*பசும்பொன் மக்கள் கட்சி தலைவர் இசக்கி ராஜா கைது - நீதிமன்றம் முன்பு மறியல்! போலீசார் தடியடி! தூத்துக்குடியில் பரபரப்பு!* *தூத்துக்குடியில் பரபரப்பு! வேலவன் ஜூவல்லர்ஸிடம் பணம் கேட்டு மிரட்டியதாக பசும்பொன் மக்கள் கட்சி தலைவர் இசக்கி ராஜா கைது!* தூத்துக்குடி வேலவன் ஜூவல்லர்ஸ் நிறுவனத்திடம் பணம் கேட்டு மிரட்டியதாக அந்நிறுவனம் சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், தென்பாகம் காவல்துறையினர் பசும்பொன் மக்கள் கட்சி தலைவர் இசக்கி ராஜாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை வரும் அக்டோபர் 6ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த நிலையில், இசக்கி ராஜா மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக கூறி, அவரது ஆதரவாளர்கள் நீதிமன்றம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் தீவிரமடைந்ததால், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த *போலீசார் தடியடி நடத்தி, போராட்டக்காரர்களை கலைத்து கைது செய்து அழைத்துச் சென்றனர்.* இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. > வேலவன் ஜூவல்லர்ஸை மிரட்டியதாக பசும்பொன் மக்கள் கட்சி தலைவர் இசக்கி ராஜா கைது! அக்டோபர் 6 வரை நீதிமன்ற காவல்! பொய் வழக்கு என கூறி ஆதரவாளர்கள் நீதிமன்றம் முன்பு மறியல்! போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்!
*பசும்பொன் மக்கள் கட்சி தலைவர் இசக்கி ராஜா கைது - நீதிமன்றம் முன்பு மறியல்! போலீசார் தடியடி! தூத்துக்குடியில் பரபரப்பு!* *தூத்துக்குடியில் பரபரப்பு! வேலவன் ஜூவல்லர்ஸிடம் பணம் கேட்டு மிரட்டியதாக பசும்பொன் மக்கள் கட்சி தலைவர் இசக்கி ராஜா கைது!* தூத்துக்குடி வேலவன் ஜூவல்லர்ஸ் நிறுவனத்திடம் பணம் கேட்டு மிரட்டியதாக அந்நிறுவனம் சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், தென்பாகம் காவல்துறையினர் பசும்பொன் மக்கள் கட்சி தலைவர் இசக்கி ராஜாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை வரும் அக்டோபர் 6ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த நிலையில், இசக்கி ராஜா மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக கூறி, அவரது ஆதரவாளர்கள் நீதிமன்றம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் தீவிரமடைந்ததால், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த *போலீசார் தடியடி நடத்தி, போராட்டக்காரர்களை கலைத்து கைது செய்து அழைத்துச் சென்றனர்.* இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. > வேலவன் ஜூவல்லர்ஸை மிரட்டியதாக பசும்பொன் மக்கள் கட்சி தலைவர் இசக்கி ராஜா கைது! அக்டோபர் 6 வரை நீதிமன்ற காவல்! பொய் வழக்கு என கூறி ஆதரவாளர்கள் நீதிமன்றம் முன்பு மறியல்! போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்!
- *பசும்பொன் மக்கள் கட்சி தலைவர் இசக்கி ராஜா கைது - நீதிமன்றம் முன்பு மறியல்! போலீசார் தடியடி! தூத்துக்குடியில் பரபரப்பு!* *தூத்துக்குடியில் பரபரப்பு! வேலவன் ஜூவல்லர்ஸிடம் பணம் கேட்டு மிரட்டியதாக பசும்பொன் மக்கள் கட்சி தலைவர் இசக்கி ராஜா கைது!* தூத்துக்குடி வேலவன் ஜூவல்லர்ஸ் நிறுவனத்திடம் பணம் கேட்டு மிரட்டியதாக அந்நிறுவனம் சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், தென்பாகம் காவல்துறையினர் பசும்பொன் மக்கள் கட்சி தலைவர் இசக்கி ராஜாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை வரும் அக்டோபர் 6ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த நிலையில், இசக்கி ராஜா மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக கூறி, அவரது ஆதரவாளர்கள் நீதிமன்றம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் தீவிரமடைந்ததால், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த *போலீசார் தடியடி நடத்தி, போராட்டக்காரர்களை கலைத்து கைது செய்து அழைத்துச் சென்றனர்.* இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. > வேலவன் ஜூவல்லர்ஸை மிரட்டியதாக பசும்பொன் மக்கள் கட்சி தலைவர் இசக்கி ராஜா கைது! அக்டோபர் 6 வரை நீதிமன்ற காவல்! பொய் வழக்கு என கூறி ஆதரவாளர்கள் நீதிமன்றம் முன்பு மறியல்! போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்!1
- காட்டுப்புத்தூர் பேருந்து நிலையத்தில் சிங்கப்பின் சிறப்பு அதிரடிப்படை பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர் திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் காட்டுப்புத்தூர் பேருந்து நிலையம் முன்பு சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர் பெண்கள் நடந்து கொள்ளும் விதம் குறித்தும் பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஆலோசனைகளை சிங்கப்பெண் அதிரடி படை படையினர் பேருந்து நிலையம் பகுதியில் இருக்கும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்1
- முசிறியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காமராஜரின் காலை உணவு விரிவாக்க திட்டம் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்ட பெருந்தலைவர் காமராசர் காலை உணவு திட்டம் மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்திய முசிறி எம்எல்ஏ விக்னேஷ், தமிழகத்தில் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1 முதல் 5 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக தொடங்கப்பட்ட காலை உணவுத் திட்டம், தொடர்ந்து அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. தற்போது இத்திட்டம் பெருந்தலைவர் காமாசர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, 6 முதல் 8 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து திருச்சி மாவட்டம் முசிறி தொகுதியில் செவ்வாய்கிழமை முதல் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன் தொடக்கமாக முசிறிநகராட்சியில் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் பிரபு, நகர் மன்ற தலைவர் கலைச்செல்வி சிவக்குமார் ஆகியோர் திட்டத்தை தொடங்கி வைத்து, மாணவிகளுடன் அமர்ந்து காலை உணவு அருந்தினர். இந்நிகழ்வில் நகராட்சி பொறியாளர் சம்பத்குமார், சுகாதார ஆய்வாளர் பன்னீர்செல்வம், மேலாளர் மாரிமுத்து நகர் மன்ற உறுப்பினர்கள் பாலகுமார், இளையராஜா, சுந்தர்ராஜ்,,பள்ளி தலைமை ஆசிரியை கீதா, ஆசிரியர் புஷ்பராஜ் மற்றும் நகராட்சி அலுவலர்கள் பணியாளர்கள் பள்ளி மாணவிகள் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.1
- கரூர் மாவட்ட ஆட்சியர் காலை உணவு திட்டத்தை தொடங்கினார். கரூர் மாவட்டத்துக்கு இன்று செப்டம்பர் : 22 காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில், 21,487 கரூர் மாவட்ட மாணவ, மாணவியர் பயன் பெறுவர். தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 1 முதல் 6-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆட்சியில், 8-ம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யப்பட்டு, காமராஜர் காலை உணவு திட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை, முதல்வர் ஜோசப் விஜய் காணொளி காட்சியின் மூலமாக தொடங்கி வைத்தார் இதன்படி கரூர் மாநகராட்சியில், 30 பள்ளிகளில், 2,936 மாணவர்கள், குளித்தலை நகராட்சியில், 6 பள்ளிகளில், 805 பேர், பள்ளப்பட்டி நகராட்சியில், 9 பள்ளிகளில், 1,439 பேர், புகழூர் நகராட்சியில், 7 பள்ளிகளில், 407 பேர் உள்ளனர். கரூர் ஊராட்சி ஒன்றியத்தில், 19 பள்ளிகளில், 919 மாணவர், தான்தோன்றிமலையில், 26 பள்ளிகளில், 1,871 பேர், அரவக்குறிச்சியில், 16 பள்ளிகளில், 818 பேர், க.பரமத்தியில், 28 பள்ளிகளில், 915 பேர், குளித்தலையில், 28 பள்ளிகளில், 3,047 பேர், கிருஷ்ணராயபுரத்தில், 18 பள்ளிகளில், 1,853 பேர், கடவூரில், 34 பள்ளிகளில், 2,962 பேர் உள்பட மொத்தம், 310 பள்ளிகளில் பயிலும், 21,487 மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் இருந்தனர் இந்த நிகழ்ச்சியில் காலை உணவு திட்டத்தை மாணவ மாணவியருடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார்கள் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் முத்துக்குமரன். கரூர் கிருஷ்ணாபுரம் சட்டமன்ற உறுப்பினர் சத்யா அரசுத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்1
- காதலித்து கலப்பு திருமணம், விட்டுச்சென்ற காதலன், காதலன் மற்றும் அவர்களின் பெற்றோரை கைது செய்ய வலியுறுத்தி பெண் புகார். கரூர் மாவட்டம் குளித்தலை தாலுக்கா காக்கையம் பட்டியை சேர்ந்தவர் முத்துலட்சுமி இவர் காணப்பட்டியில் உள்ள அரசு பாலிடெக்னிக்ல் படித்து வந்தபோது அதே கல்லூரியில் படித்து வந்த கார்த்திக் என்பவர் உடன் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் இருப்பினும் கார்த்திக் முத்துலட்சுமியை சென்னைக்கு சென்று திருமணம் செய்து ஒரு வருடம் இருவரும் வசித்து வந்துள்ளனர். மேலும் முத்துலட்சுமி கர்ப்பமாக இருந்துள்ள நிலையில் கார்த்திக்கின் பெற்றோர்கள் தொடர்பு கொண்டு முத்துலட்சுமியின் கருவை கலைத்துவிட்டு எங்களுடன் வந்துவிடு என கூறியுள்ளனர். கார்த்தி முத்துலட்சுமி கருவை கலைத்துவிட்டு தனியாக விட்டுவிட்டு பெற்றவுடன் சென்று விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துலட்சுமி கார்த்திக்கை தொடர்பு கொண்ட போது கார்த்திக்கின் பெற்றோர் கொலை மிரட்டல் கொடுத்துள்ளனர். அவரின் தாய் தந்தையின் மீது குளித்தலை மகளிர் காவல் நிலையத்தில் முத்துலட்சுமி புகார் கொடுத்ததன் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் மீது எஸ்சிஎஸ்டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மூவர் மீதும் FIR பதிவு செய்தும் இன்னும் கைது செய்யபடததால் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் புகார் மனு அளித்தார்.1
- காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டத்தி ல் 21,273-மாணாக்கர்கள் பயனடைவர். பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டத்தி ல் 21,273-மாணாக்கர்கள் பயனடைவர். தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டத்தினை தொடங்கி வைத்ததை தொடர்ந்து, கரூர் மாவட்டம், தான்தோன்றி ஊராட்சி ஒன்றியம், மணவாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் முத்துக்குமரன் மாணவ-மாணவியர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். இந்த திட்டத்தின் மூலம் அரசுப் பள்ளியில் 6 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. கரூர் மாவட்டத்தில் காலை உணவுத் திட்டத்தின் மூலம் 1 ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை 768 பள்ளிகளில் பயிலும் 30,669 மாணவ-மாணவியர்கள் பயன்பெறும் நிலையில் இந்த விரிவாக்கத் திட்டத்தின் மூலம் 6 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை 310 அரசுப் பள்ளிகளில் பயிலும் 21,273 மாணாக்கர்களுக்கு இன்று முதல் காலை உணவு வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் மாணவ-மாணவியர்களுக்கு திங்கட்கிழமை - வெண் பொங்கல், காய்கறி சாம்பார், செவ்வாய் கிழமை - சேமியா கிச்சடி, காய்கறி சாம்பார் புதன்கிழமை - வெண் பொங்கல், காய்கறி சாம்பார், வியாழக்கிழமை - ரவா உப்புமா, காய்கறி சாம்பார் மற்றும் வெள்ளிக்கிழமை- கோதுமை ரவா கிச்சடி, காய்கறி சாம்பார் என ஐந்து நாட்களும்,பள்ளி வேலை நாட்களில் உணவு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், கிருஷ்ணராயபுரம் எம் எல் ஏ.சத்யா, மாநகராட்சி ஆணையர் பிரித்திவிராஜ் ,திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சிமுகமை தனசேகரன், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) பொன்னாம்பலம், முதன்மை கல்வி அலுவலர் ராஜு, மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) அக்பர் அலி, மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.1
- மணப்பாறை துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை அறிவிப்பு திருச்சி மாவட்டம் மணப்பாறை துணை மின் நிலையத்தில் நாளை புதன்கிழமை நாள் 23.09.26 காலை 09.00 மணியிலிருந்து மாலை 04.00 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இங்கிருந்து மின்சாரம் பெறும் மணப்பாறை நகரம், செவலூர், பொடங்குபட்டி, பொய்கைபட்டி, வீரப்பூர், கொட்டப்பட்டி, தீராம்பட்டி, பொத்த மேட்டுப்பட்டி, மஞ்சம்பட்டி, கலிங்கப்பட்டி, ராயம்பட்டி, பூசாரிபட்டி, ஆண்டவர் கோவில், கள்ளிபட்டி, முத்தபு டையான்பட்டி, காட்டுப்பட்டி, புதியகாலணி, பழைய காலணி, மணப்பாறைபட்டி, கல்பாளையத்தான்பட்டி, கீழபொய்கைபட்டி, கஸ்தூரிபட்டி, வடுகபட்டி, இராயம் பட்டி, வலையபட்டி, எஃப்.கீழையூர், சின்னமனப்பட்டி, கே.பெரியப்பட்டி, வடக்குசேர்பட்டி, இடையப்பட்டி, மரவனூர், சமுத்திரம், தாதநாயக்கன்பட்டி, கத்திக்கா ரன்பட்டி, சித்தகுடிப்பட்டி, களத்துப்பட்டி, ஆளிபட்டி, தொப்பம்பட்டி, குதிரைகுத்திபட்டி, படுகளம், பூசாரி பட்டி, கரும்புலிபட்டி, அமையபுரம், குளத்தூரம்பட்டி, கூடத்திப்பட்டி, ஆணையூர், பண்ணாங்கொம்பு குடிநீர், பண்ணாங்கொம்பு, கருப்பகோவில்பட்டி, பெருமாம் பட்டி, ஈச்சம்பட்டி, அமையபுரம், பண்ணப்பட்டி, தாதம லைப்பட்டி, ஆமணக்கம்பட்டி, கன்னிவடுகப்பட்டி, வீரா கோவில்பட்டி, பாலகருதம்பட்டி, ரெங்கவுண்டம்பட்டி, வடுகப்பட்டி வீட்டு வசதிவாரிய குடியிருப்பு, வேங்கை குறிச்சி, பொன்னகோன்பட்டி, மலையடிப்பட்டி வாட்டர் போர்டு, வெள்ளை பூலாம்பட்டி, கரட்டுப்பட்டி, பிச்சை மணியாரம்பட்டி, ஆவாரம்பட்டி, புங்கம்பட்டி, ஆலத் தூர், பாம்பாட்டிப்பட்டி, செட்டியப்பட்டி, ம.துலுக்கம் பட்டி, காட்டுப்பட்டி, முள்ளிப்பாடி, கருமகவுண்டம்பட்டி, என்.பூலாம்பட்டி, இனாம் கோவில்பட்டி, தோப்புப்பட்டி, நாகம்பட்டி, வளர்ந்த நகரம், சுண்டகாம்பட்டி மற்றும் சுற்றியுள்ள பல பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளனர்.1
- அரவக்குறிச்சி அருகே SBI வங்கியில் கொள்ளை முயற்சி! - ஜன்னலை உடைத்து புகுந்த மர்ம நபர்கள் தப்பியோட்டம்* கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த கோவிலூரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளையில் இன்று அதிகாலை கொள்ளை முயற்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. ஜன்னல் கம்பிகளை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்த மர்ம நபர்கள், வங்கிக்குள் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். அப்போது வங்கியில் பொருத்தப்பட்டிருந்த அலாரம் சத்தம் அலறியதால், அதிர்ச்சியடைந்த கொள்ளையர்கள் எதையும் எடுக்காமல் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அரவக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வங்கியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து, தப்பியோடிய கொள்ளையர்களை தேடி வருகின்றனர். அதிகாலையில் நடந்த இந்த கொள்ளை முயற்சியால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. > கரூர் அரவக்குறிச்சி அருகே பாரத ஸ்டேட் வங்கியில் கொள்ளை முயற்சி! ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், அலாரம் அடித்ததும் தப்பியோட்டம். போலீசார் சிசிடிவி ஆய்வு! செய்து வருகின்றனர்1