Shuru
Apke Nagar Ki App…
அதிமுக ஐ டி விங் நிர்வாகிகள் மீது திமுக பேரூர் மன்ற தலைவர் புகார் சேலம் மாவட்டம் ஏத்தப்பூர் பேரூராட்சி மன்ற தலைவராக திமுகவை சேர்ந்த அன்பழகன் இருந்து வந்த நிலையில் அவருடைய திமுக கட்சி அலுவலகத்தில் அரைகுறையாக ஆடை அணிந்து சாப்பிட்டு கொண்டிருப்பது போல அதிமுக தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் பேஸ்புக்கில் பரப்பி உள்ளனர் இதனை அறிந்த அன்பழகன் இன்று ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில் என்னுடைய புகைப்படத்தை மாப்பிங் செய்து அதிமுகவை சேர்ந்த தினேஷ் பாலாஜி கார்த்திக் வேலவன் மூன்று பேரும் சமூக வலைதளத்தில் பரப்பு உள்ளனர் என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுத்துள்ளார்.
Selva
அதிமுக ஐ டி விங் நிர்வாகிகள் மீது திமுக பேரூர் மன்ற தலைவர் புகார் சேலம் மாவட்டம் ஏத்தப்பூர் பேரூராட்சி மன்ற தலைவராக திமுகவை சேர்ந்த அன்பழகன் இருந்து வந்த நிலையில் அவருடைய திமுக கட்சி அலுவலகத்தில் அரைகுறையாக ஆடை அணிந்து சாப்பிட்டு கொண்டிருப்பது போல அதிமுக தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் பேஸ்புக்கில் பரப்பி உள்ளனர் இதனை அறிந்த அன்பழகன் இன்று ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில் என்னுடைய புகைப்படத்தை மாப்பிங் செய்து அதிமுகவை சேர்ந்த தினேஷ் பாலாஜி கார்த்திக் வேலவன் மூன்று பேரும் சமூக வலைதளத்தில் பரப்பு உள்ளனர் என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுத்துள்ளார்.
More news from தமிழ்நாடு and nearby areas
- ஆத்தூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் வட்ட செயலாளர் அழகுவேல் தலைமையில் சென்னையில் மாற்று திறனாளிகள் சார்பாக நடைபெற்ற போராட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு எதிராக காவல்துறையினர் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டி காவல்துறையினர் எதிராக 35 நபர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.1
- இராசிபுரம் வட்டம் பனந்தோப்பில் எழுந்தருளியுள்ள அங்காள பரமேஸ்வரி அம்பாளுக்கு திருநங்கைகளின் மாசி மாத கொம்ப படையல் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றன விழாவில் பொதுமக்களும் குழந்தை பாக்கியம் வேண்டியும் பக்தர்கள் கலந்து கொண்டனர்1
- தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி தொகுதி பாலக்காடு கிராமத்தை சேர்ந்தவர் கணேச மூர்த்தி (55) இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு ராசாபுரம் பகுதியில் இருந்து பஞ்ஙம் பிழைக்க தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டி பகுதிக்கு முன்னோர்களுடன் வந்த நிலையில் தங்கள் கடும் உழைப்பால் ஆடு மாடு கோழி தென்னை என முன்னேறி இன்றுவரை வாழ்ந்து வருகிறார்.இந்நிலையில் இவரது அபார வளர்ச்சையை கண்டு இப்பகுதி மக்கள் இவரது சொத்துக்களை அபகரித்து விரட்டிவிட தொடர்ந்து கொலை மிரட்டல் தாக்குதல் இவர்களது சொத்துக்க ள திருடி செல்லுதல் என உச்ச பட்சமாக கடந்த 16. ஆண்டுகளுக்கு முன்னர் இவரது பாட்டியையும் கொலை செய்து விட்டு அச்சுறுத்தியுள்ளனர். இதனால் கடுமையாக பாதிப்படைந்த கணேச மூர்த்தி குடும்பத்தார் எதர்க்கும் அசராமல் காவல்நிலையம் நீதிமன்றம் மாவட்ட ஆட்சியர் காவல் கண்காணிப்பாளர் முதல்வர் பிரதமர் மனித உரிமை ஆணையம் என பல்லாயிரம் புகார்களை அளித்து சட்ட போராட்டம் இன்றுவரை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது சொத்துக்களை அபகரிக்க அரசியல் பிரமுகர்கள் கார்ப்ரேட்டுகள் என தொடர்ந்து மிரட்டியும் அழுத்தம் குடுத்து வருகின்றனர்.ஆனால் தனது சொத்துக்களையும் குடும்பத்தையும் காக்க விளைநிலத்திலேயே வீடு கட்டி குடியிருந்து வருவது மட்டுமல்லாமல் தங்கள் சுய பாதுகாப்பிற்கு சட்ட போராட்டம் நடத்தி அரசு உரிமம் பெற்று தற்பொழுதுவரை துப்பாக்கியுடன் வாழ்ந்து வருகிறார்.இவர் எங்கு சென்றாலும் இவரை தாக்கி கொலை செய்ய மர்ம கும்பல் தொடர்ந்து கண்காணித்து வருவதாலும் அன்றாட வேளாண்மை பணிகளை செய்யவும் கால்நடைகளை பராமரிக்கவும் வேண்டி. துப்பாக்கியுடன் வலம் வந்து கொண்டு. இருக்கிறார். மேலும் இன்றுவரை எதிரிகளால் தீங்கு விளையும் வகையில் சம்பவங்கள் நடந்தால் உடனடியாக காவல்துறைக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் புகார் அளித்தாலும் ஒரு சில புகார்கள் தவிற மற்ற புகார்களுக்கு உடனடி தீர்வு கிடைக்காத காரணத்தால் அந்த துறை சார்ந்த அதிகாரிகள் மீது உயரதிகாரிகளுக்கும் துறை அமைச்சர்கள் வரை புகார் அளித்தால்தான் தீர்வு கிடைத்து வருவதால் இவர் இன்றுவரை சுமார் 3500 க்கும் மேலான புகார்களை பயன்படுத்தி தான் தீர்வு கண்டு இருப்பதாகவும் கூறுகிறார். மேலும் பாப்பிரெட்டிபட்டி தொகுதியில் ஆலாபுரம் பகுதி ஒருகாலத்தில் நக்சல்களால் பாதிக்கப்பட்டு இன்று வரை அரசின் நலத்திட்ட உதவிகளால் இயங்கி வருவதால் இவரது பாட்டி கொலை செய்யப்பட்ட பொழுதும் இவரது தம்பியை கொலையாளியாக சித்தரித்து காவல்துறையினர் முயற்ச்சித்துள்ளனர் .அதே பாேல கணேச மூர்த்தியையும் சில ஆண்டுகளுக்கு முன்பு நக்சலைட் என கூறி கைது செய்து முடக்க முயற்சித்த சம்பவமும் நீதிமன்ற விசாரணையில் உள்ளதாக தெரிவிக்கும் இவரது தென்னந்தோப்பு அருகாமயைில் தற்பொழுது. தனியாருக்கு சொந்தமான கிரானைட் குவாரி ஒன்று புதிதாக துவக்கப்பட்டு செயல் பட்டு வரும் நிலையில் விதிமுறைகளை மீறி செயல்படுவதாகவும் இந்த குவாரியில் பயன்படுத்தப்படும் வெடிச் சப்தம் சுற்றுவட்டாரத்தில் உள்ள வீடுகள் கால்நடைகள் மனிதர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் இந்த குவாரிக்கு லைசன்ஸ் ரத்து செய்ய வேண்டும் எனவும் தொடர்ந்து அதிகாரிகளுக்கு புகார் அளித்து வருகிறார்.இதனால் ஆத்திரமடைந்த அதிகாரிகள் இவர் 30ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வந்த விவசாய நிலத்தில். வேலிகள் அமைத்தும் அதில் உள்ள தென்னை மரங்க ள அகற்றவும் முயற்சி செய்து வருவதாகவும் புகார் அளித்துள்ளார்.ஆனால் அரசு இயந்திரங்கள் கார்ப்ரேட்டுகளுக்கு ஆதரவாக செயல்பட்டு தனது நிலத்தை அபகரித்தும் தன்னையே கைது செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறார். இவரது செயல்பாடுகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சமூக சுற்று சூழலுக்கு எதிராக செயல்படும் சட்ட விரோதிகளுக்கு எதிராக ட்ராஃபிக் ராமசாமி என்ற சமூக ஆர்வலர் செயல்பட்டு வருவதை போலவும் திரைப்படங்களில் வரும் பெட்டிசன் பெரியாசமி என்ற பெயரில் உள்ள கதாபாத்திரங்களை செயல்பட்டு வருவதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.1
- தருமபுரியில் வேளாண்மை துறை சார்பில் மாவட்ட அளவிலான ஊட்டத்சத்து சிறுதானிய திருவிழா, கண்காட்சி: மாவட்ட ஆட்சியர் கண்காட்சியை தொடங்கிவைத்து பார்வையிட்டார் வேளான்மை துறை சார்பில் மாவட்ட அளவிலான சிறுதானிய திருவிழா கண்காட்சி தருமபுரியில் வேளான்மை துறை இணை இயக்குனர் மு.குணசேகரன் தலைமையில் நடைபெற்றது இவ்விழாவில் பங்கேற்ற தருமபுரி மாவட்ட ஆட்சியர் திரு.ரெ.சதீஸ் 10க்கும் மேற்பட்ட அரங்குகளில் வைக்கப்பட்டிருந்த சிறுதானிய வகை கண்காட்சியை திறந்துவைத்து பார்வையிட்டார் இக்கண்காட்சியில் நெல், ராகி, தினை, கம்பு கருப்பு கவுனி அரிசி வகைகள் விதை ரகங்கள், சிறுதானியத்தில் செய்யப்பட்ட உணவு வகைகள் இக்கண்காட்சியில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன பின்னர் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் அந்த கால மனிதர்கள் சிறுதானிய உணவு வகைகளையே சாப்பிட்டதால் நீண்ட ஆயில்யுடன் வாழ்ந்தனர் ஆனால் இக்கால இளைஞர்கள், குழந்தைகள் நவீன செயற்கை உணவு வகைகளை வாங்கி சாப்பிடுவதால் பல்வேறு நோய்கள் வருகிறது ஆகையால் அனைவரும் ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானிய உணவு வகைகளை சாப்பிட்டு நன்றாக வாழவேண்டும் என கேட்டுக்கொண்டார் பின்னர் சிறுதானிய உணவு பற்றிய விவரங்களையும், பலன்களையும் வேளான்மை துறை அதிகாரிகள் மக்களுக்கு எடுத்துரைத்தனர் இந்நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள், பெண்கள் கருத்தரங்கில் பங்கேற்றனர் மேலும் துனைவேளாம்மை இயக்குனர் ரத்தினம், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் பாத்திம்மா உள்ளிட்ட வேளான்மை துறை அதிகாரிகள் விவசாபிகள் பங்கேற்றனர்1
- கூத்தப்பாடி ஊராட்சியில் அமைந்துள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த சில தினங்களாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பொழியும் மழையின் அளவைப் பொறுத்து நீர்வரத்து அதிகரிப்பதும் சரிவதுமாக காணப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக 200 அடியாக நீர்வரத்து இன்று (பிப்.18) புதன்கிழமை காலை 9 மணி நிலவரப்படி வினாடிக்கு 1200 கன அடியாக அதிகரித்துள்ளதாக மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.1
- Post by கலியபெருமாள்4
- விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் ,தாலுக்கா சித்தலிங்கமடம் கிராமத்தை சேர்ந்த அஸ்வின் பவானி தாய்-தந்தை இறந்துவிட்டதால் ஆதரவின்றி தவிக்கும் அண்ணன்-தங்கை அரசு உதவ கோரிக்கை வைத்தனர் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த சித்தலிங்கமடம் திப்பரசன்பேட்டையை சேர்ந்தவர் விஸ்வநாதன் விவசாய தொழிலாளி. இவரது மனைவி அலமேலு. இந்த தம்பதிக்கு அஸ்வின் (வயது 17) என்ற மகனும், பவானி (14) என்ற மகளும் உள்ளனர். இதில் அஸ்வின் அதே கிராமத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பும், பவானி பெண்கள் மேல்நிலைப்பள் ளியில் 9-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். விஸ்வநாதன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந் துவிட்டதால் அலமேலு கூலி வேலைக்கு சென்று குழந்தைகளை படிக்க வைத்து கவனித்து வந்தார். இந்தநிலையில் அலுமேலுவுக்கு திடீரென உடல் நிலை சரியில்லாமல் போனது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக திருக்கோவிலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அலுமேலுவுக்கு 2 சிறுநீரகமும் செயலிழந்தது தெரியவந்தது. பின்னர், அவர் மேல்சிகிச்சைக்காக திருவண்ணாமலை | அரசு மருத்துவ கல்லூரி மருத்து மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 9-ந்தேதி அல மேலு பரிதாபமாக உயிரிழந்தார். தாய்-தந்தை இருவருமே உயிரிழந்துவிட்டதால் ஏழ்மை நிலையில் உள்ள அஸ்வின், பவானி ஆகியோர் படிப்பை தொடர முடியாமல் தவித்து வருகின்றனர். உறவினர்களும் மும்பையில் இருப்பதால் அவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. எனவே தாய்-தந்தையை இழந்து ஆதரவின்றி தவித்து வரும் அண்ணன்-தங்கைக்கு அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதை அறிந்த திருவெண்ணெய்நல்லூர் காவல் ஆய்வாளர் இன்ஸ்பெக்டர் அழகிரி அவர்கள் திருவெண்ணெய்நல்லூரில் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் அனைவரும் இணைந்து ஒரு மாதத்திற்கான காய்கறி மளிகை பொருள் அரிசி எண்ணெய் மற்றும் ரொக்க பணம் ஆகியவற்றை காவல்துறை சார்பில் அவருடைய வீட்டுக்கு சென்று கொடுத்தனர் அப்போது இன்ஸ்பெக்டர் அழகிரி அவர்கள் காவல்துறை சார்பில் நீங்கள் படிப்பதற்கான முழு செலவையும் திருமணத்திற்கான செலவையும் காவல்துறை சார்பில் எங்களால் முடிந்த உதவியை செய்ய நான் தயாராக உள்ளேன் என்று உறுதி அளித்தார்1
- தருமபுரி குமாரசாமிப்பேட்டை ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளை திருவிழாவை முன்னிட்டு இன்று தீமிதி விழா வெகு விமர்சையாக நடந்தது. இதனைத் தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் , பூஜைகள் செய்யப்பட்டு மகா தீபாரதனை காட்டப்பட்டது. இதனை தொடர்ந்து குமாரசாமிப்பேட்டை பாலத்து முனியப்பன் கோவிலில் இருந்து அங்காளம்மன் கரகம் புறப்பாடு தொடங்கியது. பென்னாகரம் தருமபுரி முக்கிய சாலை வழியாக ஊர்வலமாக சென்று வாரியார் திடலில் பக்தர்கள் தீமிதி விழா தொடங்கியது அதற்கு முன்னதாக மேளதாளங்கள் முழங்க சக்தி கரகத்திற்கு கிடாவெட்டி முப்பூஜை செய்து தீமிதி விழா நடைபெற்றது, இதில் வாயில் கோழி தலையுடன் தலையில் கரகம் ஏந்தி பூசாரி அக்னி குண்டத்தில் இறங்கினார் இதனைத் தொடர்ந்து பக்தர்கள் தீமித்து தங்களது நேர்த்தி கடணை செலுத்தினர். பின்னர் அங்காளம்மன் கோவில் முன்பு பக்தர்கள் தங்களது நேர்த்தி கடன் செலுத்த தரையில் படுத்துக்கொள்ள அவர்கள் மீது கரகம் ஏந்திய பூசாரி பக்தர்களை மிதித்தவாறு கோயிலை சென்றடைந்தார் பின்னர் அம்மனுக்கு சிறப்பு தீப ஆராதனைகள் காட்டப்பட்டது அங்காள பரமேஸ்வரி அம்மன் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அங்காளம்மன் கோயிலில் இருந்து பால்குடம் ஊர்வலம் தொடங்கி முருகன் கோயில் வழியாக பென்னாகரம் மெயின் ரோடு வழியாக பிள்ளையார் கோவில் வழியாக வாதி மேலத்துடன் ஏழாமான பெண்கள் பால்குடம் எடுத்துக் கொண்டு ஊர்வலமாக அங்காளம்மன் கோவிலில் அடைந்தனர் அங்காளம்மனுக்கு பாலபிஷேகம் நடைபெற்றது அது தொடர்ந்து அங்காளம்மனுக்கு சாமி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர் பக்தர்களுக்கு அனைவருக்கும் மஞ்சள் குங்குமம் தாலி கயிறு வளையல் பிரசாதமாக வழங்கப்பட்டது பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது1