Shuru
Apke Nagar Ki App…
கரூர் மாவட்டம் வெங்கமேடு பகுதியில் செயல்படும் சலவை தொழிலாளர் சங்கம் மாதாந்திர கூட்டம் இன்று வெங்கமேடு பகுதியில் உள்ள ராமச்சந்திரா டிரைவ் கிளின்ஸ் கட்டிடத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சலுகை தொழிலாளர் சங்கத்தின் உள்ள உறுப்பினர்கள் அனைவரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைவருக்கும் வருடாந்திர தினசரி நாட்காட்டி சங்கச் செயலாளர் An. ஆறுமுகம் வழங்கினார்.
R. Suresh
கரூர் மாவட்டம் வெங்கமேடு பகுதியில் செயல்படும் சலவை தொழிலாளர் சங்கம் மாதாந்திர கூட்டம் இன்று வெங்கமேடு பகுதியில் உள்ள ராமச்சந்திரா டிரைவ் கிளின்ஸ் கட்டிடத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சலுகை தொழிலாளர் சங்கத்தின் உள்ள உறுப்பினர்கள் அனைவரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைவருக்கும் வருடாந்திர தினசரி நாட்காட்டி சங்கச் செயலாளர் An. ஆறுமுகம் வழங்கினார்.
More news from தமிழ்நாடு and nearby areas
- கரூர் மாவட்ட திமுக செயலாளர் வி. செந்தில் பாலாஜி ஆணைக்கிணங்க, நாளை மறுநாள்(11/01/29) நடைபெறும் திமுக திராவிட பொங்கல் சமத்துவ விளையாட்டு போட்டி நடைபெறும் இடமான தமிழ் நகரில் விளையாட்டு மைதானத்தை இன்று தாந்தோணி மேற்கு ஒன்றிய செயலாளர் கோயம்பள்ளி பாஸ்கர் தலைமையில் பணியாட்கள் மற்றும் பொக்லைன் இயந்திரம் மூலம் சுத்தம் செய்யும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.1
- புதுக்கோட்டை மாவட்டம் பேராவூரணியில் இருந்து தேங்காய் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி நள்ளிரவில் திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மணப்பாறையை அடுத்த நொச்சிமேடு என்ற இடத்தில் வந்தபோது, லாரியை அதன் டிரைவர் திருப்ப முயன்றார். அப்போது, பின்னால் மன்னார் குடியில் இருந்து கம்பம் நோக்கி சென்ற அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்சின் முன்பகுதி சேதமடைத்துடன் இடிபாடுகளுக்குள் பஸ் டிரைவர் சிக்கி கொண்டார். இது பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்நிலையில் லாரி சாலையில் கவிழ்ந்து அதிலிருந்த தேங்காயும் சாலையில் சிதறிக் கிடந்தது. இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.1
- நிலக்கோட்டை: பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ விலை வரலாறு காணாத உயர்வு - மல்லிகை கிலோ ரூ.10000க்கு விற்பனை திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் தைப்பொங்கல் பண்டிகை, தை அமாவாசை, சுபமுகூர்த்த நாட்கள் வருவதையொட்டி மற்றும் பனிப்பொழிவு காரணமாக வரத்து குறைவால் மல்லிகை கிலோ ரூ.10,000, முல்லை ரூ.3000, ஜாதிப்பூ ரூ.2500க்கு, கனகாம்பரம் ரூ.2000 என அனைத்து பூக்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்து விற்பனையாகி வருகிறது விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்1
- தமிழ்நாடு கியோகுஷின் சின்னு'ஸ் கராத்தே அசோசியேசன் & வேர்ல்டு சோ கியோகுஷின் கராத்தே சார்பாக தமிழ்நாட்டில் முதன்முறையாக மாநில அளவிலான லோ-கிக் கராத்தே கராத்தே போட்டி சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. சேலம், ஈரோடு, நாமக்கல் ,தர்மபுரி ,கிருஷ்ணகிரி , சென்னை, கோயம்புத்தூர் ,வேலூர், திருச்சி ஆகிய மாவட்டத்திலிருந்து 100 மேற்பட்ட கராத்தே வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்துகொண்டு தங்களின் திறமையை வெளிப்படுத்தினர். மேலும் மாநில அளவில் நடைபெற்ற லோ-கிக் கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற கராத்தே வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டது. இதில் தலைமை பயிற்சியாளர் சின்னுசாமி, யுனிவர்சல் பள்ளியின் தாளாளர் சீனிவாசன்,அ.தி.மு.க. நகர செயலாளர் முருகன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி செல்வக்குமரன், மருத்துவர்கள் கோகுலகிருஷ்ணன், ஸ்ரீபாலாஜி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினர்.1
- பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை-திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றிய பகுதிகளில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.1
- ஆத்தூர் உழவர் சந்தையில் விவசாயிகள் உள்ளிறுப்பு போராட்டம்.7
- மலையூர் சாக்கடையால் பொதுமக்களுக்கு தொல்லை! மலையூர் பகுதியில் தோரண வாய்க்காலை பராமரிப்பு பணி செய்யாத காரணத்தினால் பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியேறும் கழிவு நீர் தோரண வாய்க்காலில் ஆங்காங்கே நிற்கிறது. இதனால் கொசுத்தொல்லை மிக அதிகமாக உள்ளது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதால் தோரண வாய்க்காலை பராமரித்து பணி செய்ய பொதுமக்கள் ஊராட்சிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.1
- பழனி: திருவள்ளுவர் அரசு உதவிபெறு நடுநிலைப் பள்ளியில் அறுபது ஆண்டுகளுக்கு முன்னாள் பள்ளியில் பயின்ற மாணவ மாணவிகள் சந்திப்பு பழனியில் திருவள்ளுவர் அரசு உதவிபெறு நடுநிலைப் பள்ளி கடந்த 75 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 1965 ஆம் ஆண்டு முதல் 1973 ஆம் ஆண்டு வரை ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயின்ற முன்னாள் மாணவ மாணவியர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 60 ஆண்டுகளுக்குப் பின்னர் சந்தித்துக் கொண்ட முன்னாள் மாணவ மாணவியரும் இந்நாள் தாத்தா பாட்டிகளும் தங்களின் பள்ளி கால நினைவுகளை பகிர்ந்து கொண்டு மகிழ்ந்தனர்.1