Shuru
Apke Nagar Ki App…
திண்டுக்கல் மாநகரில் பங்குனி உத்திரத்திருவிழா கொண்டாடிய பக்தர்கள் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாநகர் YMR பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடிகளுடன் பக்தி பரவசத்தோடு ஊர்வலமாக வந்து சாமி தரிசனம் செய்தனர்
Dindigul Prakash
திண்டுக்கல் மாநகரில் பங்குனி உத்திரத்திருவிழா கொண்டாடிய பக்தர்கள் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாநகர் YMR பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடிகளுடன் பக்தி பரவசத்தோடு ஊர்வலமாக வந்து சாமி தரிசனம் செய்தனர்
More news from தமிழ்நாடு and nearby areas
- பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாநகர் YMR பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடிகளுடன் பக்தி பரவசத்தோடு ஊர்வலமாக வந்து சாமி தரிசனம் செய்தனர்1
- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 1 லட்சத்து 30 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று நத்தம் விஸ்வநாதன் காலடியில் சமர்ப்பிப்போம் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் ஆத்தூர் அதிமுக வேட்பாளர் விஸ்வநாதன் சூளுரை1
- ஆத்தூர் தொகுதியில் 1 லட்சத்து 30 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று நத்தம் விஸ்வநாதன் காலடியில் சமர்ப்பிப்போம் என அதிமுக வேட்பாளர் விஸ்வநாதன் சூளுரை1
- கிறிஸ்தவ வன்னியர் இளைஞர் சங்கத்தின் மாநில தலைவர் மைலாப்பூர் வேளாங்கன்னி தலைமையில் மாநில நிர்வாகிகள் திராவிட முன்னேற்ற கழகத்தின் மாநில துணை பொதுச்செயலாளர் இ.பெரியசாமி மற்றும் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் இ.பெ. செந்தில்குமார் ஆகியோரை நேரில் சந்தித்து நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்த நிகழ்வில் முத்தழகு பட்டி சூசை ராபர்ட், தோம்னிக், குட்டத்துபட்டி சீலன் ஜோசப் ஆகியோர் உடன் இருந்தனர்.1
- திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம் குட்டம் ஊராட்சி தாசிர் பட்டியில் ஊர் நுழைவாயில் சுமார் 25 குடும்பங்கள் வசித்து வருகின்றனர் அவர்களுக்கு தெருக் குழாயில் தண்ணீர் என்பது ஒரு வருங்களாக பிரச்சனை இருந்து வருகிறது பலமுறை ஊராட்சி செயலாளர் ஜோனல் அவர்களிடம் கூறியும் கடைசியாக இரண்டு மாதங்களுக்கு முன்பு உங்களுக்கு ஒரு சின்டெக்ஸ் தனியாக வைத்துக் கொடுத்தால் தான் தண்ணீர் பிரச்சனை தீரும் என ஊராட்சி செயலாளர் தங்கவேல் அவர்கள் கூறினார் இதுவரை செவிடன் காதில் ஊதிய சங்கு போல் கண்டுகொள்ளவில்லை தற்போது வெயில் காலங்கள் தண்ணீர் இன்றி பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்த வருகின்றனர் தண்ணீருக்காக பெண்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் செல்ல வேண்டிய சூழல் உள்ளது தமிழக அரசின் திமுக அரசு இது சம்பந்தமாக அந்தக் கட்சியின் நிர்வாகிகளிடம் பேசியபோது அவர்களும் ஏன் அசிங்க படுத்துகிறீர்கள் என்று கூறுகின்றனர் என்று கூறுபவர்கள் யாருக்கு அந்த அசிங்கம் என்று தெரியவில்லையா உங்கள் கட்சிக்கு தானே அந்த அசிங்கம் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை கூட பூர்த்தி செய்து கொடுக்க முடியாத கட்சியாக உள்ளீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள் தற்போது இந்த தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றால் பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்வோம் என கூறி வருகின்றனர் ...1
- போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளராக போட்டியிடும் பிரகாசுக்கு கட்சி தொண்டர்கள் இளைஞர்கள் உற்சாக வரவேற்பு. மேளதாளங்கள் முழங்கு இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் ஊர்வலமாக வந்து தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்* . தமிழகமெங்கும் வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர்கள் வரவேற்பு நிகழ்ச்சி பிரச்சாரம் மற்றும் வேட்புமனு தாக்கல் தீவிரமாக சூடு பிடித்து வருகிறது. தமிழகத்தின் நட்சத்திர சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றான போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பாக தமிழக முன்னாள் முதல்வர் போட்டியிடுகிறார். அதிமுக சார்பாக நாராயணசாமி மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக கலையரசு தமிழக வெற்றி கழகம் சார்பாக பிரகாஷ் ஆகியோர் வேட்பாளராக களம் இறங்கி உள்ளனர். தமிழக வெற்றிக் கழகம் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்கு அறிவிக்கப்பட்டுள்ள பிரகாஷ் இன்று போடிநாயக்கனூர் வருகை தந்ததை முன்னிட்டு தொண்டர்கள் மற்றும் இளைஞர்கள் மேள தாளங்களுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். போடிநாயக்கனூர் எல்லையில் அமைந்துள்ள 200 ஆண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்த சாலை காளியம்மன் கோவில் அருகில் வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. காளியம்மன் கோவிலில் சுவாமி வழிபாடு செய்த பிரகாஷ் போடிநாயக்கனூர் பார்க் நிறுத்தம் அருகே உள்ள நேதாஜி சிலை அரண்மனை வளாக முன்பு அமைந்துள்ள கட்டபொம்மன் சிலை வள்ளுவர் சிலை இந்திரா காந்தி சிலை முத்துராமலிங்க தேவர் சிலை எம்ஜிஆர் சிலை தந்தை பெரியார் சிலை வ உ சிதம்பரம் சிலை காமராஜர் சிலை போன்ற தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கட்சித் தொண்டர்களுடன் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் நடந்தே சென்று போடி நகர் முக்கிய பகுதிகளில் ஊர்வலமாக வந்து தலைவர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது. வருகின்ற நான்காம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் தெரிவித்தனர்1
- மணப்பாறை அருகே கோவில் திருவிழாவில் இரவை பகலாக்கிய வாணவேடிக்கை நிகழ்ச்சி திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த தொட்டியபட்டியில் புகழ்பெற்ற பாம்பாலம்மன் கோவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வெகுவிமரிசையாக திருவிழா நடைபெறும் நிலையில் இங்கு வாணவேடிக்கை நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கான மக்கள் வருவார்கள். அதன்படி கரகம் பாலித்தல் நிகழ்ச்சியோடு திருவிழா தொடங்கிய நிலையில் நள்ளிரவில் கரகம் பாலித்து தாரை தப்பட்டை முழங்க அழைத்து வரப்பட்டது. இதையடுத்து கோவில் அருகே உள்ள குளத்தில் இரவை பகலாக்கும் வகையில் இடைவிடாமல் தொடங்கு வானில் வர்ணஜாலங்கள் நிகழும் வகையில் வாணவேடிக்கை நடைபெற்றது. இதே போல் இடைவிடாமல் பட்டாசு சப்தங்களும் இருந்தது. சில மணி நேரம் நீடித்த இந்த வாணவேடிக்கை நிகழ்வை காண ஆயிரக்கணக்கான மக்கள் அந்த பகுதியில் திரண்டு கண்டு ரசித்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இன்று நடைபெறுகின்றது.1
- ஆண்டிபட்டி அருகே வாக்கு கேட்டு பிரச்சாரத்திற்கு வந்த திமுக வேட்பாளர் ஆ-மகாராஜனுக்கு ராஜாவை போல திமுக கட்சி சின்னத்தின் நிறம் பொறித்த தலைப்பாகை அணிவித்து, குலவை போட்டு, ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்த பெண்கள் உள்ளிட்ட திமுக கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சியினர், வேட்பாளருக்கு பட்டாசு வெடித்தும், மலர் தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி திமுக சட்டமன்ற உறுப்பினரான ஆ- மகாராஜன் மூன்றாவது முறையாக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆண்டிப்பட்டி அருகே உள்ள திம்மரசநாயக்கனூர் பொம்மிநாயக்கன்பட்டி ராஜகோபாலன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அப்போது டி-சுப்புலாபுரம் பகுதிக்கு வருகை புரிந்த திமுக வேட்பாளர் ஆ-மகாராஜனுக்கு ராஜாவை போல திமுக கட்சி சின்னத்தின் நிறம் பொறித்த தலைப்பாகை அணிவித்து குலவை போட்டு ஆரத்தி எடுத்து பெண்கள் உள்ளிட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பளித்தனர் இதே போல ஒவ்வொரு பகுதியிலும் பட்டாசு வெடித்தும் வேட்பாளருக்கு மலர் தூவியும் வரவேற்பு அளித்தனர்1