Shuru
Apke Nagar Ki App…
கலியபெருமாள்
More news from தமிழ்நாடு and nearby areas
- Post by கலியபெருமாள்4
- कैमरे पर: तमिलनाडु के वेल्लोर में मयाना कोल्लाई के दौरान 60 फुट लंबा मंदिर रथ गिरने से 7 लोग घायल। वेल्लोर के मयाना कोल्लाई उत्सव के दौरान, 60 फुट लंबा मंदिर का रथ गिर गया, जिससे सात लोग घायल हो गए और दहशत फैल गई। वेल्लोर में वार्षिक मयाना कोल्लाई उत्सव के दौरान 16 फरवरी की रात को उस समय नाटकीय घटना घटी जब श्रद्धालुओं की भारी भीड़ के बीच 60 फुट लंबा मंदिर रथ पलट गया। इस घटना में कम से कम सात लोग घायल हो गए और भीड़ में कुछ देर के लिए अफरा-तफरी मच गई।1
- சத்துணவு அங்கன்வாடி பணியாளருக்கு இளநிலை உதவியாளர் நிலையில் 19,500-ரூபாயும் சமையல் உதவியாளருக்கு அலுவலர் உதவியாளர் நிலையில் 15,700 ரூபாய் அடிப்படையில் கால முறை ஊதியம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு காலி தட்டுகளில் ஒலி எழுப்பி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கத்தின் கூட்டமைப்பினர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சத்துணவு அங்கன்வாடி பணியாளருக்கு இளநிலை உதவியாளர் நிலையில் 19,500-ரூபாயும் சமையல் உதவியாளருக்கு அலுவலர் உதவியாளர் நிலையில் 15,700 ரூபாய் அடிப்படையில் கால முறை ஊதியம் வழங்கிட வேண்டும், அரசு பணியிடங்களை நிரப்பும்போது பத்து ஆண்டு பணி முடித்த தகுதியுள்ள சத்துணவு அங்கன்வாடி பணியாளர்களை 50% ஈர்த்திட வேண்டும், சத்துணவு அங்கன்வாடி திட்டங்களில் உள்ள 60,000 மேற்பட்ட காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலி தட்டுகளில் ஒலி எழுப்பி நூதன முறையில் போராட்டம் நடத்தி முழக்கங்கள் எழுப்பினர்.1
- *குளித்தலை அருகே மேட்டுமருதூர் அங்காள பரமேஸ்வரி கோவில் சிவராத்திரி விழா முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டத்தில் வடம் பிடித்து இழுத்து சென்ற பக்தர்கள்* கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள மேட்டுமருதூர் அங்காள பரமேஸ்வரி கோவில் சிவராத்திரி விழாவை முன்னிட்டு மூன்றாம் நாள் நிகிழ்ச்சியான தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. தேரோடும் நான்கு முக்கிய வீதி வழியாக சென்று தேர் நிலைக்கு வந்தது. வழி நெடுகிலும் பக்தர்கள் தேங்காய் வாழைப்பழம் கொண்டு அபிஷேகம் செய்து அம்பாளை தரிசனம் செய்தனர். விழாவில் கரூர், திருச்சி, திண்டுக்கல், நாமக்கல், சேலம், ஈரோடு மற்றும் பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கோவில் குடிப்பாட்டுக்காரர்கள் வருகை புரிந்து சுவாமி தரிசனம் செய்தனர்.1
- ஈஞ்சர் விஏஓ மற்றும் உதவியாளர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தி திருக்குவளை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில், ஈஞ்சர் வருவாய் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளரை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், ஈஞ்சர் வருவாய் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலர் வே.யாகராஜன் மற்றும் கிராம உதவியாளர் ராஜாமுத்துப்பாண்டி மீது நடைபெற்ற தாக்குதல் சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் தொடர்புடையவர்களை 15 நாட்கள் கடந்தும் கைது செய்யாததை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு ஒருங்கிணைந்த முறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.அதன் ஒரு பகுதியாக திருக்குவளையில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் திருக்குவளை வட்டத் தலைவர் கா.முரளி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் என்.முத்துக்குமரன் பங்கேற்று கண்டன உரையாற்றினார். அரசு அலுவலர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் திருக்குவளை வட்ட செயலாளர் எஸ்.மணிமாறன், வட்ட பொருளாளர் ஜி.ராஜேந்திரன், தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் திருக்குவளை வட்ட தலைவர் எம்.விஷ்ணுவர்தன், வட்ட செயலாளர் த.அஸ்வின்குமார், வட்ட பொருளாளர் கே.துர்கா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.அரசு அலுவலர்கள் பணியில் பாதுகாப்புடன் செயல்பட உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.1
- தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த ஆலடிக்குமுளை ரவுண்டானா பகுதியில் சாலை ஓரங்களில் உள்ள தெருவிளக்கு எரியாததால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது அதிக போக்குவரத்து கொண்ட சாலையாக இருப்பதால் சாலையை கடக்கும் பொதுமக்கள் மற்றும் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர் அருகில் பேருந்து நிறுத்தம் இருப்பதால் தஞ்சாவூர் பஸ் பயணிகள் இறங்கி புதுக்கோட்டை செல்லும் பேருந்துக்காக சாலையை கடக்க வேண்டிய உள்ளது இரவு நேரங்களில் தெரு விளக்குகள் எரியதால் சாலை விபத்துக்கள் மற்றும் குற்றச்சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து தெரு விளக்குகள் சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை1
- திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ரெட்டமலைப்பட்டி அருகே கிரஷர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு தோப்புப்பட்டி பகுதியைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விவசாயம் மற்றும் கால்நடைகளை மட்டுமே மக்கள் நம்பி வாழ்ந்து வரும் நிலையில் கிரஷருக்கு அனுமதி கொடுத்தால் அந்த பகுதி மக்களின் நிலை மிக மோசமாகி விடும். ஆகவே அரசு கிரஷருக்கு அனுமதி கொடுக்ககூடாது என்று கூறி மணப்பாறை - ரெட்டியபட்டி சாலையில் குளத்துராம்பட்டி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த வையம்பட்டி போலீசார் மற்றும் மணப்பாறை வட்டாட்சியர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களின் கருத்தை பெற்று தான் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது வரை அனுமதி வழங்கப்படவில்லை என்று பேச்சுவார்த்தையில் தெரிவித்ததை அடுத்து மக்கள் மறியலை கைவிட்டனர்.1
- புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேரூராட்சிக்கு சொந்தமான வள்ளுவர் திடலில் தனி நபர்கள் கடை வைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் நீதிமன்றம் முன்பு ஹோட்டல் மற்றும் தேனீர் கடை அமைத்து உள்ளதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதாகவும் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பேரூராட்சி செயல் அலுவலரிடம் சமூக ஆர்வலர்கள் மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததால் பேரூராட்சி வளாகத்தில் பேரூராட்சி செயல் அலுவலரை கண்டித்து சமூக ஆர்வலர்கள் டோலக் அடித்து பாட்டு பாடி நூதன முறை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பைட்: 1 பூபதி கார்த்திகேயன் (சமூக ஆர்வலர்1