக்காளர்கள் அனைவரும் அச்சமின்றியும் மதம், இனம், சாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் எந்த ஒரு தூண்டுதலுமின்றி அனைவரும் வாக்களிக்க வேண்டும் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பு தொடங்கிய பேரணி வாக்களிக்க தகுதியான அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தும் வகையில் கோஷங்களை எழுப்பியவாறு நெசவாளர் காலனி வழியாகச் சென்று நான்கு ரோடு சந்திப்பில் முடிவடைந்தது. இப்பேரணியில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா கோட்டாட்சியர் காயத்ரி மற்றும் அரசு அதிகாரிகள் 1000க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.1
- . தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதி உட்பட்டு உள்ள பாப்பாரப்பட்டி பேரூராட்சி கழக செயலாளர் ரமேஷ் தலைமையில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் பாப்பாரப்பட்டி பேருந்து நிலையம் அருகே தமிழக வெற்றி கழகத்தின் சின்னம் விசில் சின்னத்தை வழங்கிய தேர்தல் ஆணையத்தை வரவேற்கும் விதமாக பட்டாசுகள் வெடித்து பொதுமக்கள் மத்தியில் விசில் அடித்தும் கொண்டாடினார். தொண்டர்கள் நமது சின்னம் வெற்றிச் சின்னம் விசில் நாளைய முதல்வர் விஜய் என கோஷமிட்டனர் . தர்மபுரியில் தமிழக வெற்றி கழகத் தொண்டர்கள் திருவிழா போல் கொண்டாடிய ரசிகர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இதில் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் நமது சின்னம் விசில் பொதுமக்கள் மத்தியில் தங்களுடைய சின்னத்தை விசில் அடித்து வெளிப்படுத்தினர். இதில் நகர, ஒன்றிய கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்1
- சேலம் மாவட்டம் ஆத்தூர் நகர மன்ற தலைவர் நிர்மலா பபிதா மணிகண்டன் நகராட்சி ஆணையாளர் சையத் முஸ்தபா காமல் நகராட்சி அதிகாரிகள் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தேசிய வாக்காளர் தின உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர் . .1
- வாழ்கையில் வயது ஒரு நம்பர் மட்டுமே என்று மீண்டும் நமக்கு சொல்லும் கேரளாவின் வீர மங்கை. வாழ்த்துக்கள்.1
- பெரியகுளத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது இதில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஊனமுற்றோர் அடையாள அட்டை மற்றும் மருத்துவ காப்பீடு அட்டையில் வழங்கப்பட்டது தேனி மாவட்டம் பெரியகுளம் உள்ள எட்வர்டு நினைவு அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் இன்று ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் பெரியகுளம் வட்டார வள மையம் சார்பாக மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது இந்த மருத்துவ முகாமில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் மாணவர்களுக்கு கண் பரிசோதனை, உடல் பரிசோதனை, பேச்சுப் பயிற்சி, எழுத்து பயிற்சி உள்ளிட்டவைகள் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு பரிசோதனை மேற்கொண்டனர் அதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளி மாணவர்கள் குழந்தைகளுக்கு மருத்துவ சான்றிதழ், மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, மருத்துவ காப்பீடு அட்டை உள்ளிட்டவைகளுக்கு பதிவு செய்யப்பட்டனர் பின்னர் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மாற்றுத்திறனாளி அடையாள அட்டையும் வழங்கப்பட்டனர் மேலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உடல் பரிசோதனை செய்து மருத்துவ ஆலோசனை மற்றும் உடற்பயிற்சி உள்ளிட்டவைகள் காண ஆலோசனையும் பயிற்சியும் வழங்கப்பட்டனர் இந்த மருத்துவ முகாமில் பெரியகுளம் மற்றும் அதை சுற்றுவட்டார பகுதியில் இருந்து மாற்றுத்திறனாளி மாணவர்களை பெற்றோர்கள் அழைத்து வந்து தங்கள் குழந்தைகளை மருத்துவ பரிசோதனைகள் செய்து கொண்டனர் இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி தேனி மாவட்ட உதவி திட்ட அலுவலர் மோகன், பெரியகுளம் நகர் மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார், பெரியகுளம் வட்டாரக் கல்வி அலுவலர் ராஜமுருகன், வட்டார வளமைய பொறுப்பு மேற்பார்வையாளர் பாண்டியராஜ், பெரியகுளம் நெல்லையப்பர் நடுநிலைப் பள்ளியின் செயலர் முத்துமாணிக்கம், அரசு குழந்தைகள் நல மருத்துவர் முத்துமணி, மனநிலை மருத்துவர் மகாலட்சுமி, எலும்பு மருத்துவர் சையது அப்தாஹிர், செவி மருத்துவர் உமா, கண் மருத்துவர் சராயூ வெங்கட லட்சுமி, எட்வர்டு நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் உதயகலா, மற்றும் சிறப்பு பயிற்றுனர்கள் அலுவலர்கள் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்1
- கூத்தப்பாடி ஊராட்சியில் அமைந்துள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த மூன்று மாதங்களாக நீர் வரத்து சரிந்து காணப்பட்ட நிலையில் நேற்று கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறந்ததன் காரணமாக சுமார் 4000 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் இன்று ஜனவரி 22 வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1500 கன அடியாக நீர்வரத்து சரிந்துள்ளதாக மத்திய நீர் வள மேலாண்மை துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்1