logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

இராசிபுரம் பகுதியில் உள்ள அத்தனூர் பேரூராட்சியில் தைத்திருநாள் பொங்கல் பண்டிகை மக்கள் கொண்டாடுவதற்காக அத்தனூர் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் தூய்மைப் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள்.

1 hr ago
user_கணேஷ் G
கணேஷ் G
Local News Reporter ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
1 hr ago
2b7a196e-f32c-441a-9357-e9445b276396
90d24ff9-0c06-4260-baec-c22a725032a1
ff47bd14-772e-41e2-bb0f-7d1090c23d2f

இராசிபுரம் பகுதியில் உள்ள அத்தனூர் பேரூராட்சியில் தைத்திருநாள் பொங்கல் பண்டிகை மக்கள் கொண்டாடுவதற்காக அத்தனூர் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் தூய்மைப் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • மாவட்டத்தில் இன்று பதிவான மழையின் விவரம் தர்மபுரி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று காலை முதல் தற்போது வரை பல இடங்களில் மழை பொழிந்து வருகிறது இந்த நிலையில் இன்று காலை 7 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழையின் விவரம். வேப்பம்பட்டி 4.4 மிமீ, சூரியக்கடை 4மிமீ, கேத்துரெட்டிபட்டி 2.8 மிமீ, பெரியப்பட்டி 2.8 மிமீ, மருதிப்பட்டி 2.4 மிமீ, தென்கரைக்கோட்டை 2.4 மிமீ, பையர்நத்தம் 2.4மிமீ, தீர்த்தமலை 2மிமீ என மழை பதிவாகி உள்ளது
    1
    மாவட்டத்தில் இன்று பதிவான மழையின் விவரம்
தர்மபுரி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று காலை முதல் தற்போது வரை பல இடங்களில் மழை பொழிந்து வருகிறது இந்த நிலையில் இன்று காலை 7 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழையின் விவரம்.
வேப்பம்பட்டி 4.4 மிமீ, சூரியக்கடை 4மிமீ,
கேத்துரெட்டிபட்டி 2.8 மிமீ, பெரியப்பட்டி 2.8 மிமீ, மருதிப்பட்டி  2.4 மிமீ, தென்கரைக்கோட்டை 2.4 மிமீ, பையர்நத்தம்  2.4மிமீ, தீர்த்தமலை 2மிமீ என மழை பதிவாகி உள்ளது
    user_Raja
    Raja
    செய்தியாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • தர்மபுரி மாவட்டம் அரூர் ஒன்றியத்தை சேர்ந்த செல்லம்பட்டி மோப்பிரிப்பட்டி அச்சல்வாடி பெரியப்பட்டி மொரப்பூர் போளையம்பள்ளி உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட திமுக,தவெக, உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளை சேர்ந்த இளைஞர்கள் அதிமுக நிர்வாகி விக்னேஷ் தலைமையில் இன்று அக்கட்சியில் இருந்து விலகி தர்மபுரி மாவட்ட அதிமுக அலுவலகத்தில் அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் மாவட்ட கழக செயலாளர் கே பி அன்பழகன் எம் எல் ஏ முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.புதியதாக இணைந்தவர்களுக்கு கழக துண்டினை அணிவித்து வரவேற்றார். இந்நிகழ்வில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ்.ஆர்.வெற்றிவேல், பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ கோவிந்தசாமி,ஒன்றிய செயலாளர்கள் சிவபிரகாசம்,பழனி, முருகன்,மருத்துவர் சந்திரமோகன்,ஐடி விங் மாவட்ட செயலாளர் கோவிந்தசாமி முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் ஏகநாதன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
    1
    தர்மபுரி மாவட்டம் அரூர் ஒன்றியத்தை சேர்ந்த செல்லம்பட்டி மோப்பிரிப்பட்டி அச்சல்வாடி பெரியப்பட்டி மொரப்பூர் போளையம்பள்ளி உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட திமுக,தவெக, உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளை சேர்ந்த இளைஞர்கள் அதிமுக நிர்வாகி விக்னேஷ் தலைமையில் இன்று அக்கட்சியில் இருந்து விலகி தர்மபுரி மாவட்ட அதிமுக அலுவலகத்தில் அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் மாவட்ட கழக செயலாளர் கே பி அன்பழகன் எம் எல் ஏ முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.புதியதாக இணைந்தவர்களுக்கு கழக துண்டினை அணிவித்து வரவேற்றார்.
இந்நிகழ்வில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ்.ஆர்.வெற்றிவேல், பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ கோவிந்தசாமி,ஒன்றிய செயலாளர்கள் சிவபிரகாசம்,பழனி, முருகன்,மருத்துவர் சந்திரமோகன்,ஐடி விங் மாவட்ட செயலாளர் கோவிந்தசாமி முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் ஏகநாதன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
    user_Periyasamy
    Periyasamy
    Journalist Dharmapuri, Tamil Nadu•
    16 hrs ago
  • கரூரை அடுத்த குளித்தலை அருகே மணத்தட்டை காவிரி ஆற்றின் படுகையிலிருந்து காவிரி குடிநீர் மணப்பாறை-குளித்தலை சாலையோரம் குழாய்கள் பதிக்கப்பட்டு மணப்பாறை மற்றும் மருங்காபுரி பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று மாலை மணப்பாறை அடுத்த கலிங்கப்பட்டி அருகே அமைத்துள்ள 2மீட்டர் அகலமும், 46.6 மீட்டர் நீளம் கொண்ட காவிரி குடிநீர் பிரதான குழாய் திடீரென உடைப்பு ஏற்பட்டு சுமார் 10 அடி தூரத்திற்கு குடிநீர் நாலாபக்கமும் பீறிட்டு அடித்து வருகிறது. இதையறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    கரூரை அடுத்த குளித்தலை அருகே மணத்தட்டை காவிரி ஆற்றின் படுகையிலிருந்து  காவிரி குடிநீர் மணப்பாறை-குளித்தலை சாலையோரம் குழாய்கள் பதிக்கப்பட்டு  மணப்பாறை மற்றும் மருங்காபுரி பகுதிகளுக்கு  விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று மாலை மணப்பாறை அடுத்த கலிங்கப்பட்டி அருகே அமைத்துள்ள 2மீட்டர் அகலமும், 46.6 மீட்டர் நீளம் கொண்ட காவிரி குடிநீர் பிரதான குழாய் திடீரென உடைப்பு ஏற்பட்டு சுமார் 10 அடி தூரத்திற்கு குடிநீர் நாலாபக்கமும் பீறிட்டு அடித்து வருகிறது. இதையறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_Usha arun News
    Usha arun News
    மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    14 hrs ago
  • *போச்சம்பள்ளி சந்தையில் பொங்கல் முன்னிட்டு – ஆடு, கோழி, தங்கம், மளிகை, மாட்டு அலங்காரம் வரை விற்பனை ஜோர்* *தமிழ்நாடு – கர்நாடகா – ஆந்திரா மாநிலங்களிலிருந்து வியாபாரிகள் வருகை; இன்று மட்டும் 5 கோடிக்கு ஆடு விற்பனை!* கிருஷ்ணகிரி மாவட்டத்தின் முக்கிய வர்த்தக மையமான போச்சம்பள்ளியில் இன்று நடைபெற்று வரும் வாரச் சந்தை, தைப்பொங்கல், , மாட்டு பொங்கல் , காணும் பொங்கல் ஆகிய பண்டிகைகளை முன்னிட்டு அதிகாலையிலேயே பெரும் கூட்ட நெரிசலுடன் களைகட்டியது. வாடிக்கையாளர்கள் அதிகாலை 5 மணி முதலே சந்தைக்கு திரண்டதால், வியாபாரிகள் தங்கள் கடைகளை முன்கூட்டியே அமைத்து விற்பனையைத் தொடங்கினர். இன்றைய சந்தையின் சிறப்பம்சமாக, தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மாவட்டங்களுடன் அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களிலிருந்தும் ஏராளமான வியாபாரிகள் வருகை தந்திருந்தனர். வேறுபட்ட மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட ஆடுகள், கோழிகள், மளிகை பொருட்கள், காய்–பழங்கள் மற்றும் மசாலா பொருட்கள் மிக உயர்ந்த விற்பனையைப் பெற்றன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இறைச்சி தேவையும், குலதெய்வ வழிபாடு, நேர்த்திக்கடன் செலுத்துதல், பலி வழிபாடு ஆகியவற்றிற்கான ஆடுகளின் தேவை அதிகரித்ததால், இந்த வாரம் மட்டும் 5 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 20–25 கிலோ எடை கொண்ட ஆடுகள் 19,000 முதல் 23,000 ரூபாய் வரை விற்பனையாகின. மாட்டு பொங்கல் நெருங்கிவருவதால், கால்நடைகளுக்கான அலங்காரப் பொருட்கள் சந்தையில் அதிகம் தேவை பெற்றன. விற்பனையாளர்கள் கொண்டு வந்த மாட்டுக் கொம்புக்கு நிறமூட்டும் பவுடர்கள் – சிவப்பு, மஞ்சள், பச்சை கொம்புக்கு கட்டும் மணி, தாலம் கழுத்தில் அணிவிக்கும் பொன்/வெள்ளி நிற அலங்கார கயிறுகள் மாட்டிற்கு அணிவிக்கும் முத்து சங்கிலி, முல்லுறி ரிப்பன், வால் அலங்காரம் அலங்கார குட்டைகள் மற்றும் வண்ணத்துண்டுகள் இந்த பொருட்கள் அனைத்தும் அதிகாலை முதலே வேகமாக விற்று, பெரும்பாலான கடைகளில் பொருட்கள் மாலைக்குள் விற்றுவிட்டன. அரிசி, சர்க்கரை, பருப்பு வகைகள், மஞ்சள், நெய் போன்ற பண்டிகை மளிகைப் பொருட்கள் அதிக விற்பனையாகின காய்கறி விலை உயர்ந்திருந்தாலும், விற்பனை அதிகரித்தது தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த அனைத்து வியாபாரிகளும், “இன்று விற்பனை மிக சிறப்பாக உள்ளது. கடந்த வாரங்களை விட இரட்டிப்பு அளவில் மக்கள் வருகை. பண்டிகை முன்பாக சந்தை முழுவதும் விற்பனை சூடுபிடித்துள்ளது,” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
    1
    *போச்சம்பள்ளி சந்தையில் பொங்கல் முன்னிட்டு – ஆடு, கோழி, தங்கம், மளிகை, மாட்டு அலங்காரம் வரை விற்பனை ஜோர்*
*தமிழ்நாடு – கர்நாடகா – ஆந்திரா மாநிலங்களிலிருந்து வியாபாரிகள் வருகை; இன்று மட்டும் 5 கோடிக்கு ஆடு விற்பனை!*
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் முக்கிய வர்த்தக மையமான போச்சம்பள்ளியில் இன்று நடைபெற்று வரும் வாரச் சந்தை, தைப்பொங்கல், , மாட்டு பொங்கல் , காணும் பொங்கல் ஆகிய பண்டிகைகளை முன்னிட்டு அதிகாலையிலேயே பெரும் கூட்ட நெரிசலுடன் களைகட்டியது. வாடிக்கையாளர்கள் அதிகாலை 5 மணி முதலே சந்தைக்கு திரண்டதால், வியாபாரிகள் தங்கள் கடைகளை முன்கூட்டியே அமைத்து விற்பனையைத் தொடங்கினர்.
இன்றைய சந்தையின் சிறப்பம்சமாக, தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மாவட்டங்களுடன் அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களிலிருந்தும் ஏராளமான வியாபாரிகள் வருகை தந்திருந்தனர்.
வேறுபட்ட மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட ஆடுகள், கோழிகள், மளிகை பொருட்கள், காய்–பழங்கள் மற்றும் மசாலா பொருட்கள் மிக உயர்ந்த விற்பனையைப் பெற்றன.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இறைச்சி தேவையும், குலதெய்வ வழிபாடு, நேர்த்திக்கடன் செலுத்துதல், பலி வழிபாடு ஆகியவற்றிற்கான ஆடுகளின் தேவை அதிகரித்ததால், இந்த வாரம் மட்டும் 5 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
20–25 கிலோ எடை கொண்ட ஆடுகள் 19,000 முதல் 23,000 ரூபாய் வரை விற்பனையாகின.
மாட்டு பொங்கல் நெருங்கிவருவதால், கால்நடைகளுக்கான அலங்காரப் பொருட்கள் சந்தையில் அதிகம் தேவை பெற்றன. விற்பனையாளர்கள் கொண்டு வந்த 
மாட்டுக் கொம்புக்கு நிறமூட்டும் பவுடர்கள் – சிவப்பு, மஞ்சள், பச்சை
கொம்புக்கு கட்டும் மணி, தாலம்
கழுத்தில் அணிவிக்கும் பொன்/வெள்ளி நிற அலங்கார கயிறுகள்
மாட்டிற்கு அணிவிக்கும் முத்து சங்கிலி, முல்லுறி
ரிப்பன், வால் அலங்காரம்
அலங்கார குட்டைகள் மற்றும் வண்ணத்துண்டுகள்
இந்த பொருட்கள் அனைத்தும் அதிகாலை முதலே வேகமாக விற்று, பெரும்பாலான கடைகளில் பொருட்கள் மாலைக்குள் விற்றுவிட்டன.
அரிசி, சர்க்கரை, பருப்பு வகைகள், மஞ்சள், நெய் போன்ற பண்டிகை மளிகைப் பொருட்கள் அதிக விற்பனையாகின
காய்கறி விலை உயர்ந்திருந்தாலும், விற்பனை அதிகரித்தது
தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த அனைத்து வியாபாரிகளும்,
“இன்று விற்பனை மிக சிறப்பாக உள்ளது. கடந்த வாரங்களை விட இரட்டிப்பு அளவில் மக்கள் வருகை. பண்டிகை முன்பாக சந்தை முழுவதும் விற்பனை சூடுபிடித்துள்ளது,”
என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
    user_Pooma
    Pooma
    கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    22 hrs ago
  • மும்மதத்தினர் கலந்து கொண்ட சமத்துவ பொங்கல் விழா திண்டுக்கல் மாநகராட்சி 44. வது வார்டு மேட்டுப்பட்டியில் திமுக சார்பில் மும்மதத்தினர் கலந்து கொண்ட சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாநகராட்சி கவுன்சிலர் மார்த்தாண்டன் தலைமை வகித்த இந்த நிகழ்ச்சியில், திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும் பழனி எம்எல்ஏயுமான ஐ. பி. செந்தில்குமார் வாழ்த்துரை வழங்கினார். ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சமத்துவ பொங்கலைத் துவக்கி வைத்தார். மேலும், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்கி, தனது பிறந்தநாளை முன்னிட்டு 10 கிலோ எடையில் கேக் வெட்டி திமுகவினருடன் கொண்டாடி மகிழ்ந்தார்.
    1
    மும்மதத்தினர் கலந்து கொண்ட சமத்துவ பொங்கல் விழா
திண்டுக்கல் மாநகராட்சி 44. வது வார்டு மேட்டுப்பட்டியில் திமுக சார்பில் மும்மதத்தினர் கலந்து கொண்ட சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாநகராட்சி கவுன்சிலர் மார்த்தாண்டன் தலைமை வகித்த இந்த நிகழ்ச்சியில், திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும் பழனி எம்எல்ஏயுமான ஐ. பி. செந்தில்குமார் வாழ்த்துரை வழங்கினார். ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சமத்துவ பொங்கலைத் துவக்கி வைத்தார். மேலும், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்கி, தனது பிறந்தநாளை முன்னிட்டு 10 கிலோ எடையில் கேக் வெட்டி திமுகவினருடன் கொண்டாடி மகிழ்ந்தார்.
    user_CHANDRA SEKAR AYYANAR
    CHANDRA SEKAR AYYANAR
    Journalist திண்டுக்கல் மேற்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    14 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் மாநகராட்சிக்குட்பட்ட 44வது வார்டு பகுதியில் மாமன்றஉறுப்பினர் மார்த்தாண்டன் தலைமையில் சமத்துவப் பொங்கல் மற்றும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது இந்நிகழ்வில் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ பி .செந்தில்குமார் மற்றும் மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் துணை மேயர் ராசப்பா கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
    1
    திண்டுக்கல் மாவட்டம் மாநகராட்சிக்குட்பட்ட 44வது வார்டு பகுதியில் மாமன்றஉறுப்பினர் மார்த்தாண்டன் தலைமையில் சமத்துவப் பொங்கல் மற்றும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது இந்நிகழ்வில் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ பி .செந்தில்குமார் மற்றும் மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் துணை மேயர் ராசப்பா கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
    user_Dindigul Prakash
    Dindigul Prakash
    திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    21 hrs ago
  • தமிழகம் முழுவதும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட போர்வெல் வாகனங்கள் செயல்பட்டு வருகின்றன. பல வாகனங்கள் வெளி மாநிலங்களில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 15 தினங்களுக்குள் போர்வெல் போட பயன்படுத்தும் பிட் என்ற பொருளின் விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. 25 ஆயிரம் ரூபாய்க்கு கிடைத்து வந்த இந்த பொருள் தற்போது 55 ஆயிரம் ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக தொழில் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த விலை உயர்வுக்கு காரணம் சைனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பிட் செய்ய தேவைப்படும் கார்பன் என்ற மூலப்பொருள் வருவது தடைபட்டுள்ளது தான் எனவே மத்திய அரசு இதனை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுத்து விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து இந்தியா முழுவதும் ஆங்காங்கே போர்வெல் உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் தேனி கரூர் திருப்பூர் திருச்செங்கோடு சேலம் நாமக்கல் ஓசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் 2000க்கும் மேற்பட்ட ரிக் எனப்படும் போர்வெல் வாகனங்கள் வேலை நிறுத்தம் செய்து வருகின்றன. இது குறித்து தமிழ்நாடு ரிக் உரிமையாளர்கள் சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் சுரேஷ் கூறும் போது கடந்த 15 நாட்களில் ரிக் வாகனத்திற்கு தேவைப்படும் பிட் இரண்டு மடங்கு விலை உயர்ந்துள்ளது இந்த விலை உயர்வை கட்டுப்படுத்தி உரிய விலையில் மத்திய அரசு வழங்க வேண்டும். மேலும் இந்த பிட்டிற்கு மூலப் பொருளாக சைனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்பன் இறக்குமதி தடை செய்யப்பட்டுள்ளது எனவே பிட்டின் விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது இந்த தடையை நீக்கி மத்திய அரசு ரிக் தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசும் காவல்துறையும் ரிக்கு வாகனங்கள் தொடர்பான வழக்குகள் விவகாரங்களில் எங்களுக்கு துணை நின்று எங்கள் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும். நாள் ஒன்றிற்கு 19 கோடி ரூபாய் வரியாக தமிழக அரசுக்கு வழங்கி வருகிறோம். அதேபோன்று மத்திய அரசுக்கு 240 கோடி ரூபாய் டீசல் வழியாக வழங்கி வருகிறோம். எங்கள் பிரச்சனைகளை மத்திய மாநில அரசுகள் கேட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல்துறை போர்வெல் உரிமையாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு கூட செவி சாய்ப்பதில்லை என்றும் அதனை சரி செய்து தர வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் இந்த பிரச்சினைகள் காரணமாக தற்போது போர்வெல் போடுவதற்கு சற்று விலை அதிகப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளோம். அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த விலை உயர்வு 20 சதவீதம் வரை உயர்த்தப்படும் என தெரிய வருகிறது தேனி கரூர் போன்ற மாவட்டங்களில் தற்போது 20 சதவீத விலை உயர்வுடன் போர்வெல் வாகனங்கள் இயங்கத் தொடங்கியுள்ளன. தமிழகம் முழுவதும் உள்ள போர்வெல் வாகனங்கள் தங்கள் போர்வெல் கட்டணத்தை 20 சதவீதம் வரை உயர்த்த வாய்ப்பு உள்ளதாக தெரிய வருகிறது என தலைவர் சுரேஷ்செய்தியாளர்களிடம் கூறினார்
    1
    தமிழகம் முழுவதும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட போர்வெல் வாகனங்கள் செயல்பட்டு வருகின்றன. பல வாகனங்கள் வெளி மாநிலங்களில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 15 தினங்களுக்குள் போர்வெல் போட பயன்படுத்தும் பிட் என்ற பொருளின் விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. 25 ஆயிரம் ரூபாய்க்கு கிடைத்து வந்த இந்த பொருள் தற்போது 55 ஆயிரம் ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக தொழில் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த விலை உயர்வுக்கு காரணம்  சைனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பிட் செய்ய தேவைப்படும் கார்பன் என்ற மூலப்பொருள் வருவது தடைபட்டுள்ளது தான் எனவே மத்திய அரசு இதனை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுத்து விலை உயர்வை கட்டுப்படுத்த  வேண்டும் என்று கோரிக்கை வைத்து இந்தியா முழுவதும் ஆங்காங்கே போர்வெல் உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் தேனி கரூர் திருப்பூர் திருச்செங்கோடு சேலம் நாமக்கல் ஓசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் 2000க்கும் மேற்பட்ட ரிக் எனப்படும் போர்வெல் வாகனங்கள் வேலை நிறுத்தம் செய்து வருகின்றன. இது குறித்து தமிழ்நாடு ரிக் உரிமையாளர்கள் சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் சுரேஷ் கூறும் போது கடந்த 15 நாட்களில் ரிக் வாகனத்திற்கு தேவைப்படும் பிட் இரண்டு மடங்கு விலை உயர்ந்துள்ளது இந்த விலை உயர்வை கட்டுப்படுத்தி உரிய விலையில் மத்திய அரசு வழங்க வேண்டும். மேலும் இந்த பிட்டிற்கு மூலப் பொருளாக சைனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்பன் இறக்குமதி தடை செய்யப்பட்டுள்ளது எனவே பிட்டின் விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது இந்த தடையை நீக்கி மத்திய அரசு ரிக் தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசும் காவல்துறையும் ரிக்கு வாகனங்கள் தொடர்பான வழக்குகள் விவகாரங்களில் எங்களுக்கு துணை நின்று எங்கள் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும். நாள் ஒன்றிற்கு 19 கோடி ரூபாய்  வரியாக தமிழக அரசுக்கு வழங்கி வருகிறோம். அதேபோன்று  மத்திய அரசுக்கு 240 கோடி ரூபாய் டீசல் வழியாக வழங்கி வருகிறோம். எங்கள் பிரச்சனைகளை மத்திய மாநில அரசுகள் கேட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல்துறை போர்வெல் உரிமையாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு கூட செவி சாய்ப்பதில்லை என்றும் அதனை சரி செய்து தர வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் இந்த பிரச்சினைகள் காரணமாக தற்போது போர்வெல் போடுவதற்கு சற்று விலை அதிகப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளோம். அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த விலை உயர்வு 20 சதவீதம் வரை உயர்த்தப்படும் என தெரிய வருகிறது தேனி கரூர் போன்ற மாவட்டங்களில் தற்போது 20 சதவீத விலை உயர்வுடன் போர்வெல் வாகனங்கள் இயங்கத் தொடங்கியுள்ளன. தமிழகம் முழுவதும் உள்ள போர்வெல் வாகனங்கள் தங்கள்  போர்வெல் கட்டணத்தை 20 சதவீதம் வரை உயர்த்த வாய்ப்பு உள்ளதாக தெரிய வருகிறது என தலைவர் சுரேஷ்செய்தியாளர்களிடம் கூறினார்
    user_Balaji studio
    Balaji studio
    Video Creator திருச்செங்கோடு, நாமக்கல், தமிழ்நாடு•
    18 hrs ago
  • கடத்தூரில் 9 லட்சத்திற்கு வெற்றிலைகள் விற்பனை தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்குட்பட்ட கடத்தூரில் ஞாயிறுதோறும் வெற்றிலை விற்பனைக்காக பிரசித்தி பெற்ற வாரச்சந்தை நடைபெறும் வழக்கம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வார சந்தையில் தர்மபுரி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும், பல்வேறு வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் வெற்றிலைகளை விற்க & வாங்க வந்திருந்தனர் 128 கட்டுகளைக் கொண்ட ஒரு மூட்டை வெற்றிலை ரூ.10,000 முதல் ரூ.26,000 வரை விற்பனையானது மேலும் நேற்று ஒரே நாளில் சுமார் 9 லட்சத்திற்கு வெற்றிலை வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்
    1
    கடத்தூரில் 9 லட்சத்திற்கு வெற்றிலைகள் விற்பனை
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்குட்பட்ட கடத்தூரில் ஞாயிறுதோறும் வெற்றிலை விற்பனைக்காக பிரசித்தி பெற்ற வாரச்சந்தை நடைபெறும் வழக்கம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வார சந்தையில் தர்மபுரி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும், பல்வேறு வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் வெற்றிலைகளை விற்க & வாங்க வந்திருந்தனர் 128 கட்டுகளைக் கொண்ட ஒரு மூட்டை வெற்றிலை ரூ.10,000 முதல் ரூ.26,000 வரை விற்பனையானது மேலும் நேற்று ஒரே நாளில் சுமார் 9 லட்சத்திற்கு வெற்றிலை வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்
    user_Raja
    Raja
    செய்தியாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • தர்மபுரி கோட்டை பரவாசுதேவ பெருமாள் திருக்கோவி-லில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாருக்கும் "திருக்கல்யாண வைபவம். கோட்டை பரவாசுதேவ பெருமாள் திருக்கோவி-லில் வருகின்ற மார்கழி  27 காலை 9.30 - 12.30 மணிக்குள் பெருமாளுக்கும் "சூடிக்கொடுத்த சுடர்கொடி"ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாருக்கும் "திருக்கல்யாண வைபவம்"
    1
    தர்மபுரி கோட்டை பரவாசுதேவ பெருமாள் திருக்கோவி-லில்
ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாருக்கும் "திருக்கல்யாண வைபவம்.
கோட்டை பரவாசுதேவ பெருமாள் திருக்கோவி-லில் வருகின்ற மார்கழி  27 காலை 9.30 - 12.30 மணிக்குள் பெருமாளுக்கும் "சூடிக்கொடுத்த சுடர்கொடி"ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாருக்கும் "திருக்கல்யாண வைபவம்"
    user_Periyasamy
    Periyasamy
    Journalist Dharmapuri, Tamil Nadu•
    17 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.