logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

மாபெரும் சோழர் அருங்காட்சியகம் கட்டுமான பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் தமிழ்பல்கலைக்கழக வளாகத்தில் சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில் உலகாண்ட சோழர்களின் பங்களிப்பை போற்றவும் அக்கால கலைப்பொருட்கள் நினைவுச் சின்னங்களை பாதுகாக்கவும் பொதுப்பணித்துறை கட்டங்கள் சார்பில் ரூபாய் 5641.43 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் "மாபெரும் சோழர் அருங்காட்சியகம் "புதிய கட்டிட கட்டுமானப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.இரா.ரேவதி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

9 hrs ago
user_Thanjavurnews
Thanjavurnews
Local News Reporter தஞ்சாவூர், தஞ்சாவூர், தமிழ்நாடு•
9 hrs ago
14505da2-dbfa-49b0-a734-1ab5ca4a1ab8

மாபெரும் சோழர் அருங்காட்சியகம் கட்டுமான பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் தமிழ்பல்கலைக்கழக வளாகத்தில் சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில் உலகாண்ட சோழர்களின் பங்களிப்பை போற்றவும் அக்கால கலைப்பொருட்கள் நினைவுச் சின்னங்களை பாதுகாக்கவும் பொதுப்பணித்துறை கட்டங்கள் சார்பில் ரூபாய் 5641.43 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் "மாபெரும் சோழர் அருங்காட்சியகம் "புதிய கட்டிட கட்டுமானப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.இரா.ரேவதி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • டிப்பர் லாரியிலிருந்து கொட்டப்பட்ட மண் பொதுமக்கள் அவதி அரியலூர் - ஜெயங்கொண்டம் சாலையில் வெங்கட கிருஷ்ணாபுரம் அருகே சாலையில் மணல் ஏற்றிச் சென்ற கனரக வாகனத்தில் இருந்து மண் சாலையில் கொட்டிச் சென்றுள்ளது. ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் இந்த சாலையில் பயணித்தே அரியலூரை வந்தடைய முடியும். இந்நிலையில் சாலையில் கொட்டிக் கிடந்த மண்ணைக் கடந்து செல்லும் கனரக வாகனங்களின் வேகத்தினால் அதிலிருந்து எழும் மண் துகள்கள் இருசக்கர வாகன ஓட்டிகளை பெரிதும் அவதிக்குள்ளாக்கியது. கண்களில் வந்து விழுந்த மண் துகள்களால் வாகனத்தை இயக்க முடியாது பொதுமக்கள் அவதியுற்றனர். உடனடியாக சாலையில் கொட்டிக் கிடக்கும் இந்த மண்ணை அகற்றி வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக பயணிக்க நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
    1
    டிப்பர் லாரியிலிருந்து கொட்டப்பட்ட மண் பொதுமக்கள் அவதி
அரியலூர் - ஜெயங்கொண்டம் சாலையில் வெங்கட கிருஷ்ணாபுரம் அருகே சாலையில் மணல் ஏற்றிச் சென்ற கனரக வாகனத்தில் இருந்து மண் சாலையில் கொட்டிச் சென்றுள்ளது.
ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் இந்த சாலையில் பயணித்தே அரியலூரை வந்தடைய முடியும்.
இந்நிலையில் சாலையில் கொட்டிக் கிடந்த மண்ணைக் கடந்து செல்லும் கனரக வாகனங்களின் வேகத்தினால் அதிலிருந்து எழும் மண் துகள்கள் இருசக்கர வாகன ஓட்டிகளை பெரிதும் அவதிக்குள்ளாக்கியது.
கண்களில் வந்து விழுந்த மண் துகள்களால் வாகனத்தை இயக்க முடியாது பொதுமக்கள் அவதியுற்றனர். உடனடியாக சாலையில் கொட்டிக் கிடக்கும் இந்த மண்ணை அகற்றி வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக பயணிக்க நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
    user_Milkaj
    Milkaj
    அரியலூர், அரியலூர், தமிழ்நாடு•
    6 hrs ago
  • புதுக்கோட்டை பெரியா நகரை சேர்ந்த சாய் திவ்யாஉலக சாதனை படைத்த சிறுமி புதுக்கோட்டை மாநகராட்சி பெரியார் நகரை சேர்ந்த கண்ணன் ராதா தம்பதிகளில் 6 வயது குழந்தை சாய் திவ்யா ஐஸ் கட்டியில் பரதநாட்டியம் ஆடும் உலக சாதனை திகழ்ந்தார்
    4
    புதுக்கோட்டை பெரியா நகரை சேர்ந்த சாய் திவ்யாஉலக சாதனை படைத்த சிறுமி 
புதுக்கோட்டை மாநகராட்சி பெரியார் நகரை சேர்ந்த கண்ணன் ராதா தம்பதிகளில் 6 வயது குழந்தை சாய் திவ்யா ஐஸ் கட்டியில் பரதநாட்டியம் ஆடும் உலக சாதனை திகழ்ந்தார்
    user_Prabhu
    Prabhu
    கரம்பக்குடி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    10 hrs ago
  • ‎சித்தக்காடு நெடுஞ்சாலை நடுவில் தடுப்பு கட்டை அமைக்கும் பணி நடைபெறுகிறது மயிலாடுதுறை கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை சித்தக்காடு இரயில்வே மேம்பாளம் முன்னே சாலையை இரண்டாக பிரித்து நடுவே தடுப்பு கட்டை அமைக்கும் பணி தீவீரம் பொது மக்களுக்கு சிறமம் ஏற்படாத வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது
    1
    ‎சித்தக்காடு நெடுஞ்சாலை நடுவில் தடுப்பு கட்டை அமைக்கும் பணி நடைபெறுகிறது
மயிலாடுதுறை கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை சித்தக்காடு இரயில்வே மேம்பாளம்  முன்னே சாலையை இரண்டாக பிரித்து நடுவே தடுப்பு கட்டை அமைக்கும் பணி தீவீரம் பொது மக்களுக்கு சிறமம் ஏற்படாத வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது
    user_Anbu Vetri
    Anbu Vetri
    Teacher College குத்தாலம், மயிலாடுதுறை, தமிழ்நாடு•
    11 hrs ago
  • திருத்துறைப்பூண்டி அருகே கோலாகலமாக நடைபெற்ற ஆவணி தீமிதி திருவிழா ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே நெடும்பலத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஈஸ்வர காமாட்சி மாரியம்மன் கோயிலில் ஆவணி மாத தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆவணி திருவிழாவையொட்டி கடந்த நான்கு வாரங்களாக கோயிலில் சிறப்பு வழிபாடுகளும், அடிகளார் அருள்வாக்கு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இந்நிலையில், ஆவணி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, திருத்துறைப்பூண்டி தச்சன்குளக்கரை பிள்ளையார் கோயிலில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடி எடுத்து ஊர்வலமாக வந்தனர். கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் பக்தர்கள் இறங்கி தீமிதித்து, தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். தொடர்ந்து ஸ்ரீ ஈஸ்வர காமாட்சி மாரியம்மனை பயபக்தியுடன் வழிபட்டனர். தீமிதி திருவிழாவையொட்டி திருத்துறைப்பூண்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதனால் கோயில் வளாகம் முழுவதும் பக்தர்களின் கூட்டத்தால் களைகட்டியது.
    1
    திருத்துறைப்பூண்டி அருகே கோலாகலமாக நடைபெற்ற ஆவணி தீமிதி திருவிழா ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே நெடும்பலத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஈஸ்வர காமாட்சி மாரியம்மன் கோயிலில் ஆவணி மாத தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஆவணி திருவிழாவையொட்டி கடந்த நான்கு வாரங்களாக கோயிலில் சிறப்பு வழிபாடுகளும், அடிகளார் அருள்வாக்கு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
இந்நிலையில், ஆவணி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, திருத்துறைப்பூண்டி தச்சன்குளக்கரை பிள்ளையார் கோயிலில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடி எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் பக்தர்கள் இறங்கி தீமிதித்து, தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். தொடர்ந்து ஸ்ரீ ஈஸ்வர காமாட்சி மாரியம்மனை பயபக்தியுடன் வழிபட்டனர்.
தீமிதி திருவிழாவையொட்டி திருத்துறைப்பூண்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
இதனால் கோயில் வளாகம் முழுவதும் பக்தர்களின் கூட்டத்தால் களைகட்டியது.
    user_BARATHI
    BARATHI
    திருத்துறைப்பூண்டி, திருவாரூர், தமிழ்நாடு•
    2 hrs ago
  • தலையாமழை கிராமத்தில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் 3 மணி நேரமாக சாலை மறியல் தலையாமழை கிராமத்தில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்: 3மணி நேரமாக கொளுத்தும் வெயிலில் சாலையில் அமர்ந்து போராட்டம் நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தலையாமழை கிராமத்தில் அடிப்படை வசதியான குடிநீர் கேட்டு, 100-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தலையாமழை கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் 'ஜல் ஜீவன்' திட்டத்தின் கீழ் வீடுகள் தோறும் குழாய் இணைப்புகள் அமைக்கப்பட்டும், கடந்த 6 மாதங்களாக ஒரு சொட்டு குடிநீர் கூட விநியோகிக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே டேங்கர் லாரி மூலம் வழங்கப்படும் தண்ணீரும் போதுமானதாக இல்லை எனவும் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். குடிநீருக்காக சுமார் 5 கிலோமீட்டர் தூரமுள்ள சோழவித்தியாபுரம் கிராமத்திற்குச் சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டிய அவலநிலை நிலவுகிறது. இருசக்கர வாகனம் மற்றும் சைக்கிள் வைத்திருப்பவர்கள் மட்டுமே சென்று தண்ணீர் எடுத்து வரும் நிலையில், முதியவர்கள் மற்றும் பெண்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும், வெளி ஊர்களுக்கு சென்று தண்ணீர் பிடிப்பதால் கிராமங்களுக்கிடையே மோதல் போக்கு ஏற்படும் சூழலும் உருவாகியுள்ளது. குளிப்பதற்கும் குடிப்பதற்கும் போதிய தண்ணீர் இன்றி பள்ளி மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்வோர் பெரும் துயரத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த கிராமத்துப் பெண்கள், நாகப்பட்டினம் - மேலப்பிடாகை உட்சாலையில் அரசுப் பேருந்தை சிறைபிடித்து, காலி குடங்களை தலையில் சுமந்தவாறு சாலையில் அமர்ந்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 3 மணி நேரத்திற்கும் மேலாக மறியல் நீடித்தது. சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் உடனடியாக வராததால், பெண்கள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ​தலையான்மழை கிராம மக்களின் குடிநீர் தாகத்தைத் தீர்க்க மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் வட்டார வளர்ச்சி அலுவலர் செபஸ்தியம்மாள் மற்றும் கீழையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபி ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
    1
    தலையாமழை கிராமத்தில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் 3 மணி நேரமாக சாலை மறியல்
தலையாமழை கிராமத்தில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்: 3மணி நேரமாக கொளுத்தும் வெயிலில் சாலையில் அமர்ந்து போராட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தலையாமழை கிராமத்தில் அடிப்படை வசதியான குடிநீர் கேட்டு, 100-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தலையாமழை கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் 'ஜல் ஜீவன்' திட்டத்தின் கீழ் வீடுகள் தோறும் குழாய் இணைப்புகள் அமைக்கப்பட்டும், கடந்த 6 மாதங்களாக ஒரு சொட்டு குடிநீர் கூட விநியோகிக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே டேங்கர் லாரி மூலம் வழங்கப்படும் தண்ணீரும் போதுமானதாக இல்லை எனவும் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
குடிநீருக்காக சுமார் 5 கிலோமீட்டர் தூரமுள்ள சோழவித்தியாபுரம் கிராமத்திற்குச் சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டிய அவலநிலை நிலவுகிறது. இருசக்கர வாகனம் மற்றும் சைக்கிள் வைத்திருப்பவர்கள் மட்டுமே சென்று தண்ணீர் எடுத்து வரும் நிலையில், முதியவர்கள் மற்றும் பெண்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும், வெளி ஊர்களுக்கு சென்று தண்ணீர் பிடிப்பதால் கிராமங்களுக்கிடையே மோதல் போக்கு ஏற்படும் சூழலும் உருவாகியுள்ளது. குளிப்பதற்கும் குடிப்பதற்கும் போதிய தண்ணீர் இன்றி பள்ளி மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்வோர் பெரும் துயரத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த கிராமத்துப் பெண்கள், நாகப்பட்டினம் - மேலப்பிடாகை உட்சாலையில் அரசுப் பேருந்தை சிறைபிடித்து, காலி குடங்களை தலையில் சுமந்தவாறு சாலையில் அமர்ந்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 3 மணி நேரத்திற்கும் மேலாக மறியல் நீடித்தது. சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் உடனடியாக வராததால், பெண்கள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
​தலையான்மழை கிராம மக்களின் குடிநீர் தாகத்தைத் தீர்க்க மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் வட்டார வளர்ச்சி அலுவலர் செபஸ்தியம்மாள் மற்றும் கீழையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபி ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
    user_MAHENDRAN
    MAHENDRAN
    Local News Reporter Kilvelur, Nagapattinam•
    51 min ago
  • உடைக்கப்பட்ட சிலைக்கு பதிலாக வெண்கல சிலை அமைத்து தருவதாக மாநில துணைத்தலைவர் உறுதி கடலூர் மாவட்டம் சிதம்பரம் கொத்தங்குடி பகுதியில் இரவில் மர்ம நபர்கள் அண்ணல் அம்பேத்கர் சிலையை உடைத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத்தலைவரும் நந்தனார் கல்வி கழக தலைவருமான டாக்டர் கே ஐ மணிரத்தினம் அவர்கள் மண் சிலைக்கு பதிலாக வெண்கல சிலை அதே இடத்தில் நிறுவி தருவதாக உறுதியளித்துள்ளார்
    1
    உடைக்கப்பட்ட சிலைக்கு பதிலாக வெண்கல சிலை அமைத்து தருவதாக மாநில துணைத்தலைவர் உறுதி 
கடலூர் மாவட்டம் சிதம்பரம் கொத்தங்குடி பகுதியில் இரவில் மர்ம நபர்கள் அண்ணல் அம்பேத்கர் சிலையை உடைத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத்தலைவரும் நந்தனார் கல்வி கழக தலைவருமான டாக்டர் கே ஐ மணிரத்தினம் அவர்கள் மண் சிலைக்கு பதிலாக வெண்கல சிலை அதே இடத்தில் நிறுவி தருவதாக உறுதியளித்துள்ளார்
    user_தாமோதரன் மாவட்ட செய்தியாள
    தாமோதரன் மாவட்ட செய்தியாள
    காட்டுமன்னார்கோயில், கடலூர், தமிழ்நாடு•
    4 hrs ago
  • முசிறியில் அண்ணா பிறந்த தின விழா தமிழக வெற்றிக்கழக எம்எல்ஏ மற்றும் மாவட்டச் செயலாளர் இணைப்பு வழங்கி கொண்டாடினர். முசிறியில் அண்ணா பிறந்த தின விழா தமிழக வெற்றி கழக மாவட்ட செயலாளர் ஜெகன்மோகன், எம் எல் ஏ விக்னேஷ் ஆகியோர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடினர். நிகழ்ச்சியில் முசிறி நகரக் கழக செயலாளர்கள் சந்தோஷ் குமார், சந்திரகுமார் வழக்கறிஞர் ராஜசேகர், நகர இளைஞரணி செயலாளர் ஸ்ரீராம், நகர துணை செயலாளர் சிவக்குமார் உள்ளிட்ட ஒன்றிய, நகர கிளைக் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடினர்.
    1
    முசிறியில் அண்ணா பிறந்த தின விழா தமிழக வெற்றிக்கழக எம்எல்ஏ மற்றும் மாவட்டச் செயலாளர் இணைப்பு வழங்கி கொண்டாடினர்.

முசிறியில் அண்ணா பிறந்த தின விழா தமிழக வெற்றி கழக மாவட்ட செயலாளர் ஜெகன்மோகன், எம் எல் ஏ விக்னேஷ் ஆகியோர்  அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடினர். நிகழ்ச்சியில் முசிறி நகரக் கழக செயலாளர்கள் சந்தோஷ் குமார், சந்திரகுமார் வழக்கறிஞர் ராஜசேகர், நகர இளைஞரணி செயலாளர் ஸ்ரீராம், நகர துணை செயலாளர் சிவக்குமார் உள்ளிட்ட ஒன்றிய, நகர கிளைக் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடினர்.
    user_நா. முருகன்
    நா. முருகன்
    முசிறி, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    4 hrs ago
  • முசிறியில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் அண்ணாதுரை 118 வது பிறந்த தினம் அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம். முசிறியில் மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரை 118 வது பிறந்த தின விழா அதிமுகவினர். இனிப்பு வழங்கி கொண்டாட்டம். முசிறியில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரை 118 வது பிறந்த தின விழாவை முன்னிட்டு கைகாட்டியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அதிமுக மாவட்ட செயலாளர் யோகநாதன் தலைமையில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்து இனிப்பு வழங்கி கொண்டாடினர் நிகழ்வில். முன்னால் அமைச்சர் டிபி பூனாச்சி, முன்னால் எம்எல்ஏக்கள் மல்லிகா சின்னசாமி, செல்வராஜ், முசிறி ஒன்றிய செயலாளர் ராஜமாணிக்கம், நகரச் செயலாளர் சுவிட் ராஜா என்கிறார் மாணிக்கம், எம் ஐ டி நடராஜன், மாவட்ட அவைத் தலைவர் ஈஞ்சூர் ராமு, மாவட்ட பொருளாளர் குட்டி என்கிற ஜெயசீலன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ஆசிரியர் பொன் சேகர், நகரப் பொருளாளர் ராஜேந்திரன், பேங்க் ராமசாமி, புரட்சித்தலைவி பேரவை மாவட்டச் செயலாளர் பாலகுமார், எம்ஜிஆர், இளைஞர் அணி மாவட்ட துணை செயலாளர் சாய் மோகன்ராஜ், மாவட்ட பிரதிநிதி ரவிச்சந்திரன், உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழக அணி பிரிவினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
    1
    முசிறியில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் அண்ணாதுரை 118 வது பிறந்த தினம் அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
முசிறியில் மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரை 118 வது பிறந்த தின விழா அதிமுகவினர். இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
முசிறியில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரை 118 வது பிறந்த தின விழாவை முன்னிட்டு கைகாட்டியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அதிமுக மாவட்ட செயலாளர் யோகநாதன் தலைமையில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்து இனிப்பு வழங்கி கொண்டாடினர் நிகழ்வில். முன்னால் அமைச்சர் டிபி பூனாச்சி, முன்னால் எம்எல்ஏக்கள் மல்லிகா சின்னசாமி, செல்வராஜ், முசிறி ஒன்றிய செயலாளர் ராஜமாணிக்கம், நகரச் செயலாளர் சுவிட் ராஜா என்கிறார் மாணிக்கம், எம் ஐ டி நடராஜன், மாவட்ட அவைத் தலைவர் ஈஞ்சூர் ராமு, மாவட்ட பொருளாளர் குட்டி என்கிற ஜெயசீலன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ஆசிரியர் பொன் சேகர், நகரப் பொருளாளர்  ராஜேந்திரன், பேங்க் ராமசாமி, புரட்சித்தலைவி பேரவை மாவட்டச் செயலாளர் பாலகுமார், எம்ஜிஆர், இளைஞர் அணி மாவட்ட துணை செயலாளர் சாய் மோகன்ராஜ், மாவட்ட பிரதிநிதி ரவிச்சந்திரன், உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழக அணி பிரிவினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
    user_நா. முருகன்
    நா. முருகன்
    முசிறி, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    9 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.