கனரக மற்றும் டெம்போ வாகனங்கள் போக்குவரத்து விதிகளை மீறினால் நடவடிக்கை - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS அவர்கள் எச்சரிக்கை கனரக மற்றும் டெம்போ வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர மற்ற நேரங்களில், மாவட்ட எல்லைக்குள் நுழைந்தாலோ, சாலைகளில் செல்லும்போது போக்குவரத்து விதிகளை பின்பற்றாமல் வாகனங்களை இயக்கினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்கள். - அதிவேகமாக வாகனத்தை இயக்குதல் - அதிக பாரம் ஏற்றி செல்லுதல் - அனுமதிக்கப்பட்ட நேரங்களில் தவிர வாகனத்தை இயக்குதல் - போக்குவரத்துக்கு இடையூறு மற்றும் விபத்து ஏற்படுத்தும் வண்ணம் வாகனத்தை நிறுத்துதல் - தெளிவான வாகன எண் இல்லாமல் - வாகன தகுதி சான்றிதழ் இன்றி வாகனத்தை இயக்குதல் போன்ற போக்குவரத்து விதிமுறைகளை மீறி செயல்படும் வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் வாகனமும் பறிமுதல் செய்யப்படும். விபத்து தடுப்பு நடவடிக்கைகளாக மாவட்ட காவல்துறை எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் ஒத்துழைப்பு அளித்து விபத்து இல்லா கன்னியாகுமரி என்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் இலக்கை அடைய ஒத்துழைக்க கேட்டுக்கொள்கிறோம்.

- கீழச்சுரண்டையில் ஊறுகாவல பெருமாள் கோவில் இருந்து மார்கழி மாத பஜனை வீதி உலா நிகழ்வில், இதில் மார்கழி மாதம் முழுவதும் அதிகாலையில் சிறுவர்கள் பஜனை பாடல்கள் பாடி வருகிறார்கள்.1
- சிவகங்கை ஜஸ்டின் பள்ளியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிமிடெட் சார்பில், காரைக்குடி மண்டல பயிற்சி மையத்தில் சாலைப் பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 2026 ஜனவரி 1 முதல் ஜனவரி 31 வரை நடைபெறும் இந்த சாலைப் பாதுகாப்பு மாத விழாவின் ஒரு பகுதியாக, பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடத்தப்பட்டது.1
- பெரியகுளம் நகராட்சியில் அலுவலகத்தில் மாதாந்திர கூட்டத்தின் போது அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என நகர்மன்ற உறுப்பினர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார் அதேபோல் விசிகவை சேர்ந்த நகர்மன்ற உறுப்பினரும் அடிப்படை வசதிகள் செய்யவில்லை என நகர் மன்ற தலைவரிடம் வாக்குவாதம் ஈடுபட்டார் தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கத்தில் திமுகவைச் சேர்ந்த நகர் மன்ற தலைவர் சுமிதா சிவகுமார் தலைமையில் இன்று மாதாந்திர கூட்டம் நடைபெற்றது இதில் நகராட்சி ஆணையாளர் நகர் மன்ற உறுப்பினர்கள் நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர் அப்போது பாமக நகர்மன்ற உறுப்பினர் குமரன் தனது வார்டுகளான இடுக்கடி லாட்டரி முத்துராஜா தெருவில் கடந்த நான்கு ஆண்டுகளாக அப்பகுதியில் பாதாள சாக்கடை அமைத்து தருமாறு பலமுறை நகர்மன்ற தலைவர் மற்றும் நகராட்சி ஆணையாளருக்கு கோரிக்கை மனு வழங்கியும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என இன்று நகர்மன்ற கூட்டத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார் தொடர்ந்து நகர் மன்ற உறுப்பினர்கள் வெங்கடேசன் மதன் ஆகியோரும் தங்கள் பகுதியில் முறையாக அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என நகராட்சி ஆணையாளர் மற்றும் நகர மன்ற தலைவரிடம் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் மேலும் நகர மன்ற தலைவரிடம் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகளான சாக்கடை வசதி சாலை வசதி, பாதாள சாக்கடை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வைத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என நகல் மன்ற தலைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் அதேபோல் திமுக கூட்டணியில் உள்ள வீசி காவை சேர்ந்த பவானி முருகன் 11 வது வார்டு நகர் மன்ற உறுப்பினராக பதவி வசித்து வருகிறார் இவரது வார்டில் தொடர்ந்து சாலை வசதி சாக்கடை வசதி குடிநீர் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை கடந்த நான்கு ஆண்டுகளாக நகர் மன்ற கூட்டத்தில் நகர்மன்ற தலைவரிடம் எடுத்துரைத்தும் இதுவரை எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தராததால் இன்று நடந்த நகர் மற்றும் கூட்டத்தில் தலைவரிடம் நகர் மன்ற உறுப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் உடனடியாக தங்கள் பகுதியில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தர வேண்டும் எனவும் தெரிவித்தார்1
- தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் சேர்த்து முழு கரும்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு தேவதானப்பட்டி பகுதியில் உள்ள கரும்பு விவசாயிகளிடமிருந்து இன்று முதல் நேரடியாக கரும்பு கொள்முதல் செய்யும் பணியை கூட்டுறவுத் துறையினர் துவங்கி உள்ளனர். இந்நிலையில் இந்த ஆண்டு அரசு ஒரு கரும்பிற்கு ரூ.40 வழங்க வேண்டும் என கரும்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- தேனி நகரமானது மாவட்டத்தின் தலைநகராக விளங்கி வருகிறது இதனால் தினசரி அதிகமான பொதுமக்கள் வந்தடையும் இடமாகவும் தேனி நகரம் திகழ்கிறது. தேனி - பெரியகுளம் சாலையில் ரயில்வே கேட் அருகே சாக்கடை கழிவு தண்ணீர் ஆறாக ஓடுகிறது இதனால் அந்த பகுதியில் செல்லும் போக்குவரத்து பயனாளிகளுக்கும் ,அருகில் உள்ள பொதுமக்களுக்கும் துர்நாற்றம் வீசுவதால் விரைவில் இதனை சரி செய்ய வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் தெரிவித்து வருகின்றனர்2
- திண்டுக்கல் சோலைஹால் பகுதியில் உள்ள மீன் கடைகளை அகற்றி மேட்டுப்பட்டி சாலைகள் உள்ள குலசாலையில் மீன் மார்க்கெட் இயங்கி வருகிறது1
- பெரியகுளம் பகுதியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு பரிசு வழங்கப்பட்டது தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை மற்றும் தென்கரைப் பகுதியில் உள்ள நியாய விலை கடையில் இன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு 3000 ரூபாய் கொடுக்கப்படும் அரிசி சர்க்கரை கரும்பு வேஷ்டி சேலை உள்ளிட்ட பொங்கல் தொகுப்பு பரிசை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது இதனைத் தொடர்ந்து குடும்ப அட்டை தாருங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நியாயவிலைக் கடைக்கு சென்று டோக்கன்களை வழங்கி பொங்கல் தொகுப்பு பரிசுகளை பெற்றுக் கொண்டனர்1
- திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆவண வைப்பறையில் கருநாகப் பாம்பு தீயணைப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டது1
- வேடசந்தூரில் எம் எல் ஏ அலுவலகம் அருகில் பல நாட்களாக பழுதாகி உள்ள நிலையில் உள்ள அடி பம்ப் இந்த அடி பம்ப்பில் பலர் நல்ல குடி நீர் தேவைக்கு பயனடைந்து வந்தனர் வேடசந்தூர் சுற்றியும் எங்கும் நல்ல தண்ணீர் கிடையாது ஆனால் இந்த பம்ப்பில் மட்டுமே நல்ல தண்ணீர் கிடைக்கும். ஆனால் இப்பொழுதோ இதை சரி செய்து கொடுக்க யாரும் முன் வராததால் பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.1