Shuru
Apke Nagar Ki App…
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகரப் பகுதியில் 100க்கும் மேற்பட்ட விநாயகர் சிலை ஊர்வலமாக சென்று கரைக்கும் பணியில் வள்ளிமலை ஆதீனம் கலந்து கொண்டார் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் முழுவதும் 100 மேற்பட்ட விநாயகர் சிலைகளை (இன்று செப்டம்பர் 18)ஊர்வலமாக எடுத்து சென்று ஆம்பூர் ஆனை மடுகு டாமில் கரைக்கும் பணியில் ஊர்வலம் நடைபெற்றது இந்த ஊர்வலத்தில் கிருஷ்ணாபுரம்ஸ்ரீ வீர விக்னேஷ்வரர் சதுர்த்தி நிறைவு சிறப்பு பூஜையில். வள்ளிமலை. முருகன் கோயில். ஆதீனம் கலந்து கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கி. விபூதி, குங்குமம், பிரசாதம் வழங்கினார். இந்த ஊர்வலத்தில் திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகர்கள தரிசனம் செய்தனர் ஊர்வலம் தொடர்ந்து நடந்து வருகிறது.
Yuvaraj Tirupattur Dist News R
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகரப் பகுதியில் 100க்கும் மேற்பட்ட விநாயகர் சிலை ஊர்வலமாக சென்று கரைக்கும் பணியில் வள்ளிமலை ஆதீனம் கலந்து கொண்டார் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் முழுவதும் 100 மேற்பட்ட விநாயகர் சிலைகளை (இன்று செப்டம்பர் 18)ஊர்வலமாக எடுத்து சென்று ஆம்பூர் ஆனை மடுகு டாமில் கரைக்கும் பணியில் ஊர்வலம் நடைபெற்றது இந்த ஊர்வலத்தில் கிருஷ்ணாபுரம்ஸ்ரீ வீர விக்னேஷ்வரர் சதுர்த்தி நிறைவு சிறப்பு பூஜையில். வள்ளிமலை. முருகன் கோயில். ஆதீனம் கலந்து கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கி. விபூதி, குங்குமம், பிரசாதம் வழங்கினார். இந்த ஊர்வலத்தில் திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகர்கள தரிசனம் செய்தனர் ஊர்வலம் தொடர்ந்து நடந்து வருகிறது.
More news from தமிழ்நாடு and nearby areas
- திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார் 148 வது பிறந்த நாளை முன்னிட்டு சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு! திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார் 148 வது பிறந்த நாளை முன்னிட்டு சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு! திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், தந்தை பெரியார் அவர்களின் 148-வது பிறந்தநாளை முன்னிட்டு, சமூக நீதி நாள் உறுதிமொழியினை மாண்புமிகு வனத்துறை அமைச்சர் ஆர்.வீ.இரஞ்சித்குமார் தலைமையில், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் திருப்பதி முன்னிலையில் 17.09.2026 அன்று பல்வேறு அரசு துறை அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பாலசுப்ரமணியன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சௌ.தமிழரசி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பாபு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் கஸ்தூரி மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.2
- தார் சாலை மோசம்: பள்ளிக்குச் செல்ல வேண்டிய மாணவர்கள் கையில் மண்வெட்டி! போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதால் மாணவர்களே சாலையை சீரமைக்கும் அவல நிலை கிருஷ்ணகிரி மாவட்டம், தளி வட்டாரத்தில், பள்ளிக்குச் செல்லும் தார் சாலை மோசமான நிலையில் இருப்பதால், பள்ளி பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. சாலையில் ஏற்பட்டுள்ள சேதம் மற்றும் மண், கற்கள் நிறைந்த பகுதிகளால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்ட நிலையில், பள்ளிக்குச் செல்லும் மாணவர்களே சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. பள்ளிப் புத்தகங்களை கையில் ஏந்தி கல்வி கற்க வேண்டிய மாணவர்களின் கைகளில் மண்வெட்டி ஏந்தும் நிலை ஏற்பட்டிருப்பது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின் கல்வி மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, சாலையின் நிலையை உடனடியாக ஆய்வு செய்து, அவசரகால அடிப்படையில் சாலையை சீரமைத்து, பள்ளி வாகனங்கள் மற்றும் பொதுமக்களின் போக்குவரத்துக்கு தடையில்லாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் திரு. தினேஷ்குமார், I.A.S. அவர்களின் கவனத்திற்கு: மாணவர்கள் சாலை சீரமைக்கும் நிலை மீண்டும் ஏற்படாத வகையில், சம்பந்தப்பட்ட துறையினர் மூலம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். “பள்ளிப் புத்தகம் கையில் இருக்க வேண்டிய நேரத்தில்… மண்வெட்டி ஏன்?”1
- கிருஷ்ணகிரியில் மத்திய மாவட்ட தமிழக வெற்றி கழகம் கட்சி சார்பில் தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழா கிருஷ்ணகிரியில் மத்திய மாவட்ட தமிழக வெற்றி கழகம் கட்சி சார்பில் தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அவரின் திருவுருவப்படத்திற்கு மத்திய மாவட்ட செயலாளர் சுரேஷ் மாலை அணிவித்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.1
- கிருஷ்ணகிரி மாவட்டம் , சிறந்த மாவட்ட ஆட்சியாளர் திரு தினேஷ்குமார் I.A.S அவர்கள் கவனத்தில் இந்த நிலைப்பாடு தவிர்க்க வேண்டும்..அரசு செய்யாததை பள்ளி மாணவர்கள் செய்து தான் போக வேண்டும் என்ற நிலையை புரிந்து அவசரகால நடவடிக்கையாக மேற்கொள்ள பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்படுகிறது1
- ஊத்தங்கரையில் நெடுஞ்சாலை குறுக்கே நிறுத்திய டிப்பர் லாரியால், போக்குவரத்து பாதிப்பு. ஊத்தங்கரை பனந்தோப்பு அருகே நெடுஞ்சாலை குறுக்கே நிறுத்திய டிப்பர் லாரியால், போக்குவரத்து பாதிப்பு. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை டு திருப்பத்தூர் நெடுஞ்சாலை, பனந்தோப்பு அருகே எம்.சென்டு ஏற்றி வந்த டிப்பர் லாரி ராங் ரோட்டில் அதிவேகமாக வந்ததாக ஊர் பொதுமக்கள் கேட்டதற்கு சாலை முழுவதும் குறுக்கே வழி மறைத்து டிப்பர் லாரியை நிறுத்திவிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் பின்னாடி வந்த வாகனங்கள் முழுவதும் நிறுத்தப்பட்டு சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.1
- புதிய சட்டமன்றம் தேவை: தர்மபுரியில் சௌமியா அன்புமணி எம் எல் ஏ பேட்டி! புதிய சட்டமன்றம் தேவை: தர்மபுரியில் சௌமியா அன்புமணி எம் எல் ஏ பேட்டி! தருமபுரி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் மணி தலைமை வகித்தார் ஆட்சியர் சரவணன் முன்னிலை வகித்தார் நிகழ்ச்சியில் தர்மபுரி சட்டப்பேரவை உறுப்பினர் சௌமியா அன்புமணி, பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மரகதம் வெற்றிவேல், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சௌமியா அன்புமணி தர்மபுரி மாவட்டத்தில் அதிகப்படியாக குடிநீர் பிரச்சனை சாலை சாக்கடை கால்வாய் தூர் வராப்படாமல் உள்ளது இதனை உடனடியாக சீரமைக்க கோரி பேசினேன். சாக்கடை கால்வாய் களை உடனடியாக தூர்வார நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் அதே போல சனத்குமார் நதியில் பாதாள சாக்கடை கழிவுகளை சுத்தம் செய்து கலக்க வேண்டும் என தெரிவித்துள்ளேன். அதற்கும் ஆவன செய்வதாக கலெக்டர் தெரிவித்துள்ளார் தொப்பூர் உயர்மட்ட மேம்பாலம் சாலை பணி இரண்டு வருடத்திற்குள் பணிகள் நிறைவடைந்து விடும். மொரப்பூர் தர்மபுரி ரயில் திட்டத்தில் நிலங்கள் கையகப்படுத்தும் பணி என்பது சதவீதம் நிறைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார் ஜனவரி மாதத்திற்குள் பணிகள் நிறைவடைந்து ரயில்வே வசம் ஒப்படைக்கப்படும் இரண்டு மூன்று ஆண்டுகளில் ரயில் பாதை அமைக்கப்பட்டு திட்டம் நிறைவடையும் என்றார். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் சுத்தம் செய்து தண்ணீர் வழங்க வேண்டும் ஆழ்துளை கிணறுகள் சீரமைக்கப்பட்டு தண்ணீர் வழங்க கோரிக்கை விடுத்துள்ளேன். அதேபோல பல துறைகளில் காலிப் பணியிடங்கள் உள்ளது காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளேன். மின் தட்டுப்பாடு நிலவுகிறது காலை ஆறு மணியிலிருந்து பத்து மணி வரை தடையின்றி மின்சாரம் வழங்க எம்பி மணி பேசி உள்ளார். மேலும் தமிழகத்தில் புதிய சட்டசபை அவசிய தேவை. சட்டசபை நிர்வாக அலுவலர்கள் எல்லாம் ஒரே இடத்தில் இருந்தால் பணிகள் விரைந்து செயல்படுத்த வசதியாக இருக்கும் என்றார். இந்நிகழ்ச்சியில் அனைத்து துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக ராணிப்பேட்டை தொகுதி பாமக சமூக ஊடக பேரவை பொருப்பாளர் சி விநாயகம் அவர்கள்1
- திருப்பத்தூரில் RDS நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியின் கீழ் ரூ30 லட்சம் மதிப்பீட்டில் மின்கல வாகனங்கள் வழங்கும் விழா! திருப்பத்தூரில் RDS நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியின் கீழ் ரூ30 லட்சம் மதிப்பீட்டில் மின்கல வாகனங்கள் வழங்கும் விழா! திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், RDS நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியின் கீழ், திருப்பத்தூர் மற்றும் ஜோலார்பேட்டை நகராட்சிகளுக்கு ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் 15 மின்கல வாகனங்களை மாண்புமிகு வனத்துறை அமைச்சர் ஆர்.வீ.இரஞ்சித்குமார் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.திருப்பதி மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலையில், சம்பந்தப்பட்ட நகராட்சிகளுக்கு வழங்கி, கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சௌ.தமிழரசி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பாபு, RDS நிறுவன தலைவர் சரவணன், நகராட்சி ஆணையாளர்கள் சாந்தி திருப்பத்தூர் இளையராணி ஜோலார்பேட்டை தமிழக வெற்றிக்கழக திருப்பத்தூர் மாவட்ட மேற்கு ஒன்றிய செயலாளர் முனிசாமி மாவட்ட கொள்கை பரப்பு அமைப்பாளர் TV.ஜெகன் மற்றும் தமிழக கட்சி கழக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.4