logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

தேனியில் தொழிலாளர் மற்றும் மக்கள் விரோதப் போக்குடன் செயல்படுவதாக மத்திய, மாநில அரசுகைளை கண்டித்து தொழிலாளர் முன்னேற்றம் சங்கத்தினர் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம். தேனி மாவட்ட தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் சார்பில் இன்று மாலை பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தேனி பழைய பேருந்து நிலையம் அருகே மாவட்ட செயலாளர் முருகன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தினர் சுமார் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அப்போது மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேளாண் திருத்தச் சட்டங்களை ரத்து செய்யக்கோரி முழக்கங்களை எழுப்பப்பட்டது. மேலும் பொதுமக்கள், ஜனநாயக விரோத நடவடிக்கையை கைவிடக் கோரி மத்திய, மாநில அரசுகள் குறிப்பாக தவெக அரசு மற்றும் முதலமைச்சர் விஜய்-ஐ கண்டித்து முழக்கங்களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 hr ago
user_Shakthi
Shakthi
பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
1 hr ago

தேனியில் தொழிலாளர் மற்றும் மக்கள் விரோதப் போக்குடன் செயல்படுவதாக மத்திய, மாநில அரசுகைளை கண்டித்து தொழிலாளர் முன்னேற்றம் சங்கத்தினர் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம். தேனி மாவட்ட தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் சார்பில் இன்று மாலை பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தேனி பழைய பேருந்து நிலையம் அருகே மாவட்ட செயலாளர் முருகன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தினர் சுமார் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அப்போது மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேளாண் திருத்தச் சட்டங்களை ரத்து செய்யக்கோரி முழக்கங்களை எழுப்பப்பட்டது. மேலும் பொதுமக்கள், ஜனநாயக விரோத நடவடிக்கையை கைவிடக் கோரி மத்திய, மாநில அரசுகள் குறிப்பாக தவெக அரசு மற்றும் முதலமைச்சர் விஜய்-ஐ கண்டித்து முழக்கங்களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து சர்வேர்கள் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து சர்வேர்கள் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் முதல்வரின் தனிப்பிரிவு மனுவை சின்னமனூர் சர்வேயர் ஜெகநாதன் உதவியாளர் ஜெயமணியுடன் அளவீடு செய்ய சென்ற போது 2 பேரையும் K Kகுளம் அண்ணாமலை நகரில் குடியிருக்கும் செல்வராஜ் ரஞ்சித் சந்திரன் ஆகியோர் அளவீடு செய்ய விடாமல் தாக்கியதால் காடைமடைந்து தேனி க.விலக்கு GHல்அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் நடந்த சம்பவம் குறித்து சின்னமனூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது தேனி மாவட்ட நில அளவை துறைஅலுவலர் சங்கத் தலைவர் கா கணேஷ் குமார் தலைமையிலும். தமிழ்நாடு நில அளவை அலுவலர் ஒன்றிணைப்பு சங்கத் தலைவர் வேல்முருகன் முன்னிலையும் தமிழ்நாடு நில அளவை வரைவாளர் சங்கத் தலைவர் அதியமான் மற்றும் தமிழ்நாடு நில அளவைத் துறை புல உதவியாளர் சங்கத் தலைவர் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர்கள் மற்றும் நில அளவையாளர்கள் உதவியாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் சின்னமனூர் நில அளவையாளர் ஜெகன்நாதன் தாக்கிய நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை வேண்டுமெனவும். அவர்களை குண்டத் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் எனவும் அவ்வாறு கை செயல்படவில்லை என்றால் வருவாய்த் துறை மற்றும் அலுவலர் சங்கம் சார்பாக மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்போம் தமிழ்நாடு நில அளவைத் துறை அலுவலர் சங்கத் மாவட்டத் தலைவர் கணேஷ் குமார் தெரிவித்தார்
    1
    தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து சர்வேர்கள் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது
தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து சர்வேர்கள் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் முதல்வரின் தனிப்பிரிவு மனுவை சின்னமனூர் சர்வேயர் ஜெகநாதன் உதவியாளர் ஜெயமணியுடன் அளவீடு செய்ய சென்ற போது 2 பேரையும் K Kகுளம் அண்ணாமலை நகரில் குடியிருக்கும் செல்வராஜ் ரஞ்சித் சந்திரன் ஆகியோர் அளவீடு செய்ய விடாமல் தாக்கியதால் காடைமடைந்து தேனி க.விலக்கு GHல்அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் நடந்த சம்பவம் குறித்து சின்னமனூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது தேனி மாவட்ட நில அளவை துறைஅலுவலர் சங்கத் தலைவர் கா கணேஷ் குமார் தலைமையிலும். தமிழ்நாடு நில அளவை அலுவலர் ஒன்றிணைப்பு சங்கத் தலைவர் வேல்முருகன் முன்னிலையும் தமிழ்நாடு நில அளவை வரைவாளர்  சங்கத் தலைவர் அதியமான் மற்றும் தமிழ்நாடு  நில அளவைத் துறை புல உதவியாளர் சங்கத் தலைவர் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர்கள் மற்றும் நில அளவையாளர்கள் உதவியாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் சின்னமனூர் நில அளவையாளர் ஜெகன்நாதன் தாக்கிய நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை வேண்டுமெனவும். அவர்களை குண்டத் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் எனவும் அவ்வாறு கை செயல்படவில்லை என்றால் வருவாய்த் துறை மற்றும் அலுவலர் சங்கம் சார்பாக மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்போம்  தமிழ்நாடு நில அளவைத் துறை அலுவலர் சங்கத் மாவட்டத் தலைவர் கணேஷ் குமார்   தெரிவித்தார்
    user_SARAVANAN K
    SARAVANAN K
    Local News Reporter தேனி, தேனி, தமிழ்நாடு•
    15 hrs ago
  • ஸ்ரீவில்லிபுத்தூர் ஆவின் நிறுவனத்தில் சட்டப்பேரவை உறுப்பினர் ஆய்வு விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மதுரை சாலையில் அமைந்துள்ள ஆவின் நிறுவனத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் தமிழக வெற்றிக்கழக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது, விவசாயிகளிடமிருந்து பெறக்கூடிய பால் எவ்வாறு தரம் பிரிக்கப்படுகிறது, மேலும் பால் எவ்வாறு பதப்படுத்தப்படுகிறது,ஆவின் மூலம் தயாரிக்கப்படக்கூடிய உணவுப் பொருட்கள் தயாரிக்கும் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.  மாவட்டம் முழுவதும் உள்ள ஆவின் நிலையங்களுக்கு தலைமை இடமான ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து பொருட்கள் கொண்டு செல்லப்படுவதாகவும்  இதனால் தினமும் 12000 லிட்டர் தண்ணீர் தேவைப்படுவதாகவும் தற்போது தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக தண்ணீரை விலைக்கு வாங்கும் சூழ்நிலை உள்ளதால் ஆவின் நிலையத்திற்குள் நீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகள் கோரிக்கை எடுத்தனர்.இதனை அடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொண்டு உடனடியாக புதிதாக போர்வெல் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும், பால்கோவாவிற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் நெய் ,பட்டர் உள்ளிட்டஆவின் பொருட்கள் தரமானதாக மக்களிடம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசு தரப்பில் எந்த ஒரு உதவியும் என்றாலும் செய்து தர தயாராக உள்ளதாக தெரிவித்தார்.
    1
    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆவின் நிறுவனத்தில் சட்டப்பேரவை உறுப்பினர் ஆய்வு
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மதுரை சாலையில் அமைந்துள்ள ஆவின் நிறுவனத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் தமிழக வெற்றிக்கழக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது, விவசாயிகளிடமிருந்து பெறக்கூடிய பால் எவ்வாறு தரம் பிரிக்கப்படுகிறது, மேலும் பால் எவ்வாறு பதப்படுத்தப்படுகிறது,ஆவின் மூலம் தயாரிக்கப்படக்கூடிய உணவுப் பொருட்கள் தயாரிக்கும் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். 
மாவட்டம் முழுவதும் உள்ள ஆவின் நிலையங்களுக்கு தலைமை இடமான ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து பொருட்கள் கொண்டு செல்லப்படுவதாகவும்  இதனால் தினமும் 12000 லிட்டர் தண்ணீர் தேவைப்படுவதாகவும் தற்போது தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக தண்ணீரை விலைக்கு வாங்கும் சூழ்நிலை உள்ளதால் ஆவின் நிலையத்திற்குள் நீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகள் கோரிக்கை எடுத்தனர்.இதனை அடுத்து  சம்பந்தப்பட்ட அதிகாரியை  தொடர்பு கொண்டு உடனடியாக புதிதாக போர்வெல் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும், 
பால்கோவாவிற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் நெய் ,பட்டர் உள்ளிட்டஆவின் பொருட்கள் தரமானதாக மக்களிடம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசு தரப்பில் எந்த ஒரு உதவியும் என்றாலும் செய்து தர தயாராக உள்ளதாக தெரிவித்தார்.
    user_Prabakaran Praba
    Prabakaran Praba
    ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், தமிழ்நாடு•
    15 hrs ago
  • காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை அரசு பள்ளிகளில் தொடங்கி வைத்து மாணவர்களுடன் உணவருந்திய சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் *ஸ்ரீவில்லிபுத்தூரில் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை அரசு பள்ளிகளில் தொடங்கி வைத்து மாணவர்களுடன் உணவருந்திய சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக்.* தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காமராஜரின் காலை உணவு திட்டத்தை விரிவாக்க விழாவை முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மல்லி அருகே உள்ளூர் பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் திரு வி கா மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் காலை உணவு விரிவாக்க விழாவை சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் தொடங்கி வைத்தார். மாணவ மாணவிகளுக்கு உணவு பரிமாறிய சட்டமன்ற உறுப்பினர் பின்னர் மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். இதில் வட்டாட்சியர் , நகராட்சி ஆணையாளர் முன்னிட்டு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    1
    காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை அரசு பள்ளிகளில் தொடங்கி வைத்து மாணவர்களுடன் உணவருந்திய சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக்
*ஸ்ரீவில்லிபுத்தூரில் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை அரசு பள்ளிகளில் தொடங்கி வைத்து மாணவர்களுடன் உணவருந்திய சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக்.*
தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காமராஜரின் காலை உணவு திட்டத்தை விரிவாக்க விழாவை முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். 
இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மல்லி அருகே உள்ளூர் பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் திரு வி கா மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் காலை உணவு விரிவாக்க விழாவை சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் தொடங்கி வைத்தார். மாணவ மாணவிகளுக்கு உணவு பரிமாறிய சட்டமன்ற உறுப்பினர் பின்னர் மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். இதில் வட்டாட்சியர் , நகராட்சி ஆணையாளர் முன்னிட்டு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    user_ஸ்ரீவில்லிபுத்தூர்
    ஸ்ரீவில்லிபுத்தூர்
    ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், தமிழ்நாடு•
    20 hrs ago
  • விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆவின் நிறுவனத்தில் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் ஆய்வு. தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் பள்ளிகள், மருத்துவமனைகள், அம்மா உணவகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வுகள் நடத்தி குறைகளை தீர்வு காண நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மதுரை சாலையில் அமைந்துள்ள ஆவின் நிறுவனத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் தமிழக வெற்றிக்கழக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் ஆய்வு மேற்கொண்டார். இதில் விவசாயிகளிடமிருந்து பெறக்கூடிய பால் எவ்வாறு தரம் பிரிக்கப்படுகிறது, மேலும் பால் எவ்வாறு பதப்படுத்தப்படுகிறது,ஆவின் மூலம் தயாரிக்கப்படக் கூடிய உணவுப் பொருட்கள் தயாரிக்கும் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். மாவட்டம் முழுவதும் உள்ள ஆவின் நிலையங்களுக்கு தலைமை இடமான ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து பொருட்கள் கொண்டு செல்லப்படுவதாகவும் இதனால் தினமும் 12000 லிட்டர் தண்ணீர் தேவைப்படுவதாகவும் தற்போது தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக நீரை விலைக்கு வாங்கும் சூழ்நிலை உள்ளதால் ஆவின் நிலையத்திற்குள் நீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகள் கோரிக்கை வைத்த நிலையில் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரியை அலைபேசியில் தொடர்பு கொண்டு உடனடியாக புதிதாக போர்வெல் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும் உலகப் புகழ்பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் நெய் ,பட்டர் உள்ளிட்டஆவின் பொருட்கள் தரமானதாக மக்களிடம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசு தரப்பில் எந்த ஒரு உதவியும் என்றாலும் செய்து தர தயாராக உள்ளதாகவும் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
    1
    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில்  ஆவின் நிறுவனத்தில் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் ஆய்வு. 

தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் பள்ளிகள், மருத்துவமனைகள், அம்மா உணவகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வுகள் நடத்தி குறைகளை தீர்வு காண நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மதுரை சாலையில் அமைந்துள்ள ஆவின் நிறுவனத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் தமிழக வெற்றிக்கழக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் ஆய்வு மேற்கொண்டார்.
இதில் விவசாயிகளிடமிருந்து பெறக்கூடிய பால் எவ்வாறு தரம் பிரிக்கப்படுகிறது, மேலும் பால் எவ்வாறு பதப்படுத்தப்படுகிறது,ஆவின் மூலம் தயாரிக்கப்படக்
கூடிய உணவுப் பொருட்கள் தயாரிக்கும் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். 
மாவட்டம் முழுவதும் உள்ள ஆவின் நிலையங்களுக்கு தலைமை இடமான ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து பொருட்கள் கொண்டு செல்லப்படுவதாகவும்  இதனால் தினமும் 12000 லிட்டர் தண்ணீர் தேவைப்படுவதாகவும் தற்போது தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக நீரை விலைக்கு வாங்கும் சூழ்நிலை உள்ளதால் ஆவின் நிலையத்திற்குள் நீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகள் கோரிக்கை வைத்த நிலையில் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரியை அலைபேசியில் தொடர்பு கொண்டு உடனடியாக புதிதாக போர்வெல் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும் உலகப் புகழ்பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் நெய் ,பட்டர் உள்ளிட்டஆவின் பொருட்கள் தரமானதாக மக்களிடம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசு தரப்பில் எந்த ஒரு உதவியும் என்றாலும் செய்து தர தயாராக உள்ளதாகவும் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
    user_Virudhunagar
    Virudhunagar
    Virudhunagar, Tamil Nadu•
    23 hrs ago
  • Post by Eswarikumar ஈஸ்வரி ஈஷா ஈஷா செல்லப் பெயர் ஈஷா
    1
    Post by Eswarikumar ஈஸ்வரி ஈஷா ஈஷா செல்லப் பெயர் ஈஷா
    user_Eswarikumar ஈஸ்வரி ஈஷா ஈஷா செல்லப் பெயர் ஈஷா
    Eswarikumar ஈஸ்வரி ஈஷா ஈஷா செல்லப் பெயர் ஈஷா
    Salesperson ஆனைமலை, கோயம்புத்தூர், தமிழ்நாடு•
    22 hrs ago
  • கரூர் மாவட்ட ஆட்சியர் காலை உணவு திட்டத்தை தொடங்கினார். கரூர் மாவட்டத்துக்கு இன்று செப்டம்பர் : 22 காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில், 21,487 கரூர் மாவட்ட மாணவ, மாணவியர் பயன் பெறுவர். தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 1 முதல் 6-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆட்சியில், 8-ம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யப்பட்டு, காமராஜர் காலை உணவு திட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை, முதல்வர் ஜோசப் விஜய் காணொளி காட்சியின் மூலமாக தொடங்கி வைத்தார் இதன்படி கரூர் மாநகராட்சியில், 30 பள்ளிகளில், 2,936 மாணவர்கள், குளித்தலை நகராட்சியில், 6 பள்ளிகளில், 805 பேர், பள்ளப்பட்டி நகராட்சியில், 9 பள்ளிகளில், 1,439 பேர், புகழூர் நகராட்சியில், 7 பள்ளிகளில், 407 பேர் உள்ளனர். கரூர் ஊராட்சி ஒன்றியத்தில், 19 பள்ளிகளில், 919 மாணவர், தான்தோன்றிமலையில், 26 பள்ளிகளில், 1,871 பேர், அரவக்குறிச்சியில், 16 பள்ளிகளில், 818 பேர், க.பரமத்தியில், 28 பள்ளிகளில், 915 பேர், குளித்தலையில், 28 பள்ளிகளில், 3,047 பேர், கிருஷ்ணராயபுரத்தில், 18 பள்ளிகளில், 1,853 பேர், கடவூரில், 34 பள்ளிகளில், 2,962 பேர் உள்பட மொத்தம், 310 பள்ளிகளில் பயிலும், 21,487 மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் இருந்தனர் இந்த நிகழ்ச்சியில் காலை உணவு திட்டத்தை மாணவ மாணவியருடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார்கள் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் முத்துக்குமரன். கரூர் கிருஷ்ணாபுரம் சட்டமன்ற உறுப்பினர் சத்யா அரசுத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்
    1
    கரூர் மாவட்ட ஆட்சியர் காலை உணவு திட்டத்தை தொடங்கினார்.
கரூர் மாவட்டத்துக்கு  இன்று செப்டம்பர் : 22 காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில், 21,487 கரூர் மாவட்ட மாணவ, மாணவியர் பயன் பெறுவர்.
தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 1 முதல் 6-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆட்சியில், 8-ம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யப்பட்டு, காமராஜர் காலை உணவு திட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை, முதல்வர் ஜோசப் விஜய் காணொளி காட்சியின் மூலமாக தொடங்கி வைத்தார்  
இதன்படி கரூர் மாநகராட்சியில், 30 பள்ளிகளில், 2,936 மாணவர்கள், குளித்தலை நகராட்சியில், 6 பள்ளிகளில், 805 பேர், பள்ளப்பட்டி நகராட்சியில், 9 பள்ளிகளில், 1,439 பேர், புகழூர் நகராட்சியில், 7 பள்ளிகளில், 407 பேர் உள்ளனர். கரூர் ஊராட்சி ஒன்றியத்தில், 19 பள்ளிகளில், 919 மாணவர், தான்தோன்றிமலையில், 26 பள்ளிகளில், 1,871 பேர், அரவக்குறிச்சியில், 16 பள்ளிகளில், 818 பேர், க.பரமத்தியில், 28 பள்ளிகளில், 915 பேர், குளித்தலையில், 28 பள்ளிகளில், 3,047 பேர், கிருஷ்ணராயபுரத்தில், 18 பள்ளிகளில், 1,853 பேர், கடவூரில், 34 பள்ளிகளில், 2,962 பேர் உள்பட மொத்தம், 310 பள்ளிகளில் பயிலும், 21,487 மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் இருந்தனர் இந்த நிகழ்ச்சியில் காலை உணவு திட்டத்தை மாணவ மாணவியருடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார்கள் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் முத்துக்குமரன். கரூர் கிருஷ்ணாபுரம் சட்டமன்ற உறுப்பினர் சத்யா அரசுத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்
    user_Karthikeyan
    Karthikeyan
    கரூர், கரூர், தமிழ்நாடு•
    10 hrs ago
  • *தேனி புதிய பேருந்து நிலையம் அருகே மதுபோதையில் பெண்களுக்குத் தொல்லை ஆபாசமாக பேசி அத்துமீறிய நபருக்கு பொதுமக்கள் தர்ம அடி* தேனி மாவட்டம் தேனி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மதுபான பார் பகுதியில், மது குடித்துவிட்டு அவ்வழியாக செல்லும் பெண்களிடம் ஆபாசமாகப் பேசி, செல்போன்களை பறிக்க முயன்ற நபரை பொதுமக்கள் மற்றும் அங்கிருந்தவர்கள் பிடித்து தர்ம அடி கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி புதிய பேருந்து நிலையப் பகுதியில் அதிக அளவிலான மதுபானக் கடைகள் மற்றும் பார்கள் இயங்கி வருகின்றன. இதனால், தினசரி வேலைக்குச் செல்லும் பெண்கள், மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அசௌகரியத்திற்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளாகி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், சம்பந்தப்பட்ட நபரைத் தடுத்து நிறுத்த முயன்றபோதிலும், அவர் அதிக மதுபோதையில் இருந்ததால் அவரை எப்படிக் கையாள்வது என்று தெரியாமல் திணறியுள்ளனர். மேலும், இதுபோன்று அப்பகுதியில் தொடர்ந்து மது பிரியர்களின் செயல்களால் அந்த வழியாக செல்லும் பொது மக்கள் அச்சத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது எனவே, புதிய பேருந்து நிலையப் பகுதியில் செயல்படும் பார்களைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் காவல் துறை உரிய கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
    1
    *தேனி புதிய பேருந்து நிலையம் அருகே மதுபோதையில் பெண்களுக்குத் தொல்லை ஆபாசமாக பேசி அத்துமீறிய நபருக்கு பொதுமக்கள் தர்ம அடி*
தேனி மாவட்டம் தேனி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மதுபான பார் பகுதியில், மது குடித்துவிட்டு அவ்வழியாக செல்லும் பெண்களிடம் ஆபாசமாகப் பேசி, செல்போன்களை பறிக்க முயன்ற நபரை பொதுமக்கள் மற்றும் அங்கிருந்தவர்கள் பிடித்து தர்ம அடி கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  
தேனி புதிய பேருந்து நிலையப் பகுதியில் அதிக அளவிலான மதுபானக் கடைகள் மற்றும் பார்கள் இயங்கி வருகின்றன. இதனால், தினசரி வேலைக்குச் செல்லும் பெண்கள், மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அசௌகரியத்திற்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளாகி வருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், சம்பந்தப்பட்ட நபரைத் தடுத்து நிறுத்த முயன்றபோதிலும், அவர் அதிக மதுபோதையில் இருந்ததால் அவரை எப்படிக் கையாள்வது என்று தெரியாமல் திணறியுள்ளனர். 
மேலும், இதுபோன்று அப்பகுதியில் தொடர்ந்து   மது பிரியர்களின் செயல்களால் அந்த வழியாக செல்லும் பொது மக்கள் அச்சத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது
எனவே, புதிய பேருந்து நிலையப் பகுதியில் செயல்படும் பார்களைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் காவல் துறை உரிய கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    1 hr ago
  • தேனி பங்களா மேட்டில் தமிழர் தேசம் கட்சி சார்பில் வருசநாடு மலை கிராம மக்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிராக மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடந்தது தேனி மாவட்ட தமிழர் தேசம் கட்சி மற்றும் தென் மண்டலம் சார்பில் தேனி மதுரை சாலை பங்களா மேட்டில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடந்தது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நிறுவனர் செல்வகுமார் தலைமையேற்று சிறப்புரை ஆற்றினார் ஆர்ப்பாட்டத்தில் வீர முத்தரையர் முன்னேற்ற சங்க தலைவர் நடராஜன் பூசாரி தமிழர் தேசம் கட்சி மாநில அமைப்பு செயலாளர் மகேஸ்வரன் மற்றும் பூமி அம்பலம் மற்றும் மாநில மருத்துவர் அணி செயலாளர் அன்பு எழில் தமிழர் தேச இளைஞர் பேரவை நிர்வாக மாநில செயலாளர் செல்லப்பாண்டி தேனி மேற்கு மாவட்ட செயலாளர் தங்கத்துரை கிழக்கு மாவட்ட செயலாளர் கருப்பையா மற்றும் மாவட்ட பொறுப்பாளர் மாரிமுத்து மாவட்ட மகளிர் அணி வாழ வந்தால் மாவட்ட இளைஞரணி முருகன் கடமலை மயிலை ஒன்றிய செயலாளர் ஈஸ்வரன் ஆண்டிப்பட்டி ஒன்றிய செயலாளர் அழகுமுத்து போடி ஒன்றிய செயலாளர் குஞ்சன் மற்றும் வருசநாடு மேகமலை உள்ளிட்ட 102 கிராம மக்கள் என ஏராளமானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர் ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார் இந்த ஆர்ப்பாட்டத்தில் வருசநாடு கடமலை மயிலை ஒன்றியத்திற்குட்பட்ட 102 மலை கிராம மக்களைச் சேர்ந்த மூத்த குடிகளின் வாழ்வாதாரத்தை பறிக்கும் வகையில் ஸ்ரீவல்லிபுத்தூர் மேகமலை புலிகள் வன காப்பகம் என்ற பெயரில் மக்களை வெளியேற்றும் நடவடிக்கையில் உச்சநீதிமன்றமும் வனத்துறையும் ஈடுபட்டு வருகிறது இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடந்தது மேலும் இந்த மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தில் ஸ்ரீவல்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக எல்லையை மறு வரையறை செய்து வனத்துறையிடமிருந்து வன மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது
    1
    தேனி பங்களா மேட்டில் தமிழர் தேசம் கட்சி சார்பில் வருசநாடு மலை கிராம மக்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிராக மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடந்தது
தேனி மாவட்ட தமிழர் தேசம் கட்சி மற்றும் தென் மண்டலம் சார்பில் தேனி மதுரை சாலை பங்களா மேட்டில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடந்தது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நிறுவனர் செல்வகுமார் தலைமையேற்று சிறப்புரை ஆற்றினார் ஆர்ப்பாட்டத்தில் வீர முத்தரையர் முன்னேற்ற சங்க தலைவர் நடராஜன் பூசாரி தமிழர் தேசம் கட்சி மாநில அமைப்பு செயலாளர் மகேஸ்வரன் மற்றும் பூமி அம்பலம் மற்றும் மாநில மருத்துவர் அணி செயலாளர் அன்பு எழில் தமிழர் தேச இளைஞர் பேரவை நிர்வாக மாநில செயலாளர் செல்லப்பாண்டி தேனி மேற்கு மாவட்ட செயலாளர் தங்கத்துரை கிழக்கு மாவட்ட செயலாளர் கருப்பையா மற்றும் மாவட்ட பொறுப்பாளர் மாரிமுத்து மாவட்ட மகளிர் அணி வாழ வந்தால் மாவட்ட இளைஞரணி முருகன் கடமலை மயிலை ஒன்றிய செயலாளர் ஈஸ்வரன் ஆண்டிப்பட்டி ஒன்றிய செயலாளர் அழகுமுத்து போடி ஒன்றிய செயலாளர் குஞ்சன் மற்றும் வருசநாடு மேகமலை உள்ளிட்ட 102 கிராம மக்கள் என ஏராளமானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர் ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார் இந்த ஆர்ப்பாட்டத்தில் வருசநாடு கடமலை மயிலை ஒன்றியத்திற்குட்பட்ட 102 மலை கிராம மக்களைச் சேர்ந்த மூத்த குடிகளின் வாழ்வாதாரத்தை பறிக்கும் வகையில் ஸ்ரீவல்லிபுத்தூர் மேகமலை புலிகள் வன காப்பகம் என்ற பெயரில் மக்களை வெளியேற்றும் நடவடிக்கையில் உச்சநீதிமன்றமும் வனத்துறையும் ஈடுபட்டு வருகிறது இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடந்தது மேலும் இந்த மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தில் ஸ்ரீவல்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக எல்லையை மறு வரையறை செய்து வனத்துறையிடமிருந்து வன மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது
    user_SARAVANAN K
    SARAVANAN K
    Local News Reporter தேனி, தேனி, தமிழ்நாடு•
    15 hrs ago
  • மணப்பாறை துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை அறிவிப்பு திருச்சி மாவட்டம் மணப்பாறை துணை மின் நிலையத்தில் நாளை புதன்கிழமை நாள்  23.09.26 காலை 09.00 மணியிலிருந்து மாலை 04.00 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இங்கிருந்து மின்சாரம் பெறும் மணப்பாறை நகரம், செவலூர், பொடங்குபட்டி, பொய்கைபட்டி, வீரப்பூர், கொட்டப்பட்டி, தீராம்பட்டி, பொத்த மேட்டுப்பட்டி, மஞ்சம்பட்டி, கலிங்கப்பட்டி, ராயம்பட்டி, பூசாரிபட்டி, ஆண்டவர் கோவில், கள்ளிபட்டி, முத்தபு டையான்பட்டி, காட்டுப்பட்டி, புதியகாலணி, பழைய காலணி, மணப்பாறைபட்டி, கல்பாளையத்தான்பட்டி, கீழபொய்கைபட்டி, கஸ்தூரிபட்டி, வடுகபட்டி, இராயம் பட்டி, வலையபட்டி, எஃப்.கீழையூர், சின்னமனப்பட்டி, கே.பெரியப்பட்டி, வடக்குசேர்பட்டி, இடையப்பட்டி, மரவனூர், சமுத்திரம், தாதநாயக்கன்பட்டி, கத்திக்கா ரன்பட்டி, சித்தகுடிப்பட்டி, களத்துப்பட்டி, ஆளிபட்டி, தொப்பம்பட்டி, குதிரைகுத்திபட்டி, படுகளம், பூசாரி பட்டி, கரும்புலிபட்டி, அமையபுரம், குளத்தூரம்பட்டி, கூடத்திப்பட்டி, ஆணையூர், பண்ணாங்கொம்பு குடிநீர், பண்ணாங்கொம்பு, கருப்பகோவில்பட்டி, பெருமாம் பட்டி, ஈச்சம்பட்டி, அமையபுரம், பண்ணப்பட்டி, தாதம லைப்பட்டி, ஆமணக்கம்பட்டி, கன்னிவடுகப்பட்டி, வீரா கோவில்பட்டி, பாலகருதம்பட்டி, ரெங்கவுண்டம்பட்டி, வடுகப்பட்டி வீட்டு வசதிவாரிய குடியிருப்பு, வேங்கை குறிச்சி, பொன்னகோன்பட்டி, மலையடிப்பட்டி வாட்டர் போர்டு, வெள்ளை பூலாம்பட்டி, கரட்டுப்பட்டி, பிச்சை மணியாரம்பட்டி, ஆவாரம்பட்டி, புங்கம்பட்டி, ஆலத் தூர், பாம்பாட்டிப்பட்டி, செட்டியப்பட்டி, ம.துலுக்கம் பட்டி, காட்டுப்பட்டி, முள்ளிப்பாடி, கருமகவுண்டம்பட்டி, என்.பூலாம்பட்டி, இனாம் கோவில்பட்டி, தோப்புப்பட்டி, நாகம்பட்டி, வளர்ந்த நகரம், சுண்டகாம்பட்டி மற்றும் சுற்றியுள்ள பல பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளனர்.
    1
    மணப்பாறை துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை அறிவிப்பு 
திருச்சி மாவட்டம் மணப்பாறை துணை மின் நிலையத்தில் நாளை புதன்கிழமை நாள்  23.09.26 காலை 09.00 மணியிலிருந்து மாலை 04.00 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இங்கிருந்து மின்சாரம் பெறும்  மணப்பாறை நகரம், செவலூர், பொடங்குபட்டி, பொய்கைபட்டி, வீரப்பூர், கொட்டப்பட்டி, தீராம்பட்டி, பொத்த மேட்டுப்பட்டி, மஞ்சம்பட்டி, கலிங்கப்பட்டி, ராயம்பட்டி, பூசாரிபட்டி, ஆண்டவர் கோவில், கள்ளிபட்டி, முத்தபு டையான்பட்டி, காட்டுப்பட்டி, புதியகாலணி, பழைய காலணி, மணப்பாறைபட்டி, கல்பாளையத்தான்பட்டி, கீழபொய்கைபட்டி, கஸ்தூரிபட்டி, வடுகபட்டி, இராயம் பட்டி, வலையபட்டி, எஃப்.கீழையூர், சின்னமனப்பட்டி, கே.பெரியப்பட்டி, வடக்குசேர்பட்டி, இடையப்பட்டி, மரவனூர், சமுத்திரம், தாதநாயக்கன்பட்டி, கத்திக்கா ரன்பட்டி, சித்தகுடிப்பட்டி, களத்துப்பட்டி, ஆளிபட்டி, தொப்பம்பட்டி, குதிரைகுத்திபட்டி, படுகளம், பூசாரி பட்டி, கரும்புலிபட்டி, அமையபுரம், குளத்தூரம்பட்டி, கூடத்திப்பட்டி, ஆணையூர், பண்ணாங்கொம்பு குடிநீர், பண்ணாங்கொம்பு, கருப்பகோவில்பட்டி, பெருமாம் பட்டி, ஈச்சம்பட்டி, அமையபுரம், பண்ணப்பட்டி, தாதம லைப்பட்டி, ஆமணக்கம்பட்டி, கன்னிவடுகப்பட்டி, வீரா கோவில்பட்டி, பாலகருதம்பட்டி, ரெங்கவுண்டம்பட்டி, வடுகப்பட்டி வீட்டு வசதிவாரிய குடியிருப்பு, வேங்கை குறிச்சி, பொன்னகோன்பட்டி, மலையடிப்பட்டி வாட்டர் போர்டு, வெள்ளை பூலாம்பட்டி, கரட்டுப்பட்டி, பிச்சை மணியாரம்பட்டி, ஆவாரம்பட்டி, புங்கம்பட்டி, ஆலத் தூர், பாம்பாட்டிப்பட்டி, செட்டியப்பட்டி, ம.துலுக்கம் பட்டி, காட்டுப்பட்டி, முள்ளிப்பாடி, கருமகவுண்டம்பட்டி, என்.பூலாம்பட்டி, இனாம் கோவில்பட்டி, தோப்புப்பட்டி, நாகம்பட்டி, வளர்ந்த நகரம், சுண்டகாம்பட்டி மற்றும் சுற்றியுள்ள பல பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளனர்.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    15 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.