logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

அதிவேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டிய சிறுவர்கள் உள்பட 4 பேர் மீது வழக்கு நடவடிக்கை எடுத்த காவல்துறையினர். ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையில், போலீசார் அரசமரம் பஸ் நிறுத்தம் அருகில் ரோந்து பணியில் நேற்று ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆலங்குடி நகரில் இளைஞர்கள் மோட்டார் சைக்கிள்களில் அதிவேகமாகவும், அதிகமான சத்தத்தை எழுப்பிக்கொண்டு, சாலையில் செல்பவர்களுக்கு இடையூறு செய்வது போன்று செல்கின்றனர் என்று போலீ சாரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து அப்பகுதியில் மோட்டார் சைக்கிள்களில் வேகமாக சென்ற 3 சிறுவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதேபோல் கீரமங்கலம் பகுதியில் அதிவேகமாக மோட் டார் சைக்கிளில் சென்ற பட்டுக்கோட்டை ஆண்டிக்காடு பகுதியை சேர்ந்த செல்வகணபதி (46) என்பவர் மீது கீரமங்க லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

21 hrs ago
user_Rajesh
Rajesh
கரம்பக்குடி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
21 hrs ago
2332e54e-fec8-4803-b397-6ed571502b29

அதிவேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டிய சிறுவர்கள் உள்பட 4 பேர் மீது வழக்கு நடவடிக்கை எடுத்த காவல்துறையினர். ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையில், போலீசார் அரசமரம் பஸ் நிறுத்தம் அருகில் ரோந்து பணியில் நேற்று ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆலங்குடி நகரில் இளைஞர்கள் மோட்டார் சைக்கிள்களில் அதிவேகமாகவும், அதிகமான சத்தத்தை எழுப்பிக்கொண்டு, சாலையில் செல்பவர்களுக்கு இடையூறு செய்வது போன்று செல்கின்றனர் என்று போலீ சாரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து அப்பகுதியில் மோட்டார் சைக்கிள்களில் வேகமாக சென்ற 3 சிறுவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதேபோல் கீரமங்கலம் பகுதியில் அதிவேகமாக மோட் டார் சைக்கிளில் சென்ற பட்டுக்கோட்டை ஆண்டிக்காடு பகுதியை சேர்ந்த செல்வகணபதி (46) என்பவர் மீது கீரமங்க லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • அடையாள அட்டை வாங்க ஒரே நேரத்தில் குவிந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் குவிந்ததால் வட்டார வளர்ச்சி அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது புதுக்கோட்டை. விதவை அடையாள அட்டை வாங்க ஒரே நேரத்தில் குவிந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் குவிந்ததால் வட்டார வளர்ச்சி அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது புதுக்கோட்டை திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமூக நலத்துறையில் விதவைகளுக்கு உதவித்தொகை வழங்க விண்ணப்பம் பெறப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அடையாள அட்டை இருந்தால்தான் தமிழக அரசின் உதவித்தொகை வழங்கப்படும் மற்றும் அரசின் உதவிகளை பெறுவதற்கு அடையாள அட்டை கட்டாயம் என்று வதந்தி பரவியதால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குவிந்து விண்ணப்பங்களை வழங்கி வருகின்றனர் தமிழக முதல்வரின் வெற்றி பயணம் திட்டத்திற்கு 60 வயதுக்குட்பட்ட விதவைகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படும் அந்த அட்டையால் அவர்களுக்கு உதவித்தொகை மற்றும் திறன் வளர்ப்பு பயிற்சி வழங்கப்படும் என்ற அறிவிப்பால் ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மனு கொடுக்க வந்திருந்தனர் இந்நிலையில் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களும் விண்ணப்பங்கள் வழங்க வருகை தந்ததால் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பெரிதும் பரபரப்பாக காணப்பட்டது
    1
    அடையாள அட்டை வாங்க ஒரே நேரத்தில் குவிந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் குவிந்ததால் வட்டார வளர்ச்சி அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது
புதுக்கோட்டை. 
விதவை அடையாள அட்டை வாங்க ஒரே நேரத்தில் குவிந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் குவிந்ததால் வட்டார வளர்ச்சி அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது 
புதுக்கோட்டை திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்
சமூக நலத்துறையில் விதவைகளுக்கு உதவித்தொகை வழங்க விண்ணப்பம் பெறப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அடையாள அட்டை இருந்தால்தான் தமிழக அரசின் உதவித்தொகை வழங்கப்படும் மற்றும் அரசின் உதவிகளை பெறுவதற்கு அடையாள அட்டை கட்டாயம் என்று வதந்தி பரவியதால்  ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குவிந்து விண்ணப்பங்களை வழங்கி வருகின்றனர் 
தமிழக முதல்வரின் வெற்றி பயணம் திட்டத்திற்கு 60 வயதுக்குட்பட்ட விதவைகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படும் அந்த அட்டையால் அவர்களுக்கு உதவித்தொகை மற்றும் திறன் வளர்ப்பு பயிற்சி வழங்கப்படும் என்ற அறிவிப்பால் ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மனு கொடுக்க வந்திருந்தனர்
இந்நிலையில் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களும் விண்ணப்பங்கள் வழங்க வருகை தந்ததால் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பெரிதும் பரபரப்பாக காணப்பட்டது
    user_6974
    6974
    புதுக்கோட்டை, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    2 hrs ago
  • புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் பெரிய அய்யனார் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மாபெரும் குதிரை வண்டி பந்தயம் புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் பெரிய அய்யனார் கோவில் கும்பாபிஷேக விழா இரண்டாம் ஆண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 21 ஜோடி குதிரை வண்டிகள் கலந்து கொண்டன. இறுதியில் வெற்றி பெற்ற குதிரை வண்டி உரிமையாளர்களுக்கு ரொக்க பணம் மற்றும் கோப்பைகள் பரிசாக வழங்கப்பட்டது.
    1
    புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் பெரிய அய்யனார் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மாபெரும் குதிரை வண்டி பந்தயம்
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் பெரிய அய்யனார் கோவில் கும்பாபிஷேக விழா இரண்டாம் ஆண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 21 ஜோடி குதிரை வண்டிகள் கலந்து கொண்டன. இறுதியில் வெற்றி பெற்ற குதிரை வண்டி உரிமையாளர்களுக்கு ரொக்க பணம் மற்றும் கோப்பைகள் பரிசாக வழங்கப்பட்டது.
    user_Mayilvaganan
    Mayilvaganan
    திருமயம், புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    2 hrs ago
  • புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். *புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை ரூ.6,000 ஆக உயர்த்தி வழங்ககோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது* தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உதவித்தொகையை ரூ.6,000 ஆக உயர்த்தி வழங்க கோரியும் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் (TARATDAC) சார்பில் இன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உதவித்தொகையை ரூ.6,000 ஆக உயர்த்தி உடனடியாக வழங்க வேண்டும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உதவித்தொகை கோரி விண்ணப்பித்து தகுதி இருந்தும் காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக மாதாந்திர உதவித்தொகையை வழங்க வேண்டும் என்றும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அவர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
    1
    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.
*புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை ரூ.6,000 ஆக உயர்த்தி வழங்ககோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது*
தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உதவித்தொகையை ரூ.6,000 ஆக உயர்த்தி வழங்க கோரியும் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் (TARATDAC) சார்பில் இன்று  கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. 
அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில்
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உதவித்தொகையை ரூ.6,000 ஆக உயர்த்தி உடனடியாக வழங்க வேண்டும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உதவித்தொகை கோரி விண்ணப்பித்து தகுதி இருந்தும் காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக மாதாந்திர உதவித்தொகையை வழங்க வேண்டும் என்றும்
மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அவர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
    user_Prabaharan Reporter
    Prabaharan Reporter
    Psychologist கரம்பக்குடி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    22 hrs ago
  • மணப்பாறை அருகே மேட்டுக்கடை முதியோர் இல்லத்தில் கொண்ட்டாட்டம் திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மேட்டுக்கடை முதியோர் இல்லத்தில் முதியோர் நலனுக்கான மாநில செயல் திட்டம் மூலம் அவர்களை மகிழ்விக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சமூக நலத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் முதியோர் இல்லத்தில் உள்ளவர்கள் தங்களின் மகிழ்ச்சியை ஆடிப் பாடி கொண்டாடி வெளிப்படுத்தினர். அவர்களோடு மாணவ - மாணவிகளும் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். பின்னர் நெருப்பில்லாமலும், நெருப்பு பயன்படுத்தியும் பல்வேறு திண்பண்டங்கள் மற்றும் உணவு வகைகளை பாரம்பரியம் மாராமல் செய்து அசத்தினர். காப்பகத்தில் உள்ள முதியவர்களை மகிழ்விக்கும் வகையில் நடைபெற்ற நிகழ்ச்சி கவனம் ஈர்த்தது.
    4
    மணப்பாறை அருகே மேட்டுக்கடை முதியோர் இல்லத்தில் கொண்ட்டாட்டம் 
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மேட்டுக்கடை முதியோர் இல்லத்தில் முதியோர் நலனுக்கான மாநில செயல் திட்டம் மூலம் அவர்களை மகிழ்விக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சமூக நலத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் முதியோர் இல்லத்தில் உள்ளவர்கள் தங்களின் மகிழ்ச்சியை ஆடிப் பாடி கொண்டாடி வெளிப்படுத்தினர். அவர்களோடு மாணவ - மாணவிகளும் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். பின்னர் நெருப்பில்லாமலும், நெருப்பு பயன்படுத்தியும் பல்வேறு திண்பண்டங்கள் மற்றும் உணவு வகைகளை பாரம்பரியம் மாராமல் செய்து அசத்தினர். காப்பகத்தில் உள்ள முதியவர்களை மகிழ்விக்கும் வகையில் நடைபெற்ற நிகழ்ச்சி கவனம் ஈர்த்தது.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    13 hrs ago
  • வளநாடு அருகே வாகன சோதனையில் 4 கிலோ கஞ்சா சிக்கியது. திருச்சி மாவட்டம் கோவில்பட்டி பகுதிகளில் அதிக அளவில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து காவல் கண்காணிப்பாளர் அடிப்படை பிரிவு போலீசார் கோவில்பட்டி பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்தவரைப் பிடித்து விசாரித்தபோது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதில் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் . வளநாடு காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்த போது திருச்சி ராம்ஜிநகர் பகுதியைச் சேர்ந்த மனோகரன் மகன் தாமோதரன் 43 என்பது தெரிய வந்தது .மேலும் அவன் ஒட்டி வந்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்த போது அதில் 2 கிலோவில் 2 கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரிய வந்தது . அதனைத் தொடர்ந்து அவன் மீது வழக்குப் பதிவு செய்து நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தினர்.மேலும் 4 கிலோ கஞ்சா,எடை மெஷின் ,மொபைல் போன் இரண்டு,ஒட்டி வந்த இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர் .
    1
    வளநாடு அருகே வாகன சோதனையில் 4  கிலோ கஞ்சா   சிக்கியது.
திருச்சி மாவட்டம் கோவில்பட்டி பகுதிகளில் அதிக அளவில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து
காவல் கண்காணிப்பாளர் அடிப்படை பிரிவு போலீசார் கோவில்பட்டி பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்தவரைப் பிடித்து விசாரித்தபோது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதில் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் .
வளநாடு காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்த போது திருச்சி ராம்ஜிநகர் பகுதியைச் சேர்ந்த மனோகரன் மகன் தாமோதரன் 43 என்பது தெரிய வந்தது .மேலும் அவன் ஒட்டி வந்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்த போது அதில் 2 கிலோவில் 2 கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரிய வந்தது . அதனைத் தொடர்ந்து அவன் மீது வழக்குப் பதிவு செய்து  நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தினர்.மேலும் 4 கிலோ கஞ்சா,எடை மெஷின் ,மொபைல் போன் இரண்டு,ஒட்டி வந்த இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர் .
    user_Lakshmanan
    Lakshmanan
    Local News Reporter மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    22 hrs ago
  • தேவகோட்டை தேனம்மை ஊரணி ஸ்ரீ தர்ம முனீஸ்வரர் கோயிலில் ஆவணி மாத உற்சவ திருவிழா, சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தேனம்மை ஊரணி ஸ்ரீ தர்ம முனீஸ்வரர், மகா காளியம்மன் கோயிலில் 61 ஆம் ஆண்டு ஆவணி மாத உற்சவ பெருவிழா நடைபெற்று வருகிறது. 6ம் நாள் விழாவான செவ்வாய்க்கிழமை நேற்று இரவு பூச் சொரிதல் மற்றும் சாமி திருவீதி உலா நடைபெற்றது.. அதனைத் தொடர்ந்து ஸ்ரீ அம்மையப்பரின் அறக்கட்டளையின் சார்பாக நிறுவனர் ராகவா வாசுதேவன் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் 300 க்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் அம்மையப்பர் அறக்கட்டளையின் செயலாளர் முத்துக்குமார், உறுப்பினர்கள் நேசமணி, விமல், மணி, மற்றும் திருக்கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    1
    தேவகோட்டை தேனம்மை ஊரணி ஸ்ரீ தர்ம முனீஸ்வரர் கோயிலில் ஆவணி மாத உற்சவ திருவிழா, 
சிவகங்கை மாவட்டம் 
தேவகோட்டை தேனம்மை ஊரணி ஸ்ரீ தர்ம முனீஸ்வரர், மகா காளியம்மன் கோயிலில் 61 ஆம் ஆண்டு ஆவணி மாத உற்சவ பெருவிழா நடைபெற்று வருகிறது. 6ம் நாள் விழாவான செவ்வாய்க்கிழமை நேற்று இரவு பூச் சொரிதல் மற்றும் சாமி திருவீதி உலா நடைபெற்றது.. அதனைத் தொடர்ந்து ஸ்ரீ அம்மையப்பரின் அறக்கட்டளையின் சார்பாக நிறுவனர் ராகவா வாசுதேவன் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் 300 க்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் அம்மையப்பர் அறக்கட்டளையின் செயலாளர் முத்துக்குமார், உறுப்பினர்கள் நேசமணி,  விமல், மணி, மற்றும் திருக்கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    1 hr ago
  • தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனர் விஜயகாந்தின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் திருவாடானையில் கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்! தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (தேமுதிக) நிறுவனர் "கேப்டன்" விஜயகாந்தின் 74-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா, நான்கு ரோடு சந்திப்பில் சிறப்பு நிகழ்வு நடைபெற்றது.திருவாடானை ஒன்றியச் செயலாளர் பாலு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். முன்னதாக, சிறப்பு அலங்காரத்தில் வைக்கப்பட்டிருந்த கேப்டன் விஜயகாந்தின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பட்டாசுகள் வெடித்தும், அங்கு கூடியிருந்த கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் பிறந்தநாளைக் கோலாகலமாகக் கொண்டாடினர்.
    1
    தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனர் விஜயகாந்தின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
திருவாடானையில் கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்!
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (தேமுதிக) நிறுவனர் "கேப்டன்" விஜயகாந்தின் 74-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா, நான்கு ரோடு சந்திப்பில் சிறப்பு நிகழ்வு நடைபெற்றது.திருவாடானை ஒன்றியச் செயலாளர் பாலு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
முன்னதாக, சிறப்பு அலங்காரத்தில் வைக்கப்பட்டிருந்த கேப்டன் விஜயகாந்தின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பட்டாசுகள் வெடித்தும், அங்கு கூடியிருந்த கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் பிறந்தநாளைக் கோலாகலமாகக் கொண்டாடினர்.
    user_அனல் ஆனந்த்
    அனல் ஆனந்த்
    திருவாடானை, ராமநாதபுரம், தமிழ்நாடு•
    20 hrs ago
  • புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்திற்கு திராவிடர் கழகம் சார்பில் நீட் தேர்வையும் உயர் சாதியினருக்கான இட ஒதுக்கீட்டையும் முழுமையாக நீக்கம் செய்ய வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தி திராவிட கழக இளைஞர் அணி திராவிட மாணவர் கழகம் திராவிட மகளிர் பாசறை சார்பில் இருசக்கர வாகன பரப்புரை புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்திற்கு திராவிடர் கழகம் சார்பில் நீட் தேர்வையும் உயர் சாதியினருக்கான இட ஒதுக்கீட்டையும் முழுமையாக நீக்கம் செய்ய வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தி திராவிட கழக இளைஞர் அணி திராவிட மாணவர் கழகம் திராவிட மகளிர் பாசறை சார்பில் தமிழ்நாடு புதுச்சேரி தழுவிய அளவில் இருசக்கர வாகன பரப்பரை பயணம் நடைபெற்று வருகிறது. இந்தப் பயணமானது இன்று திருமயம் பேருந்து நிலையத்தை வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து நீட் தேர்வு மற்றும் உயர் சாதியினருக்கான இட ஒதுக்கீட்டு நீக்கம் குறித்து பரப்புரை நடைபெற்றது. இதுவில் கலந்து கொண்டு பேசிய திராவிடர் கழக மாநில துணைப் பொதுச் செயலாளர் மதிவதனி 2017 ஆம் ஆண்டு மோடி அரசு கொண்டுவந்த நீட் தேர்வு தகுதியும் தரத்தையும் வளர்ப்பதற்காக என்று கூறினார்கள் மாநில பாடத்திட்டத்தில் படித்து 1176 மார்க்குகள் 196.75 கட் ஆப் மார்க் எடுத்து வறுமையின் கோரப்ப்பிடியிலும் கூட மருத்துவராகுவேன் லட்சியத்தோடு படித்து பெயர் எடுத்த பிள்ளைதான் அரியலூரில் தூக்கு மாட்டி தற்கொலை செய்த அனிதா என்றும் மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு மத்திய அரசின் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் பிரிவில் படி தான் நீட் தேர்வை நடத்துவேன் என்று மூடி கூறுகிறார். மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களின் மருத்துவக் கனவை நாசமாக்க கூடிய திட்டத்தை கொண்டு வந்த கொடூரமான பாசிச ஆட்சி தான் மத்தியில் ஆளக்கூடிய பிஜேபி மோடியின் ஆட்சி கடந்த ஐந்து வருடமாக நீட் தேர்வுக்கு எதிராக ஏன் நீங்கள் போராடவில்லை என்று நேற்று முளைத்தவர்கள் எல்லாம் இன்று எங்களை கேள்வி கேட்கிறார்கள் நீட் தேர்வை ஒழிக்க கோரி 2017 ஆம் ஆண்டு இதேபோல் இருசக்கர வாகனம் பயணம் சென்றோம். கடந்த திமுக ஆட்சியில் 2024 ஆம் ஆண்டிலும் இதே இருசக்கர வாகன பயணம் சென்றோம் கடந்த ஆட்சியில் ஒரு முறை அல்ல இரண்டு முறை தமிழ்நாட்டிற்கு நீட் வேண்டாம் என்று துணிச்சலோடு முதுகெலும்போடு சட்டமன்றத்திலேயே தீர்மானத்தை கொண்டு வந்து மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்த ஆட்சியாக கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சி அமைந்தது. மற்ற மாநிலங்களில் நீட் தேர்வை ஒழிக்க வேண்டுமென பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் போராடினார்கள் ஆனால் தமிழ்நாட்டில் மட்டும்தான் திராவிடர் கழகத்தோடு சேர்ந்து ஆளுங்க கட்சியான திமுகவும் போராடியது. இதுவரை நீட் தேர்வால் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஸ்டேதஸ் போப் மாட்ட வேண்டிய கழுத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் ஒரு நாளைக்கு 200 முதல் அதிகபட்சமாக 500 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் ஆனால் நீ ஏழை இல்லை என்று பிரதமர் மோடி கூறுகிறார். ஏழை யார் என்றால் நாள் ஒன்றுக்கு 2200 ரூபாய் மாதம் 65 ஆயிரம் ரூபாய் வருடத்திற்கு 8 லட்சம் ரூபாய் சம்பாதிக்கக் கூடிய பிராமணர், அய்யங்கார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருப்பவர்களா அவர்கள் ஏழையா அவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்றால் பிரதமர் மோடி கடன் கொடுக்க வேண்டும் ஊக்கத்தொகை கொடுக்க வேண்டும் வங்கியில் வட்டி இல்லாமல் கடன் கொடுங்கள் ‌ அதை விட்டுவிட்டு சமூகநீதி இட ஒதுக்கீட்டை பொருளாதார அடிப்படையில் கொடுப்போம் என்று மிகப்பெரிய முட்டாள்தனத்தை அயோக்கியத்தனத்தை சமூக அநீதியை செய்யக்கூடிய பாஜக மோடி அரசை கண்டித்து தான் இருசக்கர வாகன பரப்பரை நடத்தி வருகிறோம் என்றும் தமிழ்நாட்டில் 10 சதவீத GWS இட ஒதுக்கீட்டை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருந்தார். தற்போது அமைந்திருக்க கூடிய புதிய ஆட்சி எந்த சூழ்நிலை ஏற்பட்டாலும் 10 சதவீதம் GWS இட ஒதுக்கீட்டை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று எச்சரிக்கை விடுப்பதற்காக இருசக்கர வாகன பரப்புரை பயணம் நடைபெற்று வருகிறதாக பேசினார்.
    1
    புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்திற்கு திராவிடர் கழகம் சார்பில் நீட் தேர்வையும் உயர் சாதியினருக்கான இட ஒதுக்கீட்டையும் முழுமையாக நீக்கம் செய்ய வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தி திராவிட கழக இளைஞர் அணி திராவிட மாணவர் கழகம் திராவிட மகளிர் பாசறை சார்பில் இருசக்கர வாகன பரப்புரை
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்திற்கு திராவிடர் கழகம் சார்பில் நீட் தேர்வையும் உயர் சாதியினருக்கான இட ஒதுக்கீட்டையும் முழுமையாக நீக்கம் செய்ய வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தி திராவிட கழக இளைஞர் அணி திராவிட மாணவர் கழகம் திராவிட மகளிர் பாசறை சார்பில் தமிழ்நாடு புதுச்சேரி தழுவிய அளவில் இருசக்கர வாகன பரப்பரை பயணம் நடைபெற்று வருகிறது. இந்தப் பயணமானது இன்று திருமயம் பேருந்து நிலையத்தை வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து நீட் தேர்வு மற்றும் உயர் சாதியினருக்கான இட ஒதுக்கீட்டு நீக்கம் குறித்து பரப்புரை நடைபெற்றது. இதுவில் கலந்து கொண்டு பேசிய திராவிடர் கழக மாநில துணைப் பொதுச் செயலாளர் மதிவதனி 2017 ஆம் ஆண்டு மோடி அரசு கொண்டுவந்த நீட் தேர்வு தகுதியும் தரத்தையும் வளர்ப்பதற்காக என்று கூறினார்கள் மாநில பாடத்திட்டத்தில் படித்து 1176 மார்க்குகள் 196.75 கட் ஆப் மார்க் எடுத்து வறுமையின் கோரப்ப்பிடியிலும் கூட மருத்துவராகுவேன் லட்சியத்தோடு படித்து பெயர் எடுத்த பிள்ளைதான் அரியலூரில் தூக்கு மாட்டி தற்கொலை செய்த அனிதா என்றும் மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு மத்திய அரசின் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் பிரிவில் படி தான் நீட் தேர்வை நடத்துவேன் என்று மூடி கூறுகிறார். மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களின் மருத்துவக் கனவை நாசமாக்க கூடிய திட்டத்தை கொண்டு வந்த கொடூரமான பாசிச ஆட்சி தான் மத்தியில் ஆளக்கூடிய பிஜேபி மோடியின் ஆட்சி கடந்த ஐந்து வருடமாக நீட் தேர்வுக்கு எதிராக ஏன் நீங்கள் போராடவில்லை என்று நேற்று முளைத்தவர்கள் எல்லாம் இன்று எங்களை கேள்வி கேட்கிறார்கள் நீட் தேர்வை ஒழிக்க கோரி 2017 ஆம் ஆண்டு இதேபோல் இருசக்கர வாகனம் பயணம் சென்றோம். கடந்த திமுக ஆட்சியில் 2024 ஆம் ஆண்டிலும் இதே இருசக்கர வாகன பயணம் சென்றோம் கடந்த ஆட்சியில் ஒரு முறை அல்ல இரண்டு முறை தமிழ்நாட்டிற்கு நீட் வேண்டாம் என்று துணிச்சலோடு முதுகெலும்போடு சட்டமன்றத்திலேயே தீர்மானத்தை கொண்டு வந்து மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்த ஆட்சியாக கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சி அமைந்தது. மற்ற மாநிலங்களில் நீட் தேர்வை ஒழிக்க வேண்டுமென பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் போராடினார்கள் ஆனால் தமிழ்நாட்டில் மட்டும்தான் திராவிடர் கழகத்தோடு சேர்ந்து ஆளுங்க கட்சியான திமுகவும் போராடியது. இதுவரை நீட் தேர்வால் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஸ்டேதஸ் போப் மாட்ட வேண்டிய கழுத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் ஒரு நாளைக்கு 200 முதல் அதிகபட்சமாக 500 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் ஆனால் நீ ஏழை இல்லை என்று பிரதமர் மோடி கூறுகிறார். ஏழை யார் என்றால் நாள் ஒன்றுக்கு 2200 ரூபாய் மாதம் 65 ஆயிரம் ரூபாய் வருடத்திற்கு 8 லட்சம் ரூபாய் சம்பாதிக்கக் கூடிய  பிராமணர், அய்யங்கார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருப்பவர்களா அவர்கள் ஏழையா அவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்றால் பிரதமர் மோடி கடன் கொடுக்க வேண்டும் ஊக்கத்தொகை கொடுக்க வேண்டும் வங்கியில் வட்டி இல்லாமல் கடன் கொடுங்கள் ‌ அதை விட்டுவிட்டு சமூகநீதி இட ஒதுக்கீட்டை பொருளாதார அடிப்படையில் கொடுப்போம் என்று மிகப்பெரிய முட்டாள்தனத்தை அயோக்கியத்தனத்தை சமூக அநீதியை செய்யக்கூடிய பாஜக மோடி அரசை கண்டித்து தான் இருசக்கர வாகன பரப்பரை நடத்தி வருகிறோம் என்றும் தமிழ்நாட்டில் 10 சதவீத GWS இட ஒதுக்கீட்டை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருந்தார். தற்போது அமைந்திருக்க கூடிய புதிய ஆட்சி எந்த சூழ்நிலை ஏற்பட்டாலும் 10 சதவீதம் GWS இட ஒதுக்கீட்டை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று எச்சரிக்கை விடுப்பதற்காக இருசக்கர வாகன பரப்புரை பயணம் நடைபெற்று வருகிறதாக
பேசினார்.
    user_Mayilvaganan
    Mayilvaganan
    திருமயம், புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    1 day ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.