Shuru
Apke Nagar Ki App…
இரவு வணக்கம்
அன்பரசு
இரவு வணக்கம்
More news from தமிழ்நாடு and nearby areas
- தமிழ்நாடு கியோகுஷின் சின்னு'ஸ் கராத்தே அசோசியேசன் & வேர்ல்டு சோ கியோகுஷின் கராத்தே சார்பாக தமிழ்நாட்டில் முதன்முறையாக மாநில அளவிலான லோ-கிக் கராத்தே கராத்தே போட்டி சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. சேலம், ஈரோடு, நாமக்கல் ,தர்மபுரி ,கிருஷ்ணகிரி , சென்னை, கோயம்புத்தூர் ,வேலூர், திருச்சி ஆகிய மாவட்டத்திலிருந்து 100 மேற்பட்ட கராத்தே வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்துகொண்டு தங்களின் திறமையை வெளிப்படுத்தினர். மேலும் மாநில அளவில் நடைபெற்ற லோ-கிக் கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற கராத்தே வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டது. இதில் தலைமை பயிற்சியாளர் சின்னுசாமி, யுனிவர்சல் பள்ளியின் தாளாளர் சீனிவாசன்,அ.தி.மு.க. நகர செயலாளர் முருகன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி செல்வக்குமரன், மருத்துவர்கள் கோகுலகிருஷ்ணன், ஸ்ரீபாலாஜி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினர்.1
- திண்டுக்கல் மாவட்டம் இராமலிங்கப்ட்டியில் அமைந்துள்ள பாதாள செம்பு முருகன் திருக்கோவிலில் மார்கழி மாத 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது இதில் அமிர்தா வித்யாலயம் பள்ளி குழந்தைகள் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் திண்டுக்கல் மாவட்டம் இராமலிங்கம்பட்டி அமைந்துள்ள புகழ்பெற்ற பாதாள செம்பு முருகன் ஆலயத்தில் இன்று மார்கழி மாதத்தை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திண்டுக்கல் எஸ். காமாட்சிபுரம் பிரிவு பகுதியில் அமைந்துள்ள அமிர்தா வித்யாலயம் பள்ளியில் இருந்து 200 பள்ளி குழந்தைகள், ஆசிரியர்கள், குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இந்த பூஜையானது குழந்தைகளின் கல்வி, மங்களம் பெருகவும், ஆரோக்கியம், செல்வம் பெருகும் . தீமைகள் நீங்கும் என்பது ஐதீகம் ஆகும். தீபத்தை ஏற்றி முதலில் கணபதி பூஜை பின்னர் குலதெய்வம், முருகப்பெருமானை மனதால் நினைத்து வழிபட்டார்கள். பூஜையில் கலந்து கொண்ட அனைத்து பள்ளிக் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் குழந்தைகளின் பெற்றோர்கள் அனைவருக்கும் பாதாள செம்பு முருகன் திருக்கோவில் சார்பாக இந்த வருடத்திற்கான காலண்டர் மற்றும் முருகனின் புகைப்படம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.1
- *இருதரப்பு ஆட்டோ ஓட்டுநர்கள் இடையே ஏற்பட்ட பிரச்சனையில் சாதி ரீதியாக ஒருத்தரப்பு மீது மட்டும் நடவடிக்கை எடுத்த போலீசார்* *ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆதரவாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரி டம் புகார் செய்த புதிய தமிழகம் கட்சியினர்* தேனி புதிய பேருந்து நிலையம் பகுதியில் பென்னிகுயிக் ஆட்டோ சங்கம் என்ற பெயரில் ஆட்டோ நிறுத்தம் உள்ளது இந்த ஆட்டோ நிறுத்தத்தில் மற்றொரு தரப்பினர் ஆட்டோக்களை நிறுத்துவதால் இருதரப்பிற்கிடையே பிரச்சனை நிலவி வந்தது இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள ஆட்டோ நிறுத்தத்திற்கு நகராட்சி அனுமதி இல்லை எனக்கூறி பேரிக்காடுகளை அமைத்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர் இதனை அடுத்து போலீசாரின் தடையை மீறி ஆட்டோ நிறுத்திய 9 நபர்களை தேனி போலீசார் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது இந்த நிலையில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆதரவாக புதிய தமிழக கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிநேக பிரியாவை சந்தித்து தங்கள் ஆட்டோ நிறுத்ததை செயல் படுத்து அனுமதி அளிக்க வேண்டும் என புகார் மனு அளித்தனர் பேருந்து நிலையப் பகுதியில் இரு சமுதாயத்தைச் சேர்ந்த தரப்புக்கும் ஆட்டோ நிறுத்தம் உள்ள நிலையில் தங்கள் தரப்பை மட்டும் ஆட்டோ இயக்கக் கூடாது என போலீசார் ஒரு தலைபட்சமாக செயல்படுவதாகவும் திமுகவினர் தூண்டுதலோடு சாதிய வன்மத்தோடு பல ஆண்டுகளாக ஆட்டோ இயக்கி வந்த தங்கள் ஆட்டோ நிறுத்தத்திற்கு அனுமதி கொடுக்காமல் தங்களது கொள்வாதாரத்தை பாதிப்புக்குள்ளாக்கி வருவதாக தெரிவித்துள்ளனர் தங்கள் ஆட்டோ நிறுத்தத்தை மீண்டும் செயல்படுத்த அனுமதி தர வேண்டும் என கோரிக்கை வலியுறுத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளிடம் புகார் மனு அளித்தனர்1
- *ஊதிய உயர்வு, பணி பாதுகாப்பு உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி* *ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க பணியாளர்கள் ஐந்தாவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம்* தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க அனைத்து பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று ஐந்தாவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க பணியாளர்களுக்கு அடிப்படை ஊதிய உயர்வு வழங்க வேண்டும், மாவட்ட அலுவலகத்தில் இருந்து பணியாளர்களுக்கு நேரடியாக வங்கி கணக்கில் ஊதியம் வழங்கப்பட வேண்டும் பத்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு மற்றும் பணி நிரந்தரம் வழங்க வேண்டும் காலை உணவு திட்டத்தில் பணி புரியும் பணியாளர்களுக்கு சத்துணவு சட்ட பணியாளர்களுக்கு இணையான மதிப்பூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதாரப் பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஐந்தாவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்1
- திண்டுக்கல் அருகே பழிக்கு பழியாக கணவன் - மனைவியை இரு வெவ்வேறு இடங்களில் வெட்டி படுகொலை - 9 பேர் கைது திண்டுக்கல் யாகப்பன்பட்டியை சேர்ந்த சேசுராஜ்(41) இவர் நத்தம் ரோடு R.M.T.C.காலனி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்தனர். அதே நேரத்தில் சேசுராஜின் 2-வது மனைவி தீபிகா(35) யாகப்பன்பட்டியில் வீட்டின் வாசலில் வைத்து வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து மாவட்ட எஸ்.பி.பிரதீப் பிரதீப் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வேடபட்டியை சேர்ந்த அந்தோணி ஆரோக்கியசாமி(35), தர்மராஜ்(52), சேவியர்ஆல்பர்ட்(22), மணிகண்டன்(19) யாகப்பன்பட்டியை சேர்ந்த அருள்ராஜ்(60), ஜான்பீட்டர்(42), மைக்கேல்ராஜ்(31), மருதாசிபுரத்தை சேர்ந்த ஞானராஜ்(54), முத்தழகுபட்டியை சேர்ந்த ராபின்(23) ஆகிய 9 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து கத்தி, அரிவாள், கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.3
- கரூர் மாவட்டம் குளித்தறையில் ஏபிஎஸ் ஜவுளிக்கடை சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு விலை இல்லா வேட்டி சேலைகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது இந்நிகழ்வில் குளித்தலை நகரில் உள்ள நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு குளித்தலை ஏபிஎஸ் ஜவுளி நிறுவனம் உரிமையாளர் பொங்கல் பண்டிகை முன்னிட்டு அவர்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறி இலவச வேட்டி சேலை வழங்கினார்2
- கொங்கணபுரம், திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் வாரந்தோறும் தேங்காய் பருப்பு ஏலம் நடக்கும். இந்நிலையில் இன்று பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தேங்காய் பருப்பு வாங்க வந்தனர். இதில் மொத்தம் 28 மூட்டை தேங்காய் பருப்பு ரூ.1.31 லட்சத்திற்கு விற்பனையானது. முதல் ரகம் ரூ.120.10 முதல் ரூ.186 வரை, இரண்டாம் ரகம் ரூ.100.10 முதல் ரூ.115.10 வரை விற்பனை செய்யப்பட்டது.1
- திண்டுக்கல் செம்பட்டி ஆட்டுச் சந்தையில் ரூ. 2 கோடிக்கு ஆடுகள் விற்பனை செம்பட்டி ஆட்டுச் சந்தையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரூ. 2 கோடி வரை ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆடுகள் விற்பனை செய்யும் வாரச்சந்தை நடைபெறுகிறது. தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற இந்தச் சந்தைக்கு ஆந்திரம், கா்நாடகம், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்கள், தேனி, உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, ஒட்டன்சத்திரம், மணப்பாறை, அய்யலூா், திருச்சி, மதுரை, வாடிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான ஆடுகள் விற்பனைக்காக கொண்டுவரப்படும். இந்த நிலையில், தைப்பொங்கல், மாட்டுப் பொங்கல், தொடா் விடுமுறையை முன்னிட்டு ஆடுகள், கிடாய்கள் விற்பனைக்கு வந்தன. இதையடுத்து, ஆட்டுச் சந்தையில் சுமாா் 10 கிலோ எடை கொண்ட ஒரு ஆட்டுக் கிடா ரூ. 12 ஆயிரம் முதல் ரூ. 14 ஆயிரம் வரையிலும், 15 கிலோ எடை கொண்ட கிடா ரூ. 22 ஆயிரம் வரையிலும் விற்பனையானது. எடையைப் பொருத்து கிடாய்களின் விலை நிா்ணயம் செய்யப்பட்டது. சந்தையில் செம்மறி ஆடு, வெள்ளாட்டுக் கிடா அதிகளவில் விற்பனையானது. வெள்ளாட்டுக் கிடாய்களை இறைச்சிக் கடை வியாபாரிகள் அதிகளவில் வாங்கிச் சென்றனா். இதனால், சுமாா் ரூ. 2 கோடி வரை வியாபாரம் நடைபெற்ால், ஆட்டுக் கிடாய்களை விற்பனைக்காக கொண்டு வந்த விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனா். மேலும், தமிழத்தில் ஆடுகள் வளா்க்கப்படுவது குறைந்ததன் காரணமாக அவற்றின் விலை உயா்ந்ததாக ஆடு வியாபாரிகள் தெரிவித்தனா். இதே போல, செம்பட்டி, அதைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களிலிருந்து நாட்டுக் கோழிகள், சேவல்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. ஒரு கிலோ எடை கொண்ட நாட்டு ரக சேவல் ரூ. 1,000 முதல் ரூ. 1,200 வரை விற்பனையானது குறிப்பிடத்தக்கது.1
- 10.01.2026_ADP_2047 INDIA EXIBITION. பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவை கண்முன் காட்டும் விதமாக வளர்ச்சி பெற்ற இந்தியாவாக 2047ஆம் ஆண்டு இந்தியா எப்படி இருக்கும் என்ற கற்பனையை வைத்து விக்சித் பாரத் 2047 என்ற தலைப்பில்- ஆண்டிபட்டியில் உள்ள டைமன் வித்யாலயா தனியார் பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் இந்திய ராணுவ வீரர்களுக்கான தொழில்நுட்ப கருவியுடன் கூடிய ஸ்மார்ட் யூனிபார்ம், அசுர வளர்ச்சி பெற்று வரும் A I பயன்பாடு , இயந்திர மனிதர்கள மூலம் நவீன மருத்துவம், நவீன விவசாய நீரேற்றும் கருவி உள்ளிட்ட பல்வேறு படைப்புகளை மாணவ மாணவிகள் படைத்திருந்தது பெற்றோர் பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி நகரில் அமைந்துள்ள டைமன் வித்யாலயா தனியார் பள்ளியில் வளர்ச்சி பெற்ற இந்தியா எப்படி இருக்கும் என்ற கற்பனையில் பாரத் விக்சித் 2047 என்ற தலைப்பில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.பள்ளியின் தாளாளர் டைமன் பாண்டி செல்வம் தலைமை தாங்கி இந்த அறிவியல் கண்காட்சியை துவக்கி வைத்த நிலையில் பள்ளியில் உள்ள மூன்று தளங்களிலும் மாணவர்கள் தங்களது அறிவியல் கண்காட்சி படைப்புகளை செய்து காட்சிபடுத்தியிருந்தனர்.1947 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற இந்தியா 2047 ஆம் ஆண்ட வல்லரசு நாடாக உயர்ந்து வளர்ச்சி பெற்று எப்படி இருக்கும் என பராக் பிரதமர் நரேந்திர மோடி கூறிவரும் கற்பனையில் பல்வேறு அறிவியல் காட்சி படைப்புகள் படைக்கப்பட்டிருந்தன.அதில் குறிப்பாக நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் ராணுவ வீரரின் நவீன தகவல் தொடர்பு கருவியுடன் கூடிய ஸ்மார்ட் யூனிபார்ம், நவீன விவசாய நீரேற்றும் கருவி, காற்றாலை மின்சாரம் தயாரித்தல், விண்வெளி மையம் மற்றும் இயந்திர மனிதர்கள் மூலம் நவீன மருத்துவம் தொடர்பான படைப்புகளும் தற்போது அசுர வளர்ச்சி அடைந்து வரும் A I பயன்பாடு குறித்த செயல் விளக்கங்களும் அறிவியல் கண்காட்சியில் காட்சிபடுத்தப்பட்டிருந்தது.இதனை வந்து பார்த்த பொதுமக்கள், மாணவ மாணவிகளின் பெற்றோர் ஏராளமானோர், மாணவ மாணவிகளின் அறிவியல் திறனை வியந்து பாராட்டினர்1