Shuru
Apke Nagar Ki App…
வாரச்சந்தையில் 45 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை தர்மபுரி மாவட்டம் கோபிநாதம்பட்டி கூட்ரோடு அருகே அமைந்துள்ள புளுதியூரில் கால்நடை வாரச் சந்தை, வாரம்தோறும் புதன்கிழமை நடக்கும், அந்த வகையில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற சந்தையில் பல மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள், விவசாயிகள் கால்நடைகளை விற்க வாங்க வந்திருந்தனர். ஆடுகள் ரூ.5200 - ரூ.12,500 வரை 22 லட்சத்திற்கும், மாடுகள் ரூ.6,000 - 47,000 வரை 20 லட்சத்திற்கும், நாட்டுக்கோழிகள் ரூ.350 - 1,200 வரை என 3 லட்சம் என மொத்தமாக, 45 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனையானதாகவும், புத்தாண்டு நடைபெறுகிறது முன்னிட்டு விற்பனை சூடு பிடித்ததாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.
Raja
வாரச்சந்தையில் 45 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை தர்மபுரி மாவட்டம் கோபிநாதம்பட்டி கூட்ரோடு அருகே அமைந்துள்ள புளுதியூரில் கால்நடை வாரச் சந்தை, வாரம்தோறும் புதன்கிழமை நடக்கும், அந்த வகையில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற சந்தையில் பல மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள், விவசாயிகள் கால்நடைகளை விற்க வாங்க வந்திருந்தனர். ஆடுகள் ரூ.5200 - ரூ.12,500 வரை 22 லட்சத்திற்கும், மாடுகள் ரூ.6,000 - 47,000 வரை 20 லட்சத்திற்கும், நாட்டுக்கோழிகள் ரூ.350 - 1,200 வரை என 3 லட்சம் என மொத்தமாக, 45 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனையானதாகவும், புத்தாண்டு நடைபெறுகிறது முன்னிட்டு விற்பனை சூடு பிடித்ததாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- கோவிலூர் சவேரியார் தேவாலயத்தில் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை நல்லம்பள்ளி வட்டம் கோவிலூரில் சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித சவேரியார் தேவாலயம் அமைந்துள்ளது இங்கு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவு சிறப்பு திருப்பலி பங்குத்தந்தை ஆரோக்கியசாமி தலைமையில், மண்ணின் மைந்தர்கள் மற்றும் உதவி பங்கு தந்தை உட்பட பல தந்தையர்கள் கூட்டுப் பாடல் திருப்பலி நிறைவேற்றினர் இதில் சுற்று வட்டாரப் பகுதியை சேர்ந்த ஏராளமான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் இந்த சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்றனர் திருப்பலி முடிந்த பின்பு ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்1
- பணம் கேட்டு தாக்குதல் வழக்கு: தனபால் கைது – தலைமறைவான தமிழ்வாணனை தேடும் போலீசார் காவல் நிலைய முற்றுகைக்கு முயற்சி: பொதுமக்கள் சமாதானப்படுத்தப்பட்டதால் பரபரப்பு கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே பணம் தொடர்பான தகராறில் தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், குற்றச்சாட்டுக்கு உள்ளான தனபால் என்பவரை ஊத்தங்கரை காவல்துறையினர் நேற்று இரவு கைது செய்தனர். மேலும், சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் தமிழ்வாணன் தலைமறைவாக உள்ள நிலையில், அவரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக, 26.12.2025 அன்று ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் இருந்து வந்த தகவலின் அடிப்படையில், ஊத்தங்கரை காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் மோகன் விசாரணை மேற்கொண்டார். மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வேலுமணி பேச முடியாத நிலையில் இருந்ததால், அவரது மனைவி அம்பிகா அளித்த வாக்குமூலத்தின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அம்பிகா அளித்த வாக்குமூலத்தில், 25.12.2025 காலை கொட்டாரப்பட்டி கிராமத்தில், பணம் கேட்டு வந்த தமிழ்வாணன் மற்றும் அவரது அண்ணன் தனபால் ஆகியோர், வேலுமணியை கெட்ட வார்த்தைகளால் பேசி மூங்கில் தடியால் தாக்கியதுடன், கழுத்தில் துண்டு போட்டு இழுத்துச் சென்று கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிவித்தார். இந்த சம்பவத்தால் மன உளைச்சலுக்கு ஆளான வேலுமணி மருந்து குடித்து உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த வழக்கில் தனபால் கைது செய்யப்பட்டதை அறிந்த கொட்டாரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், சுமார் நான்கு டாடா ஏசி வாகனங்களில் ஊத்தங்கரை காவல் நிலையத்திற்கு வந்து முற்றுகையிட முயன்றனர். இதனால் காவல் நிலையம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதையடுத்து, ஊத்தங்கரை காவல் ஆய்வாளர் முருகன் தலைமையிலான போலீசார், பொதுமக்களை சமாதானப்படுத்தி, காவல் நிலைய முற்றுகை போராட்டம் நடத்தக் கூடாது என அறிவுறுத்தி, அவர்களை மீண்டும் ஊருக்கு திருப்பி அனுப்பி வைத்தனர். இதனால் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக ஊத்தங்கரை காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.1
- வேப்பூர் ரோட்டரி சங்கம் சார்பில் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் கடலூர் : வேப்பூர் ரோட்டரி சங்கம் சார்பில் கூட்டு ரோட்டில் பசுமை புரட்சி திட்டம் கொண்டாடபட்டது அப்போது விவசாயிகளுக்கு மா, பலா, கொய்யா, புங்கம் உள்ளிட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகள் வழங்கபட்டது இந்நிகழ்ச்சிக்கு வேப்பூர் ரோட்டரி சங்க தலைவர் ஆனந்தன் தலைமை தாங்கினார் முன்னால் மாவட்ட ஆளுநர் ஜனனி தாசன் முன்னிலையில் விருத்தாசலம் ரோட்டரி சங்க தலைவர் அன்புக்குமரன் விவசாயிகளுக்கு மரகன்றுகளை வழங்கினார் இதில் வேப்பூர் ராமகிருஷ்ணா பள்ளி தாளாளர் கதிரவன், ரோட்டரி சங்க நிர்வாகிகள் கொளஞ்சி, கார்த்திகேயன், சின்னதுரை, அமானுல்லாகான், செல்வராசு, சிங்கதுரை, சுடரொளி, சரவணன், ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்4
- ஓம் நமசிவாய 🙏 #shorts https://youtube.com/@muthucreatorcom1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- Post by Sangili.v1
- திறமைக்கு ஒரு பாராட்டு.1
- தர்மபுரி உழவர் சந்தையில் 45 டன் காய்கறிகள் விற்பனை தர்மபுரி உழவர் சந்தையில் தினசரி ஆயிரக்கணக்கான நுகர்வோர் வந்து செல்லும் நிலையில் நேற்று காலை மற்றும் மாலை என 2 வேளையிலும் நுகர்வோர் எண்ணிக்கை 8,500 ஆக நேற்று அதிகரித்து நிலையில் 60 வகையான காய்கறிகள் பழங்கள் விற்பனை செய்யப்பட்டது. ஆங்கில புத்தாண்டை ஒட்டி நேற்று ஒரே நாளில் மொத்தம் 45 டன் காய்கறி பழங்கள் விற்பனை ஆகி உள்ளது அவற்றின் மதிப்பு 18 லட்சம் என நிர்வாக அலுவலர் இளங்கோ இன்று தெரிவித்துள்ளார்1