logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

தாராபுரம் தொகுதி திமுக வேட்பாளர் இந்திராணி தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர். தாராபுரம் தொகுதி திமுக வேட்பாளர் இந்திராணி தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனிசட்டமன்றத் தொகுதியில் போட்டியிட திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் மருத்துவர் இந்திராணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துகள் பெற்றார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சரும் இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் எம்.பி. சாமிநாதன், திருப்பூர் மாவட்ட கழக செயலாளர் இல. பத்மநாபன், நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி, அமைச்சர் கயல்விழி செல்வராஜ் உள்ளிட்டோரைக் சந்தித்து இந்திராணி வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்பின் போது தாராபுரம் நகரம் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

4 hrs ago
user_Prabhu.s
Prabhu.s
தாராபுரம், திருப்பூர், தமிழ்நாடு•
4 hrs ago
3490c394-dcb7-436c-aa5f-5dbf0456e5c5

தாராபுரம் தொகுதி திமுக வேட்பாளர் இந்திராணி தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர். தாராபுரம் தொகுதி திமுக வேட்பாளர் இந்திராணி தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனிசட்டமன்றத் தொகுதியில் போட்டியிட திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் மருத்துவர் இந்திராணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துகள் பெற்றார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சரும் இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் எம்.பி. சாமிநாதன், திருப்பூர் மாவட்ட கழக செயலாளர் இல. பத்மநாபன், நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி, அமைச்சர் கயல்விழி செல்வராஜ் உள்ளிட்டோரைக் சந்தித்து இந்திராணி வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்பின் போது தாராபுரம் நகரம் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிடக் கூடிய சத்தியபாமா வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருக்கு ஆதரவாக வந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தமிழகத்தில் திமுக ஆட்சியை வீழ்த்தக்கூடிய ஒரே சக்தியாக தமிழக வெற்றிக் கழகமும் அதன் தலைவர் விஜயும் இருப்பதாக மக்கள் எண்ணுகிறார்கள் , அது நிறைவேறும் என பேட்டி அளித்தார்.
    1
    திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிடக் கூடிய சத்தியபாமா வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருக்கு ஆதரவாக வந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தமிழகத்தில் திமுக ஆட்சியை வீழ்த்தக்கூடிய ஒரே சக்தியாக தமிழக வெற்றிக்  கழகமும் அதன் தலைவர் விஜயும் இருப்பதாக மக்கள் எண்ணுகிறார்கள் , அது நிறைவேறும் என பேட்டி அளித்தார்.
    user_Vel
    Vel
    திருப்பூர் தெற்கு, திருப்பூர், தமிழ்நாடு•
    16 hrs ago
  • போடிநாயக்கனூர் ஜக்கமநாயக்கன்பட்டி அருகே உள்ள காளியம்மன் கோவில் திருவிழா. 300, மேற்பட்ட பெண்கள் பால் குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஜக்கம்மா நாயக்கன்பட்டி திருமலாபுரம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது அருள்மிகு காளியம்மன் கோவில். இங்கு இன்று பங்குனி மாத உற்சவத்தை முன்னிட்டு செண்டை மேளம் முழங்க,சிலம்பாட்டம், கோலாட்டம், ஆட்டம் பாட்டத்துடன் சுமார் 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் சுமந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் ஊர்வலமாக நடந்து வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர். அதனைத்தொடர்ந்து பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்த பால் குடங்களை கொண்டு காளியம்மன் கோவிலில் உள்ள மூலவர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர்.
    1
    போடிநாயக்கனூர் ஜக்கமநாயக்கன்பட்டி அருகே உள்ள காளியம்மன் கோவில் திருவிழா.
300, மேற்பட்ட பெண்கள் பால் குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஜக்கம்மா நாயக்கன்பட்டி திருமலாபுரம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது அருள்மிகு காளியம்மன் கோவில்.
இங்கு இன்று பங்குனி மாத உற்சவத்தை முன்னிட்டு செண்டை மேளம் முழங்க,சிலம்பாட்டம், கோலாட்டம், ஆட்டம் பாட்டத்துடன் சுமார் 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் சுமந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் ஊர்வலமாக நடந்து வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.
அதனைத்தொடர்ந்து பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்த பால் குடங்களை கொண்டு காளியம்மன் கோவிலில் உள்ள மூலவர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர்.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    1 hr ago
  • திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதியில் இந்திய ஜனநாயக புலிகள் அமைப்பின் தலைவரும் நடிகருமான மன்சூர் அலிகான் சுயேச்சையாக போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை லால்குடி கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்ரீதரிடம் தாக்கல் செய்தார். இதன் மூலம் அவர் லால்குடி தொகுதியில் தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். இந்த நிகழ்வில் இப்பகுதியை சேர்ந்த ஏராளமான ஜனநாயக புலிகள் அமைப்பின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
    1
    திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதியில் இந்திய ஜனநாயக புலிகள் அமைப்பின் தலைவரும் நடிகருமான மன்சூர் அலிகான் சுயேச்சையாக போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை லால்குடி கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்ரீதரிடம் தாக்கல் செய்தார். இதன் மூலம் அவர் லால்குடி தொகுதியில் தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். இந்த நிகழ்வில் இப்பகுதியை சேர்ந்த ஏராளமான ஜனநாயக புலிகள் அமைப்பின் நிர்வாகிகள்  உடனிருந்தனர்.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • காதலைப்போய் குப்பையில் போடு #lovestatus #suryamovie #publicintrest #tamil #superscenestamil
    1
    காதலைப்போய் குப்பையில் போடு #lovestatus #suryamovie #publicintrest #tamil #superscenestamil
    user_Maatram World news Theni
    Maatram World news Theni
    Public Relations Specialist Uthamapalayam, Theni•
    2 hrs ago
  • சங்ககிரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நித்யா அருண் ஏர் கலப்பையை சுமந்தபடி தனது ஆதரவாளர்களுடன் பேரணியாக சென்று வேட்புமனு தாக்கல் செய்தார்... தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நடக்கிறது.சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுபவர்களிடம் வேட்புமனு தாக்கல் இன்று 30ஆம் தேதி தொடங்குகிறது... இதனையடுத்து மாநிலம் முழுவதும் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தலைமையில் வேட்புமனு தாக்கலுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன... இந்நிலையில் சேலம் மாவட்டம் சங்ககிரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் நித்யா அருண் வேட்புமனு தாக்கல் செய்ய தங்கள் ஆதரவாளர்கள் 100க்கும் மேற்பட்டவர்களுடன் உழவர் ஏர் கலப்பை தோலில் சுமந்தபடி இன்று சங்ககிரி மலைக்கோட்டையில் இருந்து கோட்டாட்சியர் அலுவலகம் வரை பேரணியாக சென்று சங்ககிரி தேர்தல் நடத்தும் அலுவலர் கேந்திரியாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்...
    1
    சங்ககிரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நித்யா அருண் ஏர் கலப்பையை சுமந்தபடி தனது ஆதரவாளர்களுடன் பேரணியாக சென்று வேட்புமனு தாக்கல் செய்தார்...
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நடக்கிறது.சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுபவர்களிடம் வேட்புமனு தாக்கல் இன்று 30ஆம் தேதி தொடங்குகிறது...
இதனையடுத்து மாநிலம் முழுவதும் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தலைமையில் வேட்புமனு தாக்கலுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன...
இந்நிலையில் சேலம் மாவட்டம் சங்ககிரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் நித்யா அருண் வேட்புமனு தாக்கல் செய்ய தங்கள் ஆதரவாளர்கள் 100க்கும் மேற்பட்டவர்களுடன் உழவர் ஏர் கலப்பை தோலில் சுமந்தபடி இன்று சங்ககிரி மலைக்கோட்டையில் இருந்து கோட்டாட்சியர் அலுவலகம் வரை பேரணியாக சென்று சங்ககிரி தேர்தல் நடத்தும் அலுவலர் கேந்திரியாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்...
    user_Srianand
    Srianand
    பத்திரிகையாளர் Edappadi, Salem•
    16 hrs ago
  • மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா அவர்கள் தனது தொகுதியின் தலைமை தேர்தல் பணிமனையை இன்று (மார்ச் .30) மாலை திருப்பரங்குன்றம் கிரிவலப் பாதையில் திறந்து வைத்து பேசினார். இந்நிகழ்வில் கூட்டணி கட்சி முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். வரும் ஏப்ரல் 4ம்தேதி வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பதாகவும் அன்றே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க இருப்பதாகவும் கூறினார்.
    1
    மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா அவர்கள்  தனது தொகுதியின் தலைமை தேர்தல் பணிமனையை இன்று (மார்ச் .30) மாலை திருப்பரங்குன்றம் கிரிவலப் பாதையில் திறந்து வைத்து பேசினார்.
இந்நிகழ்வில் கூட்டணி கட்சி முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள்  கலந்து கொண்டனர். வரும் ஏப்ரல் 4ம்தேதி வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பதாகவும் அன்றே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க இருப்பதாகவும் கூறினார்.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    18 hrs ago
  • தங்கையைக் கேலி செய்ததைத் தட்டிக்கேட்ட அண்ணன் படுகொலை - உறவினர்கள் சாலை மறியல். தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள எரசக்கநாயக்கனூரில், பள்ளி செல்லும் தனது தங்கையைக் கேலி செய்தவர்களைத் தட்டிக்கேட்ட இளைஞர் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எரசக்கநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா (28). இவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். சூர்யாவின் தங்கை அப்பகுதியில் உள்ள பள்ளியில் பயின்று வருகிறார். பள்ளிக்குச் செல்லும் போது சில சிறுவர்கள் தனது தங்கையைக் கேலி செய்ததாகத் தெரிகிறது. இது குறித்துப் பள்ளிக்குச் சென்ற சூர்யா, சம்பந்தப்பட்டவர்களைக் கண்டித்துள்ளார். இந்த மோதல் காரணமாக, இன்று ஊரின் மையப்பகுதியான கனரா வங்கி அருகே சூர்யா மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இத்தகவல் அறிந்து விரைந்து வந்த சின்னமனூர் காவல்துறையினர், சூர்யாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளிகளை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தி, சூர்யாவின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சின்னமனூர் பிரிவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்து எங்கள் முன் நிறுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். எனவே சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்தத் துயரச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள சின்னமனூர் காவல்துறையினர், தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
    1
    தங்கையைக் கேலி செய்ததைத் தட்டிக்கேட்ட அண்ணன் படுகொலை - உறவினர்கள் சாலை மறியல்.
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள எரசக்கநாயக்கனூரில், பள்ளி செல்லும் தனது தங்கையைக் கேலி செய்தவர்களைத் தட்டிக்கேட்ட இளைஞர் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
எரசக்கநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா (28). இவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
சூர்யாவின் தங்கை அப்பகுதியில் உள்ள பள்ளியில் பயின்று வருகிறார். பள்ளிக்குச் செல்லும் போது சில சிறுவர்கள் தனது தங்கையைக் கேலி செய்ததாகத் தெரிகிறது. இது குறித்துப் பள்ளிக்குச் சென்ற சூர்யா, சம்பந்தப்பட்டவர்களைக் கண்டித்துள்ளார்.
இந்த மோதல் காரணமாக, இன்று ஊரின் மையப்பகுதியான கனரா வங்கி அருகே சூர்யா மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். 
இத்தகவல் அறிந்து விரைந்து வந்த சின்னமனூர் காவல்துறையினர், சூர்யாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலையாளிகளை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தி, சூர்யாவின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சின்னமனூர் பிரிவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்து எங்கள் முன் நிறுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
எனவே சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 
இந்தத் துயரச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள சின்னமனூர் காவல்துறையினர், தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    18 hrs ago
  • திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள ரயில்வே சாலையில் தர்மராஜ் என்பவரின் பிரிண்டர்ஸ் உள்ளார். பல்வேறு விதமான பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை கடையில் திடீரென புகை வருவதை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து மணப்பாறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் மணப்பாறை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் சி கொழுந்து விட்டு பயங்கரமாக மளமளவென கடை முழுவதும் பற்றி எரிய தொடங்கியது. இதனால் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வையம்பட்டி பகுதியில் இருந்து மற்றொரு தீயணைப்பு வாகனமும் தனியார் லாரிகளில் இருந்து தண்ணீரைக் கொண்டு வந்து தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ரயில் நிலையம் அமைத்துள்ள பிரதான சாலை என்பதுடன் அதிக அளவிலான கடைகள் உள்ள பகுதி என்பதால் அந்தப் பகுதியில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது. தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருகின்றனர்.
    1
    திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள ரயில்வே சாலையில் தர்மராஜ் என்பவரின் பிரிண்டர்ஸ் உள்ளார். பல்வேறு விதமான பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை கடையில் திடீரென புகை வருவதை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து மணப்பாறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் மணப்பாறை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் சி கொழுந்து விட்டு பயங்கரமாக மளமளவென கடை முழுவதும் பற்றி எரிய தொடங்கியது. இதனால் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வையம்பட்டி பகுதியில் இருந்து மற்றொரு தீயணைப்பு வாகனமும் தனியார் லாரிகளில் இருந்து தண்ணீரைக் கொண்டு வந்து தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ரயில் நிலையம் அமைத்துள்ள பிரதான சாலை என்பதுடன் அதிக அளவிலான கடைகள் உள்ள பகுதி என்பதால் அந்தப் பகுதியில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது. தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருகின்றனர்.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    7 hrs ago
  • முன்னாள் முதலமைச்சர் தொகுதியில் போட்டியிடுவது எனக்கு பெருமையாக உள்ளது. எடப்பாடி தொகுதியில் உள்ள குறைகள், மருத்துவ வசதிகள் மற்றும் தரமான கல்வி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எடப்பாடி பரபரப்பு பேட்டி... சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பிரியதர்ஷினி, தனது ஆதரவாளர்களுடன் பேரணியாக சென்று வேட்புமனு தாக்கல் செய்தார்... தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தலைமையில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன... இந்நிலையில், எடப்பாடி கேட்டுக்கடை பகுதியில் இருந்து 100க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் பேரணியாக புறப்பட்ட பிரியதர்ஷினி, எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகம் சென்றடைந்து, தேர்தல் நடத்தும் அலுவலர் நடராஜனிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்... பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்களுக்காக முழு களப் போராளியாக பணியாற்றுவேன் என்றும், முன்னாள் முதல்வர் போட்டியிட்ட தொகுதியில் போட்டியிடுவது பெருமையாக உள்ளது என்றும் தெரிவித்தார். மேலும்,எடப்பாடி தொகுதியில் உள்ள குறைகளை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பேன் எனக் கூறிய அவர், மருத்துவ வசதிகளின் பற்றாக்குறை மற்றும் தரமான கல்வி இல்லாத பிரச்சனைகளை தீர்க்க முயற்சிப்பேன் என்றும் உறுதியளித்தார்... மக்களின் முழு ஆதரவு தமக்கு இருப்பதாகவும், நிச்சயமாக தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் பிரியதர்ஷினி தெரிவித்தார்...
    1
    முன்னாள் முதலமைச்சர் தொகுதியில் போட்டியிடுவது எனக்கு பெருமையாக உள்ளது. எடப்பாடி தொகுதியில் உள்ள குறைகள், மருத்துவ வசதிகள் மற்றும் தரமான கல்வி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எடப்பாடி பரபரப்பு பேட்டி...
சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி  சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பிரியதர்ஷினி, தனது ஆதரவாளர்களுடன் பேரணியாக சென்று வேட்புமனு தாக்கல் செய்தார்...
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தலைமையில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன...
இந்நிலையில், எடப்பாடி கேட்டுக்கடை பகுதியில் இருந்து 100க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் பேரணியாக புறப்பட்ட பிரியதர்ஷினி, எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகம் சென்றடைந்து, தேர்தல் நடத்தும் அலுவலர் நடராஜனிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்...
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்களுக்காக முழு களப் போராளியாக பணியாற்றுவேன் என்றும், முன்னாள் முதல்வர் போட்டியிட்ட தொகுதியில் போட்டியிடுவது பெருமையாக உள்ளது என்றும் தெரிவித்தார். மேலும்,எடப்பாடி தொகுதியில் உள்ள குறைகளை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பேன் எனக் கூறிய அவர், மருத்துவ வசதிகளின் பற்றாக்குறை மற்றும் தரமான கல்வி இல்லாத பிரச்சனைகளை தீர்க்க முயற்சிப்பேன் என்றும் உறுதியளித்தார்...
மக்களின் முழு ஆதரவு தமக்கு இருப்பதாகவும், நிச்சயமாக தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் பிரியதர்ஷினி தெரிவித்தார்...
    user_Srianand
    Srianand
    பத்திரிகையாளர் Edappadi, Salem•
    16 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.