புதுக்கோட்டையில் தமிழக முதல்வர் விஜய் ஆட்சியின் 100-வது நாள் நிறைவு விழாவையொட்டி, முதல்வர் விஜய் முகமூடி அணிந்து வந்த குழந்தைகளுக்கு பென்சில், பேனா, நோட்டுப் புத்தகங்கள், சீருடை உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கி, 500-க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு பொறித்த மீனுடன் சுடச்சுட மட்டன் பிரியாணி புதுக்கோட்டை வழங்கிய இளைஞரணி நிர்வாகி. தமிழக முதல்வர் விஜய் ஆசியுடன் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் அறிவுறுத்தலின்படி புதுக்கோட்டையில் உழவர் சந்தை அருகில் விஜய் முகமூடி அணிந்து வந்த குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகங்கள், சீருடை உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. 500-க்கும் மேற்பட்டோருக்கு பொறித்த மீனுடன் சுடச்சுட மட்டன் பிரியாணி வழங்கப்பட்டது. தமிழக வெற்றிக் கழக இளைஞரணி நிர்வாகி பி.ஆர். பிரவீன் ஏற்பாட்டில், உழவர் சந்தை அருகில் நோட்டுப் புத்தகங்கள் மற்றும் பொறித்த மீனுடன் மட்டன் பிரியாணி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் நகர்மன்றத் தலைவர் சேட்டு, தவெக நிர்வாகிகள் தனசேகரன், தரணி, ரமேஷ்,ராஜாமுகமது, தமிழரசன், பி.ஆர். பிரபு, நரிமேடு பிரபு, சேகர் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு, குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகங்கள், சீருடை மற்றும் கல்வி உபகரணங்களையும், பொதுமக்களுக்கு மட்டன் பிரியாணியையும் வழங்கினர். நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ, மாணவிகள், குழந்தைகள், பெண்கள் மற்றும் தொழிலாளர்கள் நீண்ட வரிசையில் நின்று பிரியாணி பெற்றுச் சென்றனர்.
புதுக்கோட்டையில் தமிழக முதல்வர் விஜய் ஆட்சியின் 100-வது நாள் நிறைவு விழாவையொட்டி, முதல்வர் விஜய் முகமூடி அணிந்து வந்த குழந்தைகளுக்கு பென்சில், பேனா, நோட்டுப் புத்தகங்கள், சீருடை உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கி, 500-க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு பொறித்த மீனுடன் சுடச்சுட மட்டன் பிரியாணி புதுக்கோட்டை வழங்கிய இளைஞரணி நிர்வாகி. தமிழக முதல்வர் விஜய் ஆசியுடன் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் அறிவுறுத்தலின்படி புதுக்கோட்டையில் உழவர் சந்தை அருகில் விஜய் முகமூடி அணிந்து வந்த குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகங்கள், சீருடை உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. 500-க்கும் மேற்பட்டோருக்கு பொறித்த மீனுடன் சுடச்சுட மட்டன் பிரியாணி
வழங்கப்பட்டது. தமிழக வெற்றிக் கழக இளைஞரணி நிர்வாகி பி.ஆர். பிரவீன் ஏற்பாட்டில், உழவர் சந்தை அருகில் நோட்டுப் புத்தகங்கள் மற்றும் பொறித்த மீனுடன் மட்டன் பிரியாணி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் நகர்மன்றத் தலைவர் சேட்டு, தவெக நிர்வாகிகள் தனசேகரன், தரணி, ரமேஷ்,ராஜாமுகமது, தமிழரசன், பி.ஆர். பிரபு, நரிமேடு பிரபு, சேகர் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு, குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகங்கள், சீருடை மற்றும் கல்வி உபகரணங்களையும், பொதுமக்களுக்கு மட்டன் பிரியாணியையும் வழங்கினர். நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ, மாணவிகள், குழந்தைகள், பெண்கள் மற்றும் தொழிலாளர்கள் நீண்ட வரிசையில் நின்று பிரியாணி பெற்றுச் சென்றனர்.
- மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் பூதமங்கலத்தில் அமைந்துள்ள ஸ்ரீ செட்டிச்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்! மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் அமைந்துள்ள பூதமங்கலத்தில், அருள்மிகு ஸ்ரீ சிட்டிசியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று ஆகஸ்ட் 27ஆம் தேதி வியாழக்கிழமை காலை 9 :00 மணி முதல் 10 :00 மணிக்குள் வெகு சிறப்பாக நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதியில் உள்ள பக்தர்கள் அனைவரும் இந்த கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டனர். காலை 11:00 மணியளவில் அன்னதானம் வெகு விமர்சையாக நடைபெற்றது. அன்னதானம் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்று இரவு 10 :00 மணியளவில் கோவில் முன்பாக உள்ள கலையரங்கில் ஸ்ரீ வள்ளி திருமண நாடகம் நடைபெற உள்ளது.1
- முசிறி அருகில் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் சாலை போக்குவரத்து விதிகள் குறித்து குறும்பட காட்சி மற்றும் கருத்தரங்கம் அரசு கல்லூரியில் சாலை போக்குவரத்து விதிமுறைகள் பிரச்சார வாகனம் குறும்படம் மற்றும் கருத்தரங்கம். முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் நாட்டு நல பணி திட்டம் சார்பாக போக்குவரத்து வாகன விதிமுறைகள், பிரச்சார வாகன குறும்படம் காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முருகராஜ் பாண்டியன் தலைமை தாங்கினார். போக்குவரத்து முசிறி கழக கிளை மேலாளர் அருண்குமார் முன்னிலை வகித்து, சிறப்புரையாற்றினார். பயிற்சி மேலாளர் கிருஷ்ணமூர்த்தி போக்குவரத்து விளக்கினார். போக்குவரத்து கும்பகோணம் கோட்டம் பொது மேலாளர் சுரேஷ்குமார் குத்துவிளக்கு ஏற்றி வைத்து கண்காட்சி தொடங்கி வைத்து போக்குவரத்து விதிமுறைகளை மற்றும் விழிப்புணர்வு உறுதிமொழி மாணவ மாணவியர்களுக் இடையே எடுத்துரைத்து விளக்கினார். முன்னதாக பொருளியல் துறை பேராசிரியர் பீமராஜ் அனைவரையும் வரவேற்றார். இதனைத் தொடர்ந்து மாணவ மாணவியர்கள் விழிப்புணர்வு பேரணியும், போக்குவரத்து வாகன விதிமுறைகள் குறித்து குறும்பட கண்காட்சியும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கல்லூரி பொறியியல் துறை பேராசிரியர் தர்மராஜ், உப்பு சத்தியாகிரக விழிப்புணர்வு இயக்க மாவட்டச் செயலாளர் கம்பரசம்பேட்டை தர்மராஜ், மற்றும் பேராசிரியர்கள் மாணவ மாணவியர்கள் போக்குவரத்து கழக பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிறைவில் தமிழ்்துறை பேராசிரியர் பெரியசாமி அனைவருக்கும் நன்றி கூறினார்.1
- கர்ப்பிணிக்கு சிக்கலான முதுகுத்தண்டு அறுவைசிகிச்சை ஆரோக்கியமான குழந்தை பிறப்பு முதுகுத்தண்டுவட காசநோய் பாதிப்பால் நடக்க முடியாமல் அவதிப்பட்ட 28 வார கர்ப்பிணிக்கு, மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சவாலான முதுகுத்தண்டு அறுவைசிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. அறுவைசிகிச்சைக்குப் பின்னர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில், அந்த பெண் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுத்தார். 28 வயதான கர்ப்பிணிக்கு தொடர்ந்து கடுமையான முதுகுத்தண்டு வலி ஏற்பட்டதுடன், நடப்பதில் சிரமமும் மார்புக்குக் கீழ் உணர்விழப்பும் ஏற்பட்டது. மருத்துவப் பரிசோதனைகளில் முதுகுத்தண்டுவடத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக நரம்புகளுக்கு அதிக அழுத்தம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, முதுகுத்தண்டுவடத்தின் மீதான அழுத்தத்தை குறைக்கும் வகையில் Decompressive Laminectomy அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தாய் மற்றும் சேய் இருவரையும் காக்க வேண்டும் மற்றும் 28 வார கர்ப்பம் என்பதால் அறுவைசிகிச்சை மருத்துவர்களுக்கு மிகப்பெரும் சவாலாக இருந்தது தாயின் உயிருக்கும் உடல்நலத்திற்கும் சிகிச்சை அளிப்பதுடன், வயிற்றில் இருந்த கருவின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டியிருந்தது. பரிசோதனைகளில் T1–T2 பகுதியில் முதுகுத்தண்டு பாதிப்பு, முதுகுத்தண்டில் கூன் விழுந்தது போன்ற மாற்றம் மற்றும் நரம்பு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இது ‘பாட்ஸ் ஸ்பைன்’ எனப்படும் முதுகுத்தண்டுவட காசநோய் பாதிப்பாக இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். C3–T4 பகுதியில் சிக்கலான அறுவைசிகிச்சையை தொடர்ந்து முதுகுத்தண்டுவடத்தை நிலைநிறுத்தும் வகையில் C3–T4 பகுதியில் அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பல மணி நேரம் நோயாளியை குப்புறப் படுக்க வேண்டியிருந்ததால், தாய் மற்றும் கருவின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகளின் போது கருவை கதிர்வீச்சிலிருந்து பாதுகாக்கவும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அறுவைசிகிச்சைக்குப் பின்னர் நோயாளியின் உடல்நிலையில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டது. அவர் மீண்டும் நன்றாக நடக்கத் தொடங்கினார். தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருந்த நிலையில், பின்னர் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுத்தார். முதுகுத்தண்டுவட அறுவைசிகிச்சை துறைத்தலைவரும் முதுநிலை நிபுணருமான டாக்டர் கே. செல்வகுமரன், முதுநிலை நிபுணர் டாக்டர் கே. எம். கவில் தலைமையிலான மருத்துவக் குழுவினர் அறுவைசிகிச்சையை மேற்கொண்டனர். இது மதுரையில் மருத்துவத் துறையின் மிகப்பெரிய சாதனையாக அமைந்துள்ளது.1
- மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை 28 வார கர்ப்பிணிக்கு முதுகுத்தண்டு சிகிச்சை செய்து சாதனை *மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை 28 வார கர்ப்பிணிக்கு முதுகுத்தண்டு சிகிச்சை செய்து சாதனை* மதுரை மாவட்டம் மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் 28 வார கர்ப்பிணிக்கு சிக்கலான முதுகுத்தண்டு வட அறுவை சிகிச்சை செய்து சாதனை. மேலும் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுத்தார் என்பது கூடுதல் சிறப்பு. கிட்டத்தட்ட ஓராண்டாக கடுமையான கழுத்து வலியால் அவதிப்பட்டு வந்த 28 வயது கர்ப்பிணிப் பெண்ணுக்கு முதுகுத்தண்டுவட காசநோய் உருவானதால் நடப்பதில் சிரமமும், மார்புக்குக் கீழே உணர்ச்சியிழப்பும் ஏற்பட்டுருத்தது. முதுகுத்தண்டுவட அழுத்ததை குறைப்பதற்கான சிகிச்சையையும், திசு நீக்கம் மற்றும் நோயாளியின் சொந்த எலும்புகளைக் கொண்டு முதுகுத்தண்டை நிலைநிறுத்தும் ஒட்டு மொத்த அறுவை சிகிச்சையையும் மருத்துவர்கள் குழு வெற்றிகரமாக மேற்கொண்டது. அதே நேரத்தில் கர்ப்பத்திலுள்ள கருவுக்கு கதிர்வீச்சு பாதிப்பு ஏற்படாதவாறு உரிய சிகிச்சை அளித்து தாய், சேய் இருவரும் நலமாக உள்ளனர் என பத்திரிக்கையாளர் சந்திப்பில் மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி நரம்பியல் அறுவை சிகிச்சை துறைத் தலைவர் மருத்துவர் செல்வமுத்துக் குமரன் கூறினார். உடன் முதுநிலை நிபுணர் மருத்துவர் செந்தில்குமார், இணை நிபுணர் மருத்துவர் கவீஸ் ஆகியோர் உடனிருந்தனர்.1
- திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி NCC AIRWING மாணவர்கள் கடலைப் பாதுகாப்போம் – எதிர்காலத் தலை முறையைக் காப்போம்” என்ற நோக்கத்தை வலியுறுத்தி கடலுக்கடியில் விழிப்புணர்வு. புதுச்சேரியில் 26.08.2026 அன்று SCUBA DIVING செயல்பாடு நடைபெற்றது. இந்நிகழ்வில் திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி NCC AIRWING மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, கடலுக்கடியில் நீர் மூழ்கிப் பயிற்சி மற்றும் கடல் சூழலியல் தொடர்பான விழிப்புணர்வை பெற்றனர். SCUBA DIVING மூலம் மாணவர்கள் கடல் உயிரினங்கள், பவளப்பாறைகள் மற்றும் கடல் சூழலின் முக்கியத்துவத்தை நேரடியாக அறிந்து கொண்டனர். மேலும், நீருக்கடியில் பாதுகாப்பாக செயல்படுதல், குழு ஒருங்கிணைப்பு, ஒழுக்கம், தன்னம்பிக்கை, துணிச்சல் மற்றும் பொறுப்புணர்வு போன்ற பண்புகள் வளர்க்கப்பட்டன. இந்த நிகழ்வு “கடலைப் பாதுகாப்போம் – எதிர்காலத் தலை முறையைக் காப்போம்” என்ற நோக்கத்தை வலியுறுத்தும் வகையில் அமைந்தது. கடல் மாசுபாட்டைக் குறைத்தல், கடல் வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் கடல் உயிரினங்களின் வாழ்விடங்களைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்வு மாணவர்களுக்கு புதிய அனுபவத்தையும் சவால்களை எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தையும் வழங்கியது. NCC-யின் ஒழுக்கம், தலைமைத்துவம், குழு உணர்வு, துணிச்சல் மற்றும் நாட்டுப்பற்று போன்ற உயரிய பண்புகளை வளர்க்கும் வகையிலும் SCUBA DIVING செயல்பாடு பயனுள்ளதாக அமைந்தது. SCUBA DIVING நிகழ்வு மாணவர்களின் உடல் மற்றும் மனத் திறன்களை மேம்படுத்தியதுடன், கடலைப் பாதுகாக்க வேண்டிய சமூகப் பொறுப்புணர்வையும் ஏற்படுத்தியது. இந்நிகழ்வு மறக்க முடியாத பயனுள்ள அனுபவமாக அமைந்தது என மாணவர்கள் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியினை, திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கம் மற்றும் திண்டுக்கல் புனித மேரி மேல்நிலைப் பள்ளி இன்டராக்ட் சங்கம். இணைந்து செய்திருந்தனர் தொடர்ந்து புனித மரியன்னை பள்ளி அருள்தந்தை ஸ்டீபன் லூர்து பிரகாசம் அவர்கள் நிர்வாகி மற்றும் தலைமை ஆசிரியர் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகளான சண்முகம் (உதவி ஆளுநர்), பால சுந்தர், ரெங்கையா (தலைவர்), மதன முனியப்பன் (தலைவர்), மாணவர்களை பாராட்டினர். நிகழ்ச்சியினை NCC அலுவலர் ஜெரோம் நிக்கோலஸ் அவர்கள் ஒருங்கிணைத்தார்.1
- மதுரையில் சினிமா பாணியில் மண் கடத்தல் மாஃபியா விரட்டிப் பிடிப்பு - பெட்ரோல் பங்க் அருகே மண்ணை கொட்டி தப்பிக்க முயன்ற டிரைவர் - தாசில்தாரை மிரட்டும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரல்.* *மதுரை :* *மதுரையில் சினிமா பாணியில் மண் கடத்தல் மாஃபியா விரட்டிப் பிடிப்பு - பெட்ரோல் பங்க் அருகே மண்ணை கொட்டி தப்பிக்க முயன்ற டிரைவர் - தாசில்தாரை மிரட்டும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரல்.* *வட்டாட்சியரை மிரட்டியவர்கள் மீது கொலை மிரட்டல், அரசு அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.* மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள வடகரை கண்மாயில் வண்டல் மண் எடுத்திட அனுமதி பெற்று விவசாய பணிக்கு பயன்படுத்தாமல், அனுமதியின்றி சட்டவிரோதமாக மண் அள்ளி கடத்தப்படுவதாக வாடிப்பட்டி வட்டாட்சியர் சுந்தரவேலுக்கு புகார் வந்ததையடுத்து, இன்று காலை அப்பகுதியில் அதிரடி ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, அந்த வழியாக கட்சகட்டி பகுதியில் செயல்படும் குவாரயிலிருந்து TN-65 AR 9048 வாகனத்தில் எவ்வித அனுமதியும் இன்றி குவாரி மண் கடத்தி கொண்டுவரப்பட்டதாக தெரியவந்தது. அந்த லாரியை நிறுத்துமாறு அதிகாரிகள் கூறிய நிலையில், லாரி ஓட்டுநர் நிறுத்தாமல் அதிவேகமாக அப்பகுதியில் இருந்து தப்பிக்க முயன்றார். சினிமா பாணியில் வாடிப்பட்டி தாசில்தார் சுந்தரவேல் தலைமையிலான வருவாய்த்துறையினர், மண் கடத்தி வந்த டிப்பர் லாரியை விரட்டிச் சென்று பிடித்து காவல் நிலையத்திற்கு கொண்டு வர முயன்றனர். அப்போது வாடிப்பட்டி அருகே உள்ள பெட்ரோல் பங்க் அருகே லாரியை நிறுத்திய ஓட்டுநர், டிப்பரில் இருந்த மண்ணை அங்கேயே கொட்டி தடயத்தை அழித்துவிட்டு தப்பிச் செல்ல முயன்றார். மேலும், வாகனத்திலிருந்து இறங்கி வந்த ஓட்டுநர் தாசில்தாரிடம் "பார்த்துக்கொள்ளலாம்" என்னை விட்டு விடுங்கள் என மிரட்டும் தோணியில் பேசிய வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து சமயநல்லூர் டி.எஸ்.பி-க்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டார். சம்பந்தப்பட்ட வாகனம் மற்றும் அதன் உரிமையாளர் மீது அரசு அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்தல், அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. வாடிப்பட்டி சோழவந்தான் உள்ளிட்ட பகுதிகளில் பல வருடங்களாக மணல் மற்றும் கனிம வளம் உள்ளிட்டவை திருடப்படுவதாக புகார் வந்தாலும் கண்டும் காணாமல் இருப்பது போல் உள்ள காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் மத்தியில் இதுபோல் நேர்மையாக ஆய்வு மேற்கொண்டு கனிம வளத்திருட்டை தடுக்க முயலும் அதிகாரிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.1
- திண்டுக்கல்லில் மின் கசிவு காரணமாக துணிக்கடையில் தீ விபத்து உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்ப்பு திண்டுக்கல் கிழக்குரத வீதியில் சுப்ரமணியம் டெக்ஸ்டைல்ஸ் செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு வழக்கம் போல் கடையை மூடி விட்டு ஊழியர்கள் கிளம்பிச் சென்றனர். இந்நிலையில் இன்று 27.08.26 காலை கடையின் முன்பக்கம் வைத்துள்ள கண்ணாடி ஷோகேஸ் அருகே மின் கசிவு காரணமாக திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. பூட்டி இருந்த கடையில் இருந்து புகை வருவதை கண்ட பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறை துரிதமாக செயல்பட்டு கடைக்குள் தீ பரவாமல் கட்டுப்படுத்தினர். மேலும் கடையின் முன்பக்கம் உள்ள கண்ணாடி ஷோகேஸ் மற்றும் அது சுற்றி உள்ள பகுதியில் பரவிய தீயை உடனடியாக அணைத்தனர். இந்த தீ விபத்தினால் பெரும் அளவில் பொருட் சேதம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.1
- கும்பகோணத்தில் உள்ள சூப்பர் யாத்திரா ஏஜென்சி அலுவலகத்திற்கு விடிய விடிய காவல்துறை பாதுகாப்பு தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள சூப்பர் யாத்ரா ஏஜென்சி மூலம் கும்பகோணம், மயிலாடுதுறை, ஓசூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 57 பேர் விமான மூலம் நேபாளம் உள்ளிட்ட வட மாநிலத்திற்கு 13 நாட்கள் சுற்றுலா சென்றுள்ளனர். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு புறப்பட்ட அவர்கள் மூன்று பேருந்துகளில் இரண்டு நாள் நேபாளத்தில் சுற்றிவிட்டு நேற்று காலை தான் எல்லை விட்டு திபெத் சென்றுள்ளனர். அப்போதுதான் இந்த இயற்கை பேரிடர்களில் சிக்கி உள்ளனர். மூன்று பேருந்துகளில் சென்று உள்ளவர்களில் ஒரு பேருந்தில் உள்ள 20 பேர் மட்டுமே பாதுகாப்பாக இருப்பதாகவும் தன்னை தொடர்பு கொண்டு கூறியுள்ளனர். மேலும் இரண்டு பேருந்துகளின் நிலை என்ன என்பது தெரியவில்லை. அதில் 37 பேர் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தனது மகன் உமர் பாரூக் தலைமையில் சுற்றுலா சென்றுள்ளதாகவும் மேலும் தனது மகன் கூட தன்னை தொடர்பு கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை இருந்து சுற்றுலா சென்ற அவருடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூப்பர் யாத்ரா ஏஜென்சி அலுவலகத்திற்கு வந்து விசாரித்த வண்ணம் இருந்து வந்தனர். நேற்று இரவுக்கு மேல் ஏராளமானவர் வந்து தகவல் கேட்டு வந்ததால் உடனே நேற்று இரவில் இருந்து இன்று காலை வரை விடிய விடிய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விடிந்தும் சுற்றுலா சென்றுள்ள நபர்களின் உறவினர்கள் .மற்றும் நண்பர்கள் வந்து கேட்ட வண்ணம் இருந்து வருகிறார்கள் மேலும் இது குறித்து தகவல் அறிந்தவுடன் எங்களுக்கு தகவல் தொடுங்கள் என்று சுற்றுலா தண்ட அவர்களை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அலுவலகத்தில் தெரிவித்து வந்துள்ளனர் இதனால் இந்த பகுதியில் நேற்று மாலை முதல் இன்று வரை பரபரப்பாக காணப்பட்டு வருகிறது.1
- மணப்பாறையில் ரெயில்வே மேம்பாலத்தின் அடியில் பற்றி எரிந்த தீ : கடும் புகை மூட்டத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதி திருச்சி மாவட்டம் மணப்பாறை திண்டுக்கல் சாலையில் ரெயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த பாலத்தின் அருகே தனியார் பள்ளி, விடுதி, நுகர்பொருள் வாணிபக் கிடங்கு, தேவாலயம், - மருத்துவமனை மற்றும் குடியிருப்புகள் அதிக அளவில் உள்ளன. இந்நிலையில் பாலத்திற்கு அடியில் ரெயில்வே தண்டவாளம் அருகே மின் மாற்றிக்கு எதிரே அதிக அளவில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் பிளாஸ்டிக் கழிவுகள், கருப்பு சக்கை, பல்வேறு விதமான குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இந்த நிலையில் நேற்று மதியம் திடீரென அந்த குப்பையில் தீப்பற்றி எரிந்தது. இந்த தீ ரெயில்வே மின் இணைப்பு அருகேயும், மின் மாற்றி அருகேயும் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக தீ எரிந்ததோடு அந்த இடத்தில் இருந்து கரும் புகை கிளம்பியது. இதனால் அந்த பகுதியே கடும் புகை மூட்டமாக காட்சி அளித்ததுடன் அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இதுமட்டுமின்றி அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளையும் புகை சூழ்ந்து கொண்டதால் மக்கள் மூச்சு விட கூட கடும் சிரமப்பட்டனர். இவ்வாறு தீ பற்றி எரியும் சம்பவம் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. பாலத்தின் அடியில் குப்பைகளை கொட்டுவதால் தான் அடிக்கடி தீவிபத்து ஏற்பட்டு வருகிறது. இப்பகுதியில் பள்ளி உள்ளதால் மாணவ -மாணவிகள் தொற்று நோய்க்கு ஆளாகும் நிலையும் உள்ளது. ஆகவே திண்டுக்கல் சாலை ரெயில்வே மேம்பாலத்தின் அடியில் குப்பை கொட்டுவதை தடுக்க நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.4